TNPSC Thervupettagam

இந்திய மாநிலங்களின் சின்னங்கள் - பகுதி 2

December 25 , 2023 360 days 1009 0

(For English version to this please click here)

இந்திய மாநிலக் கொடிகளின் பட்டியல்

  • 2023 ஆம் ஆண்டு வரை இந்திய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தனிப்பட்ட அங்கீகரிக்கப் பட்ட கொடிகள் எதுவும் இல்லை.
  • 1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்றப் பயன்பாடு தடுப்பு) சட்டம் அல்லது 1971 ஆம் ஆண்டு தேசிய அவமரியாதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் தனித்துவமான கொடிகளை மாநிலங்கள் ஏற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காக எந்த சட்டத் தடைகளும் இல்லை.
  • 1994 ஆம் ஆண்டில் இது தொடர்பாக S. R. பொம்மை எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலமானது தனிக் கொடியினை வைத்திருக்க எவ்விதத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதில் அறிவித்தது.
  • ஆனால், அந்த மாநிலக் கொடியானது இந்தியத் தேசியக் கொடியினை அவமதிக்கும் வகையில் இருத்தல் கூடாது.
  • இந்திய கொடிகளுக்கான சட்டத் தொகுப்பேடானது, மற்ற கொடிகளை இந்தியாவின் கொடியுடன் பறக்க அனுமதிக்கின்றது, ஆனால் அவை அதே கொடிக் கம்பத்திலோ அல்லது தேசியக் கொடியை விட உயர்ந்த நிலையிலோ பறக்க விட அனுமதிக்கப் படவில்லை.

மாநிலங்களுக்கான முன்னாள் உத்தியோகப் பூர்வ கொடிகள்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலமானது 1952 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது சரத்தின் மூலம் அம்மாநிலத்திற்கு என்று வழங்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கொடியைக் கொண்டிருந்தது.

கொடி

மாநிலம்

பயன்பாடிற்கு வந்த தேதி

விளக்கம்

 

 

 

ஜம்மு காஷ்மீர்

1947–1952

  •  இந்தக் கொடியானது நடுவில் கலப்பையுடன் சிவப்பு நிறத்தில் இருந்தது.
  • சிவப்பு நிறத்தின் பின்னணி என்பது உழைப்பினைக் குறிக்கிறது, கலப்பை என்பது விவசாயத்தைக் குறிக்கிறது.
  • கொடியின் விகிதம் 3:2 ஆக இருந்தது.

 

 

 

1952–2019

  • இந்தக் கொடியானது சிவப்பு நிறத்தில் மூன்று வெள்ளை நிற செங்குத்துக் கோடுகளுடன், ஒரு கலப்பை பறப்பது போன்றும் உள்ளது.
  • சிவப்பு நிறத்தின் பின்னணி உழைப்பையும், வெள்ளை நிற செங்குத்துக் கோடுகள் மாநிலத்தின் மூன்று நிர்வாகப் பிரிவுகளைக் குறிக்கின்றன (ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்) மற்றும் கலப்பை விவசாயத்தைக் குறிக்கிறது.
  • கொடியின் விகிதம் 3:2 ஆக இருந்தது.

கொடி

மாநிலம்

முன்மொழிவுக்கான தேதி

விளக்கம்

 

 

 

 

 

கர்நாடகா

 

 

2018

  • மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என்ற மூவர்ணக் கொடியுடன், வெள்ளைப் பட்டையை மையமாகக் கொண்ட சின்னத்தினை கர்நாடக அரசானது கொண்டுள்ளது.

 

 

தமிழ்நாடு

 

1970

 

  • சாம்பல் நிற கொடியில் இந்தியத் தேசிய கொடியையும், தமிழ்நாட்டின் சின்னத்தையும் தாங்கியவாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.

 

  • 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசானது, தமிழகக் கொடிக்கான வடிவமைப்பினை முன்மொழிந்தது.
  • 2018 ஆம் ஆண்டு கர்நாடக அரசானது, கர்நாடகாவின் கொடிக்கான வடிவமைப்பினை முன்மொழிந்தது.
  • கர்நாடகாவின் கொடியானது பாரம்பரிய மஞ்சள்-சிவப்பு என்ற இரண்டு வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • மத்தியில் வெள்ளைப் பட்டையில் மாநில சின்னத்துடன் கூடிய புதிய மூவர்ணக் கொடியினைக் கொண்டுள்ளது.
  • இது பிராந்திய அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி, இந்திய மூவர்ணக் கொடியின் கட்டமைப்பைப் பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக அரசானது அதன் அதிகாரப்பூர்வமான மாநிலக் கொடியினை அதிகாரப்பூர்வமாக அலுவல் ரீதியில் தொடரப்போவதில்லை என்று அறிவித்தது.

இந்திய மாநில அரசுகளுக்கான முத்திரை சின்னங்களின் பட்டியல்

  • இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கான சின்னம், முத்திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
  • இது அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.
  • ஐந்து மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் தேசியச் சின்னத்தை தங்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்துகின்றன.

 

மாநிலம்

சின்னம்

படம்

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராவின் சின்னம்

 

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தின் சின்னம்

 

அசாம்

அசாமின் சின்னம்

 

பீகார்

பீகாரின் சின்னம்

 

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரின் சின்னம்

 

கோவா

கோவாவின் சின்னம்

 

குஜராத்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

ஹரியானா

ஹரியானாவின் சின்னம்

 

மாச்சலப் பிரதேசம்

மாச்சலப் பிரதேசத்தின் சின்னம்

 

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டின் சின்னம்

 

கர்நாடகா

கர்நாடகாவின் சின்னம்

 

கேரளா

கேரளாவின் சின்னம்

 

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் சின்னம்

 

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் சின்னம்

 

மணிப்பூர்

மணிப்பூரின் சின்னம்

 

மேகாலயா

மேகாலயாவின் சின்னம்

 

மிசோரம்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

நாகாலாந்து

நாகாலாந்தின் சின்னம்

 

ஒடிசா

ஒடிசாவின் சின்னம்

 

பஞ்சாப்

பஞ்சாபின் சின்னம்

 

ராஜஸ்தான்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

சிக்கிம்

சிக்கிமின் சின்னம்

 

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சின்னம்

 

தெலுங்கானா

தெலுங்கானாவின் சின்னம்

 

திரிபுரா

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தின் சின்னம்

 

உத்தரகாண்ட்

உத்தரகாண்டின் சின்னம்

 

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் சின்னம்

 

 

யூனியன் பிரதேசங்கள்

யூனியன் பிரதேசம்

சின்னம்

படம்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

சண்டிகர்

சண்டிகரின் சின்னம்

 

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

டெல்லி

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

ஜம்மு காஷ்மீர்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

லடாக்

இந்தியாவின் தேசிய சின்னத்தைப் பயன்படுத்துகிறது

 

லட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள் சின்னம்

 

புதுச்சேரி

புதுச்சேரியின் சின்னம்

 

 

இந்திய மாநிலப் பொன்மொழிகளின் பட்டியல்

  • 6 மாநிலங்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கான பொன்மொழிகளை ஏற்றுக் கொண்டுள்ளன, மேலும் 20 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் தேசிய முழக்கத்தினைத் தங்கள் மாநிலத்தின் முழக்கங்களாகப் பயன்படுத்துகின்றன.
  • கோவாவின் பொன்மொழி (சமஸ்கிருதம் - சர்வே பத்ராணிபஸ்யந்துமகாசித்துஹ்கமாப்னுயாத்), எல்லோரும் நல்லதைக் காணட்டும், யாருக்கும் எந்த வலியும் ஏற்படக் கூடாது.
  • மகாராஷ்டிராவின் பொன்மொழி (சமஸ்கிருதம்  பிரதிபச்சந்த்ரலேகேவவர்திஷ்ணுர்விஷ்வவந்திதாமஹாராஷ்ட்ரஸ்யராஜ்யஸ்யமுத்ராபத்ராயரஜதே), மகாராஷ்டிரா மாநிலத்தின் மகிமை முதல் நாள் சந்திரனைப் போல வளரும்.
  • அது உலகத்தாரால் போற்றப்படும், மக்கள் நல்வாழ்வுக்காக மட்டுமே பிரகாசிக்கும்.

  • மணிப்பூருக்கான பொன்மொழியானது மெய்தி மொழியில்  உள்ளது.
  • அது கங்லாஷா எனப்படும் டிராகன் கடவுள் ஆகும்.
  • சிக்கிம் மாநிலத்தின் பொன்மொழியானது திபெத்திய பொன்மொழியான கம்-சும்-வாங்டு அதாவது மூன்று உலகங்களை வென்றவர் என்பதைக் கொண்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வாய்மையே வெல்லும் என்ற பொன்மொழியினை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • அனைத்து யூனியன் பிரதேசங்களும் வாய்மையே வெல்லும் என்ற முழக்கத்தைக் கொண்டிருந்தன.
  • 2 மாநிலங்கள் (பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம்) மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் (சண்டிகர் மற்றும் லட்சத்தீவு) போன்றவற்றிற்கென அதிகாரப்பூர்வமான மாநில பொன்மொழிகள் எதுவும் இல்லை.
  • சில மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் சில அரசு விழாக்கள் மற்றும் விழாக்களில் பயன்படுத்துவதற்காக கீதம் அல்லது பாடல்களை ஏற்றுக்கொண்டன.
  • மற்ற மாநிலங்களில், பாடல்கள் முன்மொழியப்பட்டுள்ளன அல்லது பிரபலமான, பாரம்பரிய அல்லது அதிகாரப் பூர்வமற்றப் பயன்பாட்டில் உள்ளன.

மாநிலங்களின்  அதிகாரப்பூர்வ கீதங்கள்

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம்

பாடல் பெயர்

மொழிபெயர்ப்பு

மொழி

பாடலாசிரியர்(கள்)

இசையமைப்பாளர்(கள்)

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு

ஆந்திரப் பிரதேசம்

மா தெலுங்கு தல்லிகி

எங்கள் தாய் தெலுங்கிற்கு

தெலுங்கு

சங்கரம்பாடிசுந்தராச்சாரி

சூர்யகுமாரி

1956

 

அசாம்

ஓ முர் அபுனர் தேஷ்

ஓ என் அன்பான தேசமே!

அசாமி

லக்ஷ்மிநாத் பெஸ்பரோவா

கமலா பிரசாத் அகர்வாலா

2013

பீகார்

மேரி ரஃப்தார் பே சூரஜ் கி கிரண் நாஸ் கரே

மேரே பாரத் கே காந்த் ஹார்

சூரியனின் கதிர்கள் என் வேகத்தில் பெருமை கொள்கின்றன

 

என் இந்தியாவின் மாலை

உருது

 

 

 

ஹிந்தி

 

எம்.ஆர். சிஷ்டி

 

 

 

சத்ய நாராயண்

உதித் நாராயண்

 

 

 

ஹரி பிரசாத் சௌராசியா மற்றும் ஷிவ்குமார் சர்மா

2012

சத்தீஸ்கர்

அர்ப பைரி கே தார்

அர்பா மற்றும் பைரி நீரோடைகள்

ஹிந்தி

நர்தென்னரா தேவ் வர்மா

நர்தென்னரா தேவ் வர்மா

2019

குஜராத்

ஜெய் ஜெய் கரவி குஜராத்

பெருமைக்குரிய குஜராத்துக்கு வெற்றி!

குஜராத்தி

நர்மதாசங்கர் தவே

தெரியவில்லை

2011

கர்நாடகா

ஜெய பாரத ஜனனிய தனுஜாதே, ஜெய ஹே கர்நாடக மாதே

இந்தியத் தாயின் மகளே, கர்நாடகத் தாயே உனக்கு வெற்றி!

கன்னடம்

குப்பளி வெங்கடப்பா புட்டப்பா

மைசூர் அனந்தசுவாமி

2004

மத்திய பிரதேசம்

மேரா மத்தியப் பிரதேசம்

எனது மத்தியப் பிரதேசம்

ஹிந்தி

மகேஷ் ஸ்ரீவஸ்தவா

மகேஷ் ஸ்ரீவஸ்தவா

2010

மகாராஷ்டிரா

ஜெய் ஜெய் மகாராஷ்டிரா மஜா

என் மகாராஷ்டிராவுக்கு வெற்றி!

மராத்தி

ராஜா பாதே

ஸ்ரீனிவாஸ் காலி

2023

மணிப்பூர்

சனா லீபக் மணிப்பூர்

மணிப்பூர், தங்க நிலம்

மணிப்பூரி

பி.ஜெயந்தகுமார் சர்மா

அரிபம் சியாம் சர்மா

2021

ஒடிசா

பந்தே உத்கலா ஜனனி

நான் உன்னை வணங்குகிறேன், ஓ தாயே உத்கலா!

ஒடியா

லக்ஷ்மிகாந்த மொஹபத்ரா

லக்ஷ்மிகாந்த மொஹபத்ரா

2020

புதுச்சேரி

தமிழ்த் தாய் வாழ்த்து

அன்னைத் தமிழைப் பிரார்த்திப்பது (வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே)

தமிழ்

பாரதிதாசன்

எல். கிருஷ்ணன்

2007

தமிழ்நாடு

தமிழ் தாய் வாழ்த்து

அன்னைத் தமிழைப் பிரார்த்திப்பது (நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்)

தமிழ்

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

எம்.எஸ்.விஸ்வநாதன்

2021

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் தேவபூமி மாத்ரிபூமி

உத்தரகாண்ட், கடவுள்களின் பூமி, தாய்நாடு!

இந்தி

கர்வாலி மற்றும் குமாவோனி

ஹேமந்த் பிஷ்ட் நரேந்திர சிங் நேகி

2016

மேற்கு வங்காளம்

பங்களா மாத்தி பங்களா ஜோல்

வங்காளத்தின் மண், வங்காளத்தின் நீர்

பெங்காலி

ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

2023

           

அதிகாரப்பூர்வமற்ற, பாரம்பரிய மற்றும் பிரபலமான மாநிலப் பாடல்கள்

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம்

பாடல் பெயர்

மொழிபெயர்ப்பு

மொழி

பாடலாசிரியர்(கள்)

இசையமைப்பாளர்(கள்)

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சல் ஹமாரா

நம்ம அருணாச்சலப் பிரதேசம்

ஹிந்தி

பூபன் ஹசாரிகா

பூபன் ஹசாரிகா

 

சிக்கிம்

ஜஹான் பாக்சா டீஸ்டா ரங்கீத்

டீஸ்டாவும் ரங்கீத்தும் எங்கே ஓடுகிறது

நேபாளி

சானு லாமா

துஷ்யந்த் லாமா

 

தெலுங்கானா

ஜெய ஜெய ஹே தெலுங்கானா

தெலுங்கானா தாய்க்கு வெற்றி!

தெலுங்கு

ஆண்டே ஸ்ரீ

ஆண்டே ஸ்ரீ

 

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் சமேததா குட் கோ இதிஹாஸ்கே பன்னொன் மே

உத்தரப் பிரதேசம் தனது வரலாற்றின் பக்கங்களில் தன்னை மறைக்கிறது

 

ஹிந்தி

 

 

 

 

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்