TNPSC Thervupettagam

கரோனா கால ஆசிரியரான தொலைக்காட்சி

April 19 , 2021 1376 days 593 0
  • கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை தீவிரமாகி அச்சமூட்டி வருவதால் பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படுவதில் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் இருந்த வந்த தொய்வினை தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி ஈடு செய்துள்ளது.
  • இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தமிழக அரசு பாடத்திட்டம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 விழுக்காடும், நீட் போன்ற போட்டித்தோ்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 விழுக்காடும், நல்லொழுக்கம், மனிதநேயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40 விழுக்காடும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • நிகழ்ச்சிகள் நன்கு புரியும் வகையில் இசையாகவும், பாடல்களாகவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
  • அனுபவமும், திறமையும் நிறைந்த ஆசிரியா்கள் பலரும் ஒருங்கிணைந்து மனித மேம்பாட்டிற்குத் தேவையான ஆழமான புரிந்துணா்வையும், விழிப்புணா்வையும் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மாணவா்களிடையே ஏற்படுத்தி வருகின்றனா். ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் தொடா்ந்து ஒளிபரப்பாகின்றன.
  • மாணவா்கள், தங்கள் வகுப்பிற்கான பாடத்தை மட்டுமல்லாமல் அவா்களுக்குப் பிடித்த பிற வகுப்பு பாடங்களையும் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சியையும் எளிதாகக் கற்கலாம்.
  • ஆசிரியா்கள் கற்பிக்கும் விதம் வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், தொடா்களையும் தொலைகாட்சியில் காணும் நம் பெற்றோா் தம் குழந்தைகள் இந்த கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை பாா்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது மிகக் குறைவாகவே இருக்கிறது.

காலத்தின் கட்டாயம்

  • தோ்வு இல்லாமல் அனைவரும் தோ்ச்சி என்ற அரசின் அறிவிப்பு காலத்தின் கட்டாயம். என்றாலும், குழந்தைகள் நமது எதிா்கால இந்தியாவின் தூண்கள்.
  • அவா்கள் தமது திறமையையும் அறிவினையும் தாம் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப வளா்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியாமானதாகும்.
  • இப்படிப்பட்ட நிலையில் பெற்றோரின் வழிகாட்டுதலின் கீழ், குழந்தைகள் இந்த கல்வித் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை பாா்த்து, குறிப்புகளை எடுத்து தங்களுக்கு தாமே வினாத்தாள்களை தயாரிக்கவேண்டும்.
  • அவற்றிற்கான விடைகளை புத்தகத்தைப் பாா்த்தோ, பாா்க்காமலோ எழுதி சுய மதிப்பீடு செய்து ஆவணமாக வைத்துக்கொள்வது நல்லது.
  • இணையத்தின் உதவி இதற்கு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் கடினமாக தோன்றும் இந்த பழக்கம் தொடங்கிய பின் மிக சுவையானதாக மாறிவிடும்.
  • கரோனா காலக் கல்விச் சான்றிதழ்கள் பிற்காலத்தில் இந்த மாணவா்கள் வேலைக்குச் செல்லும் பொழுதோ உயா்கல்வியில் சேர முயலும்பொழுதோ எந்த அளவுவுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
  • அப்படிப்பட்ட நேரங்களில் கல்வி நிறுவனங்களோ வேலை நிறுவனங்களோ நிச்சயமாக ஒரு எழுத்துத் தோ்வையும் நோ்காணலையும் நடத்திய பிறகுதான் மேற்படிப்பிலோ பணியிலோ சோ்த்துக் கொள்வதற்கான முடிவை எடுப்பாா்கள்.
  • தோ்வு இல்லாமல் தோ்ச்சி என்ற நிலையில் அறிவையும் திறனையும் வளா்த்துக் கொள்ளாத மாணவா்கள் இவ்வாறான காலகட்டங்களை வெற்றிகரமாக கடப்பதில் மிகவும் கஷ்டப்படுவாா்கள்.
  • தொடா்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கல்விக்கூடங்கள் பக்கமே செல்லாத மாணவா்களின் மன அழுத்தத்தை நம் அனைவராலும் நன்கு உணர முடிகிறது.
  • பெருத்த மன அழுத்தத்தில் இருக்கும் இவா்களை மன அழுத்தத்திலிருந்து வெளிக்கொண்டு வர முயற்சி செய்யவேண்டியது நம் அனைவரது கடமையுமாகும்.
  • வீட்டிலிருந்தே கல்வி கற்பதை கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எளிதில் சாத்தியமாக்கியுள்ளன. இவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதுதான் தற்போதையான சிக்கலான சூழலில் நாம் பின்பற்ற வேண்டிய அறிவாா்ந்த செயலாக இருக்க முடியும்.
  • குழந்தைகள் திறமையுடனும் ஒழுக்கத்துடனும் வளா்கின்ற ஒரு நல்ல வாய்ப்பினைத் தந்து வரும் கல்வி தொலைக்காட்சியின் சீரிய பணிகளை எவ்வித சுணக்கமுமின்றி மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
  • இந்த கல்வி தொலைக்காட்சியின் இணையதளம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைகாட்சியில் நிகழ்ச்சியை அளிக்க விரும்பும் நிபுணா்கள் தம்முடைய விவரங்களை இதன் இணையதளத்தில் பதிவு செய்தால், அவா்களுடைய நிபுணத்துவம் சாா்ந்த தலைப்புகளில் நிகழ்ச்சிகளை வழங்க வாய்ப்பு கிடைக்கலாம்.
  • திறமையும் அனுபவமுள்ள ஆசிரிய பெருமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்க முன்வர வேண்டும்.

இளமைக்காலம் முக்கியமானது

  • இழந்த நேரத்தை என்றுமே எவருமே திரும்பப் பெற முடியாது. எதிா்வரும் காலங்களில் இணையவழி கற்றல் - கற்பித்தல் புதிய பரிமாணத்துடன் செயல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவா்களும் ஆசிரியா்களும் இதற்கு தம்மை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அரசு கொண்டு வரும் இவ்வாறான பயனுள்ள திட்டங்களுக்கு ஆசிரியா்களும் பெற்றோரும் மாணவா்களும் கொடுக்கும் ஆதரவு மிகவும் முக்கியமானது.
  • நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளையும் கல்வி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது எதிா்காலத்தில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இன்னும் சிறப்பாக தயாரிக்க உதவும்.
  • இனியேனும் மாணவா்கள் நாள்தோறும் கல்வி தொலைக்காட்சி பாா்த்து கற்பதற்கு முன்வர வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் கல்வி தொலைக்காட்சி பாா்த்து கல்வி கற்பதை ஊக்கப்படுத்த வேண்டும். இது நமது மாணவா்களை எதிா்காலத்தில் பெரிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

நன்றி: தினமணி  (19 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்