TNPSC Thervupettagam

இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெண் தலைவர்கள் – பகுதி V

June 9 , 2023 535 days 800 0

(For the English version of this Article Please click Here)

13. சுசேதா கிருபாளினி

  • சுசேதா கிருபாளினி இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்  மற்றும் அரசியல்வாதி ஆகவும் இருந்தார்.
  • அவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 தேதியன்று பிறந்தார்.
  • அவர் பஞ்சாபின் அம்பாலாவில் (இப்போது ஹரியானா) ஒரு வங்காளி பிரம்மக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை சுரேந்திரநாத் மஜும்தார் ஒரு மருத்துவ அதிகாரியாகப் பணி புரிந்தார்.
  • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு வரலாற்றின் பேராசிரியர் ஆவதற்கு முன்பு அவர் இந்திரப் பிரஸ்தா கல்லூரி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
  • 1936 ஆம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரஸின் முக்கியப் பிரமுகரான ஜே.பி. கிருபாளினியை அவர் திருமணம் செய்து கொண்டார்.
  • அவர்  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.  
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக  அருணா ஆசப் அலி மற்றும் உஷா மேத்தாவைக் கைது செய்தது போலவே  ஆங்கிலேயர்களால் இவரும் கைது செய்யப் பட்டார்.
  • இவர் நவகாளி பிரிவினைக் கலவரத்தின் போது மகாத்மா காந்தியுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.
  • 1946 ஆம் ஆண்டில் நவகாளிக்குக் காந்தியுடன் இவரும் சென்றார்.
  • இந்திய அரசியல் நிர்ணயச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • அவர் கான்பூர் தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய துணைக் குழுவின் ஒரு அங்கமாகவும் இருந்தார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேரு தனது புகழ்பெற்ற "டிரைஸ்ட் வித் டெஸ்டினி" என்ற உரையை ஆற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் சுதந்திர அமர்வில் வந்தே மாதரம் பாடலை பாடினார்.
  • 1940 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகில இந்திய மகிளா காங்கிரஸின் நிறுவனர் ஆவார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு  அவர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்.
  • 1952 ஆம் ஆண்டில்  நடந்த முதல் மக்களவை தேர்தலில் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியின் சார்பில் புதுதில்லியில் போட்டியிட்டார்.
  • அவர் கடைசியாக 1967 ஆம் ஆண்டில்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோண்டா தொகுதியில்   இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
  • 1960 ஆம் ஆண்டு  முதல் 1963 ஆம் ஆண்டு  வரை உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர், சமூக மேம்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சராக இவர் பணியாற்றினார்.
  • இவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்,
  • ஒரு மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த முதல் இந்தியப் பெண்மணி அவரே ஆவார்.
  • 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவு பட்ட போது அவர் மொரார்ஜி தேசாய் பிரிவினருடன் கட்சியை விட்டு வெளியேறி என்சிஓ என்ற பிரிவினை உருவாக்கினார்.
  • அவர் 1971 ஆம் ஆண்டு தேர்தலில் பைசாபாத்தின் (மக்களவைத் தொகுதி) என்சிஓ கட்சி வேட்பாளராகத் தோல்வியடைந்தார்.
  • 1971 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
  • அவர் 1974 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 1 தேதியன்று இறந்தார்.

14. விஜய லட்சுமி பண்டிட்

  • விஜய லக்ஷ்மி பண்டிட் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆகவும் இருந்தார்.
  • அவர் 1900 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 18 ஆம்  தேதியன்று பிறந்தார்.
  • அவர் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த மோதிலால் நேரு-ஸ்வரூபிராணி துசு தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.
  • அவர்  புகழ்பெற்ற நேரு-காந்தி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
  • அவரது சகோதரர் ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்தார்.
  • அவரது மருமகள் இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராகவும் இருந்தார்.
  • அவரது மருமகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் மிகவும் இள வயது பிரதமராகவும் மற்றும் ஆறாவது பிரதமராகவும் இருந்தார்.
  • சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராகப் பணியாற்றியப் பிறகு, இவர்  இந்தியாவின் மிக முக்கியமான இராஜதந்திரியாக லண்டனுக்கு அனுப்பப் பட்டார்.
  • 1916 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
  • அவர் சரோஜினி நாயுடு மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார்.
  • 1920 ஆம் ஆண்டில் அகமதாபாத்திற்கு அருகில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் அவர் வாழ்நாளைச் செலவிட்டார்.
  • இவர் யங் இந்தியா பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
  • இவர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
  • 1936 ஆம் ஆண்டு  அவர் பொதுத் தேர்தலில் பங்கேற்று 1937 ஆம் ஆண்டு காவ்ன்பூர் பில்ஹவுர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1937 ஆம் ஆண்டில் அவர் ஐக்கிய மாகாணங்களின் மாகாணச் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டு அங்கு உள்ளாட்சித் துறை மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இவர் ஆங்கிலேயர் அரசால் பல முறை கைது செய்யப்பட்டார்.
  • 1931 ஆம் ஆண்டு முதல்  1933 ஆம்  ஆண்டு வரை 18 மாதங்கள் சிறையில் இருந்தார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 7 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், அதற்கு முன்பும் 1940 ஆம் ஆண்டிலும் 6 மாதங்கள் அவர் சிறையில் கழித்தார்.
  • அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டப் பிறகு 1943 ஆம் ஆண்டு வங்காளத்தில்  பஞ்சத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவினார்.
  • தெருக்களில் இருந்து ஏழைக் குழந்தைகளை மீட்கும் குழந்தைகள் பாதுகாப்பு நிதியக் குழுவின் தலைவராகவும் அவர்  பணியாற்றினார்.
  • 1944 ஆம் ஆண்டில் அவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து, இந்து விதவைகள் அனுபவிக்கும் வேதனைகளை  அவரும் அனுபவித்தார், அதனால் இந்தச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வர அகில இந்திய மகளிர் மாநாட்டில் பிரச்சாரம் செய்தார்.
  • 1946 ஆம் ஆண்டில்  ஐக்கிய மாகாணங்களில் இருந்து அவர் அரசியலமைப்பு நிர்ணயச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1947 ஆம் ஆண்டு  முதல் 1949  ஆம் ஆண்டு வரை  சோவியத் யூனியன்,  1949 ஆம் ஆண்டு  முதல் 1951 ஆம் ஆண்டு  வரை அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, 1955 ஆம் ஆண்டு  முதல் 1961 ஆம் ஆண்டு வரை  அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் மற்றும் 1956 ஆம் ஆண்டு  முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஸ்பெயின்  ஆகிய  நாடுகளுக்கு இவர்  இந்தியத் தூதராக இருந்தார்.
  • 1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு  வரை அவர் ஐக்கியப் பேரரசிற்கான இந்திய உயர் ஆணையராகவும் இருந்தார்.
  • 1946 ஆம் ஆண்டு  மற்றும் 1968 ஆம் ஆண்டுக்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதுக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • 1953 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முதல் பெண் தலைவரானார்.
  • 1978 ஆம் ஆண்டு  இந்தச் சாதனைக்காக ஆல்பா கப்பா ஆல்பா சொராரிட்டியின் ஒரு கெளரவ உறுப்பினராக அவர் சேர்க்கப்பட்டார்.
  • அவர் 1962 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிர ஆளுநராகப் பணியாற்றினார்.
  • புல்பூரில் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1964 ஆம் ஆண்டு  முதல் 1968 ஆம் ஆண்டு  வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1975 ஆம் ஆண்டில் தேசிய அவசர நிலையை அறிவித்த போது அப்போதையப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியைக் கடுமையாக பண்டிட் விமர்சித்தார்.
  • அவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு பண்டிட் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • அதன் பிறகு இமயமலை அடிவாரத்தில் உள்ள டூன் பள்ளத்தாக்கில் உள்ள டேராடூனிற்கு குடி பெயர்ந்தார்.
  • 1979 ஆம் ஆண்டில்  அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தியப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். அதன் பிறகு அவர் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.
  • அவர்  எழுதியப்  புத்தகங்கள் - தி எவல்யூஷன் ஆஃப் இந்தியா (1958) மற்றும் தி ஸ்கோப் ஆஃப் ஹேப்பினஸ்: எ பர்சனல் மெமோயர் (1979) ஆகியவை ஆகும்.
  • அவர் 199௦ ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று இறந்தார்.

15. அன் மசுகரேன்

  • அன் மசுகரேன் இந்தியச் சுதந்திரப் போராட்ட ஆர்வலர், அரசியல்வாதி, கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்  மற்றும்  கேரளாவின் முதல் பெண் அமைச்சர் ஆகியப் பொறுப்புகளில் இருந்தார்.
  • மசுகரேன் திருவனந்தபுரத்தில் 19௦2 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை கேப்ரியல் மசுகரேன் திருவாங்கூர் மாநிலத்தில் ஒரு அரசு அதிகாரியாக இருந்தார்.
  • இவர் 1925 ஆம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜா கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • இலங்கையில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பே அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கலை மற்றும் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புப் பட்டம் பெற்றார்.
  • அக்கம்மா செரியன் மற்றும் பட்டம் தாணு பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து இந்தியத் தேசத்திற்குள் சுதேச ஒருங்கிணைப்பு இயக்கங்களின் தலைவர்களில் ஒருவராக மசுகரேன் இருந்தார்.
  • 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதத்தில்  திருவாங்கூர் மாநிலக் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டபோது அதில் சேர்ந்த முதல் பெண்மணி இவரே ஆவார்.
  • திருவாங்கூருக்கு என்று அதன் தலைவராக பட்டம் தாணு பிள்ளையினை அமர்த்தி, அங்கு ஒரு பொறுப்பான அரசாங்கத்தை நிறுவுவதே இந்தக் கட்சியின் ஒரு குறிக்கோளாக இருந்தது.
  • ஆங்கிலேய அரசுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால் 1939 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு  வரை பல முறை அவர் கைது செய்யப் பட்டார்.
  • 1938 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை  திருவிதாங்கூர் அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் மசுகரேன் பணியாற்றினார்.
  • அம்மாநிலச் சட்டமன்றத்தில் இருந்த காலத்தில் இவர் ஒரு சிறந்த பேச்சாளராகக் கருதப் பட்டார்.
  • 1942 ஆம் ஆண்டில் மசுகரேன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் திருவாங்கூர் மாநிலக் காங்கிரசின் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1946 ஆம் ஆண்டில் 299 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண்களில் ஒருவராக மஸ்கரேன் தேர்ந்தெடுக்கப் பட்டு, இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
  • 1948 ஆம் ஆண்டில் அவர் திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு 1952  ஆம் ஆண்டு வரை அதில் அவர் பணியாற்றினார்.
  • 1949 ஆம் ஆண்டில் அவர் பாரூர் டி.கே. நாராயணப் பிள்ளை அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு கேரள மாநிலத்தில் அமைச்சராகப் பணியாற்றிய முதல் பெண்மணி ஆவார்.
  • 1951 இந்தியப் பொதுத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக முதல் மக்களவைக்கு மஸ்கரீன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவர் கேரளாவில் இருந்து முதல் பெண் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அந்தத் தேர்தல்களில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.
  • அன்னி மஸ்கரின் 1963 ஆம் ஆண்டில் இறந்தார். மேலும் அவரது கல்லறை திருவனந்த புரத்தில் உள்ள பட்டூரில் உள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்