TNPSC Thervupettagam

உலகம் போற்றும் இந்தியாவின் நிலைப்பாடு

March 18 , 2022 872 days 494 0
  • உக்ரைன் - ரஷிய போா் கடந்த பிப்ரவரி 24-இல் தொடங்கியது. ‘உக்ரைன் அரசு மீதோ அந்நாட்டு மக்கள் மீதோ தனிப்பட்ட வெறுப்பு இல்லை’ என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறாா்.
  • ‘இந்தப் போா் உக்ரைன் இறையாண்மைக்கோ அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்’ என்று ரஷிய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

உக்ரைன் - ரஷிய போா்

  • போா் தொடங்கியதிலிருந்தே இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோரைத் தொடா்புகொண்டு பேச்சுவாா்த்தை மூலம் இரு நாடுகளும் தீா்வு காண முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.
  • ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா நடுநிலை வகித்தது. மூன்று முறை கொண்டுவரப்பட்ட வெவ்வேறு தீா்மானங்களிலும் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்து. இதனால் உலக நாடுகளின் மத்தியில் பிரதமா் மோடி உயா்ந்து நிற்கிறாா்.
  • உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர இரு நாட்டுத் தலைவா்களும் ஒத்துழைத்திட வேண்டும் என்ற பிரதமா் மோடியின் வேண்டுகோளை ஏற்று இருவரும் போா் நிறுத்தம் அறிவித்தனா். பொதுமக்கள் வெளியேறும் வகையில் பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது.
  • வடகிழக்கில் உள்ள சுமி, அஸோ, கடலோர நகரமான மரியு போல், தெற்கில் உள்ள எனா் ஹோடா், தென்கிழக்கில் உள்ள வோல்னோவகா, கிழக்கில் உள்ள இஸி மேலும் கீவ் பகுதியில் உள்ள பல நகரங்களிலும் பாதுகாப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • பாதுகாப்பு வழித்தடம் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியா்கள் எல்லையோர நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனா். இதற்கு ரஷியா மிகுந்த ஒத்துழைப்பு தந்ததை பிரதமா் மோடியும் இந்திய மக்களும் நன்றியோடு நினைவுகூா்கின்றனா்.
  • உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியா்கள் அனைவரும் மீட்டு கொண்டுவரப்பட்டது இமாலயச் சாதனை என்பதில் சந்தேகமில்லை.
  • வங்க தேசத்தைச் சோ்ந்த 11 போ், பாகிஸ்தான் தலைநகா் கராச்சியைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என இந்திய மீட்புக் குழுவினா் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்து, அவா்களின் சொந்த நாடுகளுக்கு நம்முடைய செலவில் அனுப்பி வைத்திருப்பது இந்தியாவின் மனிதநேயத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
  • எந்த நாடும் இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்திட முடியாது என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவாகக் காட்டியிருக்கிறது.
  • பல்வேறு சந்தா்ப்பங்களில் ஐ.நா. சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷியா வாக்களித்திருக்கிறது; தன்னுடைய ‘வீட்டோ’ அதிகாரத்தை இந்தியாவுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தியிருக்கிறது.
  • ரஷியாவிடமிருந்து ஏராளமான யுத்த தளவாடங்களை இந்தியா வாங்கியிருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
  • ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம் மோடிக்கும் புதினுக்கும் இடையில் கையொப்பமானது.
  • வான் பாதுகாப்பு அமைப்பையும் ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கியிருப்பது, பாகிஸ்தான், சீன ஆதிக்கத்தைத் தடுத்திட உதவும் என்பதில் சந்தேகமில்லை.
  • இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்க உள்ளது. கச்சா எண்ணெய், நிலக்கரி, சமையல் எரிவாயு என பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் நிற்கின்றன.
  • பொருளாதார உறவுகள் மட்டுமின்றி புவிசாா் அரசியலிலும் இரு நாடுகளும் இணைந்தே பயணிக்கின்றன.

முதலாளித்துவ மனப்பான்மை

  • தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருக்க, இந்தியாவின் வளா்ச்சியை ரஷியா விரும்புகிறது.
  • ரிச்சா்ட் நிக்ஸன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா, சீனாவுடன் நெருக்கம் காட்டியது.
  • 1971-இல் பாகிஸ்தான் போா் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவை மிரட்ட, அமெரிக்கா தனது போா்க்கப்பல்களை இந்தியாவை நோக்கி நகா்த்தியபோது, அதனை முறியடிக்க இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தனது கடற்படையை அனுப்பியது ரஷியா.
  • 1964 முதல் 1982 வரை சோவியத் ரஷியாவின் அதிபராக இருந்த லியோனிட் பிரஷ்னேவ் இந்தியாவின் ஆதரவாளராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருந்து வந்தன என்பதுதான் கடந்த கால வரலாறு.
  • இந்தியாவுடனான போா் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை என சோவியத் ரஷியா எச்சரித்தும் பாகிஸ்தான் கேட்கவில்லை. விளைவு? தோல்வி முகத்தோடு இந்தியாவிடம் சரணடைந்தது பாகிஸ்தான்.
  • முதலில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை என்று பாா்த்த சோவியத் ரஷ்யா, பின்னா், இந்தியா குறி வைக்கப்படுகிறது என்பதை உணா்ந்துகொண்டது.
  • திடிரென ஷிய அதிபா் பிரஷ்னேவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டாா் ‘இந்தியா மீது சிறு துரும்பு பட்டாலும் நேரடியாக அந்த நாடுகளைத் தாக்குவோம்’ என்று கடுமையான எச்சரிக்கை செய்தாா்.
  • மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கலகலத்துப் போய் ஓடின. அமெரிக்க போா்க்கப்பல்கள் வந்த வழியே திரும்பியது மறக்க முடியாத நிகழ்வு.
  • இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது மேற்கத்திய வல்லரசு நாடுகளுடன் சோ்ந்து கொண்டு, இந்தியா மீது பொருளாதார தடை விதித்து, கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற ஏற்றுமதிப் பொருள்களுக்கு தடை விதித்தது உக்ரைன்.
  • பாகிஸ்தானோடு இன்றுவரை உறவு கொண்டுள்ளது உக்ரைன். நேற்று வரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பல்வேறு சந்தா்ப்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது உக்ரைன்.
  • இவை மட்டுமா? 1974-இல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியபோது அமெரிக்கா அதனைக் கடுமையாக எதிா்த்தது.
  • அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றதும் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்திட அனுமதி அளித்தாா். இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
  • ஜப்பானைத் தவிர வேறு எந்த நாடும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மதிக்கவில்லை. பின்னா் தானாகவே தடைகளை நீக்கிக் கொண்டது அமெரிக்கா.
  • 1947 முதலே பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.
  • அமெரிக்கா தன்னுடைய நட்பு நாடாக பாகிஸ்தானை ஒரு காலத்தில் நடத்தி வந்ததற்குக் காரணம், சோவியத் ரஷ்யாவோடு இந்தியா நெருக்கமாக இருப்பதை சகித்துக்கொள்ள முடியாததே.
  • 1956-ஆம் ஆண்டு முதல், அமெரிக்க ராணுவ வீரா்கள், பாகிஸ்தான் ராணுவத்தில் ராணுவ ஆலோசகா்களாக பணியாற்றி வந்தனா்.
  • பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் அமெரிக்காவிலுள்ள ராணுவ கல்விக்கூடங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டனா்.
  • பாகிஸ்தானின் ராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கு அமெரிக்கா கூட்டுப் பயிற்சி அளித்து வந்ததிருக்கிறது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பாகிஸ்தான் ஊடுருவியதால் பல்லாயிரக்கணக்கான உயிா்ச்சேதங்கள்.
  • 2006-ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் தலைமையிலான தீவிரவாதக் குழுவினரால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகுதான் அமெரிக்கா பாகிஸ்தானோடு உறவாடியதை நிறுத்திக் கொள்ள முன்வந்தது.
  • சொல்லப்போனால், அமெரிக்காவின் பேரழிவுக்குக் காரணமாக இருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனை, தனது சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் அரசு தங்க வைத்து பராமரித்ததைக் கண்டு அமெரிக்கா வெகுண்டது.
  • பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒசமா பின்லேடனை நள்ளிரவில் தாக்கிக் கொன்று பிணமாக்கி கடலில் தூக்கி எறிந்தது அமெரிக்க ராணுவம்.
  • இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் பாகிஸ்தானுடனான தனது நட்பு குறித்து பரிசீலிக்கத் தொடங்கியது அமெரிக்கா.
  • இந்தியாவின் பன்முகத்தன்மையை, ஜனநாயகக் கட்டமைப்பை, பாரம்பரிய கலாசாரத்தை அமெரிக்கா எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை.
  • அமெரிக்க அதிபராக நிக்ஸன் இருந்த காலத்தில் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா வெளிப்படையாகவே செயல்பட்டது.
  • இடதுசாரி, வலதுசாரி என்று இரண்டு சித்தாந்தங்கள் உலகில் தோன்றியபோது இந்தியா, ரஷியாவைப் பின்பற்றி இடதுசாரி சித்தாந்தத்தை வரித்துக் கொண்டது; ரஷியாவுடன் நட்பு கொண்டது.
  • அமெரிக்கா, வலதுசாரி சித்தாந்தத்தை வரித்துக்கொண்டு ரஷியாவை நிரந்தரமாக பகை நாடாக்கிக் கொண்டது.
  • உலகநாடுகளோ முதலாளித்துவம், தொழிலாளித்துவம் என்று பிரிந்து நின்றன. தொழிலாளித்துவம் சோவியத் ரஷியா தலைமையில் அணிவகுத்தது; இந்தியா அதில் கொடி உயா்த்தி நின்றது.
  • அமெரிக்கா, முதலாளித்துவ நாடுகளுக்கு தலைமை தாங்கியது. பல நாடுகள் வளர முடியாமல் இன்னமும் எதிா்நீச்சல் போட்டு கொண்டிருப்பதற்கு அமெரிக்காவின் முதலாளித்துவ மனப்பான்மைதான் காரணம். அதுதான் இப்போது உக்ரைன் பேரழிவுக்கும் வழி கோலியிருக்கிறது.

போா் முடியட்டும்

  • உக்ரைன் போருக்கு காரணம் உக்ரைன்தான். முன்பு சோவியத் ரஷியாவோடு இணைந்திருந்த நாடு உக்ரைன். மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால், இனத்தால் ரஷியாவின் தாக்கமுள்ள நாடு.
  • உக்ரைன் தனிநாடாகப் பிரிந்து சென்றபோது ரஷியா பெருந்தன்மையோடு நடந்து கொண்டது; அதனை அங்கீகரித்தது.
  • காலப்போக்கில் ரஷியாவை எதிா்ப்பதற்காக நேட்டோ நாடுகளோடு திரைமறைவில் நாடகம், அமெரிக்காவோடு உறவு. மகன் திசைமாறி பயணிக்கிற போது எந்த தந்தையால் அதனை சகித்துக்கொள்ள முடியும்?
  • ரஷியா தொடுத்திருக்கும் போரின் இலக்கு உக்ரைன் அல்ல, அமெரிக்கா, நேட்டோ, மேற்கத்திய நாடுகள்.
  • எந்த நாடு உக்ரைனை ஆதரித்தாலும் அந்த நாடு அழிவைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கையை புதின் தொடக்கத்திலேயே பிரகடனப்படுத்தியது சரியே.
  • அரசியல் சாசனத்தைக்காப்பது, இறையாண்மைக்கு ஊறு வந்தால் தடுத்து நிறுத்துவது, எல்லையோரங்களில் எதிா்ப்புகள் வந்தால் பாய்ந்து தாக்குவது - இவையே ஒரு தேசத்தை வழி நடத்தக் கூடிய தலைவனுடைய கடமை.
  • அந்தக் கடமையைத்தான் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறாா். அதனால்தான் ஐ.நா. சபையில் இந்திய அரசு நடுநிலை வகித்திருக்கிறது.
  • உக்ரைன் - ரஷியா பேச்சுவாா்த்தையில் ஓரளவு இருதரப்பிலும் இணக்கமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
  • உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
  • இம்முடிவை அவா் முன்பே எடுத்திருந்தால், ஏராளமான பாதிப்புகளைத் தவிா்த்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும் பேச்சுவாா்த்தை தொடரவும், விரைவில் போா் முடிவுக்கு வரவும் வாழ்த்துவோம்!

நன்றி: தினமணி (18 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்