TNPSC Thervupettagam

ஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்

July 28 , 2021 1100 days 471 0
  • கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில், தாய்நாட்டின் சார்பாக ஜிம்னாசிய வீரர் டிமிதிரியாஸ் லேயாந்த்ரஸ் பங்கேற்றபோது, அவருடைய வயது 10 ஆண்டு 218 நாட்கள்.
  • இந்த இளம் வயதுச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அவர் இடம்பெற்ற ‘பேரலல் பார்ஸ்’ அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
  • தற்போதைய ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் வயதுக்காரர் யார் தெரியுமா?
  • சமீப காலத்தில் போரால் அதிகம் பேசப்பட்ட சிரியாவைச் சேர்ந்த ஹெந்த் ஸாஸா (12 ஆண்டு 204 நாட்கள்) என்கிற டேபிள் டென்னிஸ் வீராங்கனை.
  • ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் பங்கேற்றவர்களிலேயே இளம் வயதுக்காரர் ஸாஸா. அத்துடன், ஒலிம்பிக்கில் 1992-க்குப் பிறகு பங்கேற்பவர்களிலேயே மிகவும் இளையவர்.
  • தற்போதைய ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்றவர் மோமீஜி நிஷியா. பெண்களுக்கான ‘தெரு ஸ்கேட்போர்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற அவருடைய வயது 13.
  • ஜப்பான் நாட்டில் மிகவும் இளம் வயதில் பதக்கம் வென்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
  • இப்படி இவர்கள் எல்லாம் இளம் வயதுச் சாதனைக்காரர்களாக இருக்கிறார்கள் என்றால், முதியவர்களும் ஒலிம்பிக்கில் சாதித்துள்ளார்கள்.
  • 1920 ஒலிம்பிக்கில் 100 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் சுவீடனின் ஆஸ்கர் ஸ்வான் பதக்கம் வென்றபோது, அவருடைய வயது 72 ஆண்டு 279 நாட்கள்.
  • இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அந்த வயதிலும் வெள்ளி வெல்லும் அளவுக்குத் துல்லியமாகக் குறிபார்க்கும் திறனைக் கொண்டிருந்தார் தாத்தா.
  • தற்போதைய ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் மேரி ஹன்னா, 66 வயதில் குதிரையைச் செலுத்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். அவர் பங்கேற்ற டிரெஸ்ஸேஜ் எனப்படும் போட்டியில் பாலின வேறுபாடு கிடையாது.
  • இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களிலேயே வயதான மேரி, உடல் உறுதியுடன் இருக்கும் பட்சத்தில் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்