TNPSC Thervupettagam

இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெண் தலைவர்கள் – பகுதி III

June 1 , 2023 543 days 758 0

(For the English version of this Article Please click Here)

7. லீலா ராய்

  • லீலா ராய்  ஒரு முற்போக்கான பெண் அரசியல்வாதி, சீர்திருத்தவாதி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கியக் கூட்டாளி ஆகவும் இருந்தார்.
  • லீலா ராய் 1900 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • அசாமின் கோல்பாராவில் துணை நீதிபதியாக இருந்த கிரிச்சந்திர நாக் - குஞ்சலதா நாக் ஆகியோருக்கு அவர் மகளாகப் பிறந்தார்.
  • இவர் வங்காளத்தில் சில்ஹெட்டில் (இப்போது வங்காளதேசம்) ஒரு உயர் நடுத்தர வர்க்க வங்காள இந்து காயாஸ்த குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்த முதல் பெண் மாணவி ஆவார்.
  • 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் உள்ள பெதுன் கல்லூரியில் அவர் கல்வி பயின்றார்.
  • இவருடையத் தந்தை கிரிச்சந்திர நாக் சுபாஷ் சந்திர போஸின் ஆசிரியராக இருந்தார்.
  • டாக்காவில் இரண்டாவது பெண்கள் பள்ளியைத் தொடங்கி, பெண்களுக்கான சமூகப் பணி மற்றும் கல்வியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
  • பல ஆண்டுகளாக இவர் பெண்களுக்காகப் பல பள்ளிகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்.
  • 1921 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்காள பெரும் வெள்ளத்திற்குப் பிறகு நிவாரணப் பணிகளுக்குத் தலைமை தாங்கிய போது இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்தார்.
  • அப்போது டாக்கா பல்கலைக்கழக மாணவியாக இருந்த போது இவர் டாக்கா மகளிர் குழுவை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • அந்த வகையில் "நேதாஜிக்கு உதவுங்கள்" என்ற முழக்கத்துடன் நன்கொடைகளையும் நிவாரணப் பொருட்களையும் அவர் அதிகமாகச் சேகரித்தார்.
  • 1931 ஆம் ஆண்டில் இவர் "ஜெயஸ்ரீ" என்ற பத்திரிக்கையை வெளியிடத் தொடங்கினார். இது பெண் எழுத்தாளர்களால் முழுமையாகப் பங்களிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வெளியிடப் பட்டது.
  • அதன் பெயரைப் பரிந்துரைத்த ரவீந்திரநாத் தாகூர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களின் ஆசிகளையும் இது பெற்றது.
  • லீலா நாக் 1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் டாக்காவில் தீபாலி சங்கம் என்ற ஒரு கிளர்ச்சி அமைப்பை உருவாக்கினார். அங்கு போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • பிரிதிலதா வதேதர் அங்கு கல்வி பயின்றார்.
  • இவர் உப்புச் சத்தியாகிரகத்திலும் பங்கேற்று, அதற்காக ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
  • 1938 ஆம் ஆண்டில் காங்கிரசின் தேசியத் திட்டக் குழுவிற்கு சுபாஷ் சந்திர போஸால் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
  • 1939 ஆம் ஆண்டில் இவர் அனில் சந்திர ராய் என்பவரை மணந்தார்.
  • காங்கிரசிலிருந்து போஸ் பதவி விலகியவுடன், இவர் தனது கணவருடன் சேர்ந்து பார்வர்ட் பிளாக் என்ற கட்சியில் இணைந்தார்.
  • 1941 ஆம் ஆண்டில் டாக்காவில் கடுமையான வகுப்புவாதக் கலவரம் வெடித்த போது, அவர் சரத் சந்திர போஸுடன் இணைந்து ஒற்றுமை வாரியம் மற்றும் தேசியச் சேவைப் படையை உருவாக்கினார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அவரும் அவரது கணவரும் கைது செய்யப் பட்டதோடு அவரது பத்திரிகையும் நிறுத்தப்பட வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.
  • 1946 ஆம் ஆண்டில் அவர் விடுதலையான பிறகு அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் பிரிவினையின் போதான வன்முறையின் போது நவகாளியில் காந்தியைச் சந்தித்தார்.
  • இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அவர் கொல்கத்தாவில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்டப் பெண்களுக்காக விடுதிகள் நடத்தியதோடு கிழக்கு வங்காளத்திலிருந்து வந்த அகதிகளுக்கும் உதவ முயன்றார்.
  • 1946 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை ராய் நவகாளியில் பதினேழு நிவாரண முகாம்களை நிறுவினார்.
  • 1947 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் ஜாதிய மகிளா சங்கதி என்ற பெண்கள் அமைப்பை அவர் நிறுவினார்.
  • 1960 ஆம் ஆண்டில் இவர் பார்வர்ட் பிளாக் மற்றும் பிரஜா சோசலிசக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கட்சியின் தலைவரானார். ஆனால் அதன் பணியில் அவர் ஏமாற்றமடைந்தார்.
  • இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • நீண்டகால உடல்நலக் குறைவிற்குப் பிறகு, 1970 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
  • இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் லீலா ராயின் உருவப்படம் 2008 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று திறந்து வைக்கப் பட்டது.

8. மாலதி தேவி சவுத்ரி

  • மாலதி தேவி சவுத்ரி இந்தியச் சுதந்திரப் போராட்ட ஆர்வலர் மற்றும் காந்தியவாதி ஆகவும் இருந்தார்.
  • மாலதி தேவி சவுத்ரி 1904 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியன்று கிழக்கு வங்காளத்தில் பிறந்தார்.
  • பாரீஸ்டராக இருந்த அவரது தந்தை குமுத் நாத் சென், அவருக்கு இரண்டரை வயதாக இருந்த போது இறந்து விட்டார்.
  • பின்னர் ஒரு எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆக இருந்த அவரது தாயார் சினேலதா சென்னால் அவர் வளர்க்கப் பட்டார்.
  • அவரது தாத்தா பெஹரிலால் குப்தா ஐசிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். 
  • அவரது உறவினர்களான இந்திரஜித் குப்தா மற்றும் ரஞ்சித் குப்தா ஆகியோர் முறையே மேற்கு வங்காளத்தின் உள்துறை அமைச்சராகவும், தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
  • மேலும் அவரது சகோதரர்கள் பிகே சென் மற்றும் கேபி சென் ஆகியோர் முறையே வருமான வரி ஆணையராகவும் இந்தியத் தபால் சேவை அதிகாரியாகவும் பதவி வகித்தனர்.
  • இருப்பினும் மாலதி அரசியலின் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
  • அதற்கு மாறாக மக்களுக்காகச் சேவையாற்ற அவர் முடிவு செய்தார்.
  • தனது 16வது வயதில் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார்.
  • இங்கே அவர் ரவீந்திரநாத் தாகூரின் போதனை மற்றும் கொள்கைகளால் நேரடியாகப் ஈர்க்கப் பட்டார்.
  • தனதுப் பள்ளி நாட்களில் மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் அவர் ஈர்க்கப் பட்டார்.
  • அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நபக்ருஷ்னா சவுத்ரியைத்  திருமணம் செய்து கொண்டார்.
  • தன் வாழ்நாள் முழுவதையும் சுதந்திரப் போராட்டத்திற்கும், மக்கள் சேவைக்காகவும் அவர் அர்ப்பணித்தார்.
  • 1942 ஆம் ஆண்டில் அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, காந்தியின் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற செய்தியை ஒடிசா மக்களுக்கு எடுத்துச் சென்றார். மேலும் அதற்காக அவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார்.
  • அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அங்குலில் பாஜி ரூட் விடுதியை கட்டத் தொடங்கினார்,  மேலும் அங்குப் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்றக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மறுவாழ்வு அளித்தார் .
  • 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியன்று அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிறகு ஒரிசாவின் காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க உதவிய பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • 1946 ஆம் ஆண்டில் அவர் மகாத்மா காந்தி உடன் சிறிது காலம் நவகாளியில் சேர்ந்து  தங்கினார்.
  • எனினும் காந்தியுடன் நவகாளியில் சேர்ந்து பணி புரிய வேண்டி இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் பணியைத் துறந்தார்.
  • அவர் விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் குழந்தைகள் மீதான நலனில் அதிக கவனம் செலுத்த விரும்பினார்.
  • 1948 ஆம் ஆண்டில் ஏழை மற்றும் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக ‘உத்கல் நபாஜிபன் மண்டல்’ என்ற அமைப்பை அவர் உருவாக்கினார்.
  • அவர் தனது வாழ்க்கையில் சமூகத்திற்கு ஆற்றியப் பங்களிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.
  • குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது (1987), ஜம்னாலால் பஜாஜ் விருது (1988), உத்கல் சேவா சம்மான் (1994), தாகூர் எழுத்தறிவு விருது (1995) ஆகியவையும் இதில் அடங்கும்.
  • 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசாங்கத்தால் தேசிய அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்ட போது அவர் அரசாங்கத்தின் சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். இதற்காக அவர்  சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ராஜீவ் காந்தி, காந்திய விழுமியங்களை ஊக்குவிக்க எதையும் செய்யவில்லை என்று 1988 ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தியின் கைகளில் இருந்து மதிப்பு மிக்க ஜம்னாலால் பஜாஜ் விருதைப் பெற அவர் மறுத்து விட்டார்.
  • அவர் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார்.

 

9. பூர்ணிமா பானர்ஜி

  • பூர்ணிமா பானர்ஜி ஒரு இந்திய காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதி என்பதோடு 1946 ஆம் ஆண்டு  முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் ஒரு உறுப்பினர் ஆகவும் இருந்தார்.
  • பூர்ணிமா பானர்ஜி 1911 ஆம் ஆண்டில் வங்காளி பிரம்மோ குடும்பத்தில் பிறந்தார்.
  • அவரது தந்தை கிழக்கு வங்காளத்தின் (இப்போது வங்கதேசம்) பாரிசல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு உணவக உரிமையாளர் ஆவார், சிறிது காலத்துக்குப் பின்னர் அவர் ஐக்கிய மாகாணத்தில் குடியேறினார்.
  • பூர்ணிமா பானர்ஜியின் தாயாரின் பெயர் அம்பாலிகா தேவி ஆகும்.
  • அவருக்கு மொத்தமாக மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
  • அவர் அருணா ஆசஃப் அலி (புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்) மற்றும் உதிதெண்டு ஆகியோரை விட இளையவர் ஆனால், அமரேந்து மற்றும் பிரபாதேந்து கங்குலி ஆகியோரை விட அவர் மூத்தவர் ஆவார்.
  • அவருக்குப் பூர்ணிமா என்ற பெயர் ரவீந்திரநாத் தாகூரால் வழங்கப் பட்டது.
  • பின்னர் அவர் அலகாபாத்தின் சொலிசிட்டர் ஜெனரல் திரு. பியாரேலால் பானர்ஜியின் மருமகளானார்.
  • 1934 ஆம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரஸின் தொடக்கத்திலிருந்து அதன் ஒரு பகுதியாக பூர்ணிமா பானர்ஜி இருந்தார்.
  • அலகாபாத்தில் உள்ள இந்தியத் தேசியக் காங்கிரஸ் நகரக் குழுவின் செயலாளராகவும் அவர் இருந்தார்.
  • அவர் செயலாளராக இருந்த போது கிராமப்புறச் சமூகங்களைத் திறம்படச் செயல்படுத்தினார், தொழிற்சங்கங்களை ஒழுங்கமைத்தார் மற்றும் கிசான் கூட்டங்களைத் திறமையாக நடத்தினார்.
  • 1930 ஆம் ஆண்டில் 24 நாட்கள் தண்டி யாத்திரையில் அவர் பங்கேற்றார்.
  • 1941 ஆம் ஆண்டில் அவர் சுசேதா கிருபளானியுடன் சேர்ந்து தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார், அதற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
  • மீண்டும் 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக பானர்ஜி கைது செய்யப்பட்டார்.
  • அவர் சிறையிலிருந்து கொண்டே பி.ஏ. தேர்வினை எழுதினார்.
  • அதற்குப் பின்னர் அவர் உத்தரப் பிரதேச சட்டமன்றம் மற்றும் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் உறுப்பினரானார்.
  • நமது தேசிய கீதமாக ஜன கண மன பாடல் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று  அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவர் ஜன கண மன பாடல் பாடிய குழுவுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆவார்.
  • அவர் 1951 ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக நைனிடாலில் அகால மரணமடைந்தார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்