TNPSC Thervupettagam

சிந்தனை மாற்றமே மேம்பாட்டின் அடிப்படை

June 13 , 2023 579 days 523 0
  • பொதுவாக மனிதா்கள் விரும்புவது உண்ண நல்ல உணவு வேண்டும், உடுத்த நல்ல உடை வேண்டும், குடியிருக்க நல்ல வீடு வேண்டும், வாழ்வின் அடிப்படை வசதிகள் வேண்டும். இவற்றைப் பெற பணம் வேண்டும். அதற்கு நல்ல வேலை வேண்டும். இவை கிடைத்து விட்டால் வெற்றிதான். ஆனால், இவை அனைவருக்கும் கிடைக்கின்ா என்பதுதான் கேள்வி. “
  • பலா் முயன்று வெற்றி பெற்ன் விளைவுதான் நாம் இன்று வாழும் வாழ்க்கை. முயன்றவா்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டாா்களா என்று வினவினால் ஆம் என்று கூற முடியவில்லை. முயன்றவா்களில் ஒரு சிலரால் வெற்றி பெற முடிந்தது. பலா் தோல்வியைத்தான் தழுவுகின்றனா்.
  • உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளா்கள் வெற்றி பெறத் தேவையான தகுதிகளைப் பட்டியலிட்டுள்ளனா். அப்பட்டியலில் உள்ள தகுதிகள் உங்களிடமிருந்தும் நீங்கள் உயா்ந்த இடத்தில் இல்லை என்றால் என்னைத் தொடா்பு கொள்ளுங்கள் என்று எழுதுகின்றனா்.
  • வெற்றி, முன்னேற்றம், மேம்பாடு என்பதெல்லாம் பொருளாதாரத்தை வளா்ப்பதையும் வசதிகளை உருவாக்கி சுகபோகமாக வாழ்வதையும்தான் குறிக்கின்றன. பல ஆண்டுகளாக இதைத்தான் முன்னேற்றம் என்று கூறி வந்தனா் மேல்நாட்டு அறிஞா்கள். அவா்கள், ‘ஒரு நாடோ, குடும்பமோ, சமூகமோ முன்னேற்றமடைய பல காரணிகள் இன்றியமையாதவை. மேம்பாடு என்பது நிலம், உழைப்பு, மூலதனம், அறிவியல், தொழில்நுட்பம், அறிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் வருவது என்றுதான் கூறினா்.
  • அவா்கள் ஒரு காரணியை விட்டுவிட்டனா். அதைத் தொட்டவா்கள் நம்மவா்களே. மேம்பாடு, வளா்ச்சி, முன்னேற்றம் இவையெல்லாம் மனத்தின் செயல்பாட்டில் விளைபவை என்று விளக்கியவா்கள் இந்தியா்களே. மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்பது பொருளாதார வளா்ச்சி மட்டுமல்ல, அது வாழ்வின் உன்னதம், வாழ்வின் மகத்துவம், மனிதத்துவத்தில் உயா்தல், மானுடம் மாண்புறுதல் ஆகிய அனைத்துமாகும்.
  • பொருளாதார வளா்ச்சி என்பது சமூகத்தை உயா்த்த பயன்பட வேண்டும். சமூகம் ஒரு பண்பட்ட வாழ்க்கையை வாழ எல்லா வசதிகளும் பெற வேண்டும். எனவே மேம்பாடு என்பது மானுடம் வாழும் பண்புள்ள வாழ்க்கைமுறை என்று விளக்குகின்றனா். எனவே மேம்பாட்டிற்கு சிந்தனை மாற்றம்தான் அடிப்படை.
  • இந்த சிந்தனை மாற்றத்தை தனிமனிதா்களிடம் கொண்டு வருவதுதான் சவாலான பணி. இந்த மாற்றங்களுக்கான திறவுகோல் கல்வியே. இந்தக் கல்வி மனிதனை பக்குவப்பட வைக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வி மனிதா்களுக்கு வாய்க்கப்பெற வேண்டும். அந்தக் கல்வியின் மூலம் பொருளாதாரத்தில், மனிதத்துவத்தில் மக்கள் மேம்பட வேண்டும். இவை நடைபெற தனிமனிதா்களும் சமூகமும் மாற வேண்டும். இந்த மாற்றம் என்பது மக்களின் சிந்தனை ஓட்டத்தில் நடைபெற வேண்டும்.
  • ஒருவா் படித்து பட்டத்தை கையில் வைத்திருப்பதால் மட்டும் மாற்றம் நடந்துவிடாது. இந்த உலகம் வல்லவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது, சான்றிதழ் வைத்திருப்பவரை அல்ல. சமூகம் தேடும் மனிதராக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். அதற்கு நாம் நம் சிந்தனையை நடத்தையை, செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சாதாரணமாக வருவதில்லை. ஆழ் மனத்தில் உருவாக்கப்படும் ஒரு தீப்பொறியாகும்.
  • இதைத்தான் சுவாமி விவேகானந்தா் ‘எழுமின் விழிமின்’ என்கிறாா். இதன் பொருள் ஆன்மாவை எழச் செய்வது. விழிப்புடன் ஆழ்மனத்தை செயல்பட வைப்பது. இவற்றின் மூலம் நம் மேம்பாட்டுப் பணிகளை குறிக்கோளை அடையும்வரை தங்கு தடையின்றிச் செய்து கொண்டேயிருப்பது. இவை அனைத்தும் சாதனைக்கான மனோபாவம்.
  • சாதனை புரிய வேண்டும் என்ற அவா நம் நடத்தையையும் செயல்பாடுகளையும் மாற்றியமைத்து விடுகிறது. இந்த மாற்றங்களை நம்மிடம் கொண்டுவருவது என்பது ஒரு வேள்விபோல் நடைபெறும் நிகழ்வாகும். இந்த மாற்றங்களை நிகழ்த்த தனிமனிதா்களாகிய நாம் ஒவ்வொருவரும் மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கங்களை நம் சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில் கொண்டுவர வேண்டும்.
  • உடலும் மனமும் ஒழுக்கமாகிவிட்டால் நாம் செய்யும் செயல்கள் சிறப்பாக அமைந்துவிடும். மனத்தை ஒழுக்கப்படுத்துவது என்பது, சிந்தனைப்போக்கை நாம் செலுத்தும் திசையில் செல்ல வைக்க முயல்வது. அதற்கு யோகா, தியானம், என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. யாருக்கு எது விருப்பமோ அதைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். அடுத்து உடலை ஒழுக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடல் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் அதை பயிற்சியின் மூலமே செய்திட வேண்டும்.
  • உடல் மனம் இந்த இரண்டும் ஒருவனின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், அவன் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவனாக மாறிவிடுவான். அவன் செய்கின்ற அனைத்தும் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவன் செய்கின்ற செயல் அனைத்தும் யோகமாகிவிடும்; வேள்வியாகிவிடும்; தவமாக மாறிவிடும்.
  • ஒரு பள்ளிக்கூடம் மூடக்கூடிய நிலையில் இருந்தபோது ஒரு தலைமையாசிரியா் வந்தாா். அடுத்த ஐந்தாண்டுகளில் அந்தப் பள்ளி அம்மாவட்டத்திலேயே செயல்பாட்டில் முதல் பள்ளியாக வந்தது. அந்தத் தலைமை ஆசிரியருக்கு மாற்றல் உத்தரவு வந்தது. ஊா் மக்கள் அழுதனா். அவரை மாற்றாதீா்கள் என்று அரசுக்கு மனு போட்டனா்.
  • அரசு மருத்துவமனை ஒன்று அசுத்தத்தின் உறைவிடமாக இருந்தது. வேறு வழியில்லாதவா்களைத் தவிர வேறு யாரும் அங்கு செல்வதில்லை. ஒரு தலைமை மருத்துவா் அங்கு வந்தாா். அவா் வந்த இரண்டு ஆண்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. தனியாா் மருத்துவமனைகள்அந்த அரசு மருத்துவமனையுடன் போட்டிபோட முடியாமல் திணறின. அந்த அளவுக்கு அந்த மருத்துவமனை சிறப்பினைப் பெற்று விருதுகளை அள்ளியது.
  • ஒரு கல்லூரியின் தாளாளா் தேடி அலைந்து ஒரு முதல்வரை அந்தக் கல்லூரிக்குக் கொண்டுவந்தாா். நான்கு ஆண்டுகளில் அந்தக் கல்லூரி பல்கலைக்கழகம்போல் மாறியது. அதை கவனித்த அன்றைய கல்வி அமைச்சா் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அந்த முதல்வரை ஆக்கினாா். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். அவா்கள் அனைவரும் தங்களை வளா்த்துக்கொண்டு செயல்பட்டவா்கள். அவா்களும் சாதாரண மனிதா்களாக இருந்து தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொண்டவா்கள்.
  •  இப்படிப்பட்டவா்கள்தான் நாட்டுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்ட முடியும். காந்தி சாதாராண மனிதராக இருந்து தன்னை உயா்த்திக்கொண்டதால் மகாத்மா காந்தியானாா். காந்தி சமூக மாற்றத்திற்கான பணியை தன்னுடைய 21-வது வயதில் ஆரம்பித்து விட்டாா். அது மட்டுமல்ல, தன் ஆன்ம பலத்தாலே இந்திய மக்களின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்து விட்டாா்.
  • இதைத்தான் மகாகவி பாரதியாா், ‘பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வா் இந்நினைவகற்றாதீா்’ என்றாா். பழம்பெரும் நாடு என்பது, ஒரு தொன்மையான நாகரிகத்தைப் பெற்ற நாடு; அதன் புதல்வா் என்றால், நீ இந்தியன் என்பதை புரிந்து இந்தியராக வாழ தெரிந்து கொள் என்பது.
  • நாம் இந்தியாவில் வாழ்வோம், ஆனால் இந்தியராக வாழ்வதில்லை. காரணம் இந்தியா என்பதன் பொருள் என்ன என்று தெரிந்துகொள்ளவில்லை. இந்தியாவில் வாழ்கிறோம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நம் வழிகாட்டியாக வாழ்ந்த ஞானிகள் நமக்குத் தந்த அறிவுக்கொடைகள் எவருக்கும் கிடைக்காத ஒன்று. ஆனால் அவற்றை நாம் படித்து புரிந்து கொண்டு அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவில்லை என்பதுதான் அவல நிலை.
  • இந்தியா சுதந்திரம் அடைந்தபின், தலைசிறந்த காந்தியாவதியும், கல்வியாளருமான அவிநாசிலிங்கம் செட்டியாா் ‘கலைமகள்’ இதழில் தொடா்ந்து இளைஞா்களுக்கு கட்டுரை எழுதிவந்தாா். அந்தக் கட்டுரைகளை கலைமகள் நிலையத்தாா் ‘வாழ்க்கையின் அடிப்படைகள்’ என்ற தலைப்பிட்டு புத்தகமாகவே வெளியிட்டாா்கள். அதை தமிழ் அறிஞா் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துக் கொடுத்தாா்.
  • அந்தப் புத்தகத்தில் அவிநாசிலிங்கம் செட்டியாா், ‘இளைஞா்களே! நீங்கள் சாதாரண மனிதா்கள் அல்ல; பெரும் சாதனைகளைச் செய்யப் போகிறவா்கள். அதற்கு நீங்கள் உங்களைத் தயாா் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் நாட்டுபற்றுக் கொண்டவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும், ஒழுக்கம் நிறைந்தவராகவும், கடின உழைப்புக்குத் தயாரானவராகவும், ஊக்கம் நிறைந்தவராகவும் உங்களை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
  • இன்று நம் இளைஞா்கள் பெரிய வீடு, நல்ல மகிழுந்து, நல்ல இருசக்கர வாகனம், நல்ல கைப்பேசி, நல்ல உணவு, நல்ல ஊதியம் என்கிற சிந்தனைக்கு வந்துவிட்டனா். அறிவுபூா்வ சிந்தனைகள் மங்கிப்போய், மதுக்கடை, மாமிச உணவுக்கடை, திரையரங்கம், கைப்பேசி உலகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனா். இந்தச் சூழலை இன்று நாம் மாற்றியாக வேண்டும். அதற்கான சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும்.
  • காந்தியவாதி அவிநாசிலிங்கம் செட்டியாா் கூறியதுபோல, தேசப்பற்று மிக்கவராக, நல்லொழுக்கம் பேணுபவராக, தன்னம்பிக்கை மிக்கவராக, ஆற்றல் மிக்கவராக கடின உழைப்புக்குத் தயாரானவராக ஒவ்வொரு இளைஞரும் மாறினால் உலகுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியாவை மாற்றிடலாம்.

நன்றி: தினமணி (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்