TNPSC Thervupettagam

குடும்பச் செலவீனம் குறித்த கணக்கெடுப்பு: 2023-24

December 31 , 2024 5 days 173 0

குடும்பச் செலவீனம் குறித்த கணக்கெடுப்பு: 2023-24

(For English version to this please click here)

அறிமுகம்

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கான குடும்பச் செலவீனம் குறித்த கணக்கெடுப்பு (HCES) குறித்து இரண்டு தொடர்ச்சியான கணக்கெடுப்புகளை நடத்தியது.
  • இந்தக் கருத்துக் கணிப்புகளின் முதன்மை நோக்கம், கோவிட்-19க்குப் பிந்தைய இயல்பாக்கத்தைத் தொடர்ந்து குடும்பச் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து மதிப்பிடுவதாகும்.
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) இந்தக் கணக்கெடுப்பினை நடத்தியது.

கணக்கெடுப்பு காலங்கள்:

  • HCES 2022-23: இது ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை நடத்தப்பட்டது, 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சுருக்கமான முடிவுகளும், 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் விரிவான அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.
  • HCES 2023-24: இது ஆகஸ்டு 2023 முதல் ஜூலை 2024 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது, சுருக்க முடிவுகளுடன் வெளியிடப் பட்டது.

HCES ஆய்வின் குறிக்கோள்:

  • பொருளாதார நல்வாழ்வின் போக்குகளை மதிப்பிடுதல்.
  • நுகர்வோர் விலைக் குறியீட்டிற்கான (CPI) நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்புகளைப் புதுப்பித்தல்.
  • வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு ஆகியவற்றை அளவிடுதல்.
  • முதன்மை மெட்ரிக்: மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (MPCE) என்பது பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் கொள்கை உருவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட முக்கிய குறிகாட்டியாகும்.

மாதிரிப் பரவல்:

  • கணக்கெடுக்கப்பட்ட மொத்தக் குடும்பங்கள்: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தமாக 2,61,953 குடும்பங்கள் (கிராமப் புறங்களில் 1,54,357 மற்றும் நகர்ப் புறங்களில் 1,07,596) கணக்கெடுப்பில் பங்கு கொண்டன.

HCES ஆய்வின் முக்கிய நோக்கங்கள்

  • குடும்பச் செலவினங்கள் பற்றியத் தரவுகள் சேகரிப்பு: பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் பற்றியத் தகவல்களைச் சேகரிக்கிறது.
  • பொருளாதாரப் போக்குகள் மதிப்பீடு: பொருளாதார நல்வாழ்வு மற்றும் நுகர்வு முறைகளின் போக்குகள் பற்றியத் தரவுகளை வழங்குகிறது.
  • CPI கணக்கீடு: CPI குறியீட்டிற்கான நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்புகளைப் புதுப்பிக்க உதவுகிறது.
  • வறுமை மற்றும் சமத்துவமின்மை அளவீடு: வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு ஆகியவற்றை அளவிடுவதில் உதவுகிறது.

கணக்கெடுப்பு மதிப்பீடுகள்:

MPCEக்கான இரண்டு தொகுப்பு மதிப்பீடுகள்:

  • கணக்கிடப்பட்ட மதிப்புகள் அற்றவை: சமூக நலத் திட்டங்கள் மூலம் இலவசமாகப் பெறப் பட்ட பொருட்களைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்கள்.
  • கணக்கிடப்பட்ட மதிப்புகளுடன்: சமூக நலத் திட்டங்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்கள்.
  • கணக்கெடுப்பு முக்கியத்துவம்: இதில் சேகரிக்கப்பட்டத் தரவுகள் பொருளாதாரப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், குறியீடுகளைப் புதுப்பிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் இலக்காகக் கொண்ட கொள்கைகளை வடிவமைப்பதற்கும் முக்கியமானது.

  • சமூக நலன் குறித்த தரவுகள் சேகரிப்பு:
  • பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் இலவசமாகப் பெறப்பட்ட பொருட்களின் நுகர்வு அளவு பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது.

செயல்முறைகளில் மாற்றங்கள்

  • அடைக்கப்பட்ட பொருட்களின் அதிகரிப்பு:
  • கணக்கெடுப்பில் உள்ளடக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை முந்தைய ஆய்வுகளில் 347 பொருட்களில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 405 பொருட்களாக அதிகரித்துள்ளது.

தனித்துவமான கேள்வித்தாள்கள் அறிமுகம்:

  • கணக்கெடுப்பு வெவ்வேறு செலவு வகைகளை உள்ளடக்குவதற்கு மூன்று தனித்துவமான கேள்வித்தாள்களைப் பயன்படுத்தியது:
  • உணவுப் பொருட்கள்
  • நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைப் பொருட்கள்
  • நீடித்துப் பயன்படுத்தும் பொருட்கள்

  • இந்த மாற்றம், முந்தைய ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட ஒற்றை-வருகை அணுகுமுறையை மாற்றியமைத்து, தரவுச் சேகரிப்புக்கான பல வருகைகளுக்கு வழிவகுத்தது.

HCES ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்புகள்: 2023-24

  • MPCE அதிகரிப்பு:
  • பெயரளவு விலையில், 2022-23 உடன் ஒப்பிடும்போது, ​​2023-24 ஆம் ஆண்டில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (MPCE) கிராமப்புறங்களில் தோராயமாக 9% மற்றும் நகர்ப்புறங்களில் 8% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

  • நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியில் சரிவு:
  • MPCE ஆய்வில் நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது.
  • இது 2011-12 ஆம் ஆண்டில் 84% ஆக இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 71% ஆகவும், மேலும் 2023-24 ஆம் ஆண்டில் 70% ஆகவும் குறைந்துள்ளது, இது கிராமப்புற நுகர்வின் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • இப்போது நகர்ப்புறக் குடும்பங்கள் செலவழிக்கும் தொகையில் 69.7% என்ற அளவை கிராமப்புறக் குடும்பங்கள் செலவிடுகின்றன.

  • MPCE ஆய்வில் அதிகபட்ச அதிகரிப்பு:
  • இந்தியாவின் மக்கள்தொகையில், கீழ்மட்டத்தில் உள்ள 5 முதல் 10% பேர் (MPCE ஆல் தரவரிசைப் படுத்தப்பட்டவர்கள்) 2023-24 ஆம் ஆண்டில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் MPCE ஆய்வில் மிக அதிகபட்ச அதிகரிப்பை அனுபவித்துள்ளனர்.

  • செலவினங்களில் முக்கியப் பங்களிப்பாளர்கள்:
  • 2022-23 ஆம் ஆண்டில் காணப்பட்டப் போக்குகளுக்கு இணங்க, 2023-24 ஆம் ஆண்டில் குடும்பங்களின் சராசரி மாதாந்திரச் செலவினங்களில் உணவு அல்லாதப் பொருட்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
  • உணவு செலவு முறைகள்:
  • பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவை கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பச் செலவினங்களுக்கான முன்னணி வகைகளாக உள்ளன.
  • உணவு அல்லாத செலவினப் போக்குகள்:
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கான முக்கியச் செலவுகள், போக்குவரத்து, ஆடை, படுக்கைகள் மற்றும் காலணிகள், இதர பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் நீடித்துப் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றிற்காக செலவிடப் படுகிறது.

  • நுகர்வு சமத்துவமின்மை:
  • 2022-23 ஆம் ஆண்துடன் ஒப்பிடும்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்துள்ளது.

  • மேலும் கினி கெழு மேம்பட்டுள்ளதோடு, கிராமப்புறங்களில் 0.237 ஆகவும் (2022-23 ஆம் ஆண்டில் 0.266 என்ற அளவிலிருந்து), நகர்ப்புறங்களில் 0.284 ஆகவும் (2022-23 ஆம் ஆண்டில் 0.314 என்ற அளவிலிருந்து) குறைந்துள்ளது, இது நுகர்வு சமத்துவமின்மையைக் குறிக்கிறது.

சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (MPCE):

  • கிராமப்புறங்கள்: சராசரி MPCE 9.2% அதிகரித்து, ₹4,122 ஐ எட்டியது.
  • நகர்ப்புறங்கள்: சராசரி MPCE 8.3% அதிகரித்து, ₹6,996 ஐ எட்டியது.

கிராமப்புற நுகர்வுப் போக்குகள்:

  • கிராமப்புறத்தில் செலவினங்களில் 53% உணவு அல்லாத பொருட்களில் செலவிடப் பட்டுள்ளது.
  • இவற்றில் மிகப்பெரும் பங்கு ஆடைகள், படுக்கைகள் மற்றும் காலணிகளுக்கான செலவினங்களில் இருந்தது.

நகர்ப்புற நுகர்வுப் போக்குகள்:

  • நகர்ப்புறச் செலவினங்களில் 60% உணவு அல்லாத பொருட்களில் செலவிடப் பட்டுள்ளது.

  • உணவு அல்லாத செலவினங்களில் முக்கியப் பங்களிப்பாளர்களாக பல்வேறு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு, ஆடை மற்றும் காலணிகள் மற்றும் கல்வியில் செலவிடப் பட்டுள்ளன.
  • நகர்ப்புறச் செலவின வளர்ச்சியில், உணவுப் பொருட்களில், பானங்கள் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவு, காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை 31.5% பங்களித்தன.

நுகர்வில் பிராந்திய வேறுபாடுகள்:

  • மாநிலங்களுக்கிடையில் மிக அதிகமான கிராமப்புற-நகர்ப்புற MPCE வேறுபாடுகள் காணப் படுகின்றன:
  • மேகாலயா (104%)
  • ஜார்க்கண்ட் (83%)
  • சத்தீஸ்கர் (80%)

பிராந்திய நுகர்வு முறைகள்:

  • மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில், பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களை விட தனிநபர் நுகர்வு அதிகமாக உள்ளது.
  • மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை சராசரியை விட அதிகமான செலவினங்களைக் கொண்ட மாநிலங்களாகும்.
  • மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை சராசரியை விட குறைவான செலவினங்களைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன.

மாநில வாரியான MPCE மாறுபாடு:

  • சிக்கிம் மிக உயர்ந்த MPCE விகிதத்தைப் பதிவு செய்தது.
  • கிராமப்புறம்: ₹9,377
  • நகர்ப்புறம்: ₹13,927
  • சத்தீஸ்கர் மிகக் குறைந்த MPCE விகிதத்தைப் பதிவு செய்தது.

HCES தரவுப் பகுப்பு

  • களப்பணி: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளைக் கணக்கெடுப்பு உள்ளடக்கியுள்ளது.
  • சேகரிக்கப்பட்டத் தரவு: குடும்பங்கள் பொதுவாக, உட்கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகள், உணவு, உணவு அல்லாதப் பொருட்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்விக்கானச் செலவுகள் ஆகியவற்றின் பரவலான தகவல்கள் சேகரிக்கப் பட்டன.

பல்வேறு தகவினங்களில் MPCE ஆய்வில் உள்ள மாறுபாடு

மக்கள்தொகை சதவீதத்தில் MPCE பரவல்

  • கிராமப்புற மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 5% : ரூ. 1,677.
  • கிராமப்புற மக்கள் தொகையில் மேல்மட்டத்தில் உள்ள 5% : ரூ. 10,137.
  • நகர்ப்புற மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 5% : ரூ. 2,376.
  • நகர்ப்புற மக்கள் தொகையில் மேல்மட்டத்தில் உள்ள 5% : ரூ. 20,310.

MPCE ஆய்வின் வளர்ச்சி (2022-23 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை):

  • கிராமப்புறம் அடிமட்டத்தில் உள்ள 5% : 22% அதிகரிப்பு.
  • நகர்ப்புற அடிமட்டத்தில் உள்ள 5% : 19% அதிகரிப்பு.

MPCE ஆய்வில் பிராந்திய வேறுபாடுகள்

அதிகபட்ச MPCE:

  • சிக்கிம்: கிராமப்புறம் ரூ. 9,377, நகர்ப்புறம் ரூ. 13,927.
  • சண்டிகர்: கிராமப்புறம் ரூ. 8,857, நகர்ப்புறம் ரூ. 13,425.

குறைந்த MPCE:

  • சத்தீஸ்கர்: கிராமப்புறம் ரூ. 2,739, நகர்ப்புறம் ரூ. 4,927.
  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: கிராமப்புறம் ரூ. 4,311, நகர்ப்புறம் ரூ. 5,087.

  • மாநில வாரியாக கிராமப்புற-நகர்ப்புற MPCE இடைவெளி: மேகாலயா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அதிக கிராமப்புற-நகர்ப்புற நுகர்வு இடைவெளிகளைக் காட்டுகின்றன.

குடும்ப நுகர்வு நடத்தை

உணவு அல்லாத பொருட்களுக்கான செலவு

  • சிறந்த உணவு அல்லாதப் பொருட்கள்:
  • கிராமப்புறம்: போக்குவரத்து, ஆடைகள், படுக்கை மற்றும் காலணிகள், பொழுதுபோக்கு மற்றும் நீடித்துப் பயன்படுத்தும் பொருட்கள்.

  • நகர்ப்புறம்: நீடித்துப் பயன்படுத்தும் பொருட்கள், ஆடைகள், பொழுதுபோக்கு மற்றும் வாடகை.
  • உணவு நுகர்வு: உணவிற்கான செலவில், பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, அதைத் தொடர்ந்து பால் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன.

நுகர்வு நடத்தையில் பிராந்திய வேறுபாடுகள்

  • அனைத்து மாநிலங்களிலும் உள்ள குடும்பங்கள், உணவு அல்லாத பொருட்களுக்கு கணிசமான விருப்பத்தைத் தெரிவிக்கின்றன, மேலும் அவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வு முறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கணக்கிடப்பட்ட மதிப்புகள் (சமூக நலத் திட்டங்கள்) கொண்ட MPCE

  • கிராமப்புற இந்தியா: ரூ. 4,247.
  • நகர்ப்புற இந்தியா: ரூ. 7,078.

2022-23 முதல் MPCE ஆய்வில் மாற்றங்கள்:

  • கிராமப்புற இந்தியா: 10% அதிகரிப்பு.
  • நகர்ப்புற இந்தியா: 8% அதிகரிப்பு.
  • பிராந்திய MPCE: சிக்கிம் மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்கள் அதிக MPCE விகிதத்தைக் காட்டுகின்றன, அதே சமயம் சத்தீஸ்கர் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகியன MPCE விகிதத்தை மிகவும் குறைவாகவும், பிராந்திய நுகர்வு தரங்களில் உள்ள மாறுபாடுகளைப் பிரதிபலிக்கின்றன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்