TNPSC Thervupettagam

இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெண் தலைவர்கள் – பகுதி IV

June 3 , 2023 541 days 673 0

(For the English version of this Article Please click Here)

10. ராஜ்குமாரி அம்ரித் கவுர்

  • ராஜ்குமாரி அம்ரித் கவுர்  இந்தியச் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகவும் இருந்தார்.
  • அம்ரித் கவுர் 1889 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் (அப்பொழுது ஐக்கிய மாகாணம்) பிறந்தார்.
  • கபுர்தலா ராஜாவின் இளைய மகனான ராஜா 'சர்' ஹர்னம் சிங் அலுவாலியா மற்றும் பிரிசில்லா கோலக்நாத் (ராணி லேடி ஹர்னம் சிங்) ஆகியோருக்கு அவர் மகளாகப் பிறந்தார்.
  • இங்கிலாந்தின் தோர்செட்டில் உள்ள செர்போர்ன் மகளிர் பள்ளியில் அவர் தனது ஆரம்பக் கல்வியினைப் பயின்றார். பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் உயர் கல்வி பயின்றார்.
  • அவர் இங்கிலாந்தில் கல்வி முடித்துப் பின் இந்தியா திரும்பினார்.
  • இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், கவுர் இந்தியச் சுதந்திர இயக்கத்தில் ஆர்வம் காட்டினார்.
  • கோபால கிருஷ்ணா கோகலே உள்ளிட்ட இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் இவரது தந்தை நெருங்கியத் தொடர்பில் இருந்தார்.
  • 1919 ஆம் ஆண்டு மும்பையில் மகாத்மா காந்தியைச் சந்தித்தப் பின் அவரது எண்ணங்களால் கவுர் ஈர்க்கப்பட்டார்.
  • பின்னர் கவுர் காந்தியின் செயலாளராக 16 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரசில் 400க்கும் மேற்பட்ட அமைதியான போராட்டக் காரர்களை ஆங்கிலேயப் படைகள் சுட்டுக் கொன்ற போது, கவுர் ஆங்கிலேய ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
  • பின்னர் இவர் முறையாக காங்கிரசில் சேர்ந்தார். மேலும் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றத்துடன் சமூகச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • கவுர் 1927 ஆம் ஆண்டில்  அகில இந்திய மகளிர் மாநாட்டை நிறுவினார்.
  • 1930 ஆம் ஆண்டில் அதன் செயலாளராகவும், 1933 ஆம் ஆண்டில் தலைவராகவும் இவர் நியமிக்கப் பட்டார்.
  • 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தலைமையிலான தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையில் பங்கேற்றதற்காக ஆங்கிலேய அதிகாரிகளால் இவர் சிறையில் அடைக்கப் பட்டார்.
  • கவுர் 1934 ஆம் ஆண்டில் காந்தியின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கினார்.
  • பின்னர் ஆங்கிலேய அதிகாரிகள் இவரைக் கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமித்தனர்.
  • ஆனால் 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்பதாக இவர் அந்தப் பதவியைத் துறந்தார்.
  • அந்த நேரத்தில் இவர் செய்த செயல்களுக்காக ஆங்கிலேய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப் பட்டார்.
  • கவுர் அகில இந்திய மகளிர் கல்வி நிதிச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவர் புதுதில்லியில் உள்ள லேடி இர்வின் கல்லூரியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
  • இலண்டன் மற்றும் பாரீஸில் யுனெஸ்கோ மாநாடுகளுக்காக 1945 ஆம் ஆண்டு மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக இவர் அனுப்பப் பட்டார்.
  • அகில இந்திய நூற்பாலைச் சங்கத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் இவர் பணி ஆற்றினார்.
  • கவுர் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினராக  நியமிக்கப்பட்டார்.
  • அடிப்படை உரிமைகள் தொடர்பான ஒரு துணைக்குழு உறுப்பினராகவும் மற்றும் சிறுபான்மையினருக்கான ஒரு துணைக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்தார்.
  • இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு அம்ரித் கவுர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையின் ஒரு அங்கமாகவும்  இருந்தார்.
  • இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக 1947 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டு 1957 ஆம் ஆண்டு வரை இவர் அப்பதவியில் இருந்தார்.
  • கவுர் சுகாதார அமைச்சராக இருந்த போது  இந்தியாவில் மலேரியா பரவுவதை எதிர்த்துப் போராடும்  ஒரு பெரிய பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • காசநோயை ஒழிப்பதற்கானப் பிரச்சாரத்தை வழி நடத்திய இவர் உலகின் மிகப்பெரிய பி.சி.ஜி தடுப்பூசித் திட்டதைச் செயல்படுத்த  ஒரு உந்து சக்தியாகவும் இருந்தார்.
  • 1950 ஆம் ஆண்டில் இவர் உலக சுகாதார சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
  • சுகாதார அமைச்சராக கவுர் புதுதில்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை நிறுவுவதில் ஒரு கருவியாகவும் அதன் முதல் தலைவராகவும் இருந்தார்.
  • கவுர் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக பதினான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார்.
  • இந்தியக் காசநோய் சங்கம் மற்றும் சென்னையில் மத்தியத் தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை இவர் தொடங்கினார்.
  • அம்ரித் கவுர் செவிலியர் கல்லூரி மற்றும் இந்தியத் தேசிய விளையாட்டுக் கழகத்தை இவர் தொடங்கினார்.
  • 1957 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு  வரை இவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார் .
  • 1958 ஆம் ஆண்டு மற்றும் 1963 ஆம் ஆண்டுக்கு இடையில் கவுர் தில்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.
  • இவர் இறக்கும் வரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், இந்திய காசநோய் சங்கம் மற்றும் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் கார்ப்ஸ் ஆகியவற்றின் தலைவராகத் தொடர்ந்துப் பதவி வகித்தார்.
  • இவருக்கு ரெனே சான்ட் நினைவு விருது வழங்கப் பட்டது.
  • கவுர் 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம்  தேதியன்று புதுதில்லியில் இறந்தார். 
  • அவரது தனிப்பட்ட ஆவணங்கள் டெல்லியின் தீன் மூர்த்தி மாளிகையில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் அங்குள்ள நூலகத்தில் உள்ள காப்பகங்களின் ஒரு பகுதியில் வைத்து இன்றும் பாதுகாக்கப் படுகிறது.

11. ரேணுகா ராய்

  • ரேணுகா ராய்  இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர், சமூக ஆர்வலர் மற்றும் ஒரு அரசியல்வாதியாக இருந்தார்.
  • இவர் 1904  ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • பிரம்ம சமாஜ் அமைப்பின் சீர்திருத்தவாதியான நிபரன் சந்திர முகர்ஜிக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சதீஷ் சந்திர முகர்ஜியின் மகளான சமூக சேவகரும் அகில இந்திய மகளிர் மாநாட்டின் உறுப்பினருமான சாருலதா முகர்ஜிக்கும் இவர் மகளாகப் பிறந்தர்.
  • இவர் தனது பதினாறாவது வயதில் மகாத்மா காந்தியுடன் தொடர்பு கொண்டு அதன் பிறகு அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
  • பிரித்தானிய இந்தியக் கல்வி முறையைப் புறக்கணிக்கவும் காந்திஜியின் அழைப்பிற்குப்  பதிலளிக்கவும் இவர் கல்லூரியை விட்டு வெளியேறினார்.
  • இருப்பினும், இவருடையப் பெற்றோர் காந்தியடிகளிடம் சொல்லி மேல்  படிப்புக்காக இலண்டன் செல்லும் படி இவரை வற்புறுத்திய பின்னர், இவர் 1921 ஆம் ஆண்டில்  இலண்டன் பொருளியல் கல்லூரியில் சேர்ந்தார்.
  • சத்யேந்திர நாத் ராய் என்பவரை  இவர் தனது சிறு வயதிலேயே மணந்தார்.
  • இந்தியா திரும்பியதும்,  இவர் அகில இந்திய மகளிர் மாநாட்டில் சேர்ந்தார்.
  • இவர் பெற்றோரின் சொத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பரம்பரை உரிமைகளை வென்றெடுக்க கடுமையாக உழைத்தார்.
  • 1932 ஆம் ஆண்டில்  அகில இந்திய மகளிர் மாநாட்டின் இவர் தலைவரானார்.
  • அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவராக 1953-54 ஆம் ஆண்டுகளில் இவர் இருந்தார்.
  • இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக 1943 ஆம் ஆண்டில் மத்தியப் பாராளுமன்றத்திற்கு இவர் பரிந்துரைக்கப் பட்டார்.
  • இவர் 1946-47 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • மேற்கு வங்கத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை இவர் நியமிக்கப்பட்டார்.
  • இவர் மால்டா மக்களவைத் தொகுதியில் 1957-1967 ஆம் ஆண்டுகளில் அதன் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
  • ரேணுகா ராய் குழு எனப் பிரபலமாக இருந்த சமூக நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த குழுவிற்கு 1959 ஆம் ஆண்டில் இவர் தலைமை தாங்கினார்.
  • இவர் ‘என் நினைவுகள்: காந்தியக் காலத்திலும் அதற்குப் பிறகும் சமூக மேம்பாடு’ என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.
  • 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்குப் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
  • ரேணுகா ராய் 1997 ஆம் ஆண்டு இறந்தார்.

12. சரோஜினி நாயுடு

  • சரோஜினி நாயுடு இந்திய அரசியல் ஆர்வலர் மற்றும் கவிஞர் ஆகவும் இருந்தார்.
  • சரோஜினி நாயுடு ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 தேதியன்று பிறந்தார்.
  • இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா ஆவார்.
  • இவரது தந்தை நிசாம் கல்லூரியின் முதல்வர் ஆவார்.
  • இவரது தந்தை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார் ஆவார்.
  • இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார்.
  • 1895 ஆம் ஆண்டு முதல் 1898 ஆம் ஆண்டு வரை  முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித் தொகை மூலம் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காக அவர் இங்கிலாந்து சென்றார்.
  • இங்கிலாந்தில் தங்கியிருந்த போது தனது 17 வயதில் முத்தியாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில் ரீதியான ஒரு மருத்துவரைச் சந்தித்து, அவரைக் காதலித்து தனது 19வது வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
  • 1898 ஆம் ஆண்டு சட்டப்படி சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
  • ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி மற்றும் பத்மஜா என அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.
  • பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுநர் ஆனார்.
  • 1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
  • 1903-17 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசாமி அய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
  • 1917 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காந்தியின் சத்தியாக்கிரக யாத்திரையில் பங்கேற்றார்.
  • நாயுடு 1919 ஆம் ஆண்டில் அகில இந்தியத் தன்னாட்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்குச் சென்ற அவர் ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியாவின்  விடுதலைக்காக வாதாடினார்.
  • அடுத்த ஆண்டு அவர் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
  • 1924 ஆம் ஆண்டில்  நாயுடு கிழக்கு ஆப்பிரிக்க இந்தியத் தேசிய காங்கிரஸில் இந்தியத் தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • நாயுடு இந்தியத் தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவராக 1925 ஆம் ஆண்டில்  இருந்தார்.
  • 1927 ஆம் ஆண்டில்  நாயுடு அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் ஒரு நிறுவன உறுப்பினராக இருந்தார்.
  • ஒரு வன்முறையற்ற எதிர்ப்பை ஊக்குவிக்க 1928 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா பயணம் செய்தார்.
  • 1929 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் இந்தியக் காங்கிரஸின் அமர்விற்கு நாயுடு தலைமை தாங்கினார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர்கள் நாயுடுவை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
  • அவர் அப்போது 21 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.
  • 1930 ஆம் ஆண்டில் காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகப் போரரட்டத்தில் பங்கேற்றார்.
  • இவருடன் கமலாதேவி சட்டோபாத்யாய் மற்றும் குர்ஷெட் நௌரோஜி உட்பட பல பெண் ஆர்வலர்கள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
  • 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி காந்தி கைது செய்யப்பட்ட போது, நாயுடு அந்தப் போராட்டத்தின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டார்.
  • 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, நாயுடு ஐக்கிய மாகாணங்களின் (இன்றைய உத்தரப் பிரதேசத்தின்) ஆளுநராக நியமிக்கப் பட்டு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக இருந்தார்.
  • நாயுடு தனது 12 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.
  • பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகேர் முனீர் என்ற அவரது நாடகம், ஹைதராபாத் நிஜாமைக் கவர்ந்தது.
  • அவரது முதல் கவிதைப் புத்தகம் 1905 ஆம் ஆண்டு லண்டனில் "த கோல்டன் த்ரெஷோல்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
  • அவரது புனைப்பெயர்கள் "இந்தியாவின் கவிக்குயில்" மற்றும் "பாரத் கோகிலா"  ஆகியவை ஆகும்.
  • அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  2 தேதியன்று  இறந்தார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்