TNPSC Thervupettagam

கூடிக் கொண்டாடப்படுகிறதா கிராம சபை?

October 25 , 2024 6 days 119 0

கூடிக் கொண்டாடப்படுகிறதா கிராம சபை?

  • கல்லூரி​களில் முதலாண்டு பட்ட வகுப்புகள் தொடங்​கும்போது சில கல்லூரி​களில், சில துறைகளில் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடைபெறு​கின்றன. அது, ஒருநாள் முதல் மூன்று நாள்கள் நடைபெறும். பயிற்சி முகாமில் பகிர்ந்​து​கொண்ட விஷயங்கள் படிக்​கும்​போது, படித்து முடிக்​கும்போது மாணவர்​களுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்பதை எங்கள் துறையில் பரிசோதனை செய்து பார்த்​த​தில்லை. மூன்றாம் ஆண்டு படித்​துக்​கொண்​டிருந்த மாணவர்​களிடம் அப்படி ஒரு கலந்தாய்வை நடத்தினோம். முடிவுகள் அதிர்ச்​சி​யளித்தன. 90 விழுக்காடு மாணவர்கள் புத்தாக்கப் பயிற்சி வகுப்பு​களில் என்ன நடந்தது என்பதையே மறந்து​விட்​டிருந்​தனர்.

தொடர் செயல்​பாடுகள்:

  • புத்தாக்கப் பயிற்சி வகுப்பு அவசியம் என்பதை உணர்ந்த அதேவேளை​யில், அதனைத் தொடர் செயல்​பாடுகள் வழியாக மாணவர்கள் பயன்படுத்​திக்​கொள்ள முடியும் வகையில் திட்ட​மிட்​டோம். அதன் விளைவாக, மூன்று தொடர் செயல்​பாடு​களுக்குத் திட்ட​மிட்​டோம். 1. மாணவர்கள் தங்கள் சொந்த செலவில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) ஆகிய நாளேடு​களுக்கு ஆண்டு சந்தா செலுத்தி, வகுப்​பறை​யிலேயே வாசிக்க வைத்தல்.
  • அவ்வப்​போது, அந்த வாசிப்பு அனுபவங்​களைப் பகிர்ந்​து​கொள்ள வைத்தல். 2. மாதம் ஒரு நாள் மூன்று மணி நேரம் ஏதேனும் ஒரு நூலைத் தேர்வுசெய்து வாசித்தல், அது குறித்து விவாதித்தல். இதற்கு நூலாசிரியர் அல்லது ஒரு தேர்ந்த வாசகரை அழைத்து வந்து தொகுப்புரை ஆற்றுதல். 3. கிராம ஊராட்சி நிர்வாகத்தைப் பற்றியும் அதில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதி​நி​திகள் - குடிமக்கள் கடமைகள், பொறுப்புகளை அறிந்​து​கொள்​ளுதல்.
  • வகுப்​பறையில் நடைபெறும் தொடர் செயல்​பாடு​களில் அனைவரும் பங்கேற்க வைப்பது. மாணவர்கள் விருப்​பத்தின் அடிப்​படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 11 மாணவர்கள் பங்கேற்​றனர். அவர்களது பின்னூட்​டத்தை எழுதி வாங்கி, இதர மாணவர்​களோடு பகிர்ந்​து​கொண்​டோம். இந்த ஆண்டும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து​கொள்ள ஆவலோடு காத்திருந்​தனர்.
  • கிராம ஊராட்​சியின் முக்கி​யத்துவம், அதன் நோக்கங்கள், பணிகளை எங்களுக்கு எடுத்​துக்​கூறி, பஞ்சா​யத்து ராஜ் சட்டம் அமலாக்​கப்​படும் விதம், அதன் சாதக பாதகங்களை எங்களுக்கு எடுத்​துக்​கூறி, எங்களோடு பயணிக்கும் மாணிக்​கசுந்தரம் கடந்த மூன்று ஆண்டு​களாகத் தான் பங்கேற்று​வரும் கிராம ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்க இந்த முறை அழைத்துச் சென்றார்.‌ அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று 60 மாணவர்கள், நான்கு பேராசிரியர்கள் அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து​கொண்​டோம். கிராமத்தில் வாழ்ந்து வந்தாலும் கிராம சபைக் கூட்டம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில்தான் பலர் இருந்​தனர்.
  • கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் - 1. ஊராட்சி நிர்வாகத்தின் வெளிப்​படைத்​தன்மையை ஊருக்கு உணர்த்துவது. 2. ஊராட்சி நிர்வாகத்தின் சமூகப் பொறுப்புகளை அதிகரிக்கச் செய்தல். 3. கிராம ஊராட்சி நிர்வாகத்​திலும் முடிவெடுத்​தலிலும் மக்கள் பங்கேற்பை அதிகரித்தல். 4. ஊராட்சி மன்ற மக்கள் பிரதி​நி​திகள், அரசு அலுவலர்கள்- மக்களுக்கு இடையேயான தொடர்​பு​களையும் பிணைப்​பையும் அதிகரித்தல்.

முக்கியச் செயல்​பாடுகள்:

  • 1.கிராம வளர்ச்சித் திட்ட அறிக்கை தயாரித்தல்; வரவு- செலவுக் கணக்குகளை மக்கள் முன்வைத்து விவாதித்தல், ஒப்புதல் பெறுதல். 2. ஊராட்​சியின் தேவைகள், பிரச்​சினைகளை முன்னுரிமைப்​படுத்தித் தீர்க்க முயற்சி செய்தல். 3.இருக்கும் வளங்களைச் சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்தல். 4. திட்டப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் கண்காணித்தல்.
  • நாங்கள் பங்கேற்ற கிராம சபை, பெண் தலைவர் பொறுப்​பேற்று நடத்தும் கிராம ஊராட்சி. கூட்டம் தொடங்​கியது முதல் முடியும் வரை தலைவர் ஒரு வார்த்​தைகூடப் பேசவில்லை. அவரது மகனே தலைவராகக் கூட்டத்தை நடத்தினார். கேள்வி​களுக்குப் பதில் அளித்​தார். தேர்வானது முதல் அந்தப் பெண் தலைவரின் கணவர் இந்தப் பணிகளைச் செய்து​வந்​த​தாகவும் அவரது மறைவுக்குப் பின்னர் மகன் பொறுப்​பேற்றுச் செயல்​படு​வ​தாகவும் தெரிவித்​தனர்.
  • வரவு- செலவு அறிக்கை வாசிக்​கப்​பட்டது. ஓரிரண்டு விளக்​கங்​களோடு அது முடிந்​து​விட்டது. அதன் நகல்களைப் பங்கேற்​பாளர்​களுக்கு வழங்குதல், விவாதம் நடத்திப் பின்னர் அதனை ஒருமனதாக நிறைவேற்றித் தருதல் என்கிற நடைமுறைகள் இல்லை. கூட்டத்தின் குறிப்​பேட்டைக் கூட்டத்​துக்கு எடுத்து வருதல், முந்தைய கூட்ட முடிவுகளை வாசித்தல் போன்ற நடைமுறைகள் இல்லை.
  • கிராம சபைக் கூட்டத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று கிராம வளர்ச்சித் திட்ட அறிக்கையை மக்கள் பங்கேற்போடு தயாரித்தல்.‌ அது பற்றி வந்திருந்​தவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரிய​வில்லை. ஊராட்சி மன்றத்தின் உறுப்​பினர் ஒருவர், “நான் கேட்டுக்​கொண்ட எதையும் நீங்கள் செய்து தரவில்லை. இந்த மன்றத்தின் ஆயுள்​காலம் முடிவதற்குள் எனது வார்டில் ஒரு கிராம சபைக் கூட்டம் நடத்துங்கள் என்று கேட்டுப் பார்த்​தேன். அதனைக்கூட நீங்கள் நிறைவேற்​ற​வில்லை. அடுத்த முறை எப்படி மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்​பது?” என ஆதங்கப்​பட்​டார். அதற்கும் சரியான பதில் கிடைக்க​வில்லை.
  • கிராம சபையின் மின்சாரம், தண்ணீர்க் கட்டணம் பெருமளவு பாக்கி இருப்​ப​தால், அதனை ஒட்டிய பணிகளுக்கு உடனடி​யாகச் சம்பந்​தப்பட்ட அலுவல​கங்களை அணுக முடிய​வில்லை எனத் தலைவராகச் செயல்​படுபவர் கூறினார். கிராம சபைக் கூட்டத்தில் கலந்து​கொண்டு பலரிடம் பேசிய​போது, அவர்கள் எதற்கு வந்தார்கள் என்றே தெரிய​வில்லை.
  • அதே பகுதியில் அர்ப்​பணிப்பு உணர்வு உள்ள சில குடிமக்கள் உள்ளனர். அவர்களின் தொடர் பங்கேற்பு அனுபவம் வாயிலாகச் சில விஷயங்​களைப் பகிர்ந்​து​கொண்​டனர். “கிராமப் பஞ்சா​யத்துச் செயலரைத் தாண்டி எதுவும் நடப்ப​தில்லை. இந்த விஷயத்தை அனைத்து அலுவலர்​களுக்கும் தெரியப்​படுத்​தி​விட்​டோம். எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றனர்.
  • சென்னையில் உள்ள கிராம வளர்ச்சி இயக்கத்​திலிருந்து கூட்டப் பொருள் வந்து​விடு​கிறது. அதனைத் தாண்டி எந்தக் கூட்டப் பொருளையும் விவாதத்​துக்கு எடுத்​துக்​கொள்​வ​தில்லை. மக்கள் முன்மொழியும் எந்தத் தீர்மானமும் அங்கேயே விவாதம் செய்யப்​பட்டுத் தீர்மானமாக நிறைவேற்​றப்​படு​வ​தில்லை. கிராம சபைக் கூட்டக் குறிப்​பேட்டில் ஏற்று​வதும் இல்லை என்றார்கள். கிராம ஊராட்சி மன்றச் செயலாளர் கடந்த கூட்டத்தில் கலந்து​கொள்ள​வில்லை. அவரது உதவியாளரே கலந்து​கொண்​டார். கேட்கப்பட்ட விவரங்கள் எதுவும் அவருக்குத் தெரிய​வில்லை.
  • மாணவர்கள், பேராசிரியர்​களோடு கல்லூரி முதல்​வரும் அந்தக் கூட்டத்தில் கலந்து​கொண்​டார். “கிராம சபையின் வாயிலாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்​தால், எங்கள் கல்லூரி மாணவர்களை நீங்கள் தாராள​மாகப் பயன்படுத்​திக்​கொள்​ளலாம்” என்றார். மாணவர்கள் பெருத்த உற்சாகம் அடைந்​தனர். அவர்கள் எல்லோருக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது.
  • சில குறிப்​பிட்ட, பிரத்​யேகமான சூழ்நிலையில் மட்டுமே, கிராம சபையே நில ஆக்கிரமிப்பு போன்ற செயல்​களில் ஈடுபட்டது போன்ற சூழலில் மட்டுமே கிராம சபைக் கூட்டங்​களின் தீர்மானங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்​படுத்த முடியும் என்கிறார்கள். அப்படி அதிகாரம் அளிக்​கப்பட்ட கிராம சபைக் கூட்டங்கள் எவ்வளவு சிறப்பாக நடைபெற வேண்டும்? கிராமப் பஞ்சா​யத்து மக்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கொண்டாடி மகிழ வேண்டிய திருவிழாவாக கிராம சபைக் கூட்டங்கள் மாறுவது எப்போது‌?

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்