TNPSC Thervupettagam

எச்.ஐ.வி/எய்ட்ஸ் சட்டம்-2017

March 26 , 2019 2102 days 1895 0
  • இந்தியாவானது தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவுக்கு அடுத்ததாக 3 மில்லியன் எச்.ஐவி தொற்றுடைய மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மனித நோய் எதிர்ப்புக் கிருமி மற்றும் பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க் கூட்டு அறிகுறி (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017 ஆனது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று அமலுக்கு வந்தது.
  • இது நாட்டில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதையும் இதனால் பாதிப்படைந்தோருக்கு எதிரான பாகுபாட்டிற்கு அபராதம் விதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
  • 2014 ஆம் ஆண்டில் மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத் ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவானது மார்ச் 22, 2017 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு ஏப்ரல் 12 அன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2017 ஏப்ரல் 20 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
  • இந்தியாவானது உலகின் மூன்றாவது அதிக எச்.ஐ.வி. தொற்றுடைய நாடாக உள்ளது. மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • எனவே இந்தியாவானது 2010 முதல் 2020 ஆண்டிற்குள் ஏற்பட்ட 75% அளவிற்கான புதிய தொற்றினைக் குறைப்பதோடு 2030ஆம் ஆண்டில் முழுவதுமாக எய்ட்ஸ் நோயை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
HIV/AIDS சட்டம் பற்றிய விவரங்கள்
  • இந்தச் சட்டமானது HIVஆல் பாதிக்கப்பட்டவர்களை எந்தவொரு அடிப்படையிலும் பாகுபாட்டுடன் நடத்துவதைத் தடை செய்கிறது.
  • இது வேலை வாய்ப்பு, சுகாதார சேவை அல்லது கல்வி ஆகியவற்றைப் பெறுவதற்கு முன்பே HIV சோதனை செய்யக்கூடாது எனவும் கூறுகிறது.
  • மருத்துவ சேவை, இடம் பெயர்தலுக்கான உரிமை, வசிப்பதற்கான உரிமை, நுகர்வு, வாடகை அல்லது சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் பொது அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிதல் ஆகியவற்றில் இடைநிறுத்தம் செய்தல் அல்லது மறுத்தலை இச்சட்டம் தடை செய்கிறது.
  • இது HIVஆல் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் தனிமைப்படுத்துவதையும் தடை செய்கிறது.
  • HIVஆல் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் பகிர்ந்து கொள்ளப்பட்ட குடும்பத்தில் வசிப்பதற்கும் பாகுபாடு அல்லாத முறையில் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தவதற்கும் உரிமையுடையவராவர்.
  • எந்தவொரு நபரும் சொற்களாலோ, எழுதுவது அல்லது பேசுவதன் மூலமாக பிரசுரம் செய்வதோ, பிரச்சாரம் செய்வதோ, பரிந்துரைக்கவோ அல்லது சைகைள் மூலம் அல்லது வெளிப்படையான குறிப்பீட்டின் மூலம் எந்தவொரு வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது எனவும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் அல்லது குழுக்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்ளக்கூடாது எனவும் இச்சட்டம் கூறுகிறது.
  • இந்தச் சட்டத்தின் கீழ் HIV-ஆல் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவச் சிகிச்சை, மருத்துவத் தலையீடு அல்லது மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்காமல் உட்படுத்த முடியாது.
  • மேலும் கர்ப்பமாக இருக்கும் HIVஆல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அவரின் ஒப்புதல் இல்லாமல் தொற்று நீக்கம் அல்லது கருக் கலைப்புக்கு அவரை உட்படுத்தலாகாது.
  • நீதிமன்ற உத்தரவின்றி எந்தவொரு நபரையும் அவரின் HIV நிலையைப் பற்றி வெளியிடுவதற்கு நிர்பந்திக்கக் கூடாது.
  • இதனை மீறுவோருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
  • ஒவ்வொரு நிறுவனமும் HIV தொடர்பான தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியாமாகும்.
  • HIV-ஆல் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் HIV பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நியாயமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப் படுகின்றார்.
  • மாநில மற்றும் மத்திய அரசுகளானது HIVஆல் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் நோயைக் கண்டறியும் மையங்களையும் எதிர்-ரெட்ரோ வைரல் சிகிச்சை வசதி மற்றும் சந்தர்ப்பவாத நோய்த் தாக்க மேலாண்மையை கிடைக்கச் செய்தல் மற்றும் அந்த வசதிகளின் பரவலை உறுதிபடுத்தலுக்கான நடவடிக்கைகளையும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தின் விதிமுறை மீறல்களை விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைதீர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் புகாரைப் பெற்ற அடுத்த 30 நாட்களுக்குள் அதற்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தல் அவசியம் ஆகும்.
  • இவ்வாறு குறைதீர்ப்பாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
தேவையான முன்னெடுப்புகள்
  • HIVஆல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான காப்பீட்டு அணுகல் இந்த மசோதாவின் ஒரு முக்கியப் பகுதியாகும். எனவே இது அரசால் செயல்படுத்தப்படுவது சிறப்பாக அமையும்.
  • ஏனெனில் பொதுமக்களால் நிதியளிக்கப்படும் காப்பீடுகள் இந்த ஆதரவை எதிர்பார்ப்பவர்களின் பிரிவை ஒட்டுமொத்த அபாயத்திற்கு எளிதில் உட்படுத்தக் கூடும்.
  • இது போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கைகளானது கல்வி, திறன் கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த புதிய சட்டத்தினை அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அவசியமாகும்.
  • பொது நல அக்கறையாக, HIV/AIDS ஆனது அதன் கொள்கை உருவாக்கத்தில் சமுதாயத்தினரின் பங்களிப்பு   மற்றும் மிகவும் புலப்படும் தன்மையுடைய தலைமைத்துவ பண்புகள் போன்ற வரலாற்றை மேற்கத்திய நாடுகளில் கொண்டு உள்ளது.
  • சட்டத்தின் செயல்பாட்டை நிர்வகிப்பதற்கான பல வழிகாட்டு நெறிகளை வரையறுக்க பொது மக்களின் ஆலோசனைகளை மையமாகக் கொள்வது அரசுக்குப் பொருத்தமானதாகும்.
- - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்