TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

February 7 , 2019 2146 days 4556 0

தமிழ்நாடு – ஒரு பார்வை

  • இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநிலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியப் பங்களிப்பினை அளிக்கின்ற மாநிலமாகும்.
  • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

  • தமிழ்நாடு
    • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை
    • 4 மிகப்பெரிய மற்றும் 22 சிறிய துறைமுகங்கள்
    • 4 சர்வதேச மற்றும் 2 உள்நாட்டு விமான நிலையங்கள்
    • 5324 கி.மீ. தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள், 11830 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாநில நெடுஞ்சாலைகள், 46496 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாவட்டச் சாலைகள் மற்றும் 1,49,446 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிராமப்புற சாலைகள்.

ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • தமிழ்நாடு
    • இந்தியாவில் தொழிற்சாலைச் செயல்பாடுகளின் அடிப்படையில்
    • 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திய ப்ரோஸ்ட் மற்றும் சல்லீவன் அறிக்கையின்படி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாத்தியமான மாநிலங்களில்
    • இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில்
    • இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்ற நபர்களின் எண்ணிக்கையில்
    • வருடாந்திர அளவில் இந்தியாவில் திறன்மிகு மனித வளத்தை உருவாக்குகிற மாநிலங்களில்
    • இந்தியாவில் செயல்படும் நிலையில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கையில்

முதலிடத்தில் உள்ளது.

  • தமிழ்நாடு
    • தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கைப் படி முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலங்களின் குறியீட்டில்
    • இந்தியாவில் கல்வி நிலையை அடைந்ததில்
    • 2018 ஆம் ஆண்டு மார்ச்சில் வெளியிடப்பட்ட ப்ரோஸ்ட் மற்றும் சல்லீவனின் 2017 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டில்
    • இந்தியாவின் சுகாதார வளர்ச்சியில்
    • நல்லாட்சியை வழங்குதலில் (2018 ஆம் ஆண்டின் பொது விவகாரக் குறியீட்டில்)

இரண்டாவது இடத்தில் உள்ளது.

  • தமிழ்நாடு
    • இந்தியாவில் உள்ள மொத்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு
    • இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டில் (2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 7.7 சதவிகிதமாகும்)
    • இந்தியாவின் ஏற்றுமதியில் (இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 9.8 சதவீதமாகும்)

நான்காவது இடத்தில் உள்ளது.

 

மனித வளம்
  • ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு திறன்மிகு மனித வளத்தை உற்பத்தி செய்கிறது.
  • தமிழக மாநிலம்
    • 2 மத்திய பல்கலைக்கழகங்கள்
    • 22 மாநில பல்கலைக்கழகங்கள்
    • 700 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
    • 1018 பொறியியல் கல்லூரிகள் (AICTE ஒப்புதல் அளித்தது)
    • 560 தொழிலகப் பயிற்சி நிறுவனங்கள்
    • 509 தொழில்நுட்ப நிறுவனங்கள்
    • 29 அரசு மருத்துவக் கல்லூரிகள்

ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

தமிழ்நாட்டின் தலைநகரம் - சென்னை
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் வெளியிடப்பட்ட “குறைந்த செலவில் வாழ்வதற்கு உகந்த நகரங்களுக்கான பட்டியலில்” இந்தியாவில் சென்னை முதல் 6 இடங்களுக்குள் தொடச்சியாக தரவரிசைப் படுத்தப்பட்டு வருகின்றது.
  • வாழ்வதற்கு உகந்த குறியீட்டில் 2-வது சிறந்த மெட்ரோ நகரமாக சென்னை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

  • சென்னை இந்தியாவின் தானியங்கி வாகனங்களின் தலைநகரம் என்றறியப்படுகிறது.
  • இந்திய அரசாங்கத்தின் 3 முக்கியமான தொழிலகப் பெருவழிப் பாதைகளில் சென்னையும் ஒரு பகுதியாக உள்ளது. அவையாவன
    • சென்னை – பெங்களூரு தொழிலகப் பெருவழிப் பாதை
    • சென்னை – கன்னியாகுமரி தொழிலகப் பெருவழிப் பாதை
    • விசாகப்பட்டினம் – சென்னை தொழிலகப் பெருவழிப் பாதை

 

உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு
  • 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதலாவது பதிப்பானது சென்னையில் நடைபெற்றது.
  • இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசு 2.40 லட்சம் கோடி (USD 36 பில்லியன்) அளவிற்கு முதலீடுகளை ஈர்த்தது.
  • இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் உலகெங்கிலுமிருந்து 5000ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
  • 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100-ற்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2019
  • 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தியது.
  • இந்தச் சந்திப்பானது தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் போட்டிக்குரிய வலிமைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
  • எனவே, 2019 ஆம் ஆண்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாடானது முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு முதலீட்டாளர்களின் ஒரு முன்னுரிமை விருப்பமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்துகின்றது.

 

2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் குறிக்கோள்கள்
  • முதலீட்டாளர்களின் விருப்பமாக தமிழ்நாட்டின் நிலையை உயர்த்துவது.
  • தமிழ்நாட்டின் (முதலீட்டாளர்களுக்காக) திறனுள்ள வணிக வாய்ப்புகள் மற்றும் துறைரீதியான குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களை அடையாளப் படுத்துதல்.
  • தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகின்ற முன்னேடுப்புகளான வியாபாரம் தொடங்குதலை எளிமையாக்குதல் மற்றும் அதற்கான முன்னெடுப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துதல்.
  • உலகளவில் குறிப்பிட்ட துறை சார்ந்த சிறந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை ஒருங்கிணைத்தல்.
  • தமிழ்நாடு மாநிலத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துதல்.

 

கவனம் செலுத்தப்படும் துறைகள்
  • தமிழக அரசு 12 துறைகளின் மீது தனது கவனத்தைச் செலுத்துகிறது.

 

ஆகாய விமானம் மற்றும் பாதுகாப்பு
  • இந்தியாவின் முதலாவது பாதுகாப்பு பெருவழிப் பாதைக்கான இடம்.
  • ஸ்ரீபெரும்புதூரில் ஆகாய விமானப் பூங்கா (வல்லம்-வடகல்).
  • சென்னையில் பராமரிப்பு, சரிபார்ப்பு பழுது பார்க்கும் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறை
  • இந்தியாவில், தமிழ்நாடானது
    • கோழி வளர்ப்பு மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் 2-வது மிகப்பெரிய மாநிலமாக
    • தேங்காய் உற்பத்தியில் 2-வது மிகப்பெரிய மாநிலமாக
    • தேயிலை மற்றும் காபி உற்பத்தியில் 3-வது மிகப்பெரிய மாநிலமாக
    • பழங்களின் உற்பத்தியில் 7-வது மிகப்பெரிய மாநிலமாக

உருவெடுத்துள்ளது.

  • தமிழ்நாடு
    • பப்பாளி, சப்போட்டா மற்றும் மாதுளை ஆகிய பழப் பயிர்களின் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது.
    • வாழைப்பழம் சாகுபடியில் 2-வது இடத்தில் உள்ளது.
  • நறுமணப் பொருட்கள் மற்றும் முந்திரிப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
  • இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையில் தமிழ்நாட்டின் பங்கு 7 சதவிகிதமாகும்.
  • 2017-18 ஆம் ஆண்டில் அதிக அளவில் முட்டைகளை உற்பத்தி செய்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
  • தமிழ்நாடு மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்றையும் எட்டு தொழிலகப் பூங்காக்களையும் நான்கு வேளாண்மை ஏற்றுமதி மண்டலங்களையும் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது நன்கு கட்டமைக்கப்பட்ட விவசாயப் பல்கலைக் கழகங்களையும் மாநிலம் முழுவதும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் கொண்டுள்ளது (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்).
  • தமிழ்நாடு மாநிலமானது “இன்றைய விவசாயம்” (Agriculture Today) என்ற முன்னணிப் பத்திரிக்கையிடமிருந்து “உலகளாவிய விவசாய தலைமைத்துவ விருது” என்ற விருதை 2016 ஆம் ஆண்டில் பெற்றுள்ளது.

 

தானியங்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள்
  • உலகின் முதல் பத்து தானியங்கி உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் கார்களின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 45 சதவிகிதமாகும்.
  • இந்தியாவின் தானியங்கி வாகனத்திற்கான பாகங்களின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 35 சதவிகிதமாகும்.
  • நாட்டின் மிக அதிக அளவு டையர் (Tyre) உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

 

இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறை
  • இந்தியாவின் மொத்த இரசாயனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 3-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு மாநிலமானது 2588 இரசாயன உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
  • 2017-18 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களின் மதிப்பு 77 மில்லியன் USD ஆகும்.
  • தமிழ்நாடு பல முக்கியத்துவம் வாய்ந்த நெகிழிப் பொருட்கள்/பல்படிமப் பொருட்களுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்டுள்ளது (CIPET – நெகிழித் தொழில்நுட்ப நிறுவனம்).
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழிலக வளர்ச்சி நிறுவனத்தால் ஒரு பல்படிம தொழிலகப் பூங்கா கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • தமிழ்நாடு 8000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பல்படிம தொழிலகச் சூழலை ஏற்படுத்தி 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளது.

 

மின்னணு மற்றும் வன்பொருள் துறை
  • இந்தியாவின் கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தேசிய உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 16 சதவிகிதமாகும்.
  • 2017-18 ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது (USD 1.27 பில்லியன்).
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்னணு மற்றும் வன்பொருள் துறைகளுக்காக 2 குறிப்பிட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அவையாவன
    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உயர் தொழில்நுட்ப மின்னணு/தொலைத் தொடர்பு வன்பொருள் சிறப்புப் பொருளாதார மண்டலம் (486 ஏக்கர்).
    • ஒரகடத்தில் உயர் தொழில்நுட்ப மின்னணு வன்பொருள் சிறப்புப் பொருளாதார மண்டலம் (348 ஏக்கர்).

 

கனரகப் பொறியியல்
  • தமிழ்நாடு மாநிலமானது பொதுத் தேவைகள் மற்றும் சிறப்புப் பயன்பாட்டு இயந்திரங்களை தயாரித்தலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2017-18 ஆம் நிதியாண்டில் கனரக பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இயந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை கோயம்புத்தூர் சேலம் தொழிலக பெருவழிப் பாதை கொண்டு உள்ளது.
  • 3 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) கனரக பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அவையாவன
    • ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையில் உள்ள பொறியியல் துறை சிறப்புப் பொருளாதார மண்டலம் (263 ஏக்கர்)
    • திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கைகொண்டானில் உள்ள போக்குவரத்துப் பொறியியல் சிறப்புப் பொருளாதார மண்டலம் (255 ஏக்கர்)
    • வேலூர் மாவட்டத்தின் இராணிப்பேட்டையில் அமைந்துள்ள பொறியியல் துறைக்கான குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் (134 ஏக்கர்).

 

தகவல் தொழில்நுட்பம்
  • தமிழ்நாடு மாநிலத்தின் மொத்தம் உள்ள பொறியியல் பட்டதாரிகளில் 7 சதவிகிதத்தினர் கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/மின்னணு/தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை (2 இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் 8 தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (ELCOT) உருவாக்கியுள்ளது.

 

கட்டமைப்பு
  • தமிழ்நாடு மாநிலம் 4 சர்வதேச மற்றும் 2 உள்நாட்டு விமான நிலையங்களைக் கொண்டுள்ளது.
  • டன் கணக்கு முறையில் தமிழ்நாட்டால் கையாளப்பட்ட சரக்கு விகிதம் இந்தியாவின் மொத்த  சரக்கு கையாளும் திறனில் 81 சதவிகிதமாகும்.
  • உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் வளத்தில் 9 முன்னணிச் சந்தைகளில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலம் 4 மிகப்பெரிய மற்றும் 22 இதர துறைமுகங்களைக் கொண்டுள்ளது.
மருத்துவத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பம்
  • இந்தியாவின் மருந்து உற்பத்தியில் 5-வது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • தேசிய மருந்து உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 10 சதவிகிதமாகும்.
  • TIDCO மற்றும் இந்திய அரசு நிறுவனமான HLL லைப்கேர் நிறுவனத்தினால் மேடி பூங்காத் திட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • உயிரித் தொழில்நுட்பத் துறையில் உதவுவதற்காக தமிழ்நாடு 36 வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வேளாண் பல்கலைக்கழகத்தையும் கொண்டுள்ளது.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
  • மொத்த ஆற்றல் உற்பத்தியில், காற்றாலை ஆற்றலின் நிகர பங்களிப்பில் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் தமிழ்நாடு தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • மொத்த உற்பத்தி ஆற்றல் திறனான 11,113 மெகா வாட்டுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியாவின் இதர அனைத்து மாநிலங்களிடையே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு செயல்படுகிறது.
  • கன்னியாகுமரியில் உள்ள ஆரல்வாய்மொழியானது மிகப்பெரிய காற்றாலை ஆற்றல் திறனைக் கொண்டு இருக்கின்றது (1500 மெகா வாட்).

 

திறன் மேம்பாடு
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC - Tamil Nadu Skill Development Corporation) 2017-18 நிதியாண்டில் 1,05,000 மாணவர்களுக்கும் அதிகமானவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கின்றது.
  • ஒவ்வொரு வருடமும் 30 சதவிகித இடங்கள் பெண் மாணவிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
  • சிப்காட் வளாகத்திற்குள் அமைக்கப்பட இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு தேவைப்படுகின்ற திறன் மேம்பாட்டை பூர்த்தி செய்ய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன நடவடிக்கைகள் சிப்காட்டால் மேற்கொள்ளப்படுகின்றன.

 

ஜவுளித்துறை மற்றும் ஆடைத்துறை
  • இந்தியாவில் உள்ள ஜவுளித்துறை வர்த்தகத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை வழங்குவதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி மையமாக விளங்குகின்றது.
  • பின்வருவனவற்றில் தமிழ்நாடு
    • பருத்தி நூல் உற்பத்தியில் முதலிடமும்
    • பருத்தி நூல் ஏற்றுமதியில் முதலிடமும்
    • கலப்பு நூலிழை உற்பத்தியில் இரண்டாமிடமும்

வகிக்கின்றது.

  • திருப்பூர் ‘பனியன் நகரம்’ என்று அழைக்கப்படுகின்றது. கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் தமிழ்நாடு அதிகபட்சமான ஜவுளி ஆலைகளைக் கொண்டிருக்கின்றது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள காலணி மற்றும் பதப்படாத தோல் தயாரிப்புகளுக்கானன சிறப்புப் பொருளாதார மண்டலமானது (154 ஏக்கர்) ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலமாகும்.

 

விளைவுகள்
  • இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3,00,431 கோடிகள் அளவிற்கு முதலீடுகளைத் தருவிக்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டு இருக்கின்றது.
  • பள்ளிக் கல்வி, உயர்கல்வி, அலுவலக வளாகம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற புதிய துறைகளில் பெரும்பாலும் முதலீடுகள் அமைந்திருக்கின்றன.

 

பெரிய முதலீடுகள்
  • டயர் உற்பத்தியாளரான MRF தமிழ்நாடில் உள்ள தனது இரண்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்யும் வகையில் 3100 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது.
  • பியூஜியாட் கார்களை உற்பத்தி செய்வதற்காக PSA பிரான்ஸ் 1250 கோடிகள் முதலீடு செய்ய உள்ளது. எயிச்சர் மோட்டார் நிறுவனம் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் மற்றுமொரு உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றது.
  • சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கத்தின் மீது 10000 கோடி அளவிற்கு அதானி குழுமம் முதலீடு செய்ய இருக்கின்றது.
  • 2500 கோடி ரூபாய் முதலீட்டுடன் பாக்ஸ்கான் நிறுவனம் மாநிலத்தில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஆரம்பிக்க உள்ளது.
  • தொழில் நுட்பத் துறையில் அரசு 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கின்றது. மலேசியாவைச் சேர்ந்த நெட்லிங்க் இன்போகாம் நிறுவனம் 2500 கோடிகள் அளவிற்கு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
  • ஒரு மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை நாகப்பட்டினத்தில் ஏற்படுத்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 27400 கோடி அளவிற்கு முதலீட்டை மேற்கொள்ளும்.
  • தமிழ்நாடு அரசிற்கும் ஜப்பானிய நிறுவனங்களுக்கும் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. சுற்றுலாத்துறை மீதான கவனத்துடன் தனது வர்த்தக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்த ஜப்பான் திட்டமிடுவதுடன் தனது நிறுவனங்களில் இந்தியர்களைப் பணியில் அமர்த்த ஜப்பானிய மொழி மையங்களை இங்கு அமைக்கவும் அவை திட்டமிடுகின்றன.

 

அடுத்த மாநாடு
  • ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுமென்றும் அடுத்த மாநாடு 2021ம் ஆண்டில் நடத்தப்படுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

 

- - - - - - - - - - - - - - - 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்