TNPSC Thervupettagam

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 8

May 18 , 2024 43 days 273 0

(For English version to this please click here)

6வது மக்களவை (1977 / 1980)

  • வெற்றி பெற்ற கட்சி: ஜனதா கட்சி
  • பிரதமர்: மொராஜி தேசாய்
  • பதவிக் காலம்: மார்ச் 24, 1977 - ஜூலை 29, 1979
  • எதிர்க்கட்சித் தலைவர்: இந்திய தேசிய காங்கிரஸின் ஒய்.பி.சவான்.
  • ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததை அடுத்து, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மாறியது.
  • சபையின் சபாநாயகர்(கள்): கே.எஸ். ஹெக்டே
  • காலம்: ஜூலை 21, 1977 - ஜனவரி 21, 1980

மீள்பார்வை:

  • குடிமையியல் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், முந்தைய ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்வதிலும் ஆளும் கட்சி கவனம் செலுத்தியது.
  • ஜனதா கட்சி உள் கட்சி முரண்பாடுகளை எதிர் கொண்டது, அதனால் 1980 ஆம் ஆண்டில் ஆட்சிக் கலைப்பு நடந்தது மற்றும் இது முன்கூட்டியே தேர்தலுக்கு வழிவகுத்தது.

தேர்தல் முடிவு:

  • ஜனதா கட்சி 295 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் (154) மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (22) இடங்களிலும் வெற்றி பெற்றது.
  • மொராஜி தேசாய் 81 வயதில் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.

சட்டமன்ற நிகழ்ச்சி நிரல்:

  • ஆறாவது மக்களவை 130 சட்டங்களை நிறைவேற்றியது, இதில் 53 சட்டங்கள் நிதி சார்ந்த விஷயங்களுடன் தொடர்புடையது.
  • சீர்குலைந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு, வியட்நாம் மீதான சீனாவின் படையெடுப்பு, விலைவாசி உயர்வு மற்றும் அவசரநிலையின் போது ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை விவாதங்களில் விவாதிக்கப் பட்டன.

சவால்கள் மற்றும் பிளவுகள்:

  • மொராஜி தேசாயின் தலைமைத்துவம், ஜனசங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) தொடர்புகள் மற்றும் அவசரநிலை மீறல்களை விசாரிக்கத் தவறியதன் காரணமாக உள் கட்சி மோதல்கள் வெளிப்பட்டன.
  • பத்து மாநில அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன, அதனால் மறு தேர்தல் நடத்தப்பட்டது.

அரசியல் மாற்றங்கள்:

  • சரண் சிங் பிரதமராக சிறிது காலம் பணியாற்றினார், ஆனால் அவரது அரசாங்கம் நீடிக்கவில்லை.
  • இந்தியாவின் பிரதமராக ஒரு பாராளுமன்ற அமர்வைச் சந்திக்காத ஒரே பிரதமர் சரண் சிங் மட்டுமே ஆவார்.

பின்விளைவுகள்:

  • விரக்தியடைந்த வாக்காளர்கள் காங்கிரசை வெளியேற்றி ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்தனர்.
  • புதிய அரசாங்கம் உள்கட்சி முரண்பாடுகளால் சிதைந்தது.
  • மேலும் இதன் உறுதியற்ற தன்மையால் அது 1980 ஆம் ஆண்டில் ஆட்சிக் கலைப்பு மற்றும் முன் கூட்டியே தேர்தல்களுக்கு வழிவகுத்தது.

7வது லோக் சபா தேர்தல் (1980 / 1984)

  • வெற்றி பெற்ற கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ் (I)
  • பிரதமர்: இந்திரா காந்தி
  • பதவிக் காலம்: ஜனவரி 14, 1980 - அக்டோபர் 31, 1984
  • எதிர்க்கட்சித் தலைவர்: காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்றதால் குறிப்பிடத்தக்க எதிர்க் கட்சித் தலைவர் இல்லை
  • சபையின் சபாநாயகர்(கள்): பல்ராம் ஜாக்கர்
  • காலம்: ஜனவரி 22, 1980 - ஜனவரி 15, 1985
  • மீள்பார்வை:
  • ஜனதா கட்சி உள்கட்சி வேறுபாடுகளுடன் போராடியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

தேர்தல்:

  • 1980 ஜனவரியில் நான்கு நாட்களில் மிகக் குறுகிய காலகட்டத்தில் தேர்தல் நடைபெற்றது.
  • 542 தொகுதிகள் - 25 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்கள்.
  • வாக்குப்பதிவானது 3.57% குறைந்துள்ளது என்பதோடு வாக்குப்பதிவு என்பது லட்சத்தீவில் அதிக பட்சமாகவும், ஒரிசாவில் குறைவாகவும் இருந்தது.
  • மக்களவை வரலாற்றில் முதன்முறையாக 49 தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர்.

தேர்தல் முடிவு:

  • இந்திய தேசிய காங்கிரஸ் 353 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா கட்சி (S) 41 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
  • சென்னை தெற்கு (தமிழ்நாடு) இந்திய தேசிய காங்கிரஸிற்கு அதிகபட்ச வாக்குகளை (60.34%) தந்தது.

மக்களவையின் சபாநாயகர்:

  • பல்ராம் ஜாக்கர் ஜனவரி 1980 முதல் 1985 வரை சபாநாயகராக பணியாற்றினார்.
  • இவர் நீண்ட காலம் பதவி வகித்த சபாநாயகர் என்பதோடு அவர் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தவராவார்.

சவால்கள்:

  • இயல்பாகவே நாடு 20% பணவீக்கத்துடன் எதிர் கொள்ளப்படும் பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சியடைந்த தொழில்துறையைப் பெற்றது.
  • குறிப்பாக அசாமில் அதிகரித்து வரும் குற்றங்கள், சாதி மற்றும் வகுப்புவாத முரண்பாடுகள் மற்றும் தொழிலாளர் அமைதியின்மையை எதிர்கொண்டது.
  • ரஷ்யா-ஆப்கானிஸ்தான் போர் உட்பட, தீவிர வெளியுறவுக் கொள்கை சிக்கல்களைக் கையாள்வது குறித்த சவால்களை எதிர்கொண்டது.
  • பாதுகாப்பு அமைச்சர் நரசிம்மராவ் வழங்கப்பட்ட ஆசியானுக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
  • இது இந்தியா கம்பூசியாவின் புதிய அரசாங்கத்தை அங்கீகரித்த பிறகு நடந்தது.

பஞ்சாப் நெருக்கடி:

  • சுயாட்சி மற்றும் பிராந்திய தன்னாட்சியினைக் கோரும் பிரிவினைவாத இயக்கத்தைப் பஞ்சாப் எதிர் கொண்டது.
  • தீவிரவாதப் போராளிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, பொற்கோயில் மற்றும் பிற மதத் தளங்களின் மீதான தாக்குதல்களுக்கு இது வழி வகுத்தது மட்டுமில்லாமல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தொடங்கப்பட்டது.
  • இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று அவரது சீக்கியப் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப் பட்டார்.

பின்விளைவுகள்:

  • இந்தியாவின் ஏழாவது பிரதமராக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தனது 40 வயதில் இந்தியாவின் முதலாவது இளைய பிரதமர் என்ற பெருமையினை ராஜீவ் காந்தி கொண்டுள்ளார்.
  • சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் வரலாற்றுப் பங்கு, ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோள் மற்றும் நிலைத்தன்மைக்காக வளர்ந்து வரும் தேவை ஆகியவை அரசியல் வரையறைகளைத் தெரிவித்தன.

8வது லோக்சபா தேர்தல் (1984 / 1989)

  • வெற்றி பெற்ற கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ் (I)
  • பிரதமர்: ராஜீவ் காந்தி
  • பதவிக் காலம்: டிசம்பர் 31, 1984 - டிசம்பர் 2, 1989
  • எதிர்க்கட்சித் தலைவர்: இந்திய தேசிய காங்கிரஸின் (U) எச்.என்.பகுகுணா
  • சபையின் சபாநாயகர்(கள்): பல்ராம் ஜாக்கர்
  • காலம்: ஜனவரி 22, 1980 - டிசம்பர் 18, 1989

மீள்பார்வை:

  • ராஜீவ் காந்தியின் கீழ் காங்கிரஸ் ஒரு வரலாற்று அரசியல் ஆணையைப் பெற்றது, சுதந்திர இந்தியாவில் அதன் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்தது.
  • பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் தெலுங்கு தேசக் கட்சி (TDP) ஆகியவற்றின் அறிமுகமானது அரசியல் வரையறைகளை மறுவடிவமைத்தது.
  • குறிப்பாக இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது, ​​பஞ்சாப் மற்றும் அசாமில் மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கமானது பெரும் போராட்டங்களை எதிர்கொண்டது.

தேர்தல் முடிவு:

  • இந்திய தேசிய காங்கிரஸ் 414 இடங்களையும், தெலுங்கு தேசக் கட்சி (TDP)  (30) மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (22 இடங்களையும்) பெற்று சாதனை படைத்தது.
  • தென் மாநிலங்களில் வலுவான செயல்திறன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள பிராந்தியங்களில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் 48.12% வாக்குகளைப் பெற்றுள்ளது.

அரசின் கவனம்:

  • பொது நிறுவனங்களுக்கான சுயாட்சி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புகளில் முன்முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தப்பதாகும்.
  • நேரு கால மரபின் தொடர்ச்சியானது அறிவியல் நிறுவனங்களை வளர்ப்பதில் பின்பற்றப் பட்டது.
  • வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக் கொடுப்பனவுகள் உட்பட பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிதியமைச்சர் வி.பி. சிங்கால் தொடங்கப்பட்டது.
  • வரலாற்று நிகழ்வுகளான இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் மற்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகியன கையெழுத்திடப்பட்டது .
  • பஞ்சாப் மற்றும் அசாமில் மோதல்களைத் தீர்க்கும் போராட்டங்கள், குறிப்பாக இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் பெருமளவில் நடைபெற்றன.

போஃபர்ஸ் ஊழல்:

  • ராஜீவ் காந்தியின் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகள் ஊழல் நிறைந்தவையாக இருந்தது, இது அவருடைய நம்பிக்கைக்குரிய ஆணையைச் சிதைத்தது.

நாடாளுமன்ற அமைதியின்மை:

  • காந்தியின் படுகொலை தொடர்பான தக்கார் கமிஷனின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அமைதியின்மையைத் தூண்டியது, இது 63 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்திற்கு வழி வகுத்தது, அந்த நேரத்தில் இந்நிகழ்வு ஒரு புதிய சாதனையினைப் படைத்தது.

கலைப்பு மற்றும் தேர்தல்கள்:

  • மக்களவை கலைக்கப்பட்டு, நவம்பர் 1989 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

மரபு:

  • ராஜீவ் காந்தி காங்கிரஸின் மறுமலர்ச்சியைத் தூண்டினார், அதே நேரத்தில் என்.டி. ராமராவ் ஆந்திர அரசியலை மறுவரையறை செய்தார்.
  • வகுப்புவாத ஒற்றுமை, சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை இந்த சகாப்தத்தின் சமூகச் சூழலை வரையறுத்தன.

9வது லோக்சபா தேர்தல் (1989 / 1991)

  • வெற்றி பெற்ற கட்சி: ஜனதா தல் கட்சித் தலைமையிலான தேசிய முன்னணி (கூட்டணி)
  • பிரதமர்(கள்): வி.பி. சிங் மற்றும் சந்திர சேகர்
  • பதவிக்காலம்(கள்): திரு. வி.பி. சிங் ( டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990 )
  • பதவிக்காலம்(கள்): திரு. சந்திர சேகர் ( நவம்பர் 19, 1990 - ஜூன் 21, 1991 )
  • எதிர்க்கட்சித் தலைவர்: ராஜீவ் காந்தி மற்றும் எல்.கே. அத்வானி
  • சபையின் சபாநாயகர்(கள்): ராபி ரே
  • காலம்: டிசம்பர் 19, 1989 - ஜூலை 9, 1991

மீள்பார்வை:

  • முதல்முறையாக கீழவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இது தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்க வழிவகுத்தது.
  • மேலும் மந்திர் மற்றும் மண்டல் கருத்து அரசியல் ஆதிக்கம் செலுத்தியது என்ற நிலையில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மற்றும் ராம ஜென்மபூமி இயக்கம் ஆகியவற்றில் அமைதியின்மை இருந்தது.
  • பொருளாதார நிலைத்தன்மையின்மை மற்றும் போஃபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி கொலையுடன் சேர்ந்து அரசியல் வரையறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கூட்டணி அரசு:

  • ஜனதா தள் கட்சியின் வி.பி. சிங் பிரதமராக பதவியேற்றார், அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே கடும்சவால்களை எதிர் கொண்டார்.
  • இவரின் பதவிக் காலத்தைப் பொருளாதார நிலைத் தன்மையின்மை மற்றும் வகுப்புவாத எதிர்ப்புகள் நன்கு வகைப்படுத்தின.

மந்திர் மற்றும் மண்டல் அரசியல்:

  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடுகளுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வி.பி. சிங்கின் அரசாங்கம் முடிவு செய்தது, இது வாக்காளர் மத்தியில் எதிர்ப்புகள் மற்றும் கடும் பிளவினை உண்டாக்கியது.
  • இந்த விவகாரத்தில் பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றது என்பது, வி.பி. சிங்கின் ராஜினாமா மற்றும் தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
  • ராம் ரத யாத்திரை நடத்தியதற்காக பீகாரில் எல்.கே.அத்வானி கைது செய்யப்பட்டிருந்தது மதக் கிளர்ச்சிக் கொந்தளிப்பை மேலும் அதிகப்படுத்தியது.

சந்திர சேகரின் பதவிக் காலம்:

  • சந்திர சேகர் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம், வெளியில் இருந்து கிடைத்த ஆதரவுடன் வி.பி. சிங்கிற்குப் பதிலாக பிரதமரானார்.
  • ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவரது அரசாங்கம் பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறி விட்டது.
  • அவர் ஏழு மாதங்கள் பிரதமர் பதவி வகித்த நிலையில் சரண் சின்கிற்குப் பிறகு மிக குறுகிய காலம் பதவி வகித்த இரண்டாம் நபர் இவர் ஆவார்.

வரலாற்று முக்கியத்துவம்:

  • மக்களவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
  • மந்திர் மற்றும் மண்டல் அரசியலானது ஆழமாகப் பிளவுபட்ட தேசத்தில் அமைதியின்மையைத் தூண்டியது என்பதோடு அது மேலும் பல ஆண்டுகளாக பெரும் அரசியல் விவாதங்களை வடிவமைத்தது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்