TNPSC Thervupettagam

கரோனா பாதிப்புகளை அதிகப்படுத்திவிடக் கூடாது நிதிப் பற்றாக்குறை

June 26 , 2020 1490 days 640 0
  • இந்தியாவில் கரோனா பரவலுக்குப் பிறகு, பொருளாதாரம் பெரும் நிலைகுலைவுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) பெரும் சீர்திருத்தம் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆனால், அடுத்தடுத்து நடந்த ஜிஎஸ்டி ஆணையத்தின் இரு கூட்டங்களின் போக்குகளையும் கவனிக்கும்போது, மாநிலங்கள் சார்ந்த நிதிப் பிரச்சினையின் முக்கியத்துவத்தையே ஒன்றிய அரசு உள்வாங்கவில்லையோ என்றே தோன்றுகிறது.
  • சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை எடுத்துக்கொண்டால், வரவேற்புக்குரிய இரு விஷயங்களை அது செய்தது. வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்குத் தாமதக் கட்டணத்தையும் வட்டியையும் தளர்த்த அது முடிவெடுத்தது.
  • அதேபோல, மறைமுக வரியமைப்பின் கீழ், வரி செலுத்த வேண்டியிராத தொழில் துறையினருக்குத் தாமதக் கட்டணத்தையும் முழுமையாக விலக்கியது.
  • எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகவே ஊரடங்குக் காலம் நீட்டிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய தளர்வை அறிவித்திருப்பது மிகவும் அத்தியாவசியமான நடவடிக்கை ஆகும்.
  • ஆனால், மாநிலங்கள் பெரிதும் எதிர்பார்த்த விஷயங்கள் நடந்தேறவில்லை. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன; ஜிஎஸ்டி ஆணையக் கூட்டங்களும் அதன் ஒரு பகுதியாவது நல்லதல்ல.
  • இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் மாநில அரசுகள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவது ஒரு விஷயத்தைத்தான் நிதி.
  • நெருக்கடிக்கால நிதியுதவியை நீட்டிக்குமாறும், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜிஎஸ்டி என்ற புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரியிழப்புக்கு ஈடாக மத்திய அரசு அளிக்க ஒத்துக்கொண்டதன்படி இழப்பீட்டு நிலுவைகளை உடனுக்குடன் அளிக்குமாறும் மாநிலங்கள் கோருகின்றன.
  • அதேபோல, மாநிலங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டுத் தங்களுடைய நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொள்ளவும் மத்திய அரசு இதுவரையில் அனுமதிக்கவில்லை.
  • ஆக, நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நெருக்கடியையும் சேர்த்து எதிர்கொள்கின்றன மாநில அரசுகள்.
  • பிரதமருடனான சமீபத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில்கூட தமிழகத்தின் நிதித் தேவையை வலியுறுத்திப் பேசியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
  • தமிழகத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.9,000 கோடி ஒதுக்க வேண்டும்என்றவர், ‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்என்று கோரியிருக்கிறார்.
  • எப்போதும் மாநிலங்கள் நிதிக்காகப் பேசும் நிலை நீடிப்பது துயரகரமானது. மாநில அரசுகளின் நிலை உணர்ந்து, இந்திய அரசு அவை கோரும் நிதியை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (26-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்