கிருஷ்ணா ஆறு
- பிறப்பிடம் : மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள ஜோர் கிராமம்.
- குறிப்பு : இந்த இடம் மகாபலேஸ்வருக்கு வடக்கே உள்ள மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
.
உயரம் |
சுமார் 1300 மீட்டர்கள் |
நீளம் |
சுமார் 1300 கிலோமீட்டர்கள் |
நதி பாயும் மாநிலங்கள் |
- ஆந்திரப்பிரதேசம்
- தெலுங்கானா
- மஹாராஷ்டிரா
- கர்நாடகா
|
கலக்கும் இடம் |
வங்காள விரிகுடா (ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஹம்சலாதேவி எனுமிடத்திற்கருகே கடலில் கலக்கிறது) |
எல்லைகள்
கிழக்கு |
கிழக்குத் தொடர்ச்சிமலைகள் |
மேற்கு |
மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
தெற்கு |
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
வடக்கு |
பாலாகாட் வரம்பு (Balaghat Range) |
கிளை ஆறுகள்
இடது |
வலது |
பீமா |
கட்டப் பிரபா |
முசி |
மலப் பிரபா |
முன்னேரு |
துங்கபத்ரா |
பாலேரு |
கொய்னா |
பீமா
- பீமஷங்கர் குன்றுகளிலிருந்து பிறக்கிறது. இது பீமஷங்கரா வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக பாய்கிறது .
- பீமா கிருஷ்ணாவில் நுழைவதற்கு முன் தென் கிழக்காக 861 கி.மீ. தூரம் மகாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் தெலுங்கானா வழியாக பாய்கிறது.
முசி
- கிருஷ்ணாவின் கிளை நதியான முசி தக்காணத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாய்கிறது. ஹைதராபாத் முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
துங்கபத்ரா
- கங்கமுலாவில் பிறக்கும் துங்கா மற்றும் பத்ரா ஆகியவை இணைந்து துங்கபத்ராவை உருவாக்குகின்றன. கூட்லி எனுமிடத்தில் இவ்விரு ஆறுகள் இணைந்து துங்கபத்ரா உருவாகிறது.
- துங்கபத்ரா அணை கட்டும் திட்டமே, கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களுக்கிடையேயான (கர்நாடகா – ஆந்திர பிரதேசம்) திட்டமாகும்.
- கர்நாடக-ஆந்திரா எல்லையை அடைவதற்கு முன் தனது பயணத்தின் பெரும்பகுதியை இது கர்நாடகாவில் கழிக்கிறது. இறுதியில் ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது.
கொய்னா
- மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள பிரபலமான மலை வாழிடம் (Famous Hill station)
- கொய்னா அணை கொய்னா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. கொய்னா நீர் மின் திட்டத்தின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் இது மகாராஷ்டிராவின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.
- மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள கொய்னா, நீர்த்தேக்கத்தினால் தூண்டப்பட்ட அதிர்வுப் பகுதியாகவும் கருதப்படுகிறது.
- கொய்னா அணை கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1967ல் 5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அணையினால் தூண்டப்பட்ட நிலநடுக்க நிகழ்வு ஆனது நீர்த்தேக்கத்தினால் தூண்டப்பட்ட நிலநடுக்கம் எனவும் அறியப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வைப் பற்றிய அதிகபட்ச தகவல்கள் எதுவும் அறியப்படவில்லை.
முக்கியத் தரவுகள்
பாசன திட்டங்கள் |
- பிரகாசம் தடுப்பணை திட்டம்
- பட்டிசீமா திட்டம்
|
மிகப்பெரிய கிளைநதி
|
- துங்கபத்ரா ஆறு
- சுமார் 531 Km தூரம் பாய்கிறது
|
மிக நீளமான கிளை நதி
|
- பீமா ஆறு
- சுமார் 861 Km தூரம் பாய்கிறது
|
கிருஷ்ணாவிலுள்ள அணைகள்
|
- நாகார்ஜுன சாகர் அணை
- ஸ்ரீசைலம் அணை
- அல்மட்டி அணை
- துங்கபத்திரா அணை
- தோம் அணை
|
கிருஷ்ணாவிலுள்ள நீரூற்றுகள்
|
- சிரிமனே நீரூற்று
- பர்கானா நீரூற்று
- பர்கானா நீரூற்று - அகும்பே குன்றுகளில் அமைந்துள்ளது.
- கோகக் நீரூற்று – கட்டப்பிரபா ஆற்றில் அமைந்துள்ளது.
|
விழாக்கள்
கிருஷ்ணாவிலுள்ள நகரங்கள்
- விஜயவாடா (கிருஷ்ணாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் )
- அமராவதி
- ஸ்ரீசைலம்
- ஹைதராபாத் – முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
- ஹம்பி மற்றும் கர்நூல் - துங்கபத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளன
முக்கியத்துவம்
- கிழக்கே பாயும் ஆறு
- நீரோட்டம் மற்றும் ஆற்றுப்படுகையின் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கங்கை, கோதாவரி, பிரம்மபுத்திரா ஆகியவற்றிற்குப் பிறகு கிருஷ்ணா நான்காவது இடத்தில் உள்ளது .
- சுமார் 1300 கி.மீ தூரம் பாயும் கிருஷ்ணாவிற்கு கிருஷ்ணவேணி எனும் வேறு பெயரும் உண்டு.
- கோதாவரிக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் கிழக்கே பாயும் நதிகளில் மிகப்பெரியது கிருஷ்ணா ஆகும்.
புலிகள் காப்பகங்கள்
- நாகார்ஜுனா சாகர் - ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்.
தேசிய பூங்காக்கள்
- சந்தோலி தேசிய பூங்கா
- குதிரமூக் தேசிய பூங்கா
- காசு பிரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா
- மகாவீர் ஹரினா வனஸ்தலி தேசிய பூங்கா
- முருகவாணி தேசிய பூங்கா
வனவிலங்கு சரணாலயங்கள்
- ரொள்ளபாடு வனவிலங்கு சரணாலயம்
- பத்ரா வனவிலங்கு சரணாலயம்
- கொய்னா வனவிலங்கு சரணாலயம்
- ராதாநகரி வனவிலங்கு சரணாலயம்
- பாஹல் வனவிலங்கு சரணாலயம்
- ஷெட்டிஹல்லி வனவிலங்கு சரணாலயம்
பறவைகள் சரணாலயங்கள்
- கட்டப் பிரபா பறவைகள் சரணாலயம்
- குதாவி பறவைகள் சரணாலயம்
- பெரிய இந்திய பறவைகள் (Great Indian Bustard) சரணாலயம்
- - - - - - - - - - - - - - -