TNPSC Thervupettagam

சோம்நாத் சட்டர்ஜி

August 29 , 2018 2281 days 1726 0
சோம்நாத் சட்டர்ஜி

- - - - - - - - - - - - - - -

  • சோம்நாத் சட்டர்ஜி (பிறப்பு : ஜூலை 25, 1929, தெஸ்பூர், இந்தியா), இந்திய வழக்குரைஞர், அரசியல்வாதி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) - நீண்ட கால மூத்த உறுப்பினர் ஆவார்.
  • சோம்நாத் சட்டர்ஜி வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தார். ஆனால் அவர் கல்கத்தாவில் (தற்பொழுது கொல்கத்தா) வளர்ந்தார்.
  • இவருடைய தந்தை நிர்மல் சந்திர சட்டர்ஜி ஆவார். இவர் வழக்குரைஞர், சட்டநிபுணர் மற்றும் பாராளுமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்தார்.
  • சோம்நாத் சட்டர்ஜி 1971ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 10 முறை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் (இந்திய பாராளுமன்றத்தின் கீழவை). இவர் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தனது கடைசி உறுப்பினர் காலத்தில் சபாநாயகராகப் பணியாற்றினார்.
  • சோம்நாத் சட்டர்ஜி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி காலையில் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கல்வி

  • சோம்நாத் சட்டர்ஜி மித்ரா நிறுவனப் பள்ளி, பிரஸிடென்சி கல்லூரி மற்றும் கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயில்விக்கப் பட்டார்.
  • மேலும் இவர் கேம்பிரிட்ஜில் உள்ள ஜிஸஸ் கல்லூரியில் பயின்றார். இவர் சட்டத் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1952-ல் நிறைவு செய்தார். மேலும் சட்டத் துறையிலேயே முதுகலைப் பட்டத்தையும்  1957-ல் நிறைவு செய்தார்
  • இவர் நேரடி அரசியலில் இணைவதற்கு முன்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார்.

அரசியல் பயணம்

  • சோம்நாத் சட்டர்ஜி 1973ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார் (CPI - Communist Party of India).
  • 1971ஆம் ஆண்டில் அவரது தந்தை மரணமடைந்தார். அவருடைய தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் 1971-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜி வெற்றி பெற்றார்.
  • இவர் 1971ஆம் ஆண்டு மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முறையாக சுயேட்சையாக வெற்றி பெற்ற இவரை CPI(M) ஆதரித்தது. அதன் பின்னர் இவர் ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் 1984ல் நடைபெற்ற தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியிடம் தோல்வியுற்றார்.
  • இவர் 1989 முதல் 2004ஆம் ஆண்டு வரை மக்களவையில் இவருடைய கட்சியின் தலைவராக செயல்பட்டார். 2004ல் நடைபெற்ற தேர்தலில் போல்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று 10வது முறையாக 14வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போல்பூர் மக்களவைத் தொகுதி CPI (M) கட்சியின் கோட்டையாகும்.
  • இவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2004ஆம் ஆண்டு ஜூன் 4ல் 14வது மக்களவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இடைக்கால சபாநாயகராக இருந்து சபாநாயகரான கணேஷ் வாசுதேவ் மவ்லங்கர்க்குப் பின் இரண்டாவதாக இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வெளியேற்றம்

  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான இராணுவப் பயன்பாடு அல்லாத அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2008ம் ஆண்டின் மத்தியில் CPI (M) விலக்கிக் கொண்டது. ஆனால் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.
  • சபாநாயகர் பதவி என்பது அரசாங்கத்தையோ கட்சியையோச் சார்ந்தது அல்ல என்றும் அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் விவாதித்தார். இருப்பினும் இவரை CPI (M) கட்சி அந்த ஆண்டு ஜூலையில் கட்சியிலிருந்து நீக்கியது. இவர் அதற்கு அடுத்த மாதம் தன்னுடைய சபாநாயகர் பதவிக் காலம் முடிவுற்றதும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதன் பிறகு 2009ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

சுயசரிதை

  • “நம்பிக்கை வைத்திருத்தல் : பாராளுமன்றத்தினரின் வரலாற்றில்” என்ற இவரது சுயசரிதை 2010-ல் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • 1996 - சிறந்த பாராளுமன்றத்தினருக்கான விருது
  • 2013 – வாழும் தீர்க்கதரிசி (Living Legend - லிவ்விங் லெஜன்ட்) விருது
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்