TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான தெய்வ சிலைகள்

December 19 , 2024 6 days 69 0

உலகின் மிக உயரமான தெய்வ சிலைகள்

  • தெய்வங்களை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து வழிபடும் அதே சமயத்தில், இறைவன் மற்றும் மகான்களை மிகவும் பிரம்மாண்ட வடிவில் வைத்து பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் கவருவது, அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட கம்பீரமான சிலைகள், பல நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • காத்மாண்டிலிருந்து 20 கிமீ தொலைவில் பக்திபூர் ஜில்லாவில் சூர்யாபிநாயக்கில் கைலாஸ் நாத் மகாதேவ் சிலை உள்ளது. 2011-ல் திறக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிக உயரமான சிலை. உயரம் : 143 அடி (44 மீட்டர்)
  • ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் பிரம்மாண்ட சிவபெருமான் சிலையை தரிசிக்கலாம். 369 அடி (112 மீட்டர்). 2022-ம் ஆண்டு, அக். 27-ம் தேதி கட்டி முடித்து திறக்கப்பட்டது. இது உலக அளவில் 4-வது மிக உயர சிலையாகும். நாத்வாராவின் கனேஸ் டெக்ரீ என்ற இடத்தில் சிவன் அமர்ந்த நிலையில் இடது காலை வலது கால் மீதும் நீட்டியுள்ளார். இடது கையில் திரிசூலம் உள்ளது. அவருக்கு எதிரில் நந்தியும் உள்ளது. அது 25 அடி உயரமும் 37அடி நீளமும் கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவர ஏதுவாக நந்தியைச் சுற்றி மூலிகை தோட்டங்கள், நீர் ஊற்றுகள், குளம் என பல உள்ளன.
  • நியோகிளாசிகல் சிலை என அழைக்கப்படும் மா வைஷ்ணவி தேவியை (உத்தரப்பிரதேசம், விருந்தாவன்) சிவப்பு நிற புடவையில் காணலாம். சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் 8 கைகளில் கடா, சக்ரம், திரிசூலம், தனுஷ்,சங்கு,வாள் ஆகியவற்றுடன் உள்ளார். முன்னால் ஆஞ்சநேயர் அமர்ந்துள்ளார். தேவியின் சிலை மொத்த உயரம் 141 அடி. சிங்கம் 35 அடி. ஆஞ்சநேயர் 32 அடி. அவருடைய கதை 26 அடி.
  • மலேசிய தமிழர்களால் செலன்கோர் பகுதியில் 2006-ல் கட்டி திறக்கப்பட்ட பத்து கேவ்ஸ் முருகப் பெருமான் மிகவும் உயரமானவர். தங்க வண்ண பூச்சில் ஜொலிக்கும் சிலையின் உயரம் 140 அடி (42.7).350 டன் எஃகு மற்றும் 1,550 கன மீட்டர் கான்கீரிட்டால் ஆனது.
  • இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் கலாச்சார பூங்காவில். கருடா விஷ்ணு கெஞ்சனா சிலை உள்ளது. 2018-ல் திறக்கப்பட்டது. அடிப்படை பீடம் 46 மீட்டர். மொத்த உயரம் 121 மீட்டர். மகாவிஷ்ணு, கருடன் மீது அமர்ந்து காட்சி தருகிறார். எஃகு..செம்பு, பித்தளை மற்றும் கான்கீரிட்டால் ஆனது.
  • ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பரிதலா கிராமத்தில் அதிவீர ஆஞ்சநேய ஸ்வாமி அருள்பாலிக்கிறார். 2003-ம் ஆண்டு திறக்கப்பட்ட இச்சிலையின் உயரம் 135 அடி (41மீட்டர்). இந்தியாவுக்கு வெளியில் உள்ள மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை 85 மீட்டர் உயரம் கொண்டது. இது டிரினிடாட் மற்றும் டொபாக்கோ பகுதியில் உள்ளது.
  • கர்நாடகாவின் பித்தானாகெரேயில் கம்பீரமான தங்க நிறத்தில் 161 அடி உயரத்தில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை இதுதான்.
  • சேலம் மாவட்டம் முத்து மலையில் உலகின் மிக உயரமான (146 அடி) முருகன் சிலையை காணலாம். இதனை முத்துமலை முருகன் கோயில் என அழைக்கின்றனர்.
  • ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முச்சிந்தலில் உள்ள சின்ன ஜீயர் அறக்கட்டளை வளாகத்தில் அமைந்துள்ளது ராமானுஜர் சிலை (ஹைதராபாத் சமத்துவ சிலை). 11-ம் நூற்றாண்டின் சிறந்த இந்திய தத்துவ ஞானி ராமானுஜரின் 1,000-வது ஆண்டு அவதாரத் திருநாளை கௌரவிக்கும் விதமாக இந்த கோயில் எழுந்துள்ளது. உயரம் 66 மீட்டர் (216 அடி).அமர்ந்த கோலத்தில் இரண்டாவது மிகப் பெரிய சிலை. இவரைச் சுற்றி 108 திவ்ய தேச சிறு சந்நிதிகளும் உண்டு.
  • தாய்லாந்தின் சாக்சோங் சாவோவின் மையத்தில் பிரம்மாண்டமான விநாயகர் சிலையை காணலாம். 128 அடி உயரம். 14 மாடி கட்டிடத்தின் உயரம். 2012-ல் கட்டி முடிக்கப்பட்டது. 45,000 சதுர மீட்டரில், கம்பீரமாக காட்சி தரும் விநாயகர் தாய்லாந்தின் ஆன்மிக கடவுளாக பார்க்கப்படுகிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், தனது 4 கைகளில் பலாப்பழம், கரும்பு, வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தை வைத்துள்ளார். கீழே மூஞ்சூறு. இவரை பிரா பிகாந்த் (phra phikand) என அழைக்கின்றனர். 854 வெங்கல பாகங்களை இணைத்து இந்த பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்