(For Enlgish Verson for this Article click here)
- ஒரே பாலினத் திருமணம் என்பது ஒரே பாலின மற்றும்/அல்லது பாலின அடையாளத்தை உடைய நபர்களுக்கு இடையேயான திருமணம் ஆகும்.
- உதாரணமாக, இது இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்களுக்கு இடையிலான திருமண உறவைக் குறிக்கும்.
அரசியலமைப்பு விதிகள்
- 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் திருமணம் செய்வதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும்.
- லதா சிங் எதிர் உத்தரப் பிரதேச மாநிலம் (2006) என்ற முக்கிய வழக்கிலும் இது நிறுவப் பட்டது, அங்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தனிநபரின் விருப்பப் படி எந்த நபரையும் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை உறுதி செய்தது மற்றும் அதை அடிப்படை உரிமையாகவும் அங்கீகரித்தது.
- நவ்தேஜ் ஜோஹர் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2018) என்ற வழக்கில், 377வது சட்டப் பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை குற்றமற்றது என்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

- ஆனால் இன்னும், ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையேயான திருமணம் இந்தியாவில் சட்டத்தால் அங்கீகரிக்கப் படவில்லை, இதன் விளைவாக தத்தெடுக்கும் உரிமைகள், பரம்பரை உரிமைகள் போன்ற எந்தவொரு துணைச் சலுகைககளுக்கும் அவர்களால் உரிமை கோர இயலாது.
- நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்பில் கூட, மற்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கிய பல்வேறு வெளிநாட்டு வழக்குகளை நீதிபதிகள் நீண்ட நேரம் விவாதித்தாலும், அத்தகையத் திருமணகளுக்கு இந்தியாவில் சிவில் யூனியன் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையிலான பாலியல் நெருக்கத்தைக் குற்றமற்றதாக மாற்றுவது, அவர்களை வேற்றுப் பாலின ஜோடிகளுக்குச் சமமாக கருத இயலாது.
- இது அவர்களுக்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கை மூலம் மட்டுமே செய்ய முடியும், இல்லையெனில், அவர்கள் வரும் ஆண்டுகளில் அதே சமமற்ற மற்றும் பாரபட்சமான நடத்தைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- இந்தியாவில் ஒரே பாலின உறவுகள் இன்னும் வெட்கத்திற்குரிய மற்றும் அவமானமான செயலாக பார்க்கப் படுகிறது, மேலும் இது ஆவேசத்துடன் திருமணத்தின் மீதான அவசியமாகக் கருதப்படும் கருத்துக்களுடன் நிறைய தொடர்புடையது.
- திருமணத்துடன் (வேற்று பாலினச் சேர்க்கை) வாழும் நபர்களுக்கு பல்வேறு உரிமைகளும் உள்ளன, ஆனால் திருமணமாகாத தம்பதிகளுக்கு (நீண்ட கால உறவில் வாழ்பவர்களைத் தவிர) அத்தகைய உரிமைகள் எதுவுமில்லை.

இந்தியாவில் ஒரே பாலின உறவுகள்
- ஓரிரு ஆண்டுகள் ஒரே கூரையின் கீழ் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்தவர்கள், கணவன்-மனைவியாகக் கருதப்படும் என எஸ்.பி.எஸ். பாலசுப்ரமணியம் எதிர் சுருட்டையன் (1994) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இந்திர சர்மா எதிர் வி.கே.வி. சர்மா (2013), என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு ஆணுடன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரியாமல் அவருடன் வாழத் தொடங்கும் பெண், குடும்ப வன்முறைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் “குடும்ப உறவாக” கருதப் படும் என்று கூறியது.
- 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சின்மயி ஜெனா எதிர் ஒரிசா மாநிலம் (2020) வழக்கில், ஒரிசா உயர் நீதிமன்றம், ஒரு திருநங்கை தனது ஒரே பாலினத் துணையுடன் நேரடி உறவில் இருப்பதற்கான உரிமையை உறுதி செய்ததோடு பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் சுய நிர்ணய உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் உறுதி செய்தது.
- மதுபாலா எதிர் உத்தரப்பிரதேச மாநிலம் (2020) என்ற மற்றொரு வழக்கில், ஒரே பாலினத் தம்பதிகள் ஒன்றாக வாழ உரிமை உண்டு என்றும், அப்படிப்பட்ட தம்பதிகள் இணைந்து வாழும் ஒருமித்த உறவை சட்டவிரோதமானதாகக் கருத முடியாது என்றும் உத்தர காண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், 21வது பிரிவின் கீழ், வாழ்க்கைத் துணையின் பாலின நோக்குநிலையைத் தீர்மானிப்பதற்கும் தேர்வு செய்வதற்குமான உரிமை ஒரு அடிப்படை உரிமையாகும்.
- ஆனால், இந்தியாவில், இன்னும், LGBTQ+ சேர்ந்த தனிநபர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே, ஒரே பாலினத் தம்பதிகளுக்குத் திருமணத்திற்குப் பிறகும் வேற்றுப் பாலின ஜோடிகளுக்கு வழங்கப் படும் உரிமைகள் சமமாக இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
பரம்பரை திருமணச் சட்டங்கள்
- இந்தியாவில் உள்ள மதம் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாக, மக்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மதச் சட்டத்தைச் சுதந்திரமாக தேர்வு செய்ய இயலும்.
- இந்தச் சட்டங்களில் சில இந்து திருமணச் சட்டம் 1955, முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம் 1937, இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 போன்றவை அடங்கும்.
- இந்தச் சட்டங்கள் இன்று வரையில் ஒரே பாலின உறவுகளுக்கு இடமில்லாமல், பன்முகத் தன்மை கொண்ட முறையில் சட்டப் பூர்வமாக விளக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்து திருமணச் சட்டம், 1955
- இந்து திருமணச் சட்டம் 1955 என்ற சட்டத்தின் முன்னுரையில், இச்சட்டம் "எந்த இரண்டு இந்துக்களுக்கும்" பொருந்தும் என்றும் அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் வெளிப்படையாகக் கூறுகிறது.
- இருப்பினும், அதே சட்டத்தின் 5வது பிரிவில், அது "மணமகள்" மற்றும் "மணமகன்" போன்ற வார்த்தைகளைக் கூறுகிறது, இது சட்டத்தை உருவாக்கும் போது உறவுகளின் பன்முகத் தன்மையின் அனுமானத்தை சுட்டிக் காட்டுகிறது.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1872
- சட்டத்தில் எங்கும் திருமணத்தின் வெளிப்படையான வரையறை இல்லாத போதிலும், திருமணத்திற்கு ஒரு பாலினக் கருத்து உள்ளது என்று கிறிஸ்துவர் சட்டம் கூறுகிறது.
- இருப்பினும், எடுத்துக்காட்டாக இதன் பிரிவு 60 என்பதினைப் பார்த்தால், ஆணின் வயது 21 ஆகவும், பெண்ணின் வயது 18 ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
- சட்டத்தில் அத்தகைய விதிகளை வரைவது, இந்தச் சட்டத்திற்காக நோக்கப்பட்ட ஒரு பாலினக் கருத்தைக் குறிக்கிறது.
முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம், 1937
- முஸ்லீம் சட்டத்திலும், திருமணம் அவர்களின் தனிப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப் பட்டாலும், அது ஒரு குடிமையியல் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது.
- குடிமையியல் ஒப்பந்தத்தின் நோக்கம் இனப்பெருக்கம் என்பதால், இது மீண்டும் பாலின இயல்பைக் கருதுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டம், 1954
- அனைத்து மதத்தினருக்கும் பொதுவான மற்றும் மதச்சார்பற்றச் சட்டமான இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தைப் பார்த்தாலும், அதில் சில பாலின அடிப்படைகள் உள்ளன.
- உதாரணமாக, தடை செய்யப்பட்ட உறவுகள் என்ன என்பதை வரையறுக்கும் போது, அது ஆண் மற்றும் பெண் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
திருமணத்திற்கு ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது: ஒரு அடிப்படை உரிமை
- சக்தி வாஹினி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2018) என்ற வழக்கில், சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கவுரவக் குற்றங்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
- மற்றொரு வழக்கில் ஷபின் ஜஹான் எதிர் கே.எம். அசோகன் & ஆர்.எஸ். (2018), நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்பின் அடிப்படையில், ஒரு இந்துப் பெண் சுதந்திரமாக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கும் ஒரு முஸ்லீம் ஆணைத் திருமணம் செய்து கொள்வதற்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது.
- இந்தியக் குடிமகனின் அரசியலமைப்பு உரிமை என்பது "தனது சொந்த விதி முறைகளின் படி தனது வாழ்க்கையை வாழ முடியும்" மற்றும் "ஒரு தனிநபரின் விருப்பத்தின் வெளிப்பாட்டைக் குறைப்பது ஒரு நபரின் தனித்துவத்தை அழிக்கும்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
- சக்தி வாஹினி, ஷஃபின் ஜஹான் மற்றும் நவ்தேஜ் ஜோஹர் ஆகியோரின் வழக்குகளை ஒன்றாகப் படித்தால், இந்த வழக்குகளின் ஒருங்கிணைந்த வாசிப்பின் மூலம் இந்தியாவில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு வாதிடுவதற்கு இடம் உள்ளது என்ற முடிவுக்கு நாம் திறம்பட வரலாம்.
- நவ்தேஜ் ஜோஹர் வழக்கில், நீதிபதிகள் ஒரே பாலினத் திருமணங்கள் என்ற தலைப்பில் எந்த விவாதத்தையும் ஆராயவில்லை, ஆனால் அவர்கள் LGBTQ+ சமூகத்தைப் பாலியல் சிறுபான்மையினராக அங்கீகரித்தனர், இது எந்தவிதமான நியாயமும் இல்லாமல் விரோதப் பாகுபாட்டின் சுமைகளைத் தாங்கியுள்ளது. 1950 ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவு, சில காரணங்களுக்காக மட்டும் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது.
- நவ்தேஜ் ஜோஹர் வழக்கில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா, பாலியல் நோக்குநிலையை உள்ளடக்கிய பிரிவு 15 நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், எனவே பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையில் மட்டுமே பாகுபாடு காட்டப்படுவதால் பிரிவு 15 மீறப் படுகிறது என அர்த்தம் என்றும், இது ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறலையும் ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
ஒரே பாலின திருமணம் குறித்த சமீபத்திய வழக்கு
- இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், ஒரே பாலினத் திருமணங்களை சட்டப் பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சமீபத்தில் அனுப்பியது.
- அது இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா ஆகிய ஐந்து பேர் அடங்கிய ஒரு அமர்வு ஆகும். 2018 ஆம் ஆண்டு நவ்தேஜ் சிங் ஜோஹர் தீர்ப்பின் மூலம் வயது வந்தோரின் சம்மதத்துடன், இரண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடையேயான உறவை குற்றம் அற்றதாக மாற்றிய அரசியலமைப்பு அமர்வில் நீதிபதி சந்திரசூட் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.
- “நாங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலமைப்பின் கீழ், சமூகத்தின் பாலினக் குழுவிற்கு இருக்கும் அதே உரிமைகள் எங்களுக்கும் உள்ளன. உங்கள் இறையாட்சிக்குள் அதைக் கடைப்பிடித்து கொள்ளுங்கள். நமது சம உரிமைகளுக்கு ஒரே முட்டுக்கட்டையாக இருந்தது பிரிவு 377 தான். இப்போது இது குற்றச்செயல் அல்ல. இயற்கையின் இயற்கைக்கு மாறான பகுதி அல்லது ஒழுங்கு நம் சட்டத்திலிருந்து போய் விட்டது. எனவே நமது உரிமைகள் சமமானவை." இதுவே அந்தத் தீர்ப்பு ஆகும்.
- "எங்கள் உரிமைகள் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால் 14,15,19 மற்றும் 21 ஆகியவற்றின் கீழ் உள்ள எங்கள் உரிமைகளின் முழு அளவையும் நாங்கள் அனுபவிக்க விரும்புகிறோம்."
- “முன்பு குழந்தைத் திருமணங்கள், தற்காலிகத் திருமணங்கள், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும் மாறி விட்டது. கடந்த 100 ஆண்டுகளில் திருமணத்தின் மீதான கருத்துகளும் மாறி விட்டன.
ஒரே பாலினத் திருமணம் தொடர்பான அரசின் நிலைப்பாடு
- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரே பாலினத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயிரியல் ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமணம் இந்தியாவில் புனிதமான சங்கமம், சடங்கு மற்றும் சமஸ்காரம் என்று கூறியுள்ளது.
- நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா 2018 என்ற வழக்கின் தீர்ப்பில், ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான உடலுறவை மட்டுமே நீதிமன்றம் குற்றமற்றதாக்கியுள்ளது, இந்த "நடத்தையை" இன்னும் சட்டப்பூர்வமாக்கவில்லை என்றும் அரசாங்கம் வாதிட்டது.

- நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையைக் குற்றமற்றதாக மாற்றும் அதே வேளையில், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழும் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாக ஒரே பாலினத் திருமணத்தை ஏற்கவில்லை.
- திருமணம் என்பது பழக்கவழக்கங்கள், சடங்குகள், நடைமுறைகள், கலாச்சார நெறி முறைகள் மற்றும் சமூக விழுமியங்களைப் பொறுத்தது என்று அரசாங்கம் வாதிடுகிறது.
- ஒரே பாலினத் திருமணத்தை ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட முடியாது.
- ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் நாட்டில் திருமணச் சட்டங்களை நாடாளுமன்றம் வடிவமைத்து வடிவமைத்துள்ளது.
- ஏற்கனவே உள்ள தனிப்பட்ட மற்றும் குறியிடப்பட்ட சட்ட விதிகளை மீறுவது போன்றது தான் ஒரே பாலின நபர்களின் திருமணத்தை பதிவு செய்வது.
- தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடியாதத் தம்பதிகளுக்கு திருமணத்தின் குடிமையியல் வடிவத்தை 1954 ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டம் வழங்குகிறது.
- இந்த விதிமுறையிலிருந்து எந்த ஒரு விலகலையும் சட்டமன்றத்தின் மூலம் மட்டுமே மாற்றம் செய்ய முடியும், உச்ச நீதிமன்றத்தால் முடியாது என்று அரசாங்கம் வாதிட்டது.
ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவான வாதங்கள்
- சம உரிமைகள் மற்றும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு: அனைத்துத் தனிநபர்களும், அவர்களின் பாலியல் நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல், திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை உருவாக்கி கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.
- வேற்றுப் பாலின ஜோடிகளுக்கு இருக்கும் அதே சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள், ஒரே பாலின ஜோடிகளுக்கு வழங்க வேண்டும்.
- ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்காதது LBTQIA+ தம்பதிகளின் கண்ணியம் மற்றும் சுய நிறைவில் தாக்கிய பாகுபாடு ஆகும்.
- குடும்பங்கள் மற்றும் சமூகங்களை வலுப்படுத்துதல்: திருமணம் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. ஒரே பாலின ஜோடிகளைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களையும் சமூகங்களையும் பலப்படுத்துகிறது.
- உலகளாவிய ஏற்றுக் கொள்ளல்: உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது, மேலும் ஜனநாயக சமூகத்தில் தனிநபர்களுக்கு இந்த உரிமையை மறுப்பது உலகளாவியக் கொள்கைகளுக்கு எதிரானது.
- 133 நாடுகளில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது, ஆனால் அவற்றில் 32 நாடுகளில் மட்டுமே ஒரே பாலினத் திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது.

- சுயநிர்ணய உரிமை மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்தாலும், ஒரே பாலினத் திருமணங்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை இன்னும் கட்டுப்படுத்தப் பட்டதாகவே உள்ளது.
- சட்டங்கள் ஒரு வெளிப்படையான வேற்றுப் பாலின உறவுகளுக்கு அடிப்படையாகவே உள்ளன, அல்லது பொதுவான விதிகள் பன்முகத்தன்மையைப் பூர்த்தி செய்ய விளக்கப் பட்டுள்ளன.
- LGBTQ+ சமூகம் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் அவர்கள் விரும்பும் ஒரு வாழ்க்கை துணையிடன் வாழ்வதற்கும் இடமளிப்பது தொடர்பாக நீதித்துறையின் அணுகுமுறையில் ஒப்பீட்டளவில் மாற்றம் காணப்படுகிறது. இருப்பினும் வேற்றுப் பாலினத் தம்பதிகளுக்கு வழங்கப்படும் சம உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்.
- - - - - - - - - - - - - -