- நடப்பு நிதி ஆண்டுக்கு மத்திய அரசு, பல்வேறு திட்டங்களுக்கு செலவிட ரூ.45 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஆண்டில் மத்திய அரசின் வருவாய் ரூ.27.16 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாயை ஒப்பிட செலவு 37 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கும்போது, மத்திய அரசு தன்னுடைய செலவினத்தை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறது.
- மாநிலங்களுக்கும் இதுதான் நிலைமை. செலவினத்துக்கு ஏற்ப வருவாயை பெருக்குவது கட்டாயம். வருவாய் பெருகாமல், கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிடக்கூடும். இந்தியாவின் கடன் எவ்வளவு, எந்தந்த மாநிலங்களுக்கு அதிக கடன் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசின் கடன்சுமை
- 2023 மார்ச் நிலவரப்படி ரூ.155 லட்சம் கோடி - ஜிடிபியில் 57%
- 2014 மார்ச் நிலவரப்படி ரூ.55.87 லட்சம் கோடி - ஜிடிபியில் 57%
அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்கள்
மாநிலங்களின் கடன் அதன் ஜிடிபியில்
கடன்சுமையை குறைத்த மாநிலம்
- 2022-23 நிதி ஆண்டில், ஒடிசா மாநிலம் மட்டுமே தன்னுடைய கடன்சுமையை குறைத்துள்ளது. 2021-22 நிதி ஆண்டில் ஒடிசாவின் கடன்சுமை ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் அது ரூ.1.13 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. மாநிலங்களின் கடன் அதன் ஜிடிபியில்
நன்றி : இந்து தமிழ் திசை (21– 08 – 2023)