TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 05

July 2 , 2024 146 days 1673 0

(For English version to this please click here)

27. சிற்பி திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • செப்டம்பர் 14, 2022.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • சென்னை நகர காவல்துறை.

நோக்கம்:

  • பள்ளி மாணவர்களை நல்ல நடத்தைக்கு வழிகாட்டுதல், சிறுவர்களின் குற்றத்தைத் தடுப்பது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீய பழக்கங்களைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:  

  • சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள் ஆவார்கள்.

தகுதி:

  • சென்னையில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில் இருந்து 2,764 மாணவர்கள் மற்றும் 2,236 மாணவிகள் என மொத்தம் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.

கூடுதல் தகவல்:

  • இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவரும் புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சித் திட்டங்களைப் பெறுகிறார்கள்.
  • இதில் மாணவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும், இரண்டு ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திப்பார்கள் என்பதோடு இந்த வகுப்புகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாட நிபுணர்களால் நடத்தப் படுகிறது.
  • இந்த வகுப்புகளின் போது ஒரு புத்தகமும் சத்தான உணவும் வழங்கப்படும்.
  • இதில் நியமிக்கப்பட்ட எட்டு இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப் படுவார்கள்.
  • போதைப்பொருள் ஒழிப்பு, மதுவுக்கு எதிரான நடவடிக்கைகள், சட்ட விழிப்புணர்வு, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைதல், சுய தலைமைத்துவத்தை மேம்படுத்துதல், பெற்றோரின் அறிவுரைகளை மதித்தல், பொதுமக்களுடன் பழகுதல், போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தல், நமது மாநிலத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக பெருமைப் படுதல் போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • சிறு வயதிலிருந்தே நல்ல பொதுப் பழக்க வழக்கங்கள் மற்றும் சமூகப் பொறுப்புடன் குழந்தைகளை உருவாக்குதல், பெற்றோரின் கவனக்குறைவு, போதிய வருமானம் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது மற்றும் வேலையின்மை போன்ற காரணிகளைக் கையாள்வதன் மூலம் சிறார் குற்றத்தைத் தடுத்தல் போன்றவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், மனித உரிமை மீறல்கள் இன்றி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தத் திட்டத்திற்காக ரூ. 4.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரவும், மாணவர்களை நாட்டுக்குப் பங்காற்றச் செய்யவும், சட்டத்தை மதிக்கச் செய்யவும், மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கவும்  இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சி:

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்செயல்களைத் தடுப்பதில் காவல்துறை-பொதுமக்கள் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சிற்பி முன்முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
  • சிற்பி முன்முயற்சி காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது என்பதோடு இது ஒரு சிறந்த சமுதாயத்திற்குப் பங்களிக்கும் பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

28. நான் முதல்வன்

தொடங்கப்பட்ட தினம்:

  • மார்ச் 1, 2022.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தலைவர்களாக மாற்றுதல், அவர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் கல்வி மற்றும் வாழ்க்கை இரண்டிலும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகும்.

பயனாளிகள்:

  • தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்தத் திட்டதின் பயனாளிகள் ஆவர்.

தகுதி:

  • தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் அவரது 69வது பிறந்தநாளில், ஆரம்பிக்கப் பட்ட "நான் முதல்வன்" முன்முயற்சி, அவரது கனவுத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டம், ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, அவர்களின் கல்வி, அறிவுசார் மற்றும் உடல் திறன்களையும் மேம்படுத்துகிறது.
  • இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

நான் முதல்வன் முயற்சியின் முக்கிய அம்சங்கள்:

  • மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெறுவதற்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பது ஆகும்.
  • இது அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் மற்றும் எப்படி படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
  • எழுதுதல், சரளமாகப் பேசுதல், நேர்காணலுக்குத் தயார்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தற்போதையத் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப குறியீட்டு மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
  • பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டு கோடைக்கால சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது.
  • ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, உடை அணிதல், பழக்கவழக்கங்கள் மற்றும் மனநலம் மற்றும் உடல் நல நிபுணர்களுடன் சமூகத் தொடர்புகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறது.
  • மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • மாணவர்களின் தேவைகளின் அடிப்படையில், சிறந்தப் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் நேரடி, இணைய வழிக் கற்றல்களின் மூலம் கல்லூரி மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகளை வழங்குகிறது.
  • 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, தொடர்ச்சியான வகுப்புகளுக்கான பிரத்தியேக பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையங்களை நிறுவுகிறது.
  • அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்களை வழிகாட்டியாகக் கொண்டு தொடர்ச்சியான வழிகாட்டுதல் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
  • வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்கிறது.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்துறை 4.0 தரத்திற்கு மேம்படுத்த உதவுகிறது.
  • தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் மாணவர்களின் தகுதிகள் மற்றும் அவரது ஆர்வங்களின் அடிப்படையில் சிறந்த நிறுவனங்கள், புகழ்பெற்றப் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் அவர்களது சேர்க்கையை உறுதி செய்கிறது.
  • தமிழ்நாடு அரசுத் துறைகள், மத்திய அரசு வேலைகள் மற்றும் பிற மாநிலங்களின் வேலை வாய்ப்புகளில், வேலை வாய்ப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சிகளை வெளியிடுகிறது.
  • பயிற்றுவிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்கும், தொடருவதற்கும் கண்காணிப்பு மற்றும் ஆதரவை வழங்குகிறது.
  • கூடுதலாக, தேவைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பிற்கான கண்காட்சிகளை நடத்துகிறது.
  • இந்த முன்முயற்சியின் அனைத்து விவரங்களையும் கொண்ட ஒரு விரிவான இணைய தளத்தை உருவாக்குகிறது.
  • சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை மூலம் முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் புதிய முயற்சியை இது ஒருங்கிணைகிறது.
  • அனைத்து 20 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட அளவிலான குழு மூலம் இந்த முயற்சியைச் செயல்படுத்துகிறது.
  • பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) மற்றும் ரயில்வே துறை மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், மத்திய அரசு மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய தரமான ஆறு மாதப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுப் பிரிவு மூலம் எஸ்எஸ்சி-மற்றும்-ரயில்வே துறை மற்றும் வங்கிப் பணிகளுக்கான பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.

தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 21 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • 02.08.1995க்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள் ஆவர்.
  • அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இரண்டு தனித்தனி நுழைவுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 1,000 பயனாளிகள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்:

  • பொது அறிவு, திறன், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம் பெறுகிறது.
  • வங்கி வேலைப் பயிற்சிக்கு, பொது அறிவுப் பிரிவில் வங்கி தொடர்பான கேள்விகள் இடம் பெறுகிறது.
  • இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுப் பயிற்சி அல்லது பணியாளர் தேர்வாணையம்-ரயில்வே துறை தேர்வுப் பயிற்சியைத் தேர்வு செய்யலாம், ஆனால் இரண்டையும் தேர்வு செய்ய முடியாது.
  • தேர்ந்தெடுக்கப்பட்டப் பயிற்சியாளர்கள் ரூ. 3,000 என்ற அளவில் கட்டணத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் இது பயிற்சி முடிந்தவுடன் திருப்பித் தரப்படுகிறது.
  • இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம் வழங்கப் படுகிறது.

29. தகைசால் பள்ளிகள் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  •  செப்டம்பர் 5, 2022.

அமைச்சகம் /தலைமை முகமை:

  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.

நோக்கம்:

  • அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றுவது, நவீன வசதிகளுடன் கூடிய விரிவான கல்வியை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் இதன் பயனாளிகள் ஆவார்கள்.

கூடுதல் தகவல்:

  • தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
  • சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரால் இதி தொடங்கப்பட்டது.
  • இந்த முன்முயற்சியில் மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் (முன்மாதிரி) பள்ளிகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
  • தகைசால் பள்ளிகள் போதுமான ஆசிரியர்கள், நவீனக் கணினிகள், மேம்பட்ட அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகங்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விளையாட்டு, கலை மற்றும் இலக்கியம் போன்ற அனைத்து செயல்பாடுகளுடன் கூடிய முழுமையான கல்வியை வழங்குகிறது.
  • இந்த முன்முயற்சியானது அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு திறன்களுடன் கற்கும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கற்றல் என்பது நேரடி வகுப்பறை, அறிவுறுத்தல் மூலம் மட்டுமின்றி இணையவழிக் கற்றல் முறைகள் மூலமாகவும், நவீனத் தரநிலைகள் பூர்த்தி செய்து தரப்பட்டு கற்றல் திறன்கள் மேம்படுத்தப் படுகிறது.
  • தகைசால் பள்ளிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை விரைவுபடுத்தியுள்ளது.
  • இந்தப் பள்ளிகளில் மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பம், நவீன ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்(திறன்) வகுப்பறைகள் பொருத்தப்படுகின்றன.
  • மாணவர்களிடையே ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், தகைசால் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தகைசால் பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 62,460 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தகைசால் பள்ளிகள் மூலம் அரசின் இந்த முன்னோட்ட முயற்சியானது, தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல் சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு விளிம்புநிலை மாணவர்களுக்கு ஒரு வரமாகவும் இது இருக்கிறது.

30. வளர் 4.0

தொடங்கப்பட்ட தினம்:

  • ஜூன் 15, 2022.

அமைச்சகம் /தலைமை முகைமை:

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுச் சேவைகள் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.

நோக்கம்:

  • தொழில்முனைவோர் மற்றும் தொழில்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சிந்தனைப் பரிமாற்றத்தை எளிதாக்குதல், சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்தல் மற்றும் பொருளாதாரத்தில் 1 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதில் பங்களிப்பை அளித்தல் ஆகியனவாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோர் மற்றும், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் இதில் அடங்குவர்.

தகுதி:

  • தமிழகத்திற்குள் செயல்படும் தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலைகள் இதில் அடங்குவர்.

கூடுதல் தகவல்:

  • தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக 'வளர் 4.0' என்ற இணைய தளத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுச் சேவைகள் துறையால் இது உருவாக்கப்பட்டது என்பதோடு மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் உதவியுடன், இந்த இணையதளம் தொழில்முனைவோரின் தேவைகளை நிவர்த்தி செய்கிறது.
  • இந்த இணையதளமனது, சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் அமைச்சர் டி.எம். அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • கூடுதலாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணுச் சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த, தலைமைச் செயலகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையை 'தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சேவைகள் துறை' என தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக தற்போது இருப்பவர் நீரஜ் மிட்டல் ஆவார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்