TNPSC Thervupettagam

இந்திய இரயில்வே - சில தகவல்கள்

January 11 , 2018 2538 days 16599 0
இந்திய இரயில்வே - சில தகவல்கள்

 - - - - - - - - - - - - - - - 

  • இந்திய இரயில்வே ஆனது இந்திய அரசின் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.

  • இந்திய இரயில்வே ஆனது ஆசியாவிலேயே மிகப் பெரிய இரயில்வே அமைப்பு ஆகும்.
  • இந்திய ரயில்வேயானது ஒற்றை அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய ரயில்வே வலையமைப்பாகும். இது மொத்தமாக 1,27,760 கி.மீ. நீள ரயில்பாதையினை உடைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும்.
  • இந்திய ரயில்வேயானது உலகின் எட்டாவது மிகப்பெரிய பணியாளர்களை உடைய நிறுவனமாகும். இது4 மில்லியன் தொழிலாளர்களை உடையதாக விளங்குகிறது.
  • 1853-ல் நீராவியில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் இரயில் மும்பைக்கும் தானாவுக்கும் இடையே இயக்கப்பட்டது. அப்பாதையின் நீளம் 34 கிலோமீட்டர்களாகும்.

 

  • இந்தியாவில் அச்சமயத்தில் டல்ஹெளசி பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்த பயணிகள் இரயிலானது நிலக்கரி எஞ்சின் மூலம் இயங்கியது.
  • தென் இந்தியாவின் முதல் பயணிகள் இரயிலானது இராயபுரம் / வியாசர்பாடியிலிருந்து வாலஜா சாலை (ஆற்காடு) வரை உள்ள 60 மைல் தொலைவுக்கு ஜுலை 1,1856 முதல் இயங்கியது.

  • பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதற்கும் இந்தியாவின் வெவ்வேறு துறைமுகங்களிலிருந்து மூலப்பொருட்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யவும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து நாட்டின் அனைத்து இடங்களுக்கும் குறைந்த நேரத்தில் பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்த இரயில்வே அமைப்பை ஏற்படுத்தினர்.

  • சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டில் இரயில் பாதை விரிவாக்கத்தை எதிர்த்தனர். ஏனெனில் இரயில் பாதை விரிவாக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலுள்ள வளங்களை சுரண்டுவதற்கு பயன்படுத்துவதாக எண்ணியதால் அதை எதிர்த்தனர்.
  • சுதந்திரத்திற்கு பின்பு இரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு ரயில்வேக்கான புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டது.

  • டீசல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது மின்சார ரயில்களின் மாசு வெளியீடு மிகவும் குறைவானதாகும். இந்தியாவிலுள்ள 65,000 கி.மீ. நீளமுள்ள மொத்த ரயில் பாதையில் 15,000 கி.மீ. அளவிற்கு மின்பாதையாக இருக்கிறது.
  • இரயில்வே அமைப்பு முறையானது பெரும்பாலும் அகலப்பாதையாகவே காணப்படுகிறது. சிறிய நீளங்களை உடைய அமைப்புகள் மீட்டர் மற்றும் குறுகிய அகலப்பாதையை பயன்படுத்துகின்றன. மின்சார இரயில்கள் அனைத்தும் 25 கிலோவோல்ட் மாற்று மின்னோட்டத்தை (AC) பயன்படுத்துகின்றன
  • இந்தியாவில் மொத்தம் 7500 சிறிய மற்றும் பெரிய இரயில் நிலையங்கள் உள்ளன.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லக்கூடிய மக்களின் வர்த்தகப்பொருட்களில் 30% முதல் 40% வரை ரயில்வே இடம் மாற்றுகிறது.
  • இந்திய ரயில்வே 1950-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

 

சிறப்புத் தகவல்கள்

  • முதலாவது ரயில்பாதை ஜகன்நாத் ஷன்கேர்சேத் மற்றும் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் ஆகிய இரு இந்தியர்களால் கட்டமைக்கப்பட்டது.

  • ரயில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட தொலைவின் அடிப்படையில், நாட்டின் தண்டவாள அமைப்பு 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • அகல ரயில்பாதை ―        67 மீ
    • மீட்டர் பாதை ―        00 மீ
    • குறுகிய பாதை             ―       762 அல்லது 0.610 மீ

  • சிலிகுரி சந்திப்பு ஆனது சிலிகுரியில் உள்ள மூன்று ரயில் நிலையங்களுள் ஒன்று ஆகும். இது மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி டவுன் மற்றும் நியூ ஜல்பய்குரி ஆகியவை இன்ன பிற இரண்டு நிலையங்களாகும். இந்தியாவில் இந்த ரயில் சந்திப்பு மட்டுமே அகல ரயில்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை என்ற மூன்று வித ரயில் பாதைகளையும் கொண்டிருக்கிறது.

  • இந்தியாவின் இரண்டாவது ரயிலானது 1854-ல் ஹௌராவிற்கும், ஹூக்ளிக்கும் இடையில் ஓடியது
  • இந்திய ரயில்வே வாரியம் ஆனது 1905-ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

  • 94% இயக்க வீதத்தின் படி, ரயில்வேயானது அது ஈட்டும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 94 பைசாவை செலவழித்து விடுகிறது.
  • முதல் இரயில்வே பட்ஜெட் 1925-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.
  • 1951-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தென்னக இரயில்வே உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில், 1902-ல் முதன் முறையாக நிரந்தரமான மின்சார விளக்குகள் ஜோத்பூர் இரயில்வே நிலையத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டன.
  • இரயில் பாதையில் முதன்முறையாக மின்சாரத்தால் இயக்கப்படும் சிக்னல்கள் பாம்பே மற்றும் தாதர் இரயில் நிலையங்களுக்கிடையே 1920-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.
  • இரயில் பாதை மின்மயமாக்கல் முதன் முதலாக பாம்பே விக்டோரியா நிலையத்திலிருந்து குர்லா நிலையம் வரை 1925-ம் ஆண்டில் பிப்ரவரி 03 ஆம் நாளன்று ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தியாவின் முதலாவது நீண்டதூர மின்சார ரயில் டெக்கன் குயின் (மும்பை மற்றும் பூனாவிற்கு இடையில் 1930ல் ஓடியது) ஆகும்.

  • ரஷ்யாவிற்கு அடுத்து உலக அளவில் ரயில் இயக்கத்திற்கு மிகப்பெரிய அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது
  • 2017 மார்ச் 31-ம் தேதி அன்று நாட்டிலுள்ள மொத்த இரயில் பாதைகளும் 2022-ம் ஆண்டிற்குள் மின்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் முதன் முதலாக 1986-ம் ஆண்டு கணினி வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1999-ம் ஆண்டு முதல் கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
  • இந்திய இரயில்வே மொத்தம் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் ரயில்வே மண்டலங்கள்

ரயில்வே மண்டலம் குறியீடு மண்டலத் தலைமையகம் பாதையின் நீளம் (கி.மீ.)
வடக்கு ரயில்வே NR டெல்லி 6,968
வடகிழக்கு ரயில்வே NER கோரக்பூர் 3,667
வடகிழக்கு எல்லை ரயில்வே NFR கவுகாத்தி 3,907
கிழக்கு ரயில்வே ER கொல்கத்தா 2,414
தென் கிழக்கு ரயில்வே SER கொல்கத்தா 2,631
தெற்கு மத்திய ரயில்வே SCR செகந்திராபாத் 6,137
தெற்கு ரயில்வே SR சென்னை 6,844
மத்திய ரயில்வே CR மும்பை 3,905
மேற்கு ரயில்வே WR மும்பை 6,182
தென்மேற்கு ரயில்வே SWR ஹூப்ளி 3,177
வடமேற்கு ரயில்வே NWR ஜெய்ப்பூர் 5,459
மேற்கு மத்திய ரயில்வே WCR ஜபல்பூர் 2,965
வட மத்திய ரயில்வே NCR அலகாபாத் 3,151
தென்கிழக்கு மத்திய ரயில்வே SECR பிலாஸ்பூர் 2,447
கிழக்கு கடற்கரை ரயில்வே ECoR புவனேஸ்வர் 2,572
கிழக்கு மத்திய ரயில்வே ECR ஹாஜிப்பூர் 3,628
கொங்கன் ரயில்வே KR மும்பை 738
  • மிகவும் நீளமான ரயில்வே மண்டலம் வடக்கு ரயில்வே ஆகும்.
  • சித்தரஞ்சன் லோகோமேட்டிவ் ஓர்க்ஸ் தொழிற்சாலை மின்சார இரயில் என்ஜின்களையும், வாரணாசியிலுள்ள டீசல் லோகோமேட்டிவ் ஒர்க்ஸ் டீசல் என்ஜின்களையும், பெரம்பூரிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலை (Integrated Coach Factory-ICF) இரயில் பெட்டிகளையும் தயாரிக்கிறது.
  • தற்போது மூன்று சர்வதேச விரைவு ரயில்கள் நடைமுறை இயக்கத்தில் உள்ளன. அவையாவன சம்ஜீவதா விரைவு ரயில், தார் விரைவு ரயில் (ஜோத்பூர் முதல் கராச்சி வரை), மற்றும் மைத்ரி எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா முதல் டாக்கா வரை)
  • நட்பு விரைவு ரயில் என்றழைக்கப்படும் சம்ஜீவதா விரைவு ரயில் ஆனது இந்தியாவின் முதலாவது சர்வதேச எல்லை ரயில் ஆகும். இது இந்தியாவின் டெல்லியிலிருந்து அட்டாரி வழியாக பாகிஸ்தானின் லாகூர் வரை சென்றது. இது 40 வருடங்களுக்கு முன்னர் 1976ஆம் ஆண்டு ஜூலை 22ல் தொடங்கப்பட்டு துவங்கப்பட்டு பின்னர் 2002-ம் ஆண்டு ஜனவரி 1ல், 2001 டிசம்பர் 13, அன்று நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஜனவரி 15, 2004-ல் மீண்டும் துவங்கப்பட்டது. ஆனால் 27 டிசம்பர், 2007-ல் பெனாசீர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் நிறுத்தப்பட்டது.
  • ஜோத்பூரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு தார் விரைவுரயில் இயக்கப்படுகிறது.
  • கல்கத்தாவிற்கும் வங்கதேச தலைநகரான டாக்காவிற்கும் நட்பு ரீதியாக 43 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைத்ரி விரைவு வண்டி (Maitri Express) என்ற ரயில் ஏப்ரல் 2008 முதல் மீண்டும் தன் சேவையினை தொடங்கியது. மேலும் இரண்டாவது சேவையாக 2017ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் வங்கதேசத்தின் குல்னா நகருக்கும் இடையே பந்தன் விரைவு இரயில் ஓடத் துவங்கியது.

  • 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27 முதல் நவம்பர் இறுதி வரை, 1.3 மில்லியன் இசுலாமியர்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இசுலாமியர் அல்லாதோர்கள் எதிரெதிர் திசைகளில் அகதிகளாகப் பயணித்தனர். இதற்கான சிறப்பு ரயில் சேவைகள், “இந்தியா ஸ்பெஷல்“ அல்லது ”பாகிஸ்தான் ஸ்பெஷல்” என்றழைக்கப்பட்டது.
  • ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் இரயிலும் 5 இலக்க எண்ணுடன் இயக்கப்படுகிறது. முதல் இலக்கமானது 1 (அல்லது) 2 ல் ஆரம்பித்தால் அது நெடுந்தூரம் செல்லும் ரயில் ஆகும். முதல் இலக்கம் 5 இல் ஆரம்பித்தால் குறுகிய தூர பயணிகள் இரயிலாகும். இரண்டாவது இலக்கமானது இரயில் எந்த மண்டலத்தைச் சார்ந்தது என்பதை குறிக்கும். 3-வது இலக்கம் மண்டலத்தின் எந்த பிரிவு என்பதை குறிக்கும். இறுதி இரண்டு இலக்கங்கள் இரயிலின் வரிசை எண் ஆகும்.
  • அதிவேகமாக செல்லும் இரயில்களில் 2-வது இலக்கம் எப்போதும் 2-ஆகவே இருக்கும். (முதலாவது இலக்கம் எப்போதும் 1 அல்லது 2) மூன்றாவது இலக்கம் மண்டலத்தையும் 4-வது இலக்கம் மண்டலத்தின் பிரிவினையும் குறிக்கும். கடைசி ஒரே ஒரு இலக்கம் மட்டும் தான் பிரிவினுள் உள்ள ரயிலின் வரிசை எண் ஆகும்.
  • மூத்த குடிமக்கள், (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மாற்று திறனாளிகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், போட்டித் தேர்வில் கலந்து கொள்ள பயணிப்பவர்கள் ஆகியோருக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
  • வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ‘இன்ட்ரைல் பயணச்சீட்டை (Indrail Pass)’ பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். இது ஐரோப்பாவில் உள்ள ‘யுரைல் பயணச்சீட்டை’ (Eurail Pass) போன்றதாகும்.
  • இந்திய ரயில்வேயின் நல்லெண்ணச் சின்னம் ‘போலு‘ என்ற பெயர் கொண்ட ‘ரயில்வே பாதுகாவலர் (யானை)’ ஆகும்.இது தனது ஒரு கையில், எரியும் பச்சை விளக்குடன் கூடிய சைகை கம்பத்தினை வைத்துள்ள யானையின் சித்திரப்படமாகும்.  முன்னதாக இந்த சின்னமானது 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 16 இல் நடைபெற்ற இந்திய ரயில்வேயின் 150ஆவது ஆண்டு விழாவிற்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் 2003 இல் இது இந்திய ரயில்வேயின் நிரந்தரமான நல்லெண்ணச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

  • 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 2 இல் தொடங்கப்பட்ட மும்பை மோனோ ரயிலே சுதந்திர இந்தியாவின் விரைவுப் போக்குவரத்தில் செயல்பாட்டில் உள்ள முதலாவது மோனோ ரயிலாகும்.

  • இரண்டு வரலாற்றுக் கூறுகளைக் கொண்ட இந்தியன் ரயில்வே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவையாவன, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் மற்றும் இந்திய மலை ரயில் ஆகும்.

  • இந்தியன் ரயில்வே துவங்கப்பட்டு 50 வருடங்களுக்குப் பிறகே ரயில்களில் கழிவறைகள் கட்டமைக்கப்பட்டன. 1909-ல் ஓகில் சந்திரசென் என்பவர் ரயிலில் கழிப்பறை இல்லாததற்காக ரயில்வே அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பின்னர் இந்திய ரயில்வேயானது ரயில்களில் கழிவறைகளை ஏற்படுத்தியது.
  • ரயில்வே ஊழியர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது
  • இந்தியாவில் டெல்லி, பூனா, கான்பூர், மைசூர், கொல்கத்தா, சென்னை மற்றும் திருச்சி ஆகிய எட்டு இடங்களில் ரயில் அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. இதில் டெல்லியில் அமைந்துள்ள தேசிய ரயில் அருங்காட்சியகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் அருங்காட்சியகமாகும்.

  • டெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகம் 1977-ல் உருவாக்கப்பட்டது ஆகும்
  • முதலாவது ரயில்வே பாலம் மும்பை – தானே வழித்தடத்தில் உள்ள ட்பூரி-வியடக் ஆகும்.

  • முதலாவது ரயில்வே சுரங்கப் பாதை பார்சிக் சுரங்கப் பாதை ஆகும்.

  • ரயில்பாதை ஏற்படுத்தப்பட்ட முதலாவது மலைத்தொடர் ஆனது தால் மற்றும் போர்காட் ஆகும்
  • முதலாவது ரயில்வே சுரங்கப்பாதை கல்கத்தா மெட்ரோ ஆகும்.
  • இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை ஹௌரா மற்றும் கொல்கத்தா மெட்ரோ இடையே ஹுக்ளி ஆற்றிற்கு அடியில் அமையவிருக்கிறது.

  • அகமதாபாத்-மும்பை சென்ட்ரல் இடையே, இந்தியாவின் முதலாவது இரட்டை அடுக்கு ரயில் இயக்கப்பட்டது.

  • டைமண்டு கிராஸிங் (ரயில்வே இட்ட பெயர்) நாக்பூரில் அமைந்துள்ளது. இது கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு திசை வழித்தடங்களையும் இணைக்கிறது

  • இந்திய ரயில்வேயானது உலகிலேயே மிக நீளமான ரயில்வே நடைபாதையினை உடையது ஆகும். 2,733 அடி நீளமுடைய காரக்பூர் ரயில்வே நடைபாதையானது முன்னர் இந்தச் சிறப்பினைப் பெற்றிருந்தது. தற்போது 4,430 அடிகள் நீளமுடைய ரயில்வே நடைபாதையினை பெற்று கோரக்பூர் ரயில் நிலையமானது இந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது.

  • மிகவும் நீளமான ரயில்வே பாலம், கேரளாவின் வேம்பநாடு ரயில்வே பாலம் ஆகும். இது62 கி.மீ. நீளமுடையதாகும்.

  • எர்ணாகுளம் – ஹசரத் நிசாமுதின் துரந்தோ ரயில் ஆனது மிகவும் நீண்ட தூரம் ஓடும் துரந்தோ ரயிலாகும்.
  • சில குறிப்பிட்ட நிறுத்தங்களை மட்டுமே உடைய மிகச் சிறிய ஓட்டமானது நாக்பூர் மற்றும் அஜ்ஜினி இடையேயான 3 கி.மீ. தொலைவிற்கு இயக்கப்படுகிறது.
  • நாட்டிலேயே இரண்டாவது நீளமான ரயில் ஹிம்சாகர் விரைவு வண்டி ஆகும். இது கன்னியாகுமரிக்கும் ஜம்முதாவிக்கும் இடையே 3726 கி.மீ. தூரத்தை பத்து மாநிலங்கள் வழியேக் கடக்கிறது.
  • நீலகிரி விரைவு ரயிலானது சராசரியாக 10 கி.மீ./மணி எனும் வேகத்தில் இயக்கப்படக் கூடிய இந்தியாவின் மிகக் குறைந்த வேகமுடைய ரயிலாகும்.

  • திருவனந்தபுரம் – ஹசரத் நிஸாமுதின் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆனது 528 கி.மீ. தூரத்தினை ஒரு இடத்திலும் நிற்காமல்5 மணி நேரம் பயணம் செய்து கடக்கிறது.
  • ஹௌரா – அமிர்தசரஸ் விரைவு ரயில் ஆனது அதிக நிறுத்தங்களை (115 நிறுத்தங்கள்) உடையதாகும்.
  • அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களை கடக்கும் ரயில் ஆனது மங்களூருக்கும் ஜம்முதாவிக்கும் இடையேயான நவயுக் விரைவு ரயில் ஆகும்.
  • ஒரே மாநிலத்தில் அதிகத் தொலைவு ஓடும் ரயில் ஆனது மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்காபூர் – கோண்டியா விரைவுரயில் ஆகும்.
  • திருவனந்தபுரம்-கவுகாத்தி விரைவு ரயிலானது நாட்டிலேயே அதிக நம்பகத் தன்மையற்ற ரயிலாகும். இது சராசரியாக 10-12 மணி நேரம் தாமதமாக வருகிறது.
  • ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பாராமுல்லா ரயில் நிலையமே வடகோடி ரயில் நிலையமாகும்.

  • அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள லெடே ரயில் நிலையம் ஆனது கிழக்கு கோடி ரயில் நிலையமாகும்.

  • தென்கோடி ரயில் நிலையம் ஆனது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி ஆகும்.

  • மேற்குகோடி ரயில் நிலையம் ஆனது குஜராத்தின் பூஜ் பகுதியில் அமைந்த நாளியா ஆகும்.

  • மிகவும் நீண்டப் பெயரினைக் கொண்ட ரயில் நிலையம் வெங்கடநரசிம்மராஜீவாரிபேட்டா ஆகும். இது சென்னைக்கு அருகேயுள்ள அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.

  • மிகவும் சிறிய பெயரைக் கொண்ட ரயில் நிலையங்கள் : ‘ஐபி‘-ஒடிஸாவின் ஜர்சுகுடாவிற்கு அருகில் அமைந்திருக்கிறது, ‘ஓடி’-குஜராத்தின் ஆனந்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.

  • நவாப்பூர் ரயில் நிலையமானது இரு மாநிலங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதி மகாராஷ்டிராவிலும், மற்றொரு பகுதி குஜராத்திலும் அமைந்திருக்கிறது.

  • மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் மற்றும் பெலாபூர் ஆகிய இரு வெவ்வேறு ரயில் நிலையங்களும் ஒரே ரயில் பாதையின் மீது ஒரே இடத்தின் எதிரெதிர் பக்கங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களாகும்.
  • செகந்திராபாத்தில் உள்ள சஃபில்குடா மற்றும் தயானந்த் நகர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம் 170 மீ ஆகும். இதுவே இரு வேறு ரயில் நிலையங்களுக்கு இடையேயான மிகக்குறுகிய தொலைவு ஆகும்.
  • மதுரா சந்திப்பிலிருந்து அதிகபட்ச வழித்தடங்கள் உருவாகி செல்கின்றன.
  • கல்கத்தாவின் ஹௌரா ரயில் சந்திப்பு நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். இங்கு தினமும் ரயில்கள் நின்று செல்கிறது.

  • மிகப்பெரிய ரயில்வே வளாகம் ஆனது ஹெளரா ரயில் நிலையம் (மேற்கு வங்கம்) ஆகும்.
  • புதுடெல்லி ரயில் நிலையம் உலகின் பெரிய தொடர் உள்பூட்டமைப்பு வசதியை பெற்றமைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  • இந்திய ரயில்வேயின் மொகல் சராய் ரயில்வே தொழிற்கூடம் ஆனது நாட்டிலேயே மிகப்பெரியதாகும்.
  • உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு 2007ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் ஓர் விழிப்புணர்வு ரயிலினை இந்திய ரயில்வே இயக்கியது.

  • சகுந்தலா ரயில்வே தான் இந்தியாவில் தற்போதும் பயன்பாட்டில் உள்ள ஒரே தனியார் ரயில்வே ஆகும்.

  • இந்த ரயில் 190 கி.மீ. தூரத்தை 20 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மல் மற்றும் அச்சல்பூர் இடையே முர்ட்சாபூர் வழியே கடக்கிறது.
  • இப்பாதையானது விதர்பாவிலிருந்து பருத்தியை கொண்டு வருவதன் பொருட்டு பிரிட்டிஷ் அரசால் போடப்பட்டது ஆகும். விரைவிலேயே பயணிகளும் பயணிக்கத் தொடங்கினர்.
  • இந்த ரயில்வே பாதைகள் இன்றளவும் குறுகிய பாதைகளாக உள்ளன. இப்பாதைகளுக்கான உரிமையானது தனியார் நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.
  • சமீபத்தில், மத்திய ரயில்வே அமைச்சகம் ஆனது 1500 கோடி ரூபாயினை, யவத்மல்-முர்ட்சாபூர்-அச்சல்பூர் இடையேயான குறுகிய ரயில்பாதையினை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக ஒதுக்கியுள்ளது.
.எண். இரயிலின் பெயர் குறிப்பு
1. கதிமான் விரைவு ரயில் ·         இது இந்தியாவிலுள்ள அதிவேகமாக செல்லும் இரயில் ஆகும். ·         இது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இது டெல்லி மற்றும் ஆக்ராவிற்கு இடையே இயக்கப்படுகிறது. ·         நிசாமுதீன் இரயில் நிலையத்திலிருந்து ஆக்ராவிற்கு உள்ள தூரம் 188 கி.மீ. ஐ 100 நிமிடத்தில் கடக்கிறது.
2. சதாப்தி எக்ஸ்பிரஸ் ·         இது குளிரூட்டப்பட்ட இரயில் வண்டியாகும். ·         பகல் நேரங்களில் முக்கிய நகரங்களை இணைக்க இந்த இரயில் பயன்படுகிறது. ·         ராஜ்தானி, துரந்தோ ரயில்களைப் போல் அல்லாமல் அனைத்து சதாப்தி விரைவுரயில்களும் ஒரே நாளில் பலமுனைப் பயணங்களை மேற்கொள்ளுகின்றன. ·         போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் இந்தியாவிலேயே வேகமாக இயங்கும் 2-வது ரயில் ஆகும். ·         இதன் சராசரி வேகம் மணிக்கு 90 கி.மீ ஆகும். இது 150 கி.மீ. வேகம் வரை செல்லும். ·         இதில் கம்பியில்லா இணையத் தொடர்பு வசதியும் இருக்கிறது.
3. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ·         குளிரூட்டப்பட்ட இந்த ரயிலானது இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களை டெல்லியுடன் இணைக்கிறது. ·         அதிக முன்னுரிமை உடையதாகவும் மிக அதிவேக ரயில்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. ·         இதன் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 130 முதல் 140 வரை ஆகும். ·         இவை வெகு தூர அதிவேக ரயில்களாகும்.
4. துரந்தோ விரைவு ரயில் ·         இது இடைநில்லா இரயில் வண்டி. ·         இந்த இரயில் சேவை 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ·         இது இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களை மாநில தலைநகரத்துடன் இணைக்கிறது. ·         இது ராஜ்தானி எக்ஸ்பிரஸை விட வேகமாக செல்லும்.
5. A.C. எக்ஸ்பிரஸ் ·         இது முழுவதும் குளிரூட்டப்பட்ட இரயில் வண்டி. ·         நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் இதன் அதிகபட்ச வேகம் 130 கி.மீ. ஆகும். ·         இவை அதிக முன்னுரிமை கொண்டதாகவும் அதிவேக ரயில்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
6. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ·         இது சதாப்தி இரயிலை போன்றதாகும். ·         முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒற்றை தள விரைவு ரயிலாகும். ·         சதாப்தி ரயிலைப் போல் அல்லது இது நெடுந்தொலைவில் இயங்கும் இரயிலாதலால் உறங்கும் வசதி கொண்டது.
7. இரட்டை அடுக்கு விரைவு வண்டி

·         இது சதாப்தியை போலவே முழுவதும் குளிரூட்டப்பட்டது. ·         மொத்தம் 2 அடுக்குகளைக் கொண்டது. குறைவான நிறுத்தங்களை கொண்டது.  இது பகல்நேர பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

 

- - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்