TNPSC Thervupettagam

இந்தியா சீனா இருதரப்பு உறவுகள் - பகுதி I

October 23 , 2019 1907 days 4779 0

இதுவரை

  • இந்தியா-சீனா உறவுகள், சீன-இந்திய உறவுகள் அல்லது இந்தோ-சீன உறவுகள் என்றும் அழைக்கப் படுகின்றன. இது இந்தியக் குடியரசுக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவைக் குறிக்கிறது.
  • இந்த உறவு நல்லுறவைக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஏற்படும் எல்லை மோதல்களும் பொருளாதாரப் போட்டிகளும் இரு நாடுகளுக்கிடையில் உறவுகளைச்  சிதைக்க வழி வகுத்தன.

இந்தியா-சீனா உறவுகள்
  • சீனாவும் இந்தியாவும் மிகவும் பழமையான வரலாற்றையும் உறவையும் பகிர்ந்து கொள்கின்றன.
  • முதல் புத்தாயிரம் (முதல் ஆயிரம் ஆண்டுகள்) முழுவதும், அவை ஆன்மீக மற்றும் சமய நடவடிக்கைகளின் மையங்களாக இருந்தன.
  • 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இரு நாடுகளும் மேற்கு காலனித்துவத்தால் பாதிக்கப் பட்டிருந்தன.
  • இருப்பினும், அவர்களுக்கிடையே அரசியல் தொடர்புகள் குறைவாகவே இருந்தன. கலாச்சார ரீதியாக பெரும்பாலும் தொடர்பு இந்தியாவிடம் இருந்து மட்டுமே சீனாவை நோக்கி இருந்தது.
  • கௌடில்யாவின் “அர்த்த சாஸ்திரம்” என்ற நூலில் மௌரிய-இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்  தொடர்புகள் “மஹா-சீனா” மற்றும் “சீன்-அம்ஷுக்”  என்று இடம் பெற்றிருக்கின்றன.
  • டாங் பேரரசர் தை-சுங் இரண்டு குழுக்களை இங்கு அனுப்பியதற்குப் பதில் நடவடிக்கையாக சக்கரவர்த்தி ஹர்ஷவர்தன் சீனாவிற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பினார்.
  • துரதிர்ஷ்டவசமாக, ஹர்ஷவர்தனை அடுத்து வந்த வாரிசுகள் சிலர் தொடுத்த போரில் சீனர்கள் வென்றனர். இதுவே 1962 ஆம் ஆண்டு வரை இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளின் உறவில் இருந்த ஒரே போராகும்.
  • முதல் சில நூற்றாண்டுகளில் அவர்களுக்கு இடையே மத மற்றும் கலாச்சார ரீதியிலான தொடர்புகள் இருந்தன.
  • ஐரோப்பியர்கள் இரு நாடுகளையும் காலனித்துவப்படுத்தும் வரை இந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்பானது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இரு நாடுகளையும் அந்நியர்களாக வாழ வைத்தது.
  • ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் உலகின் உற்பத்தி பொருட்களில் முறையே 33 சதவீதம் மற்றும் 25 சதவீதம் ஆகும்.
  • சாங் வம்சம் (960 - 1279) மற்றும் கிங் (1644 - 1912) வம்சம் ஆகிய அரசுகளின் கீழ் சீனா ஒரு பெரிய வல்லரசாக இருந்தது.
  • குப்தர்கள் (கி.பி.320 - 550) மற்றும் முகலாயர்கள் (1526 - 1857) ஆகிய அரசர்களின் கீழ், இந்தியாவின் பொருளாதார, இராணுவ மற்றும் கலாச்சார வலிமை பொறாமைக்குரிய ஒரு பொருளாக இருந்தது.
  • பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாகரிகங்களை மறைத்து, குறைத்து, சிதைத்து, இறுதியில் அவற்றைக் கைப்பற்றின.
காலனித்துவத்திற்குப் பின்பு
  • பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போது, சீனா இந்தியாவுடன் மிகவும் குறைந்தபட்ச ரீதியிலேயே வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது.
  • இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆசியாவில் ஏற்பட்ட ஒரு பெரிய எழுச்சி இந்தியாவையும் சீனாவையும் ஆழமாகப் பாதித்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அனுதாபத்தோடும், போற்றுதலோடும், பரஸ்பர உத்வேகத்தோடும் தமது உறவுகளை நாடினர்.
  •  அக்டோபர் 10, 1911 இல் ஜின்ஹாய் புரட்சி வெடித்த பின்னர், புரட்சிகர தலைவர் சன் யாட்-சென் அதன் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் சீனக் குடியரசின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார்.
  • அதன் பிறகு 1925 ஆம் ஆண்டில் இரண்டாவது சீனக் குடியரசு நிறுவப்பட்டது. இது சீனக் குடியரசின் அரசாங்கத்திற்கும் தெரிந்திருந்தது.
  • இது 1 ஜூலை 1925 முதல் 20 மே 1948 வரை கோமிண்டாங் கட்சி (சீன தேசியவாத கட்சி) தலைமையில் இருந்தது.
  • 1941 ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் சீனா மீது படையெடுத்த போது, இந்திய தேசியக் காங்கிரஸ் அமைப்பானது மருத்துவர் கோட்னிஸ் தலைமையிலான ஒரு மருத்துவக் குழுவை சீனாவுக்கு அனுப்பியது. அவர் அங்கு பணியில் இருக்கும் போது இறந்தார். இதனால் அவர் ஒற்றுமையின் அடையாளமாக இரு நாடுகளிலும் நினைவு கூறப்படுகிறார்.
  • 1947 இல் இந்தியா சுதந்திரமானது. இந்தியா 1948 ஆம் ஆண்டில்  ஷியாங் கே ஷேக் தலைமையிலான தேசியவாத கோமிண்டாங் சீன அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது.
  • கோமிண்டாங் அரசாங்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடித்த  பின்னர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சீனாவின் நிறுவனத் தந்தை என்று அழைக்கப்படும் மா சேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது.  
  • மாவோ 1949 முதல் 1954 வரை மத்திய மக்கள் அரசாங்கத்தின் தலைவராக சீனாவின் தலைவராகவும்  1954 இல் அதன் முதல் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், 1954 முதல் 1959 வரை சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் இருந்தார். 
  • உடனடியாக அதை அங்கீகரித்த முதல் கம்யூனிசம் அல்லாத நாடு இந்தியா ஆகும்.

1949 - 1962க்கு இடையிலான உறவுகளின் பரிணாமம்
  • இந்த காலகட்டத்தில் சீனர்கள் இந்தியாவின் சுயாதீனமான நிலையைப் புறக்கணித்தும், இந்தியாவின் அணிசேராக் கொள்கை (non-alignment policy) குறித்தும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
  • ஒருவர் ஏகாதிபத்தியத்தை நோக்கியோ அல்லது சோசலிசத்தை நோக்கியோ மட்டுமே இருக்க முடியும்; மூன்றாவது வழி என்பது ஒன்று இல்லவே இல்லை என்று மா சேதுங் வெளிப்படையாகக் கூறினார்; அவர் நேருவை ஆங்கிலய - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணியாள் என்றும் அழைத்தார்.
  • இருப்பினும், பிரதமர் நேரு இந்தியச் சுதந்திரத்தையும் சீனப் புரட்சியையும் எழுச்சி பெற்ற ஆசிய தேசியவாதத்தின் இணையான வெளிப்பாடுகளாகக் கருதி இரு நாடுகளும் நட்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.
  • நேரு சீனாவை எதிர்கால மூன்றாவதுப் பெரிய சக்தியாகக் கருதினார். அதனால் இந்தியாவை நான்காவது இடத்தில் சேர்க்க அவர் விழைந்தார்.
  • 1954 ஆம் ஆண்டு ஜூன்  முதல் 1957  ஆம் ஆண்டு ஜனவரி வரை சீன மற்றும் இந்தியப்  பிரதமர்களின் வருகைகள் அவர்களிடையே நட்பு உணர்வைப் பலப்படுத்தின.
  • 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று சீன இராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது.
  • திபெத் பிரச்சினை குறித்து அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா வலியுறுத்தியது; ஆனால் திபெத்தை தன் உள் விவகாரம் எனக் கூறி இந்தியாவின் தலையீட்டை சீனா நிராகரித்தது.
  • சீனா மற்றும் திபெத் ஆகியவற்றிற்கிடையே 1951 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டில் “வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான இந்தியா-சீனா ஒப்பந்தத்தில்” இருநாடுகளும்  கையெழுத்திட்டன.
  • 1954 ஆம் ஆண்டில் திபெத் மீதான  எட்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் (அல்லது பஞ்ச சீலம்) இந்தியா-சீனா நாடுகள் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ என்ற முழக்கத்துடன் நல்லுறவைத் தொடங்கின.
  •  இந்த உடன்படிக்கையானது பெய்ஜிங்கில் நேரு மற்றும் சீனப் பிரதமர் சூ  என் லாய் ஆகியோரால் கையெழுத்தானது. 

  • 1954 ஆம் ஆண்டில், புதிய இந்திய வரைபடங்களில் அக்சாய் சின் பகுதி இந்திய  எல்லைக்குள் உள்ளடங்கியதாக இருந்தது.
  • ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் லடாக்கின் அக்சாய் சின் பகுதியில்  கட்டி முடிக்கப்பட்ட சீனச் சாலையை இந்தியா கண்டறிந்தது இந்தியாவின்  கடுமையான மற்றும் அடிக்கடியிலான  ஆர்ப்பாட்டங்களையும் எல்லை மோதல்களையும் தூண்டியது.
  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கிழக்கு எல்லையை வரையறுக்கும் மெக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஜனவரி 1959 இல், சீன மக்கள் குடியரசின் பிரதமர் சூ என்லாய் நேருவுக்கு அறிவித்தார்; சீன அரசானது ஒப்பந்தம் மற்றும் மரபை  அடிப்படையாகக் கொண்ட எல்லை குறித்த நேருவின் வாதத்தை நிராகரித்தது.
  • திபெத்திய மக்களின் ஆன்மீக மற்றும் தற்காலிகத்  தலைவரான 14வது தலாய் லாமா என்றழைக்கப்படும் டென்சின் கியாட்சோ இந்தியாவில் தஞ்சம் புக அடைக்கலம் நாடினார்.
  • 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தலாய் லாமாவுடன் ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் குடியேறினர்.
  • தனது எல்லையை "சரிசெய்ய" மேற்கொண்ட ஒரு  நடவடிக்கையாக,  சீனா உடனடியாக 104,000 சதுர கி.மீ பரப்புள்ள இந்தியப் பிராந்தியத்தை தனது பகுதி என்று அறிவித்தது.
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீதான தனது கோரிக்கைக்கு ஈடாக அக்சாய் சின் பகுதியைத்   திரும்பப் பெற சீனா விரும்பியது.
  • இந்தக் கருத்தை இந்திய அரசாங்கம் அவமானகரமானது மற்றும் சமமற்றது என்று நிராகரித்தது. 1960 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தன.
  • எல்லை மோதல்கள் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 தேதியில்  சீன மக்கள் குடியரசிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு குறுகிய எல்லைப் போரை ஏற்படுத்தின.
  • சீன மக்கள் குடியரசு அந்தப் போரின் போது ஆயத்தமில்லாத மற்றும் போதிய எண்ணிக்கையில் இல்லாத இந்தியப் படைகளை மீறி  வடகிழக்கில் அசாம் சமவெளிகளில் நாற்பத்தெட்டு கிலோமீட்டருக்குள் ஊடுறுவியும்,  லடாக்கில் மூலோபாய பகுதிகளையும்  ஆக்கிரமித்தும்  இருந்தது. பின்னர் நவம்பர் 21 ஆம் தேதியன்று  சீனா அதன் எல்லைக் கட்டுப்பாட்டுத்  தூரத்திலிருந்து  இருபது கிலோமீட்டர் வரை பின்வாங்கிக் கொண்டு,  ஒருதலைப் பட்சமாக  போர் நிறுத்தத்தை அறிவித்தது.
  • சீன மக்கள் குடியரசு மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகள் 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் மிகவும் மோசமடைந்தன. அதே நேரத்தில் சீன-பாகிஸ்தான் உறவுகள் மேம்பட்டன; சீன-சோவியத் உறவுகள் மோசமடைந்தன; இவை இந்தோ-சீனா உறவை மோசமாகப் பாதித்திருந்தன.
  • 1967 இன் பிற்பகுதியில் சிக்கிமில் இந்திய மற்றும் சீனப் படைகள் இரண்டு போர்களை நடத்தின. அவை முதலாவதாக  “நாது லா சம்பவம்” மற்றும் இரண்டாவதாக  “சோழா சம்பவம்” என்பதாகும்.
  • 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியா தனது அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற ஒப்பந்தத்தில் சோவியத் யூனியனுடன் கையெழுத்திட்டது.
  • சீன மக்கள் குடியரசு 1971 டிசம்பரில் நடைபெற்ற பாகிஸ்தான் இந்தியா ஆகிவற்றிற்கிடையேயான போரில் பாகிஸ்தானுடன் இணைந்தது.
  • 1978 ஆம் ஆண்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெய்ஜிங்கிற்கு ஒரு முக்கியப் பயணத்தை மேற்கொண்டார், அதன் காரணமாக இரு நாடுகளும் 1979 ஆம் ஆண்டில்  அதிகாரப் பூர்வமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் நிறுவின.
  • 1984 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் சும்டோரோங் சூ பள்ளத்தாக்கில் அவர்கள் மீண்டும் மோதினர்.
ராஜீவ் காந்தியின் உத்வேகம்
  • ராஜீவ் காந்தியின் 1988 ஆம் ஆண்டு சீனப் பயணம் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியது.
  • இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம், பன்முகப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருதரப்பு உறவுகளை அதிகரித்தல், மேலும் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ஆகியவற்றை வலியுறுத்துவது பற்றிய ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப் பட்டது.
  • ஜூலை 1992 இல், சரத் பவார் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தார், அவ்வாறு பயணம் செய்த முதல் இந்தியப் பாதுகாப்பு மந்திரி அவரே ஆவார்.
  • பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் 1993 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தன.
  • "உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு" பற்றிய பிரச்சினையைத் தீர்க்கவும், அக்கோட்டுப் பகுதியில்  ஆயுதப் படைகளை நிலை நிறுத்துதல் மற்றும் இராணுவப் பயிற்சிகள் பற்றிய பரஸ்பர அறிவு குறித்தும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • அப்போதைய இந்தியப் பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை ‘இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று கூறிய சமயத்தின் போது 1998 ஆம் ஆண்டு  மே மாதத்தில்  இந்தியா நிகழ்த்திய அணுசக்தி சோதனை (சக்தி நடவடிக்கை) இருதரப்பு  உறவை மீண்டும் மோசமாக்கியது.
  • 1999 கார்கில் போரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. ஆனால் அதே சமயம் பாகிஸ்தானிடம்  தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு சீனா அறிவுறுத்தியது.
  • 2000 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரின் சீனப் பயணம்; 2002 இல் சீனப் பிரதமரின் இந்திய வருகை; 2003 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமரின் சீனப் பயணம் ஆகியன இருநாடுகளுக்கு இடையிலான உறவை பெரிதும் மேம்படுத்தின.
  • சிக்கிம் பகுதியை ஒரு ஒருங்கிணைந்த இந்திய மாநிலமாக சீனா ஏற்றுக் கொண்டது எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நோக்கில் ஒரு சாதகமான படியாகும்.
  • 2006 ஆம் ஆண்டில், சீனாவும் இந்தியாவும் நாதுலா கணவாயை வர்த்தகத்திற்காக மீண்டும் திறந்தன. 2006 ஆம் ஆண்டுக்கு 44 ஆண்டுகளுக்கு முன்னர் நாதுலா கணவாய் மூடப்பட்டது.
  • தற்போது இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.
  • இருப்பினும் சில சிக்கல்கள் அவற்றுக்கிடையே மிகப்பெரும் வடுவாக இருக்கின்றன. அவை பரஸ்பர உரையாடலின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும்.

அரசியல் ரீதியிலான உறவுகள்
  • ஏப்ரல் 1, 1950 அன்று, சீன மக்கள் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் சோசலிசமற்ற நாடாக இந்தியா விளங்கியது.
  • பிரதமர் நேரு அக்டோபர் 1954 இல் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
  • 1962 ஆம் ஆண்டில் இந்தியா - சீனா எல்லை மோதல் இரு நாடுகளின் உறவுகளுக்கு கடுமையான பின்னடைவாக இருந்த போதிலும், பிரதமர் ராஜீவ் காந்தியின் 1988 ஆம் ஆண்டின் சீனப் பயணம் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தில் ஒரு முக்கியக் கட்டத்தைத் தொடங்கியது.
  • 1993 ஆம் ஆண்டில், பிரதமர் நரசிம்ம ராவின் சீனப் பயணத்தின் போது இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் ஸ்திரத் தன்மையையும் பொருளையும் பிரதிபலித்தது.

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்