TNPSC Thervupettagam
December 15 , 2018 2218 days 3270 0

To read this article in English: Click here

ஏன் சமீபத்திய செய்திகளில் அதிகம் பேசப்பட்டது?
  • ஒரு அமெரிக்கர் சமீபத்தில் சென்டினலிஸ் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இவர்கள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்டினலிஸ்
  • சென்டினலி மற்றும் வட சென்டினல் தீவு வாசிகள் என்றழைக்கப்படும் சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் உள்நாட்டைச் சேர்ந்த தனித்துவ பூர்வகுடி மக்கள் ஆவர்.
  • இவர்கள் இந்தியத் துணைக் கண்டதில் உள்ள வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள வட சென்டினல் தீவில் வசித்து வருகிறார்கள்.

  • உலகில் புதிய கற்காலத்திற்கு முந்தைய கடைசிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இந்த சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் கருதப்படுகின்றனர்.
  • இவர்கள் கடந்த 60,000 ஆண்டுகளில் மிகச்சிறிய வளர்ச்சி அல்லது எந்த முன்னேற்றமும் அடையாமல் பழமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

  • இவர்கள் உயிர் வாழ்வதற்கு காட்டு வளங்கள் மற்றும் கடல் வளங்கள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளனர்.
  • இவர்களது மக்கள் தொகை - 150க்கும் குறைவாகவே உள்ளது. ஏறத்தாழ 40-க்கும் குறைவான மக்களே உள்ளனர்.

 

அந்தமான் பழங்குடியின மக்கள்
  • அந்தமானில் மொத்தமுள்ள 6 முக்கிய பழங்குடியினங்களில்
    • கிரேட் அந்தமானிஸ்
    • ஜாரவா
    • ஓங்கே
    • சென்டினலிஸ்

ஆகிய 4 பழங்குடி இனங்கள் நீக்ரிடோவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  • இரண்டு பழங்குடி சமூகங்கள் மட்டுமே மங்கோலாய்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களாவன
    • சோம்பென்
    • நிக்கோபாரிஸ்

 

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள்
  • குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (Particularly vulnerable tribal group - PVTGs) என்பது குறிப்பாக சில மிகவும் குறைவான வளர்ச்சி நிலையினைக் கொண்ட சில சமூகங்களின் நிலைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட ஒரு வகைப்பாடாகும்.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியனிருக்குள்ளேயே வளர்ச்சி விகிதத்தில் சமநிலையின்மை காணப்படுவதாக தேபார் ஆணையம் (1960-61) குறிப்பிட்டுள்ளது.
  • நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது குறைவான வளர்ச்சி நிலையினையுடைய குழுக்களை அடையாளப் படுத்துவதற்காக பட்டியலிடப்பட்ட இனத்திற்குள்ளேயே ஒரு துணைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
  • இது “மிகப் பழங்கால பழங்குடியினக் குழு” என்று அழைக்கப்படுகிறது.
  • 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கமானது “மிகப் பழங்கால பழங்குடியினக் குழு” என்பதை “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழு” என்று பெயர் மாற்றம் செய்தது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது 75 பழங்குடியினக் குழுக்களை “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களாக” வகைப்படுத்தியுள்ளது.
  • அந்தமான் நிக்கோபார் தீவில்
    • கிரேட் அந்தமானிஸ்
    • ஜாரவாஸ்
    • ஓங்கே
    • சென்டினலிஸ்
    • சோம்பென்

ஆகிய 5 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் உள்ளனர். தமிழ்நாட்டில்

  • இருளர்
  • காட்டு நாயக்கன்
  • குரும்பா
  • கோட்டா
  • பனியன்
  • தோடா

ஆகிய 6 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் உள்ளனர்.  

சென்டினலிஸ் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள்?
  • அந்தமான் நிக்கோபார் தீவுகள் (பழங்குடியின மக்களின் பாதுகாப்பு) விதிமுறைகள், 1956 சட்டத்தின்படி பழங்குடி இன மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பழமை வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இது இந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்றவர்கள் தவிர அனைத்து நபர்களும் இந்த இடங்களில் நுழைவதைத் தடை செய்கிறது.
  • மேலும் இதன்படி பழங்குடி இன மக்களை வைத்து புகைப்படம் திரைப்படம் எடுத்தல் ஆகியவையும் குற்றமாகும்.
  • வெளிநாட்டினர் (தடை செய்யப்பட்ட பகுதிகள்) விதி, 1963-ன் படி தடை செய்யப்பட்ட பகுதிக்கான அனுமதி நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • அயல் நாட்டினர் பாதுகாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அயல் நாட்டினர் தங்கள் வருகைக்கு மிகப் பொருத்தமான காரணங்களைக் கூறி, அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் பயணம் மேற் கொள்ளலாம்.
  • ஆப்கானிஸ்தான் குடிமக்கள், சீன குடிமக்கள், பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அயல் நாட்டினர் ஆகியோர் இந்த பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
  • சமீபத்தில் மத்திய அரசாங்கமானது தடை செய்யப்பட்ட பகுதிக்கான அனுமதியைப் பெறும் நடைமுறையிலிருந்து 29 தீவுகளுக்கு விலக்கு அளித்துள்ளது.
ஏன் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்?
  • பழங்குடி இனமக்கள் தனிமையில் வாழ்வது நோய்கள் எளிதில் ஏற்பட வழிவகை செய்கிறது. அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு அல்லது முற்றிலும் இல்லை.
  • சளி, காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற பொதுவான நோய்களுக்குக் கூட அவர்களிடம் எதிர்ப்பு சக்தி இல்லை.

- - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்