TNPSC Thervupettagam
January 5 , 2018 2369 days 4468 0
ஒடிசா

- - - - - -

ஒடிசா

  • ஒடிசா (முன்னர் ஒரிசா), இந்தியாவின் 29 மாநிலங்களுள் ஒன்று ஆகும். இது இந்தியாவின் கிழக்குக் கரையோரம் அமைந்திருக்கிறது.

  • இது வடகிழக்கில் மேற்கு வங்கத்தாலும் வடக்கில் ஜார்க்கண்டாலும், வட மேற்கு மற்றும் மேற்கில் சட்டீஸ்கராலும், தெற்கில் ஆந்திரப் பிரதேசத்தினாலும் சூழப்பட்டிருக்கிறது.

  • ஒடிசா ஆனது 485 கிலோமீட்டர் (301 மைல்) தொலைவுள்ள வங்காள விரிகுடா கடற்கரையை கிழக்குப் பகுதியில் பெற்றுள்ளது. இது பலாசோர் முதல் மால்கன்கிரி வரை நீண்டுள்ளது.

  • இது பரப்பளவில் 9-வது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் 11-வது பெரிய மாநிலமாகவும் இருக்கிறது. பழங்குடியின மக்கள் தொகையின் அடிப்படையில் இது இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வரலாற்றுத் தகவல்கள்

  • பழங்கால கலிங்கப் பேரரசின் மீது மெளரியப் பேரரசர் அசோகர் கிமு 261-ல் படையெடுத்ததால் கலிங்கப்போர் மூண்டது. இது இன்றைய ஒடிசாவின் எல்லைகளுடன் தொடர்புடையது ஆகும்.

  • இன்றைய ஒடிசா மாநிலம் 1-ஏப்ரல்-1936-ல் உருவாக்கப்பட்டது ஆகும். இது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாகும். இது ஒடியா மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலாவது மொழிவாரி மாகாணமாகும்.
  • ஏப்ரல் 1-ஆம் தேதி ஒடிசா தினமாகும்.

  • இந்திய தேசிய கீதத்தில் ஒடிசா ஆனது, உத்கல எனக் குறிப்பிடப்படுகிறது.
  • அனந்தவர்மன் சோடகங்கா என்பவரால் கிபி 1135-ல் கட்டாக் நகரானது நிர்மாணிக்கப்பட்டது. 1948 வரையிலான பிரிட்டிஷ் காலம் வரை கட்டாக் தான் ஒடிசாவின் தலைநகராக இருந்தது. பின்னர், புவனேஸ்வர் ஒடிசாவின் தலைநகரானது.

ஒடிசா

மாநிலம் 1 ஏப்ரல் 1936 (உத்கல் திவாஸ்)
தலைநகர் புவனேஸவர்
மிகப்பெரிய நகரம் புவனேஸ்வர்
அரசு
அமைப்பு ஒடிசா அரசு
ஆளுநர் S.C. ஜாமிர்
முதல்வர் நவீன் பட்நாயக் (பி.ஜே.டி)
சட்டமன்றம் ஓரவை (147 இடங்கள்)
பாராளுமன்றத் தொகுதிகள் 21 (மக்களவை) மற்றும் 10 (மாநிலங்களவை)
உயர்நீதிமன்றம் ஒடிசா உயர்நீதிமன்றம், கட்டாக்
பரப்பு
மொத்தம் 1,55,820 ச.கி.மீ.
பரப்பு தரவரிசை இந்தியாவில் 9வது இடம்
மக்கள் தொகை (2011)
மொத்தம் 41,947,358
தரவரிசை இந்தியாவில் 11வது இடம்
மக்களடர்த்தி 270 ச.கி.மீ.
நேர மண்டலம் ISC (UTC + 05.30)
அலுவல் மொழி ஒடியா

 

ஒடிசாவின் அலுவல் சின்னங்கள்

  • மாநில மரம் - அத்தி மரம்
  • மாநில மலர் – அசோகா
  • மாநில விலங்கு - கடமான் (சாம்பார்)
  • மாநிலப் பறவை - பனங்காடை (இந்தியன் ரோலர்)

ஒடிசாவைப் பற்றிய புவியியல் தகவல்கள்

  • ஒடிசாவின் எல்லைகள் 4 மாநிலங்களால் ஆனது. வடக்கில் ஜார்க்கண்ட், வடகிழக்கில் மேற்குவங்கம், தென்மேற்கில் ஆந்திரா மற்றும் மேற்கில் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டது.

  • ஒடிசா மூன்று முக்கிய ஆறுகளால் செழித்துள்ளது. அவையாவன, மகாநதி, பிராமணி மற்றும் பைத்ராணி ஆகும்.
  • சுவர்ணரேகா மற்றும் புத்தபலன்கா ஆகிய இரண்டும் முக்கியமான பருவகால ஆறுகள் ஆகும்.

  • சிலிகா ஏரி ஆனது மிகப்பெரிய உவர்நீர் (பகுதியளவு உப்பு நிறைந்த) காயல் பகுதி ஆகும்.
    • இதுவே இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கடலோர காயல் பகுதி ஆகும். (ஜெய்ப்பூரின் சாம்பார் உவர் நீர் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரி. காஷ்மீரின் உலர் ஏரி ஆனது ஆசியா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும்).
    • சிலிகா ஏரியானது 64 கிமீ நீளமும் 20 கிமீ அகலமும் உடையது. இதில் இரு அழகிய தீவுகள் உள்ளன. அவையாவன: ‘பரிகுட்’ மற்றும் ‘மாலட்’ ஆகும்.

  • இந்தியாவின் மிகப்பெரிய சிங்க சவாரிப் பயணம் மற்றும் உலகின் ஒரே ஒரு வெள்ளைப்புலி சவாரிப் பயணம் புவனேஸ்வரின் நந்தன்கானா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.

  • ஒடிசாவின் மிகப்பெரிய பரப்பு உடைய மாவட்டம் ‘மயூர்பன்ஞ்’ ஆகும். மக்கள் தொகையில் மிகப்பெரிய மாவட்டம் ‘கஞ்ஜம்’ மாவட்டம் ஆகும்.
  • தியோமலி ஆனது மாநிலத்தின் உயர்ந்த சிகரமாகும். இதன் உயரம் 1672 மீ ஆகும்.

ஒடிசாவைப் பற்றிய பொருளாதாரத் தகவல்கள்

  • ஒடிசாவின் கனிமவளங்கள் - குரோமைட், பாக்சைட், டோலமைட், கிராபைட், இருப்புத் தாது, நிலக்கரி, தாமிரம், கயோலின், காரீயம், குவார்ட்சைட், ஸ்டியடைட் மற்றும் வெள்ளீயம்.
  • ஒடிசாவின் வேளாண்மை பொருட்கள் - அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சணல், புளித்த கீரை, தேங்காய் மற்றும் மஞ்சள். 64% மக்கள் வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கு ஆனது ஒடிசாவிலிருந்து கிடைக்கிறது. ஒடிசாவின் முக்கியப் பணப்பயிராக கரும்பு விளங்குகிறது.
  • ரூர்கேலாவின் இரும்பு ஆலை, சத்தர்பூரின் SAD தொழிற்சாலை வளாகம், தால்சர் பகுதியில் உள்ள கனநீர் திட்டம், மான்சேஸ்வரில் அமைந்துள்ள ரயில்பெட்டி பழுதுபார்ப்பு நிலையம், கோராபுட் பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம், பாரதீப்பில் அமைந்துள்ள உரத்தொழிற்சாலை ஆகியவை ஒடிசாவின் முக்கிய தொழிற்சாலைகளாகும்.
  • பாரதீப் ஆனது ஒடிசாவின் முக்கிய துறைமுகமாகும். கோபால்பூர் ஆனது அனைத்து பருவகாலத்திற்குமான துறைமுகம் ஆகும்.
  • உலகின் நான்காவது மிகப்பெரிய அணையான ஹிராகுட் மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

சமூக மற்றும் கலாச்சார தகவல்கள்

  • ‘ஒடிசி’ ஆனது மாநிலத்தின் புகழ்மிக்கதொரு பாரம்பரிய நடனம் ஆகும்.

  • சட்யா தன்தனடா, மற்றும் சாஹு ஆகியவை மாநிலத்தின் புகழ்மிக்க நாட்டுப்புற நடனங்கள் ஆகும்.

  • பூரி (ஜெகன்னாதர்) ஆனது முக்கிய புனிதத் தலமாகும். இது சார்தாம் எனப்படும் 4 புனிதத் தலங்களுள் ஒன்றாகும். வடக்கில் கேதார்நாத், தெற்கில் ராமேஸ்வரம் மற்றும் மேற்கில் துவாரகா ஆகியவை இன்னபிற மூன்று புனிதத் தலங்கள் ஆகும்.

  • பூரி ரதயாத்திரையானது சர்வதேச அளவில் புகழ்மிக்க ஒன்று ஆகும். இதில் பூரி ஜெகன்னாதர், பாலபத்ரா (பலராமர்-கிருஷ்ணரின் மூத்த சகோதரர்) மற்றும் சுபத்திரா (கிருஷ்ணரின் தங்கை) ஆகியோர்களது ரதங்கள் கண்டிச்சா கோவிலுக்கு யாத்திரையாகச் செல்கின்றன.

  • கோனார்க் உலகப் புகழ்பெற்ற சூரியக் கோவில் ஆகும். இந்தக் கோவிலின் மிகப்பெரிய ரதம் ஆனது 24 செதுக்கப்பட்ட சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

  • இது கருப்பு கோபுரம் (Black Pagoda) என்றும் பூரி ஜெகன்னாதர் ஆலயம் வெள்ளை விகாரம் (White Pagoda) என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியனுடைய முதலாவது கதிர் கோயிலின் வாசலில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

  • இது 13-ம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவரால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் ஆனது காமம் சார்ந்த சிற்பங்களுக்கு பெயர் பெற்றது ஆகும்.

  • புவனேஸ்வரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக லிங்கராஜா கோவில் இருக்கிறது. இது சிவன் ஆலயம் ஆகும்.

  • ஒடிசாவின் எழுத்தறிவு வீதம் 4% ஆகும். இது தேசிய கல்வியறிவுச் சராசரியான 74.04% விட சிறிதே குறைவு ஆகும். ஒடிசா ஆனது இந்தியாவின் கல்வியறிவு வீதத்தில் 19-வது இடத்தில் இருக்கிறது.

ஒடிசாவின் பிரபலங்கள்

  • வி.வி. கிரி - இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் பிறந்தவர் ஆவார்.
  • பிஜூபட்நாயக், ஜானகி பல்லாப், நவீன் பட்னாயக், கிரிதர் காமாங் ஆகியோர் புகழ்மிக்க அரசியல் பிரபலங்கள் ஆவர்.

  • சுதர்சன் பட்னாயக் - உலகின் மிகவும் பிரபலமான மணல் சிற்பக் கலைஞர் ஆவார்.

  • மீராநாயர் - புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஒடிசாவின் ரூர்கேலாவில் பிறந்தார். Monsoon Wedding மற்றும் Salam Bombay ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
  • சரோஜினி சாஹூ - பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்ற புகழ்மிக்க எழுத்தாளர் ஆவார்.
  • நந்திதா தாஸ் - இவர் Earth மற்றும் Fire ஆகிய திரைப்படங்களில் நடித்த புகழ்மிக்க நடிகை ஆவார். இவர் புகழ்பெற்ற ஓவியர் ஜடின் தாஸ்ஸின் மகள் ஆவார்.
  • அர்ச்சிதா சாஹூ - புகழ் பெற்ற ஒடியா நடிகை ஆவார்.
  • பிரக்யான் ஓஜா - புவனேஸ்வரில் பிறந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவார்.

பிற தகவல்கள்

  • பூரி ஜெகன்னாதர் ஆலய சமையலறை ஆனது, உலகின் மிகப்பெரிய சமையலறை ஆகும். இதில் 400 சமையல்காரர்கள் 200 அடுப்புகளின் மூலம் சமைத்து நாளொன்றிற்கு 10,000 மக்களுக்கு உணவளிக்கின்றனர்.
  • லோக் ஆயுக்தா மசோதாவை மத்தியில் நடைமுறைப்படுத்திய பின்னர் நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் ஒடிசா ஆகும்.

  • புகழ்மிக்க இனிப்பு வகையான பஹலா ரசகுல்லா ஒடிசாவில் உருவாகியுள்ளது. இது பூரியின் ஜெகன்னாத் கோவிலில் உள்ள லட்சுமி கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

  • சந்திப்பூர் கடற்கரை ஆனது ஓர் அதிசயக் கடற்கரை ஆகும். ஒவ்வொரு உயர் ஓத மற்றும் தாழ் ஓத நிகழ்வுகளின் போதும் 5 கிமீ தூரம் கடல் நீரானது உள்சென்று வரும்.

  • தலைநகர் புவனேஸ்வரில் சுமார் 600 இடைக்கால இந்தியக் கோவில்கள் உள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கோவில்களை உடைய நகரம் இதுவாகும்.
  • இது இந்தியாவின் கோவில் நகரம் என்றழைக்கப்படுகிறது.
  • சிங்களா (இலங்கை மக்கள்) எனும் சொல் ஆனது ராஜா ஜெய் சின்ஹா எனும் பழங்கால ஒரிய மன்னரின் பெயரிலிருந்து வந்தது ஆகும்.
  • அரிய இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அதிகளவில் முட்டையிடுவதற்கென்றே மூன்று மாபெரும் கடற்கரைகள் (ககிர்மாதா, தேவிநதி மற்றும் ருஷிகுல்யா) ஒடிசாவில் காணப்படுகிறது. இதில் உலகின் மாபெரும் கடல் ஆமை முட்டையிடும் (largest Arribada) பகுதியும் ஒன்றாகும்.
  • உலகின் மிகப்பெரிய அளவில் கடல் ஆமை முட்டையிடும் இந்த பகுதியானது  காகிர்மாதா கடற்கரை  ஒரிசாவில் காணப்படுகிறது.

  • ஆசியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலமான சிலிகா தற்போது ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • கிபி 1650 வரை வாழ்ந்த உலகின் மிகப்பெரிய முட்டை (தோராயமாக 13 இன்ச் நீளம், 9.5 இன்ச் அகலம் உடையது) ஈனும் மிகப்பெரிய தாவர உண்ணியும் பறக்காத பறவையுமான எலிபண்ட் பறவையின் (விலங்கியலில் ஏபையோர்னிஸ்மாக்ஸிமஸ்) முட்டையானது புவனேஸ்வரில் உள்ள வரலாற்று இயற்கை மண்டல அருங்காட்சியகத்தில் உள்ளது.
  • உலகின் ஒரே சாய்வுக் கோவிலான ஷூமா சம்பல்பூரில் அமைந்துள்ளது.
  • ஒடிசாவின் சம்பல்புரி புடவைகள் கைத்தறி புடவைகளாகும். இது இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றது. இதனை அணிந்து பிரபலப்படுத்தியவர் முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி ஆவார்.
  • தாம்ரா துறைமுகமானது குஜராத் துறைமுகத்திற்கு அடுத்த ஆழம் மிக்க துறைமுகம் ஆகும்.

  • வீலர் தீவு, சந்திப்பூரின் தெற்கில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகள் சோதிக்கப்படுகின்றன. ஆகாஷ், அக்னி, பிரித்வி ஆகிய ஏவுகணைகள் இங்கு சோதிக்கப்பட்டன. தற்போது இது அப்துல்கலாம் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.

- - - - - - - - - - - - -  -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்