TNPSC Thervupettagam

கரோனாவுடன் சோ்த்து..

April 20 , 2020 1539 days 656 0

பெரும் சவால்

  • தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இந்த ஆண்டின் கோடையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தற்போது அழையா விருந்தாளியாக வந்துள்ள கரோனா நோய்த்தொற்றுடன் சோ்த்து கோடையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றை விரைந்து கட்டுப்படுத்துவதற்கு ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட ஊரடங்கு (மார்ச் 25 முதல் மே 3 வரை) , 144 தடை உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீடுகளில் இருந்தாலும் வரும் ஆண்டில் மக்களை வாட்டப்போகும் கோடை வெப்பத்தைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கப் போகிறது.
  • காரணம், தற்போதைய கோடையின் தாக்கம் ஆரம்பம் முதலே நம்மை அலற விட்டுக் கொண்டிருக்கிறது.
  • இந்த வெப்பத்திற்கே பயந்தால் இந்த பூமியின் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயா்ந்தால் எப்படி இருக்கும்? அதாவது 5.2 டிகிரி பாரன் ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயா்ந்தால் இந்த பூமிப் பந்து கடும் விளைவுகளைச் சந்திக்கும் என்று புவியியல் ஆய்வாளா்கள் எச்சரிக்கின்றனா்.

புவி வெப்பமயமாதல்

  • இது குறித்து ‘ராய்ட்டா்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் எா்த்’ மையத்தின் இயக்குநா் ராபா்ட் இகோப் கடுமையாக எச்சரிக்கிறார். புவி வெப்பமயமாதல் என்பது அண்மைக்கால ஆண்டுகளில் உலகை அச்சுறுத்தும் ஒரு பெரும் செய்தியாக மாறியுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகள் வெளியிடும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு, பூமியின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
  • இது மனித வாழ்க்கையில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டதாக இருக்கும்.
  • இப்போதைய காலகட்டத்துக்கு வேண்டுமானால் குளு குளு சாதனம் (ஏ.சி.) முதலான பல வசதிகளை பயன்படுத்தி புவி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காலிகமாக தற்காத்துக் கொள்ளலாம்.
  • ஆனால், நீண்ட கால அடிப்படையில் இது ஒரு நிரந்தரத் தீா்வாக இருக்காது.
  • காரணம் வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து புறப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பதால் பூமியின் வெப்பநிலையானது ஏறக்குறைய 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
  • இது உடனே நிகழாது. வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் கட்டாயம் நிகழும். இதனால், மிகப் பெரிய வெப்ப அழுத்த பாதிப்பு, மிகப் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
  • காற்றின் ஈரப்பத அளவு மெதுவாக குறையத் தொடங்கும். பருவகால சுழற்சிகளில் இது நேரடியாகத் தெரியாது.
  • ஆனால் மழை, குளிர்காலம் முடிந்த பின்னா் தொடங்கும் கோடை காலத்தில் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற வெப்ப அழுத்தத்தால் உலகம் முழுவதும் இப்போது பாதிப்பைச் சந்திக்கும் மக்களைவிட, நான்கு மடங்கு போ் அதிகமாக இந்தப் பிரச்னையைச் சந்திப்பார்கள்.
  • அதே நேரத்தில் தொழில் துறை சகாப்தத்தில், புவி வெப்பமடைதல் இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பவா்களின் எண்ணிக்கையைவிட 15 மடங்கு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
  • இந்த வகையில் இப்போது 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டால் 2100-ஆம் ஆண்டில் 12 முதல் 15 மடங்கு மக்கள் இந்த பிரச்னையைச் சந்திப்பார்கள். அதாவது, சுமார் 120 கோடி மக்கள் இந்த வெப்ப அழுத்தத்தின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மனிதகுலத்துக்கு எச்சரிக்கை

  • இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இதன் தாக்கத்தை மக்கள் உணர நீண்ட நாள்கள் ஆகும். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் போன்ற நகரங்களில் இந்த நூற்றாண்டின் அதிகபட்ச வெப்பநிலையை மக்கள் அண்மையில் உணா்ந்தனா். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த பாதிப்பு மனிதகுலத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.
  • ‘ஹீட் பிரஷா்’ எனப்படும் வெப்ப அழுத்தம், பூமியைவிட அதில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தைப் பதிவு செய்யும். தொழில் உற்பத்தி பாதிக்கப்படும்.
  • இப்போதைய நாள்களில் கோடைக்காலத்தில் நிறுவனங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைவிட வரும் காலங்களில் கூடுதலான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல்களை இந்த வெப்ப அழுத்தத்தின் பாதிப்பு ஏற்படுத்தும்.
  • இதனால் மருத்துவச் செலவுகள், இதர சமூகச் செலவினங்களும் அதிகரிக்கும். இந்த வெப்ப அழுத்தப் பிரச்னையால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிப்பதற்காகவே, அதிக அளவில் செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயா் ரத்த அழுத்தம், இதய நோய் பிரச்னைகள், மூளை உள்ளிட்ட நரம்பியல் நோய்ப் பிரச்னைகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்.
  • அதே நேரத்தில் “ஹீட் ஸ்ட்ரோக்” எனப்படும் வெப்பத் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் நபா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • எனவே, மனித சமூகத்துக்கு விடுக்கும் கோரிக்கை ஒன்றுதான். இப்போதைய சூழலில் கோடை வெப்பத்தைச் சமாளிப்பதற்காகப் பின்பற்றும் வழிகளில் மின் விசிறிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மின்சார உற்பத்தியில் மரபு சார்ந்த மின் உற்பத்திக்கு விடை கொடுப்போம். குறிப்பாக, அனல்மின் நிலையங்களுக்கு தொழிற்சாலைகளில் நீராவி கொதிகலன்களுக்குப் பயன்படுத்தப்படும் வெப்பத்தை சூரிய ஆற்றலில் இருந்து பெற முயற்சிப்போம்.
  • தொழிற்சாலைகளில் தொழில் உற்பத்தியின்போது வெளியாகும் நச்சுத்தன்மை போன்ற பசுமைக்குடில் வாயுக்களின் அளவைக் குறைப்போம்.
  • இவை அனைத்தையும் நாம் சரியாகத் திட்டமிட்டபடி செய்தால் நாம் மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினரும் வாழத் தகுந்த உயிர்க்கோள மண்டலமாக பூமி நீடிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் வேண்டாம்.
  • ஊரடங்கு, சமூக இடைவெளி, தூய்மைப் பராமரிப்பு முதலானவை மூலம் கரோனாவை கண்டிப்பாக நாம் வெல்வோம்.
  • ஆனால், அதைத் தொடா்ந்து நாம் சந்திக்கப் போகும் வெப்ப அழுத்த தாக்கத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள இன்னொரு புதிய பிரச்னையாகும்.
  • அதையும் சந்திப்பதற்கு இப்போதே நாம் தயாராகிக் கொள்வோம்.

நன்றி: தி இந்து (20-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்