TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 09

July 10 , 2024 185 days 1643 0

(For English version to this please click here)

50. இ-பெட்டகம் தொலைபேசி செயலி

தொடங்கப்பட்ட தினம்:

  • ஜூன் 13, 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • அமைச்சகம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சேவைகள்.
  • தலைமை முகமை: தமிழ்நாடு மின்னணு ஆளுமை நிறுவனம் (TNeGA)

நோக்கம்:

  • தமிழ்நாடு மின்னணு ஆளுமை நிறுவனத்தின் அகப்பயிற்சித் தேவைகளை நிவர்த்தி செய்யதல் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதாகும்.
  • தமிழகத்திற்கான இ-சேவைச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமித்து பாதுகாப்பதாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாடு மின்னணு ஆளுமை நிறுவனத்தின் அதிகாரிகள் (தலைமையகம் மற்றும் மாவட்ட அளவில் உள்ளவர்கள்).
  • மற்ற துறைகளின் அதிகாரிகள்
  • தமிழக குடிமக்கள்
  • தமிழ்நாட்டில் உள்ள வணிகங்கள்

தகுதி:

  • பயிற்சி சார்ந்தவை: தமிழ்நாடு மின்னணு ஆளுமை நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் ஆவர்.

கூடுதல் தகவல்கள்:

  • மின்னணு ஆளுகைக்கான மாநிலப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாட்டின் முதுகெலும்பாக உள்ள தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பயிற்சித் தொகுதிகள்:

  • மின்னணு அலுவலகப் பயிற்சி.
  • G2C சேவைகள் பயிற்சி.
  • மின்-மாவட்ட மேலாளர்களுக்கான பயிற்சி (E-DMs).
  • மென்பொருள் மேம்பாட்டுப் பயிற்சி.
  • தொலைபேசி செயலி மேம்பாட்டுப் பயிற்சி.
  • ஜிஐஎஸ் (புவியியல் தகவல் அமைப்பு) பயிற்சி.
  • மின் கொள்முதல் பயிற்சி.
  • தேவையான பிற திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

பயிற்சி அம்சங்கள்:

  • 24 அங்குல தொடுதிரைகள் கொண்ட உயர்நிலை கணினிகளைக் கொண்டது.
  • பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப் படுகின்றன.
  • தொடர்பு கொள்ள நுண் அலைபேசிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • அதிவேக இணையப் பயன்பாட்டைக் கொண்டது.

நம்பிக்கை வலைப்பின்னல் (NI) – முதுகெலும்பாக உள்ள தொடர் சங்கிலி தொழில்நுட்பம்:

செயல்பாடு:

  • முதுகெலும்பாக உள்ள தொடர் சங்கிலி தொழில்நுட்பம்:
  • மின்னணு ஆவணங்களைப் பாதுகாப்பாக சேமித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் வணிகங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்களை அளிப்பதாகும்.

தொலைபேசிப் பயன்பாடு:

  • இ-பெட்டகம் – Citizen Wallet (குடிமக்கள் பாதுகாப்பகம்).

சரிபார்ப்பு:

  • அனைத்து ஆவணங்களும் நம்பிக்கை வலைப்பின்னல் மூலம் சரிபார்க்கப் பட்டு, அவை சேதமடையாதவை என்பதை உறுதிப்படுத்தப் படுகின்றன.

முதல் கட்டம்:

  • 24 வகையான இ-சேவைச் சான்றிதழ்களைப் பாதுகாப்பதாகும் (எ.கா., சாதிச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ்கள், முதல் பட்டதாரிச் சான்றிதழ்கள்).
  • கல்விச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களைப் பாதுகாப்பதாகும்.
  • குடிமக்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிற வழிகளில் ஆவணங்களைப் பகிரலாம்.
  • தமிழ்நாடு அரசிடமிருந்து நிலப் பதிவுத் தரவுகளைப் பாதுகாப்பதாகும்.

51. "திருக்கோவில் செயலி" (கோயில் பிரசாதம் உங்கள் வீட்டிற்கு வழங்கப்படுகிறது: இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் அஞ்சல் சேவை திட்டம்)

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைத் துறை (HR&CE).

நோக்கம்:

  • "திருக்கோவில்" செயலி மூலம் கோவில் பிரசாதம் மற்றும் தகவல்களை எளிதாக அணுகுவதை உறுதி செய்து, புகழ்பெற்ற கோவில்களில் இருந்து பிரசாதத்தைத் தபால் சேவைகள் மூலம் பக்தர்களுக்கு வழங்குவதாகும்.

பயனாளிகள்:

  • இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் (மற்றும் உலகளவில் மூன்று மாதங்களுக்குள்) கோயில் பிரசாதத்தைப் பெற விரும்பும் பக்தர்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை அறிய இச்செயலியை அணுகலாம்.

தகுதி:

  • கோவில்களில் இருந்து பிரசாதம் பெற விரும்பும் அனைத்துப் பக்தர்களுக்காக என்று இது தொடங்கப் பட்டு உள்ளது.
  • "திருக்கோவில்" செயலி தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களைத் தேடும் அனைவருக்கும் தகவல்களை வழங்குகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • கோவில் வருகைகள்:
  • இந்த செயலியானது, ஆன்மிகச் சுற்றுப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும், கோவில்களுக்குச் செல்வதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கும் வேண்டிய தகவல்களை வழங்குதல் மற்றும் அஞ்சல் போன்ற சேவைகளின் மூலம் உதவுகிறது, அதுவும் குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது சிறந்த முறையில் தகவல்களை வழங்கியது.
  • ஆன்மீகப் பயணம்:
  • இத்திட்டம் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழா போன்ற விசேஷ நிகழ்வுகளுக்கு அஞ்சல் மூலம் பக்தர்கள் பிரசாதம் பெற அனுமதிக்கிறது.
  • இந்த சேவை கோயில் பிரசாதம் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
  • கோவில்கள்:
  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களில் இருந்து பிரசாதம் வழங்கப் படுகிறது.
  • திருக்கோவில் செயலி:
  • கோயில்களின் வரலாறு, புராணக் கதைகள், நடை திறக்கும் நேரம், பூஜை நேரங்கள், சடங்குக் கட்டணம், முக்கியமான திருவிழாக்கள், மெய்நிகர் சுற்றுப்பயணங்கள், திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு, கூகுள் வரைபட வழிகள், தங்கும் வசதிகள், சக்கர நாற்காலி அணுகல், ஓய்வறைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய விரிவான தகவல்களை இது வழங்குகிறது.
  • இலவச சேவைகள்:
  • மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வாகனச் சவாரிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற இலவசச் சேவைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாகும்.
  • இந்தச் செயலியின் மூலம் அன்னதானம் மற்றும் கோயில் திருப்பணிகள் போன்ற சேவைகளுக்கான நன்கொடைகளையும் வழங்க உதவுகிறது.
  • தபால் பிரசாத சேவை:
  • இந்தியாவில் மற்றும் உலகளவில் எங்கிருந்தும் பக்தர்கள் மூன்று மாதங்களுக்குள் கோவில் பிரசாதத்தைப் பெறலாம்.
  • ஒவ்வொரு கோவிலும் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் சிறப்புப் பிரசாதத்தினை அனுப்பும்.
  • அணுகக் கூடிய தரிசனம்:
  • 48 முதன்மைக் கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பாதைகள் மற்றும் வசதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மட்டுமன்றி அவற்றை எளிதாக அணுகும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது. 
  • கோவில் பிரசாதம்:
  • ஒவ்வொரு கோவிலிலிருந்தும் சிறப்புப் பிரசாதம் அனுப்பப்படுவதோடு, தரிசனக் கட்டணத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.
  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைத் துறையின் அமைச்சர் சேகர்பாபு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட முயற்சியில், 48 முதன்மைக் கோவில்களில் இருந்து பிரசாத விநியோகம் மற்றும் கோவில் தகவல்களுக்கான "திருக்கோவில்" செயலியை அறிமுகப் படுத்துதல் என்ற வசதியானது தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

52. இல்லம் தேடி பிரசாதம் செயலி

தொடங்கப்பட்ட தினம்:

  • 18.05.2023

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இந்து சமய அறநிலைய மற்றும் அறக்கட்டளைத் துறை.  

நோக்கம்:

  • இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் தொடர்பான தகவல்களையும், சேவைகளையும் எளிதாகப் பெறவும், கோயில் பிரசாதங்களை (பிரசாதம்) நேரடியாக பக்தர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பது இதன் நோக்கம் ஆகும்.

பயனாளிகள்:

  • இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்துக் கோவில்களின் பக்தர்கள்.
  • இந்தக் கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வருகை தருகின்றனர்.

தகுதி:

  • கோவில் தகவல் மற்றும் சேவைகளைப் பெற ஆர்வமுள்ள பக்தர்கள்.
  • கோவில் பிரசாதத்தைத் தங்கள் வீடுகளில் பெற விரும்பும் பக்தர்கள்.

கூடுதல் தகவல்:

  • இந்தச் செயலி மூலம் பயனர்கள் அன்னதானம் (உணவு தானம்) மற்றும் கோயில் திருப் பணிகளுக்கு நன்கொடை அளிக்கலாம்.
  • இந்தச் செயலியில் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற சமய நூல்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
  • ஆரம்பத்தில், செயலியில் 50 முக்கிய கோயில்களின் விவரங்கள் இருந்தன என்ற நிலையில் இதன் அடுத்த கட்டத்தில் மேலும் 88 கோயில்களை இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது மற்றும் இறுதிக் கட்டத்தில் அனைத்து கோயில்களையும் இணைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • 48 முக்கியக் கோவில்களில் இருந்து பக்தர்கள் வீடுகளுக்குப் பிரசாதம் அனுப்பும் இந்தத் திட்டமானது, இந்தியத் தபால் துறையுடன் இணைந்து, பிரசாதம் மற்றும் தபால் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுப்பப்படுகிறது.
  • உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், உலகம் முழுவதும் கோயில் பிரசாதமானது மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப் படுகிறது.

53. 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • ஜூன் 12, 2024.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு கீழ், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை.

நோக்கம்:

  • மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் மூலம் பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்தல் மற்றும்  விவசாய இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழகம் முழுவதும் விவசாயிகள்.
  • கிராமப்புற இளைஞர்கள்.

தகுதி:

  • வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
  • விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சியில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள்.

கூடுதல் தகவல்:

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தைத் தொடங்கி வைத்து, ₹20 கோடி ஒதுக்கீட்டில் 4,000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
  • இந்த முயற்சியானது 20 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில், 2,00,000 ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முயற்சி மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் மண்ணின் நுண்ணுயிரிகளைப் பாதுகாக்கும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர்கள், சுழலும் தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் சுழலும் இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்குவதோடு கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சியையும் இது வழங்குகிறது. 
  • தமிழக வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்குப் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இதை வலியுறுத்தும் வகையில் இத்துறைக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளின் வருவாயைக் கணிசமாக அதிகரிக்க கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் உலர் நில மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • மண்ணின் ஆரோக்கியம் மற்றும் மண்ணின் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து உள்ள ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான ஒற்றைப் பயிர் சாகுபடி முறை காரணமாக ஏற்படும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாட்டின் சிக்கல்களை இத்திட்டம் மேம்படுத்துகிறது.
  • இப்பிரச்னைகளை எதிர்கொள்ள, பசுந்தாள் உர விதைகள் விநியோகத்தினைத் தொடங்கி, 22 வகையான பயிர்களுக்கு ₹206 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தி உள்ளது.
  • பசுந்தாள் உரப் பயிர்கள் மண்ணின் சத்துக்களை அதிகரிப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மண்ணின் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம், விவசாயப் பொருட்களின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.
  • முதற்கட்டமாக, இத்திட்டம் 200,000 ஏக்கரில் பாசனம் மற்றும் மானாவாரி பகுதிகளில் ₹20 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • 200,000 விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை முதலமைச்சர் வழங்கினார்.

விவசாய இயந்திரங்களுக்கான குறைந்த வாடகை விகிதங்கள்:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான 2023-24 பட்ஜெட்டில், இ-வாடகை செயலி மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வாடகை விலையில் ₹25 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பை ஒட்டி, ₹10.25 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 சுழலும் தூர்வாரும் இயந்திரங்கள், 90 சுழலும் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கவதற்காக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சி:

  • 2023-24 பட்ஜெட்டில் 500 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள ஆறு இயந்திரமயமாக்கல் மையங்களில் டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்குவதில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.
  • இந்தப் பயிற்சித் திட்டம், ₹1 கோடி ஒதுக்கீட்டில், வேளாண் இயந்திரங்களுக்கான திறமையான ஆபரேட்டர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்