TNPSC Thervupettagam

ஒலிம்பிக் திருவிழா

July 26 , 2021 1102 days 452 0
  • 1996 அட்லாண்டா ஒலிம்பிக்குக்கு முன்னர் வரை இந்தியத் தனிநபர்கள் வென்ற பதக்கங்கள் வெறும் 3 (1900-ல் நார்மன் பிரிட்சர்ட் இரண்டு வெள்ளி, 1952-ல் கஷாபா ஜாதவ் வெண்கலம்).
  • இடைப்பட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு, அட்லாண்டா டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்று பதக்க தாகத்தைத் தீர்த்துவைத்தார் லியாண்டர் பயஸ்.
  • 2000 சிட்னியில் ஒலிம்பிக் நிறைவடைய இருந்த தருணத்தில் பளுதூக்குதலில் வெண்கலம் வென்று, தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஆனார் கர்ணம் மல்லேஸ்வரி.
  • இப்போது பளுதூக்குதலில் வெள்ளி வென்று இந்தியாவின் 2021 ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு.
  • அதிலும் ஒலிம்பிக் வெள்ளி வென்றுள்ள இரண்டாவது பெண் என்கிற பெருமையையும் அவர் சேர்த்துப் பெறுகிறார்.
  • கடந்த ஒலிம்பிக் வரை 17 தனிநபர் பதக்கங்களையே இந்தியா வென்றுள்ளது. அவற்றில் 5 பதக்கங்கள் பெண்கள் வென்றவை.
  • கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து (பேட்மின்டன்), வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) இருவருமே பெண்கள்.
  • 2012 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஆறு பதக்கங்களில் சானியா நேவாலும் (பேட்மின்டன்), மேரி கோமும் (குத்துச்சண்டை) வெண்கலங்களை வென்றிருந்தார்கள்.
  • சமீபத்திய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இந்தியாவைத் தூக்கிநிறுத்துபவர்கள் பெண்களாக இருப்பதைக் கவனிக்கலாம். பொதுவாகப் பெண்கள், உடல்ரீதியில் வலுவற்றவர்கள் என்கிற கற்பிதம் இருக்கிறது.
  • ஆனால், இந்தியப் பெண்கள் இதுவரை வென்றுள்ள 6 ஒலிம்பிக் பதக்கங்களில் நான்கு பதக்கங்கள் பெரும் உடல்வலு தேவைப்படும் பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் பெற்றவை என்பது, அந்தக் கற்பிதத்துக்கு விழுந்த பெரிய அடி.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்