TNPSC Thervupettagam

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 5

May 10 , 2024 232 days 508 0

(For English version to this please click here)

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாறு (லோக்சபா - மக்களவை)

  • இந்திய நாடாளுமன்றமானது இரு அவை முறையைப் பின்பற்றுகிறது.
  • இது ராஜ்யசபா (மேலவை/மாநிலங்களவை) மற்றும் லோக்சபா (கீழவை/மக்களவை) என இரு அவைகளைக் கொண்டுள்ளது.
  • லோக் சபாவில் பெரும்பான்மை பெறும் கட்சியானது (அல்லது ஒரு கூட்டணி) மத்திய அரசை அமைக்கும்.
  • இதன் பதவிக் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் அல்லது கட்சி (அல்லது ஒரு கூட்டணி) மக்களவையில் பெரும்பான்மையை அனுபவிக்கும் வரை, இவற்றில் எது முந்தையதோ அது வரையில் பதவியை அனுபவிக்கலாம்.

1வது லோக்சபா தேர்தல் — 1952/1957

  • மொத்த இடங்கள்: 489
  • இது 68 வாக்களிப்புக் கட்டங்களை உள்ளடக்கியது (25 அக்டோபர் 1951 ஆம் ஆண்டு முதல் 21 பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு வரை) என்பதோடு மேலும் இதுவரையில் நடைபெற்ற தேர்தகளில் இந்தத் தேர்தல் தான் மிக நீளமான ஒன்றாகும்.
  • அப்போது 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • 1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரும்பாலான வாக்குப்பதிவு நடந்தாலும், வானிலை தொடர்பான இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டிலேயே ஹிமாச்சலப் பிரதேசம் தனது வாக்குகளைப் பதிவு செய்தது.
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சினி மற்றும் பங்கி மாவட்டங்களில் முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • முதலாவது லோக்சபா தேர்தலில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.
  • இந்தியப் பொதுவுடைமைக் கட்சி முதன்மையான எதிர்க் கட்சியாக 16 இடங்களைப் பெற்றது என்ற நிலையில் சமதர்மக் கட்சி 12 இடங்களைப் பெற்றது.
  • தாதா சாஹேப் என்று வெகுவாக புகழப் பட்ட கணேஷ் வாசுதேவ் மாவலங்கர் முதல் சபாநாயகராகப் பணியாற்றினார்.
  • 1950 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதத்தில் நாடாளுமன்றமானது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை இயற்றி, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கவனமாக நடத்துவதற்கான களத்தினை அமைத்தது.
  • மொத்தம் 489 மக்களவைத் தொகுதிகள், 25 மாநிலங்களில் உள்ள 401 தொகுதிகளில் உத்திசார் ரீதியாக ஒதுக்கப்பட்டன.
  • பதிவான வாக்குகளில் அதிக வாக்கு முறை முதன்முதலாக பின்பற்றப்பட்டதில் இருந்து, 314 தொகுதிகளிலிருந்து தனித்துவப் பிரதிநிதித்துவம் கொண்ட 86 தொகுதிகள் வரை பொது மக்களிடமிருந்தும் ஒருவரையும், பட்டியல் சாதிகள் அல்லது பழங்குடியினரிடமிருந்தும் ஒருவரையும், மொத்தமாக இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும், தங்கள் பெயர் மற்றும் சின்னத்தைக் கொண்ட தனித்தனி வண்ண வாக்குப் பெட்டியை ஒதுக்கப் பட்டன.

2வது லோக்சபா தேர்தல் — 1957/1962

  • மொத்த இடங்கள்: 505
  • இரண்டாவது லோக்சபா தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ், காங்கிரஸ் 371 இடங்களைப் பெற்று, தனது வலிமையினைத் தக்க வைத்துக் கொண்டது.
  • இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 27 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் பிரஜா சமதர்மக் கட்சி 19 இடங்களைப் பெற்றது.
  • இந்த காலக்கட்டத்தில் 1956 ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் செயல்படுத்தப் பட்டது.

3வது லோக்சபா தேர்தல் — 1962/1967

  • மொத்த இடங்கள்: 508
  • சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான போர் போன்ற உட்கருத்து வேறுபாடுகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும், நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 44.72% வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது.
  • நேரு ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு முதல் மே 27, 1964 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பிரதமராகப் பணியாற்றினார்.
  • இந்த நேரத்தில் இரண்டு இடைக்காலப் பிரதமர்கள் பதவி வகித்தனர்.
  • குல்சாரிலால் நந்தா, முதலில் மே 27 முதல் ஜூன் 9, 1964 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் ஜனவரி 11 முதல் ஜனவரி 24, 1966 ஆம் ஆண்டு வரையிலுமாக, இரண்டு முறை பதவி வகித்தார்.
  • திரு. சாஸ்திரி ஜூன் 9, 1964 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 11, 1966 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்தார்.
  • 1966 ஆம் ஆண்டு சாஸ்திரியின் மறைவிற்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமரானார்.
  • இந்தக் காலக்கட்டத்தில் வாக்களிக்கும் செயல்பாட்டில், அழியாத மை அறிமுகப் படுத்தப் பட்டது.

4வது லோக்சபா தேர்தல் — 1967/1970

  • மொத்த இடங்கள்: 523
  • இந்திரா காந்தி இன்றுவரையில் இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக உருவெடுத்தார்.
  • பொருளாதாரச் சவால்கள் இருந்தபோதிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 283 இடங்களுடன் பெரும்பான்மையைப் பெற்றது.
  • இருப்பினும், உள்கட்சி மோதல்கள், கூட்டணி அரசாங்கங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தது.
  • சுதந்திரா கட்சி மற்றும் பாரதிய ஜன சங்கம் முறையே 44 மற்றும் 35 இடங்களைப் பெற்றன.

5வது லோக்சபா தேர்தல் — 1971 /1977

  • மொத்த இடங்கள்: 521
  • வங்காளதேசப் போரின் போது இந்திரா காந்தியின் தலைமையானது, அவரது செல்வாக்கை மேலும் உயர்த்தியது, இது காங்கிரஸை 352 இடங்களுடன், பெரும்பான்மையை வென்றெடுக்க வழி வகுத்தது.
  • எவ்வாறாயினும், 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்குகளுக்காக அக்கட்சி விமர்சிக்கப் பட்டது.
  • இந்தியப் பொதுவுடைமைகக் கட்சியானது (மார்க்சிஸ்ட்) 25 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும், இந்திய பொதுவுடைமைக் கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலா 23 இடங்களையும் பெற்றன.
  • இந்தத் தேர்தலில் 48% வாக்காளர்கள் பெண்கள் வாக்களித்த நிலையில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அதிக சதவீத அளவில் பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

6வது லோக்சபா தேர்தல் — 1977/1980

  • மொத்த இடங்கள்: 544
  • ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் 81 வயதில் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.
  • இவர் இந்திய அரசியல் வரலாற்றில், 81 வயதில், பிரதமர் பதவியை வகித்த மிக வயதான நபர் ஆவார்.
  • 1977 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலின் போது இந்திய வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெறாததால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டது.
  • பாரதிய லோக் தால் கட்சி (BLD) 295 பெற்று அதிக இடங்களை வென்றது, அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் 154 இடங்களையும் மற்றும் இந்திய பொதுவுடைமைகக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 இடங்களையும் பெற்றன.

7வது லோக்சபா தேர்தல் — 1980/1984

  • மொத்த இடங்கள்: 531
  • ஜனவரி 1980 ஆம் ஆண்டில் நான்கு நாட்கள் நடைபெற்ற தேர்தல் காலத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் 353 இடங்களைப் பெற்று விரைவான வெற்றியைப் பெற்றது.
  • ஜனதா கட்சி (S) மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) முறையே 41 மற்றும் 37 இடங்களில் வெற்றி பெற்றன.
  • அரசாங்கமானது வேலையின்மை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் பஞ்சாபில் அதிகரித்து வரும் அமைதியின்மை போன்ற பிரச்சனைகளால் கடினமான காலங்களை எதிர் கொண்டது.
  • பஞ்சாபில் பிரிவினைவாத இயக்கம், அகாலிகளின் தலைமையில், சுயாட்சி மற்றும் பிராந்தியச் சலுகைகளைக் கோரியது.
  • பேச்சு வார்த்தைகள் இருந்த போதிலும், தீவிரவாதிகளைச் சமாளிக்க இந்திரா காந்தி ராணுவத்தை ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு அனுப்பினார்.
  • இது துரதிர்ஷ்டவசமாக, அக்டோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க் காப்பாளர்களால் படுகொலை செய்யப் படுவதற்கு வழிவகுத்தது.

8வது லோக்சபா தேர்தல் — 1984/1989

  • மொத்த இடங்கள்: 516
  • ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளித்தபோது, ​​என்.டி. ராமராவ் ஆந்திராவில் அரசியலை மாற்றியமைத்தார்.
  • இந்த நேரத்தில், சமூகங்களுக்கு இடையே பதற்றம், சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை நிலவி வந்தன.
  • பாரதிய ஜனதா கட்சி (BJP) முதன்முறையாக அரசியலில் நுழைந்தபோது, ​​தெலுங்கு தேசக் கட்சியானது (TDP) N.T.ராமராவ் தலைமையின் கீழ் பெரும் ஆதரவைப் பெற்றது.  
  • வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி 414 இடங்களையும், தெலுங்கு தேசக் கட்சி 30 இடங்களையும், இந்தியப் பொதுவுடைமைகக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 இடங்களையும் பெற்றுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு வரை ஒரு தனிக்கட்சியானது பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கடைசித் தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் ஆகும்.
  • மற்றும் இன்று வரையில் ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற ஒரே தேர்தல் இதுவே ஆகும்.
  • பாஜக இரண்டு இடங்களை வென்றது, அதில் ஒன்று குஜராத்திலும் மற்றொன்று ஆந்திராவிலும் (இது இப்போது தெலுங்கானாவில் உள்ளது) இருந்தது.

9வது லோக்சபா தேர்தல் — 1989/1991

  • மொத்த இடங்கள்: 531
  • கீழவையில் பெரும்பான்மைக் கட்சி இல்லாமால் முதல் முறையாக, தேசிய முன்னணி கூட்டணியானது அரசாங்கத்தை அமைத்தது.
  • இதையடுத்து ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி. சிங் பிரதமராக பதவியேற்றார்.
  • இந்த நேரத்தில், மண்டல் மற்றும் மந்திர் அரசியலால், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற மொத்த இடங்களை விட பாதிக்கும் குறைவான இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றியது.
  • ஜனதா தள் 143 இடங்களையும், அதனைப் பின்பற்றி பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றது.
  • பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டிலிருந்து 85 ஆக அதிகரித்த நிலையில் அது அதிக இடங்களைக் கைப்பற்றியது.

10வது லோக்சபா தேர்தல் — 1991/1996

  • மொத்த இடங்கள்: 508
  • இந்தியா 1990களில், குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டது.
  • நரசிம்ம ராவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது.
  • பாபர் மசூதி இடிப்பு மற்றும் மண்டல் கமிஷன் அறிக்கை ஆகியவை வன்முறைப் பிளவுகளைத் தூண்டின.
  • 1991 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களிலும், பாஜக 120 இடங்களிலும், ஜனதா தள் 59 இடங்களிலும் வென்றன.

11வது லோக்சபா தேர்தல் — 1996/1998

  • மொத்த இடங்கள்: 545
  • 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், காங்கிரஸ் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததால் சாதி மற்றும் பிராந்திய அரசியல் அதிக முக்கியத்துவம் பெற்றது.
  • ஜனதா தள் தலைவர்கள் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, ஊழல் மோசடிகளாலும், கூட்டணியின் நிலையற்றத் தன்மையினாலும் குழப்பத்தில் சிக்கித் தவித்தது.
  • பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 161 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாகவும், காங்கிரஸ் 140 இடங்களிலும், ஜனதா தள் 46 இடங்களிலும் வெற்றி பெற்றன.

12வது லோக்சபா தேர்தல் — 1998/1999

  • மொத்த இடங்கள்: 545
  • பாஜக 182 இடங்களை வென்று அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 141 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 32 இடங்களையும் பெற்றன.
  • வாஜ்பாய் 13 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்தார்.

13வது லோக்சபா தேர்தல் — 1999/2004

  • மொத்த இடங்கள்: 545
  • 1999 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 182 இடங்களைப் பெற்று ஆளுங்கட்சியாக மாறியது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 114 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 33 இடங்களிலும் வெற்றி பெற்றன.
  • அரசாங்கம் தங்க நாற்கரச் சாலை மற்றும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா போன்ற குறிப்பிடத் தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கியது.
  • இந்தத் தேர்தலில் பாரம்பரிய வாக்குச் சீட்டுகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) பரிசோதனை செய்யப்பட்டன.
  • 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு POTA சட்டம் இயற்றப்பட்டது.

14வது லோக்சபா தேர்தல் — 2004/2009

  • மொத்த இடங்கள்: 545
  • மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டியது மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற முக்கியமானச் சட்டங்களை நிறைவேற்றியது.
  • இந்தத் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அறிமுகப் படுத்தப் பட்டன.
  • தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விநியோகித்துள்ளது.
  • காங்கிரஸ் கட்சி 145 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகவும், பாஜக 138 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

15வது லோக்சபா தேர்தல் — 2009/2014

  • இடங்கள்: 545
  • காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை மறுசீரமைத்தது.
  • மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் நியமிக்கப்பட்டார்.
  • இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் துணைப் பிரதமருமான ஜகஜீவன் ராமின் மகள் ஆவார்.

16வது லோக்சபா தேர்தல் — 2014/2019

  • மொத்த இடங்கள்: 545
  • காங்கிரஸின் தேக்க நிலை மற்றும் அதன் ஊழலுக்குச் சவால் விடும் வகையில், 'அச்சே தின்' என்ற வாக்குறுதியுடன் பாஜக வெற்றி பெற்றது.
  • இந்தப் பதவிக் காலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'ஸ்வச் பாரத் அபியான்' போன்ற கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
  • முதல் முறையாக நோட்டா விருப்பம் (மேற்கண்டவற்றில் யாரும் இல்லை) முன்வைக்கப்பட்டது,
  • இது வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
  • இந்த தேர்தலில் பாஜக 282 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.
  • இந்த காலக்கட்டத்தில் அவை நடவடிக்கைகளை மேற்பார்வையிட சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17வது லோக்சபா தேர்தல் — 2019/2024

  • மொத்த இடங்கள்: 545
  • நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, உலகிலேயே இது வரை இல்லாத அளவில் நடத்தப் பட்ட மிகப்பெரிய தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மேலும் உறுதிப்படுத்தியது.
  • ஏப்ரல் 11 முதல் மே 23 வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • தேசியப் பாதுகாப்பு, கோவிட்-19 தொற்றுநோய், விவசாயிகளின் அமைதியின்மை, வகுப்புவாத மோதல்கள், எதிர்ப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் சிக்கல்களால் இந்த காலம் வெகுவாக அறியப் பட்டது.
  • குறிப்பிடத்தக்க வகையில், தேர்தல் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முறையாக "வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை" (VVPAT) மூலம் 100% உறுதி செய்வது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஏழு கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 18வது பொதுத் தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி  தொடங்கி ஜூன் 1, 2024 அன்று முடிவடைகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்