TNPSC Thervupettagam

குடியுரிமை (சட்டத் திருத்த) மசோதா, 2016

October 14 , 2019 1916 days 5561 0

இதுவரை

  • குடியுரிமை (சட்டத் திருத்த) மசோதா, 2016 ஆனது இந்த ஆண்டு ஜனவரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. ஆனால் இந்த மசோதாவானது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப் படாததால் தோல்வியடைந்தது.

  • 1955 ஆம் ஆண்டின் அசல் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்த மசோதா முன்மொழிந்தது.
  • மீண்டும் ஒரு முறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு திரும்பிய பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்த மசோதாவை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறது.
குடியுரிமை அடைதல்
  • பிறப்பால் குடியுரிமை
  • மரபுவழிக் குடியுரிமை
  • பதிவு செய்தல் மூலம் குடியுரிமை
    • இந்தியாவில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வம்சாவளித் தோன்றல்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் ஏழு ஆண்டுகள் வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
    • ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினரும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
    • இந்தியாவில் குடியிருந்து வரும் இந்திய வம்சாவளியினர், இந்தியக் குடிமக்களை மணந்து கொள்வதன் மூலம்  தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தங்களது விண்ணப்பத்தைப் அவர்கள் பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் ஏழு ஆண்டுகள் வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
    • இந்தியக் குடிமக்களின் தகுதி வயதினை அடையாத (minor) குழந்தைகள் தங்களைப்  பதிவு செய்தல் மூலம் இந்தியக் குடியுரிமையைப்  பெறலாம்.
    • இந்தியாவின் குடிமக்களாகப் பதிவு செய்யப்பட்ட பெற்றோர்களைக் கொண்ட, முழு வயது மற்றும் தகுதி கொண்ட ஒரு நபராக இருப்பவரும் பதிவு செய்தல் மூலம் இந்தியக் குடியுரிமையைப்  பெறலாம்.
  • இயற்கையாக்கல் மூலம் குடியுரிமை
    • இயற்கையாக்கத்தின் மூலம் இந்தியாவின் குடியுரிமையை இந்தியாவில் சாதாரணமாக 12 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு வெளிநாட்டவர் (விண்ணப்பிக்கும் தேதிக்கு முந்தைய 12 மாத காலக் கட்டத்திலும், அவ்வாறான 12 மாதங்களுக்கு முன்பாக மொத்தமாக  வசித்து வரும் 14 ஆண்டுகளில் 11 ஆண்டு காலக் கட்டத்திலும் விண்ணப்பித்துப்  பெறலாம்.  
  • நிலப்பகுதியின் இணைப்பு வழியாக குடியுரிமை பெறுதல்
மசோதாவின் அம்சங்கள்
  • செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத அல்லது காலாவதியான பயண ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் எல்லை தாண்டி வந்து நுழைந்த “சிறுபான்மைச் சமூகங்களை” சேர்ந்த மக்கள் (அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்றோர்) சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அந்த மசோதா கட்டளையிட்டு இருந்தது.
  • 1920 ஆம் ஆண்டின் கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம் மற்றும் 1946 ஆம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் நாடு கடத்தப்படுவதை அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள்.
  • மக்களவையில் அம்மசோதாவை அறிமுகப்படுத்திய அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தப் புலம்பெயர்ந்தோர் "பாகுபாடு மற்றும் மத துன்புறுத்தல்களை" எதிர்கொண்டதாகக் கூறினார்.
  • மேலும் இந்தச் சட்டமானது "நாட்டின் மேற்கு எல்லைகள் வழியாக குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வந்துள்ள துன்புறுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கும் நிவாரணம் வழங்கும்" என்று அவர் கூறினார்.
  • 2016 ஆம் ஆண்டு ஜூலை 15, அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவானது, மேற்சொன்ன ஆறு "சிறுபான்மைச் சமூகங்களை" சேர்ந்தவர்கள் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளனர் என்றும், ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர்களால் தயாரிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கினார்.
  • எனவே, அவர்கள் 12 வருட கால வாழ்விடத்தைத் தகுதியாகப் பரிந்துரைக்கும் இயற்கையாக்கல் மூலமான குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • மேற்சொன்ன அந்த மூன்று வெளிநாடுகளின் ஆறு சிறுபான்மைச்  சமூகங்களிலிருந்தும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க வாய்ப்புள்ள போதிலும், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடிய பல வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்" போன்ற சில நீண்டகால உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப் படுகிறது என்று இந்த மசோதா கூறுகின்றது.
  • இந்த திருத்தம் இயற்கையாக்கல் மூலம் குடியுரிமை பெறுவதற்காக வசிப்பிடக் காலத்தை 12 ஆண்டுகளிலிருந்து ஏழு ஆண்டுகளாகக்  குறைத்தது.
  • குடியுரிமைச் சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டங்களை மீறும் பட்சத்தில் வெளிநாட்டு இந்தியக் குடிமகனாக பதிவு செய்வதை ரத்து செய்ய இந்த மசோதா அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
மசோதாவில் உள்ள குறைபாடுகள்
  • இந்த மசோதாவானது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
  • மதத்தின் அடிப்படையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேறுபடுத்துவதன் மூலம், அரசியலமைப்பின் 14வது சரத்தின் கீழ் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவதாக இந்த மசோதா அறியப் படுகின்றது.
  • சரத்து 14 இன் பாதுகாப்பு குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் சமமாகப் பொருந்தும்.
  • இரண்டாவதாக, இந்த மசோதாவானது அனைத்து சட்டவிரோதக் குடியேறிகளையும் மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தின் (மார்ச் 24, 1971) அடிப்படையில் வரையறுக்கக் கூடிய அசாம் தேசியக் குடிமக்களின் பதிவேட்டில் (National Register of Citizens - NRC) சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • இந்தக் குடியுரிமை மசோதாவானது  1985 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட அசாம் ஒப்பந்தத்தைத் தகர்த்தெறியும் நடவடிக்கையாகவும் கருதப் படுகிறது.
  • இந்த ஒப்பந்தம் மார்ச் 24, 1971க்குப் பிறகு தனது வம்சாவளியை நிரூபிக்க முடியாத எந்தவொரு நபரையும் அன்னியராக  கருதுகிறது.
  • இந்த ஒப்பந்தம் மதத்தின் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்துவதில்லை.
  • இந்த மசோதாவைப் புதுப்பிப்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குரல் கொடுத்து வருகிறார்.
  • நாடு தழுவிய தேசியக் குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்துவதற்கு முன்னர் இந்த மசோதாவை மீண்டும் அறிமுகப் படுத்துவதன் மூலம் அரசாங்கம் குடியுரிமை விதிமுறைகளை திருத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
  • அசாமில் சமீபத்தில் முடிவடைந்த தேசியக் குடிமக்கள் பதிவேட்டுப்  பயிற்சியில் 3.29 கோடி விண்ணப்பதாரர்களில் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிப் பட்டியலில் இருந்து விலக்கப் பட்டுள்ளனர்.
  • மூன்று வெளிநாடுகளில் துன்புறுத்தப்படும் இந்துக்களுக்கு இந்தியாவை ஒரு பாதுகாப்பானப் புகலிடமாக மாற்றுவதற்காக 2014 ஆம் ஆண்டின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்து  தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட உறுதிமொழியை  சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான அதன் ஒரு முயற்சியாக, குடியுரிமை மசோதா பலராலும் கருதப் படுகின்றது.
உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு
  • வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துவேஷம் காரணமாக வெளியேறி, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மக்களுக்கு இயற்கையாக்கல் மூலம் குடியுரிமை வழங்கும் தொடர்ச்சியான சட்டங்களை ரத்து செய்யக் கோரிய ஒரு புதிய மனு மீது 2019 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் இருந்து அதன் பதிலைக் கேட்டது.
  • இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என சட்டவிரோதமாக குடியேறியவர்களை இயற்கையாக்கல் மூலம் குடியுரிமை வழங்கி அனுமதிக்கின்ற  வகையில் பின்வரும் சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின் மூலம் செய்யப்பட்ட திருத்தங்களை "சட்ட விரோதம் மற்றும் செல்லாதது" என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.
    • கடவுச் சீட்டு  (இந்தியாவிற்குள் நுழைதல்) திருத்த விதிகள், 2015
    • வெளிநாட்டினர் (திருத்தம்) உத்தரவு, 2015 மற்றும்
    • குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் டிசம்பர் 26, 2016 அன்று பிறப்பித்த உத்தரவு.
  • துணைச் சட்டங்களால் வழங்கப்படும் வழிவகையானது "வங்க தேசத்தில் இருந்து அசாமிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் கட்டுப்பாடற்ற வருகையை" மேலும் அதிகரிக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
  • சட்டவிரோதக் குடியேற்றம் வடகிழக்கு மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
  • இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, அசாம் மாநில ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு மீது அறிக்கை ஒன்றை அனுப்பியதுடன்,  இதே போன்ற நிலுவையில் உள்ள  “நாகரிகத்வா அய்ன் சாங்சுதான் பீரோதி மஞ்சா” என்ற அமைப்பின் (குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான மன்றம்) வழக்கையும் சேர்த்துத் தனது  தீர்ப்பினை வழங்கியது.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்