TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 07

July 6 , 2024 145 days 2208 0

(For English version to this please click here)

                                                            38. எண்ணும் எழுத்தும் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • ஜூன் 13, 2022.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • பள்ளிக் கல்வித் துறை – தமிழ்நாடு.

நோக்கம்:

  • "எண்ணும் எழுத்தும்" திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 வயதுக்குட்பட்ட (3-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களையும், 1 முதல் 10 கோடி வரையிலான எண்களையும் படிக்கவும், எழுதவும், புரிந்து கொள்ளவும் செயல்பாடு அடிப்படையிலான கற்றல் அளிப்பதன் கற்றுக் கொடுக்கிறது.
  • கோவிட்-19 தொற்றுநோயின் போது பள்ளிகள் மூடப்படுவதால் ஏற்படும் கற்றல் இழப்பை நிவர்த்தி செய்ய வேண்டி பள்ளிக் கல்வித் துறை இத்திட்டத்தை மூன்று ஆண்டுகளாக செயல் படுத்தியது.
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பயனாளிகள்:

  • மாநிலம் முழுவதும் உள்ள 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய, எண்ணும் எழுத்துத் திட்டமானது பள்ளிக் கல்வித் துறையின் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

தகுதி:

  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • நோக்கம் மற்றும் பரவல்:
  • இந்தத் திட்டமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசிரியர்கள் பாடல் மற்றும் நடனம் சார்ந்தச் செயல்பாடுகளுடன், எழுத்துக்களைக் கற்பிக்க சித்திரங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற ஈர்க்கும் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதால் இது குழந்தைகளுக்குப் புரிந்து கொள்வதற்கும், விரைவாகப் பதிலளிப்பதற்கும் நன்கு உதவுகிறது.
  • எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றிற்கு தினசரிச் செயல்பாட்டின் அடிப்படையிலான பாடங்கள் நடத்தப்படுகிறது.
  • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான விளைவு:
  • இது ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கிறது மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவும் உதவுகிறது என்பதால் இந்த முயற்சியை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன.
  • இத்திட்டத்தில் ஆசிரியர்கள் திருப்தியை வெளிப்படுத்தினர் என்பதோடு பள்ளி தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஆசிரியர்கள் கதை மூலம் பாடம் சொல்லத் தொடங்கியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • தமிழக மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக தேசிய சாதனை அளவீட்டின் (NAS) அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
  • எதிர்கால இலக்குகள்:
  • 2025 ஆம் ஆண்டுக்குள், மாணவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன்களைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஆசிரியர்களுக்கான பயிற்சி:
  • இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டி மாநில, மாவட்ட, மற்றும் ஒன்றியங்கள் அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • 2023-2024 கல்வியாண்டில், ஆசிரியர்களுக்குத் தகுந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.

39. முதவரின் முகவரித் திட்டம் - முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைந்த புகார் மேலாண்மை அமைப்பு (IIPGCMS CM Helpline)

அமைச்சகம் / தலைமை முகமை :

  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டது.

நோக்கம்:

  • இது பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதில் சமர்ப்பித்து தீர்வு காண இருவழித் தொடர்பு தளமாகச் செயல்படுவதாகும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள குடிமக்களுக்காக அரசு சேவைகள், திட்டங்கள் மற்றும் உதவிகளை எந்தவித தடையுமின்றி அணுகுவதை உறுதி செய்யவதாகும்.

பயனாளிகள்:

  • தமிழக குடிமக்கள்.

தகுதி:

  • தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும், புகார்கள் மற்றும் கருத்துகளைச் சமர்ப்பிக்க இத்தளத்தினைப் பயன்படுத்தலாம்.

கூடுதல் தகவல்:

  • புகார்கள் மற்றும் மனுக்களை சமர்ப்பிப்பதற்கான சேவைகள்:
  • உதவி மைய எண்: 1100
  • இணையதளம்: https://cmhelpline.tnega.org
  • திறன்பேசி செயலி: CM Helpline Citizen
  • மின்னஞ்சல்: cmhelpline@tn.gov.in
  • கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தனிநபர்கள் தங்கள் புகார்களின் நிலையை கண்காணிக்க அனுமதியளிக்கிறது.
  • புகார்களை சமர்ப்பிப்பதைத் தவிர, இதில் குடிமக்கள் கேள்விகளை எழுப்பலாம், அரசாங்க திட்டங்களை மேம்படுத்துவதற்கான கருத்துக்களை வழங்கலாம் மற்றும் முதல் அமைச்சரிடமிருந்து அறிவிப்புகள் குறித்த உடனடி அறிவிப்புகளைப் பெறலாம்.
  • இந்த அமைப்பு குறைகளை விரைவாகவும், நியாயமாகவும், கருணையின் அடிப்படையில் தீர்க்கிறது என்பதோடு குடிமக்களிடையே அதிருப்தி ஏற்படாமலும் பார்த்துக் கொள்கிறது.
  • இதில் பொதுமக்களின் குறைகள் மீது விரைவாகவும், திறமையாகவும் செயல்பட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புள்ள நிர்வாகத்தின் ஏழு முக்கியக் கொள்கைகளை அடைய தமிழ்நாடு அரசு பாடுபடுகிறது, அவையாவன:

  • அணுகல், பங்கேற்பு, தொடர்பு, பொறுப்புக் கூறல், செயல்திறன் மற்றும் பொறுப்பாகும்.
  • ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய புகார் மேலாண்மை அமைப்பானது குடிமக்களைப் பின்வரும் செயல்களைச் செய்ய அனுமதியளிக்கிறது:
  • எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் குறைகளைப் பதிவு செய்யலாம்.
  • அவர்களின் குறைகளின் நிலையைக் கண்காணிக்கலாம்.
  • குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கேள்விகளை எழுப்பலாம்.
  • அமைப்பினை மேம்படுத்துவதற்கானப் பரிந்துரைகளை வழங்கலாம்.
  • முதலமைச்சரின் பொது அறிக்கைகளைப் பார்வையிடலாம்.
  • இந்தச் சேவையின் பயன்பாட்டை அதிகரிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் (1100), இணைய வழி சேவைகள், திறன்பேசிப் பயன்பாடு, மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் சேவை உட்பட பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்தச் சேவைகள் மூலம் பதிவு செய்யப்படும் அனைத்துப் புகார்களும், தகவல் அழைப்பு மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு அவை தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன.
  • இந்த அமைப்பானது பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், ஒருங்கிணைந்து செயல் படவும், விரைவான நடவடிக்கை எடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

40. வர்த்தகர்களுக்கான 'சமாதான்' திட்டம்

அமைச்சகம் / தலைமை முகமை :

  • தமிழ்நாடு வணிக வரித்துறை.

நோக்கம்:

  • வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள வணிக வரிகளைப் பெறுவதற்கான புதிய அணுகுமுறை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குதாகும்.
  • மேலும் வணிக வரித்துறையின் பணிச்சுமையைக் குறைத்து, அரசுக்கு வருவாய் ஈட்ட வழி வகுப்பதாகும்.

பயனாளி:

  • தமிழ்நாட்டில் வணிகவரி நிலுவையில் உள்ள வணிகர்கள் மற்றும் நிறுவனங்களாகும்.

தகுதி:

  • வரி, வட்டி மற்றும் அபராதத் தொகை நிலுவையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகும்.

கூடுதல் தகவல்:

  • நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் தொகைகள்:
  • சுமார் 1.42 லட்சம் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, மதிப்பிடப்பட்ட நிலுவையில் ரூ. 25,000 கோடி வரி நிலுவைத் தொகை தொடர்பான, 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • திட்ட விதிகள்:
  • நிலுவையில் உள்ள வரி, வட்டி மற்றும் அபராதத் தொகை ரூ. 50,000க்கும் குறைவாக இருந்தால், அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்தத் திட்டமானது மற்ற வர்த்தகர்களுக்கு, நிலுவையில் உள்ள தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தைச் செலுத்தி வழக்குகளை முடிப்பதற்கு அனுமதியளிக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகைகள் ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி, ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி, ரூ. 10 கோடிக்கு மேல் என நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு வகைக்கான விவரங்கள்:
  • முதல் பிரிவில் உள்ள வர்த்தகர்கள் மொத்த நிலுவையில் உள்ள தொகையில் 20% அல்லது நிலுவையில் உள்ள வரி, வட்டி மற்றும் அபராதத்தின் குறிப்பிட்ட சதவீதத்தைச் செலுத்தி தங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
  • மற்ற மூன்று வகை வணிகர்கள் நிலுவையில் உள்ள வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தைச் செலுத்தி தங்கள் வழக்கினை முடித்துக் கொள்ளலாம்.
  • திரட்டப்பட்ட வட்டித் தள்ளுபடி:
  • ஒரு குறிப்பிடத்தக்கச் சலுகையாக, வணிகர்கள் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தினால், அவர்கள் வட்டி செலுத்தும் முன்வரும் தேதி வரை, அவர்களின் கணக்குகளில் திரட்டப் பட்ட வட்டித் தொகையானது முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • காலம் வரையறை:
  • இந்த 'சமாதான்' திட்டம் அக்டோபர் 16 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிப்ரவரி 15, 2024 வரை நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • மேலும் அரசின் இந்த முயற்சியை வணிகர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

41. நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • நவம்பர் 4, 2023.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • இத்திட்டம் வழக்கமான நடைப்பயிற்சி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மிகவும் ஊக்குவிக்கிறது.

பயனாளிகள்:

  • நாமக்கல் மாவட்ட பொது மக்கள் ஆவர்.

தகுதி:

  • நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

கூடுதல் தகவல்:

  • நடை பாதை: 8 கி.மீ
  • சிறப்பம்சங்கள்:
  • மரம் வளர்ப்பு, குடிநீர் வசதி, சுகாதாரம், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கான இருக்கை, மற்றும் தொலைதூர மைல்கற்கள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
  • செயல்பாடுகள்:
  • நடைபயணத்தின் முடிவில் சுகாதார விழிப்புணர்வுக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப் படுகிறது.
  • பங்கேற்பாளர்கள்:
  • தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆவர்.
  • நிகழ்ச்சி-நிரல்:
  • வாரத்தின் அனைத்து நாட்களிலும் கூடுதல் நடைபயிற்சி வாய்ப்புகளுடன் கூடிய மாதாந்திர நடைபயிற்சிகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி:

  • ஆரோக்கிய நடை (சென்னை)

அமைச்சகம் / தலைமை முகமை:

  • தமிழ்நாடு சுகாதாரத் துறை.

நோக்கம்:

  • நடைபயிற்சியை ஒரு வழக்கமான பழக்கமாக ஏற்றுக் கொள்ள இது பொதுமக்களை மிகவும் ஊக்குவிக்கிறது.

பயனாளி:

  • சென்னைப் பொது மக்கள்.

தகுதி:

  • சென்னையில் வசிப்பவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

கூடுதல் தகவல்:

  • நடை பாதை: 8 கி.மீ
  • மாதாந்திர நிகழ்வு:
  • சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப் படுகிறது.
  • சுகாதார நலன்கள்:
  • உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, இத்திட்டமானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதோடு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை 30% வரையில் குறைக்கிறது.
  • இந்தத் திட்டங்கள் வழக்கமான நடைபயிற்சி மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதோடு உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதன் மூலம், பங்கேற்பு மற்றும் குடியிருப்பாளர்களிடையே ஒரு சுகாதார விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறது.

                                                        42. இல்லம் தேடிக் கல்வித் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • அக்டோபர் 27, 2021.

அமைச்சகம் / தலைமை முகமை :

  • தமிழக அரசு.

நோக்கம்:

  • கோவிட்-19 தொற்று நோயால் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கிறது.
  • தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • கல்வியில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கிறது.

பயனாளிகள்:

  • தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆவர்.

தகுதி:

  • தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
  • வகுப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அடையாள அட்டைச் சமர்ப்பிப்பு (எ.கா., ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை).
  • வருடாந்திர குடும்ப வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்:

  • தன்னார்வலர்கள் நல்லெண்ண தூதர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
  • தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழு மற்றும் யுனெஸ்கோ கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுகிறது.
  • கோவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியைக் குறைக்க இந்தத் திட்டமானது செயல்படுகிறது.
  • மேலும் இது பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் திட்டத்தில் அரசுப் பள்ளிகளின் ஒட்டு மொத்தக் கல்வித் தரத்தை நன்கு மேம்படுத்த தன்னார்வலர்கள் பங்களிக்கின்றனர்.
  • கல்வியை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்