TNPSC Thervupettagam

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2023 – பகுதி I

August 16 , 2023 319 days 1215 0

(For English version to this, please click here)

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2023

  • இந்தியாவில் தற்பொழுது 3682 புலிகள் உள்ளன.
  • 2018 ஆம் ஆண்டில் 2967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 24% அதிகரித்துள்ளது.
  • ஏப்ரல் 9 ஆம் தேதி மைசூருவில் இந்த 50 ஆண்டு காலத் திட்டத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 3167 புலிகளை விட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டு அறிக்கை பொதுவாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் வெளியிடப்படுகிறது
  • இது அந்தந்த மாநில வனத் துறைகளின் ஆதரவுடன் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் மூலம் எடுக்கப் படும்.
  • இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இயக்குனர் வி.கே.திவாரி கூறுகையில், புலிகளின் புகைப்படங்களின் படி அதன் குறைந்தபட்ச எண்ணிக்கை 3,167 என்றும் சராசரியாக 3,682 என்றும் நாட்டில் அதிகபட்சமாக 3925 புலிகள் உள்ளன.
  • நாட்டில் அதிகபட்ச எண்ணிக்கையில் 3925 புலிகள் உள்ளன.
  • இது அனைத்துத் தரவுகளின் விரிவாக்கத்திற்குப் பிறகு அவர்களால் பெறப்பட்ட ஒரு எண்ணிக்கை மதிப்பீடு ஆகும்.
  • இது படங்கள், காலடித்தடங்கள் மற்றும் சிதறல் போன்ற இன்ன பிற அடையாளக் குறிகாட்டிகளை உள்ளடக்கியது.
  • சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தப் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் 200 ஆக உயர்ந்துள்ளது,
  • கடந்த நான்கு ஆண்டுகளில் 2,967 என்ற எண்ணிக்கையில் இருந்து அது 3,167 ஆக அதிகரித்துள்ளது.

  • புலிகள் பாதுகாப்பு முயற்சி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது.
  • இந்த திருத்தப்பட்ட புள்ளி விவரங்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மதிப்பீட்டின் ஐந்தாவது சுழற்சியின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் கணக்கெடுப்பின் விரிவான பகுப்பாய்வுகளைப் பின்பற்றுகின்றன.
  • இந்த பாராட்டுக்குரியச் சாதனை என்பது, இந்தியாவில் வனவிலங்குப் பாதுகாப்பிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
  • இது அரசாங்கம், பாதுகாவலர்கள் மற்றும் உள்ளூர்ச் சமூகங்களின் கூட்டு முயற்சிகளைக் குறிக்கிறது.
  • உலகப் புலிகளின் எண்ணிக்கையில் 75% இந்தியாவில் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
  • புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 6% வேகத்தில் வளர்ந்து வருகிறது.
  • 1973 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமானது பின்வரும் கருத்தினை வெளிக் காட்டியது.
  • வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல், சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் உள்ளூர்வாசிகளால் கொல்லப்படுதல் போன்ற காரணங்களால் இந்தியாவில் புலிகள் விரைவில் அழிந்து வருகின்றன.
  • இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியது,
  • இந்தியாவில் இதன் விளைவாக அந்தத் திட்டம் தொடங்கியபோது 9 ஆக இருந்த  புலிகள் பாதுகாப்பு காப்பகங்கள் 53 ஆக உயர்ந்துள்ளது.
  • புலிகளின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 2,967 என்ற எண்ணிக்கையினை எட்டிய நிலையில் இப்போது அது 3,000க்கு மேல் உள்ளது.
  • 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் புலிகளின் பாதுகாப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக, "புலிகள் பாதுகாப்புத் திட்டம்" தொடங்கப்பட்டது.

https://www.hindustantimes.com/static/ht2023/7/30072023_DelhiMetro_pg2.jpg

  • தற்போது 53 புலிகள் பாதுகாப்புக் காப்பகங்கள் 75,000 சதுர கிமீ அல்லது இந்தியாவின் மொத்தப் புவியியல் பகுதியில் 2.4%க்கும் அதிகமானப் பகுதியினை  உள்ளடக்கி உள்ளது.
  • இந்தியாவில் 2006 ஆம் ஆண்டில் சுமார் 1,400 புலிகள் இருந்த நிலையில் 2022ல் அந்த எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது.
  • உலகின் மிக முக்கியமான 7 பெரிய பூனைகளைப் பாதுகாக்க இந்தியாவின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பிரதமர் சர்வதேச பெரிய பூனைக் கூட்டணிஎன்பதினைத் தொடங்கினார்.
  • இது புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள், பனிச் சிறுத்தைகள், ஜாகுவார், பூமாக்கள் மற்றும் சிறுத்தைப் புலிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • அம்ரித் கால் கா டைகர் விஷன்என்ற புத்தகத்தை வெளியிடுவதாகவும் அவர் அறிவித்தார்.
  • இது அடுத்த 25 ஆண்டுகளில் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு உத்தியை விவரிக்கும்.

இந்திய மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை

  • இந்தியாவில் கணிசமான புலிகள் வாழும் பல மாநிலங்கள் உள்ளன.
  • மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, அசாம், கேரளா, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட முதல் 10 மாநிலங்களாகும்.
  • தேசியப் பூங்காக்கள் மற்றும் புலிகள் பாதுகாப்புக் காப்பகங்களை உருவாக்குதல், வேட்டையாடுதல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு உட்பட புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க இந்த மாநிலங்கள் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.

புலிகள் கணக்கெடுப்பு 2023

  • புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையானது அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாடு (CITES) மற்றும் உலகளாவியப் புலிகள் மன்றம் ஆகியவற்றால் வழி நடத்தப் படுகிற உலகளாவியப் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளுக்குப் பங்களிக்கிறது..
  • இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையின் மாநிலங்கள் வாரியான பட்டியலைக் கீழே பார்க்கவும்:

இந்தியாவில் புலிகள் திட்டம்

  • இந்திய அரசு (GoI) தேசிய விலங்குகளைப் பாதுகாக்க "புலிகள் பாதுகாப்புத் திட்டம்" என்பதினை நிறுவியது.
  • அதன் வகையான மிகப்பெரிய இனங்கள் பாதுகாப்புத் திட்டம் என்பது புலிகள் பாதுகாப்புத் திட்டமாகும்.
  • புராஜெக்ட் டைகர் என்பது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக 1973 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத்தத்தில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்பு முயற்சியாகும்.
  • கைலாஷ் சங்கலா இத்திட்டத்தின் முதல் இயக்குநராக இருந்தார்.
  • இந்தத் திட்டம் புலிகளின் வாழ்விடங்கள் குறைவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, காலப் போக்கில் சேதமடைந்த இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது..

புலிகள்  திட்டம்  பற்றிய முக்கிய உண்மைகள்

  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அனைத்துப் புலிகள் பாதுகாப்புத் திட்டங்களையும் நிர்வகிக்கும் ஒரு குழுவாகும்.
  • இத்திட்டத்தைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.
  • புலிகள்  பாதுகாப்புத் திட்டம் பற்றிய பல்வேறு முக்கியத் தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 53 புலிகள் பாதுகாப்புக் காப்பகங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டன.
  • ஹெய்லி தேசியப் பூங்கா, புலிகள்  பாதுகாப்புத் திட்டத்தின் கீழான முதல் தேசியப் பூங்காவாகும், பின்னர் இது ஜிம் கார்பெட் என்று பெயரிடப் பட்டது.
  • இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில், 260 பெரிய பூனைகளுடன் கார்பெட் முன்னணியில் உள்ளது.
  • கார்பெட்டுக்கு அடுத்தபடியாக 150 மற்றும் 141 புலிகளுடன் பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே தனி நபர் இருப்புப் பட்டியலில் உள்ளது.
  • பாந்தவ்கர் மற்றும் துத்வா 135 பேருடன் 4வது இடத்தில் உள்ளன.
  • முதுமலை (114), கன்ஹா (105), காசி ரங்கா (104), சுந்தரவனம் (100) ஆகியன சதத்தினைப் பதிவு செய்து உள்ளன.

  • 2018 ஆம் ஆண்டில் புலிகள் கணக்கெடுப்பின் படி, புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது,
  • இது 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பை விட 33% அதிகமாக இருந்தது.
  • இது 2006 புலிகள் கணக்கெடுப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் இருந்தது.
  • நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன.
  • இது இந்தியாவின் ஒரு முன்னணிப் புலிகள் மாநிலமாகும்.
  • அதன் புலிகளின் எண்ணிக்கை 526 என்பதில் இருந்து 785 ஆக உயர்ந்துள்ளது (49%).
  • இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவுடனான இடைவெளியை அது அதிகப் படுத்தியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கர்நாடகாவில் இரண்டு புலிகள் குறைவாக இருந்தது.
  • தற்போது கர்நாடகாவில் 563 புலிகள் உள்ளன.
  • உத்தரகாண்ட் இப்போது 560 பெரிய பூனைகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது 2018 ஆம் ஆண்டில் 442 ஆக இருந்தது.
  • மகாராஷ்டிராவில் 444 பெரிய பூனைகள் உள்ளன, இது 2018 ஆம் ஆண்டில் 312 ஆக இருந்தது.
  • தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளாவில் முறையே 306, 227 மற்றும் 213 ஆக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் 173 என்ற எண்ணிக்கையினைக் கொண்டு இருந்த உத்தரப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டில் அது 205 ஆக உயர்ந்து, உத்தரப் பிரதேசம் 8வது இடத்தில் உள்ளது.
  • அதிகபட்சமாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை முறையே 259, 132 மற்றும் 118 ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
  • தெலுங்கானா போன்ற மாநிலங்கள் 26 என்ற எண்ணிக்கையில் இருந்து 21 ஆக சரிவைக் கண்டன.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் அதன் எண்ணிக்கை 19 என்பதில் இருந்து 17 ஆகக் குறைந்து உள்ளது.
  • ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்தில் இருந்து ஒன்று மட்டுமே பதிவாகியுள்ளது, ஒடிசாவிலும் 28 என்ற எண்ணிக்கையிலிருந்து 20 ஆக குறைந்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் அதன் எண்ணிக்கை 29 என்பதில் இருந்து ஒன்பதாக குறைந்துள்ளது.
  • மிசோரமில் 2006 ஆம் ஆண்டில் 6 ஆக இருந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் பூஜ்யமாக குறைந்தது.
  • வடக்கு மேற்கு வங்கத்தில் 2006 ஆம் ஆண்டில் 10 என்பதில் இருந்து 2022 ஆம் ஆண்டில் வெறும் 2 வரை குறைந்துள்ளது.
  • நாகாலாந்திலும் இப்போது புலிகள் இல்லை
  • மத்திய இந்திய நிலப்பரப்பு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் (1,439) அதிகப் புலிகள் இருப்பதாக நிலப்பரப்பு வாரியான அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மத்திய இந்தியாவில் மட்டும் 1,161 என்ற எண்ணிக்கையுடன் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் (1,087), சிவாலிக் மலைகள் மற்றும் கங்கைச் சமவெளிகள் (819), வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா சமவெளி நிலப்பரப்பு (236), மற்றும் சுந்தரவனக்காடுகள் (101) ஆகியவை உள்ளன.
  • சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி நிலப்பரப்பின் வனப் பிரிவுகளில் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காளி (அன்ஷி தண்டேலி) போன்ற சில பகுதிகளைத் தவிர, அதன் பிற பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.
  • காளியில், தனித்துவமான புலிகளின் எண்ணிக்கை நிலையானது ஆகும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குப் பின்னால் உள்ள முதன்மைக் காரணங்களாக "அதிகரிக்கும் மனித தடம் மற்றும் வளர்ச்சி" என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
  • நாட்டில் உள்ள ஆறு புலிகள் காப்பகங்கள் - காளி, மேல்காட், பிலிபித், தடோபா அந்தாரி, நவேகான் மற்றும் பெரியார் – ஆகியவற்றிற்கு CAT விருதுகள் வழங்கப் பட்டன.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபித் புலிகள் காப்பகம் 2021 ஆம் ஆண்டில் தொடக்க Tx2 விருதை வென்ற நிலையில் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அதே விருது வழங்கப்பட்டது.
  • குறிப்பிட்ட ஒரு காலக்கெடுவிற்கு முன்னதாக அந்தந்த காப்பகங்களின் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்காக இது வழங்கப்பட்டது.

  • உலகப் புலிகளின் எண்ணிக்கையில் 75% இந்தியாவில் உள்ளது.
  • சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய 3 பெரியப் பூனைகள் இருக்கும் ஒரே நாடு இந்தியா.
  • சர்வதேசப் புலிகள் தினம் முதன்முதலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டின் போது 2010 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது,
  • அப்போது புலிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அபாயகரமான வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய புலிகள் வரம்பு நாடுகள் (TRCs) ஒன்று கூடின.
  • புலிகளைப் பாதுகாப்பதற்கான சில பாதுகாப்பு முயற்சிகளை முன்னிலைப் படுத்த இந்த நாள் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக மாறியுள்ளது.
  • சர்வதேசப் புலிகள் தினம் அல்லது உலகளாவியப் புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தச் சிறப்பு நாள் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • உலகின் பெரிய பூனைகளில் மிகப்பெரிய பூனையான புலிகள், நமது சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன.
  • சர்வதேசப் புலிகள் தினத்தின் முக்கிய குறிக்கோள் இந்த கம்பீரமான உயிரினங்களையும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களையும் பாதுகாப்பதாகும்.
  • சர்வதேச புலிகள் தினம் 2010 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  • புலிகளின் எண்ணிக்கையைக் கொண்ட நாடுகள் புலிகள் வரம்பு நாடுகள் (TRCs) என்பதாகும்.
  • புலிகள் எண்ணிக்கையில் அபாயகரமான வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய அவை ஒன்று கூடின.
  • அதே நேரத்தில்  கடந்த நூற்றாண்டில் 95 சதவீதப் புலிகள் அழிந்துவிட்டன என்பது கண்டு பிடிக்கப் பட்டது.
  • புலிகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு முயற்சிகளை முன்னிலைப்படுத்த சர்வதேசப் புலிகள் தினம் ஒரு முக்கியமானச் சந்தர்ப்பமாக மாறியுள்ளது.
  • புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நாடுகள் மேற்கொண்ட பாதுகாப்பு முயற்சிகளையும் இந்த நாள் குறிக்கிறது.

புலிகள் பாதுகாப்பில் இந்தியா எப்படி முன்னணியில் உள்ளது?

  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்பது 1973 ஆம் ஆண்டு தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பாதுகாப்பு முயற்சி ஆகும்.
  • இது இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது.
  • வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் பிற காரணிகளால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அபாயகரமான வீழ்ச்சிக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய அரசு மற்றும் உலக வனவிலங்கு நிதியம் (WWF) மூலம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் அதன் நோக்கங்களை அடைவதில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது.
  • மேலும் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது அந்தத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்து குறிப்பிடத் தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் முதன்முதலில் நிறுவப்பட்ட 1973 ஆம் ஆண்டில் தொடங்கி, இந்தியா தனது புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதிலும் நீண்ட தூரம் வந்துள்ளது.
  • இன்று, இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு மீதான 50 ஆண்டுகள் என்ற பொற் காலத்திற்குப் பிறகு 75,796 சதுர கிமீ பரப்பளவில் 53 புலிகள் பாதுகாப்புக் காப்பகத் திட்டங்கள் உள்ளன.
  • இது நாட்டின் நிலப்பரப்பில் தோராயமாக 2.3% ஆகும்.
  • உலகப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
  • 2006 ஆம் ஆண்டில் 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கையைத் தற்போது குறைந்த பட்சம் 3,167 ஆக அதிகரிப்பதில் இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு வெற்றிக் கதை உண்மையில் குறிப்பிடத்தக்கது.
  • இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வேலியிடப்பட்ட இருப்புக்களை நம்பாமல் இந்தியா இந்தச் சாதனையை அடைந்துள்ளது,
  • இது தங்களின் வனவிலங்குகளைப் பாதுகாக்க எண்ணும் மற்ற நாடுகள் பின்பற்ற விரும்பும் ஒரு உலக மாதிரியாக உள்ளது.

தமிழ்நாட்டில் புலிகள்

  • 16 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் நான்கு மடங்கு அதிகரிப்பை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது
  • 2006 ஆம் ஆண்டில் 76 புலிகள் இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 306 ஆக உள்ளது.
  • கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் 70 புலிகளை இழந்துள்ளதோடு புலி இறப்பு விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவையாவன - ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் (KMTR), முதுமலை புலிகள் காப்பகம் (MTR), ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (SMTR) மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் (STR).
  • தமிழ்நாட்டிலுள்ள ஐந்து புலிகள் காப்பகங்களும் மேலாண்மைத் திறன் மதிப்பீட்டில் (MEE) நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • தமிழக மாநிலத்தின் ஐந்து புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் (எம்டிஆர்) அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன.
  • எண்ணிக்கைக் கணக்கெடுப்பின்படி, MTR காப்பகத்தில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை 114 ஆகும்
  • நீலகிரி தொகுதி உலகின் மிகப்பெரியப் புலிகளின் தாயகமாகும்.
  • ஆனைமலை புலிகள் காப்பகம் (ATR) மற்றும் முதுமலை புலிகள் சரணாலயம் (MTR) ஆகியவை "சிறந்தவை" என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • நாட்டில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் முதல் 12 இருப்புக்களில் இந்த இரண்டும் உள்ளன.
  • உண்மையில், எம்டிஆர் காப்பகம் 100% மதிப்பெண்களை விளைவுஎன்ற பிரிவின் கீழ் பெற்றுள்ளது.
  • இந்த காலக் கட்டத்தில் MTR காப்பகம் மட்டும் 22 பெரிய பூனைகளை இழந்தது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்