ஞாபக மறதி நோயை வெல்லும் கட்டளைகள்
- வயதானவர்களுக்கு ஏற்படும் மூளை சார்ந்த நோய்களில், மூளைத் தேய்மானம் அல்லது ஞாபக மறதி நோய் என்றழைக்கப்படும் அல்சைமரும் ஒன்று. மூளையின் செல்களை சிறிது சிறிதாகச் சிதைக்கும் இந்நோய், வயதான வர்களின் ஞாபகத் திறனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு கட்டத்தில் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும்கூட மறக்க வைக்கும் அளவுக்கு விபரீதமான நோய் இது.
- பொதுவாக 65 வயது தாண்டியவர்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. மூளை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது இந்நோய் ஏற்படுவதைத் தடுக்கும் காரணி ஆகும். அந்த வகையில் இந்நோய் ஏற்படாமல் தடுக்க முக்கியமான சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்:
- நீரிழிவு நோயைக் கட்டுப்பாட் டில் வைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால், அதற்கு தகுந்த சிகிச்சை யைத் தவறாமல் பெற வேண்டும்.
- தலைக்காயம் ஏற்படா மல் தடுப்பது மிக முக்கியம். எனவே, இருசக்கர வாகங்களை இயக்கும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
- விளையாட்டுகளில் ஈடுபடு வது, தொடர்ச்சியாக உடற்பயிற்சி கள் மேற்கொள்வது ஞாபக மறதி நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.
- புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் புகைப் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- இதய சுருக்க ரத்த அழுத்த (Systolic blood pressure) அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.
- ரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் (எல்டிஎல்) அளவு அதிகமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மதுப் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகம் மது குடிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
- வீடுகளில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதன் மூலம் சமூக தனிமைப்படுத்தலை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- மன அழுத்தத்துக்கு சரியான சிகிச்சை பெற வேண்டும்.
- பார்வை இழப்பைத் தடுக்க முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.
- காற்று மாசுபாடுள்ள இடங் களுக்கு செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- அறிவாற்றலைப் பாதுகாப்பதற் கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.
- காது கேளாத குறைபாட்டை உருவாக்கும் அதிக ஒலி மாசுபாட்டை உள்வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். காது கேளாத குறைபாடு உள்ளவர்கள் காது கேட்கும் கருவி களைப் பயன்படுத்த வேண்டும்.
- (செப். 21: உலக அல்சைமர் தினம்).
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2024)