(For English version to this please click here)
இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை
அறிவியல் பங்களிப்புகள்
- உருளைக்கிழங்கின் மரபியல் பற்றிய புரிதல் மற்றும் உறைபனி எதிர்ப்பு கொண்ட உருளைக்கிழங்கு வகைகளின் வளர்ச்சிக்குத் தேவையான குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை சுவாமிநாதன் செய்துள்ளார்.
- அவர் ஆறு தொகுதியினைக் கொண்ட (ஹெக்ஸாப்ளோயிட்) கோதுமையின் உயிரணு மரபியல் குறித்து ஆய்வு நடத்தினார்.
- இது அதிக மகசூல் தரும் கோதுமை வகைகளின் வளர்ச்சிகளுக்குப் பங்களித்தது.
- C4 கார்பன் நிர்ணயம் செய்யும் திறன் கொண்ட அரிசியை வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர் பங்களித்துள்ளார்.
- இது ஒளிச்சேர்க்கை மற்றும் நீர்ப் பயன்பாட்டை மேம்படுத்தும்.
- கதிர்வீச்சு தாவரவியலில் சுவாமிநாதனின் பணிகளில், பிறழ்வுகள் பற்றிய ஆய்வு மற்றும் உரங்களினால் தாவரத்தின் எதிர்வினை மீது ஏற்படும் கதிர்வீச்சின் விளைவுகள் ஆகியவையும் அடங்கும்.
உழவர்களின் நலன்
- விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை மற்றும் நிலையான விவசாய நடைமுறைகள் போன்றவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் நலனுக்காக சுவாமிநாதன் பலவேறு கோரிக்கைகளை வாதிட்டார்.
- 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, விவசாய நெருக்கடிக்கான காரணங்களை ‘சுவாமிநாதன் அறிக்கையின்’ மூலம் ஆய்வு செய்தனர்.
- இது இந்தியா முழுவதும் உள்ள விவசாயச் சங்கங்களின் முதன்மை கோரிக்கையாக தொடர்கிறது.
தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம் 2001
- 2001 ஆம் ஆண்டு தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டத்தை வளர்ப்பதில் அவர் முக்கியப் பங்கினை வகித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பின்மையைப் போக்குதல்
- இந்தியாவில் நடைபெற்ற பசுமைப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார்
- உணவு உற்பத்தியைக் கணிசமாக உயர்த்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல்
- மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் தேசத்தினைப் பசியின் பிணியிலிருந்து வெளியே கொண்டு வருதல்.
நிலையான விவசாயத்திற்கு ஆதரவான வாதங்கள்
- பயிர் வகைகளை மேம்படுத்துவதற்காக நிலையான விவசாயம், மரபியல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வானது ஏற்படுத்தப் பட்டது.
- சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளின் மேம்பாட்டிற்காக சிறந்த தொழில் நுட்பங்கள் மூலம் விவசாய நடைமுறையினை மேம்படுத்த "லேப் டு லேண்ட்" (ஆய்வகத்திலிருந்து நிலத்தில் செயல்படுத்தும்) போன்ற திட்டங்கள் தொடங்கப் பட்டன
- இது விவசாய நடைமுறைகளில் ஆராய்ச்சியின் நடைமுறைப் பயன்பாட்டை ஊக்குவித்தது.
பல்வகைப்பட்ட விவசாய முயற்சிகள்
- ஊட்டச்சத்து, உயிரி வலுவூட்டல், வேளாண்மைக்கான நிதியினை அதிகரித்தல், துல்லியமான முறையிலான விவசாயம் மற்றும் விவசாயத்தில் பெண்களின் தீவிரப் பங்கேற்பு ஆகியவற்றை இது வலியுறுத்தியது.
குட்டநாடு மற்றும் கேரளாவின் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள்
குட்டநாடு தொகுப்பு
- 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான குட்டநாடு பல்லுயிர்த் தொகுப்பினைப் பரிந்துரைப்பதில் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் முக்கியப் பங்கினை வகித்தார்.
- இந்த முயற்சியானது எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையினால் (MSSRF) முன்மொழியப்பட்டது.
- இது சதுப்பு நிலங்களைக் கொண்ட அமைப்புகளை 'சிறப்பு வேளாண் மண்டலமாக' அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாதிட்டது.
- இந்தத் தொகுப்பானது, நீர் பரவும் பகுதிகளைப் பாதுகாத்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குறுகிய காலக் கட்டத்தில் விளையும் நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதல் ஆகியவற்றில் கவனத்தினைச் செலுத்துகிறது.
பல்லுயிர்ப் பாதுகாப்பு
- இடுக்கி மாவட்டத்தின் பல்லுயிர்த் தொகுப்பின் மீது (இடுக்கி தொகுப்பு என அழைக்கப்படுகிறது) 2008 ஆம் ஆண்டு MSSRF மையமானது வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் வயநாட்டில் 'சமூக வேளாண் பல்லுயிர் மையத்தினை' நிறுவுதல் மூலம் பல்லுயிர் பாதுகாப்பினை ஏற்படுத்தல் ஆகியவை டாக்டர் சுவாமிநாதனின் பங்களிப்புகளுக்குத் தெளிவான சான்றுகளை வழங்குகிறது.
- பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பானது, பொது விழிப்புணர்வு, சமூகப் பங்கேற்பு மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு ஆகியவற்றின் மூலம் அவரது வாதமானது அடிக்கோடிட்டுக் காட்டப் பட்டது.
- இது கேரளாவில் உள்ள இடங்களிலும் பண்ணைகளிலும் தேவையான பாதுகாப்பு மரபுகளைக் காப்பதை ஊக்குவிக்கிறது.
முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பதவிகள்
- 1972 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில், அவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (ICAR) பொது இயக்குநராக பதவி வகித்துள்ளார்.
- அங்கு பதவி வகித்த போது, அவர் இந்தியாவின் தாவர, விலங்கு மற்றும் மீன் மரபணு வளங்களுக்கான தேசியப் பணியகத்தை உருவாக்கினார்.
- இந்திய வன ஆய்வுகளின் (FSI) மாற்றத்திலும் அவர் முக்கியப் பங்கினை வகித்தார்.
- 1979 ஆம் ஆண்டு இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பு மன்றத்தின் சுதந்திரமான தலைவர் (1981–85)
- FAO மன்றத்தின் சுதந்திரமானத் தலைவராக இருந்த காலக் கட்டத்தில், உலகளாவிய விவசாயக் கொள்கைகள் மற்றும் உத்திகளை வழிநடத்துவதில் சுவாமிநாதன் முக்கியப் பங்கினை வகித்தார்.
இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் (1984-90)
- இந்த நிலையில் அவரது தலைமையானது பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான உலகளாவிய முயற்சிகளுக்குப் பங்களித்துள்ளது.
இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் தலைவர் (இந்தியா) (1989–96)
- WWF அமைப்பில் இந்தியாவின் சார்பான சுவாமிநாதனின் தலைமைத்துவமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (ICAR) பொது இயக்குநர்
- இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (ICAR) பொது இயக்குநராகப் பணியாற்றினார்.
- இந்தியாவில் முக்கியமான விவசாய ஆராய்ச்சிக்கான முயற்சிகளை ICAR அமைப்பின் பொது இயக்குநராக சுவாமிநாதன் முன்னெடுத்தார்.
- அவர் நாட்டின் விவசாயத்திற்குத் தேவையான நிலப்பரப்புகளை வடிவமைத்து உள்ளார்.
- இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியை முன்னேற்றுவதில் அவர் முக்கியப் பங்கினை வகித்துள்ளார்.
- அவர் சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் விவசாய அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
- 2001 ஆம் ஆண்டில், உலகப் பாரம்பரிய மையமான சுந்தரவனப் பகுதிகளில் பல்லுயிர் மேலாண்மை குறித்த இந்தியா – வங்கதேசம் கூட்டுத் திட்டத்திற்கான பிராந்திய வழிகாட்டுதல் குழுவின் தலைவராக இருந்தார்.
- பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பல பதவிகளை வகித்துள்ளார்.
- அவர் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறித்து இந்திய அரசிற்குப் பலமுறை அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
- உயிர்க்கோள இருப்புக்களை நிர்வகிக்கத் தேவையான அறங்காவலர் மேலாண்மைத் திட்டம் என்ற கருத்தினை அவர் தொடங்கினார்.
- அவர் மன்னார் வளைகுடா பகுதிக்கான உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையை நிறுவினார்.
- அவர் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) பொது இயக்குநராகத் தலைமை வகித்துள்ளார்.
- இது 1987 ஆம் ஆண்டு, அவருக்கு முதல் உலக உணவுப் பரிசானது வழங்கப் படுவதற்கு முக்கியப் பங்காற்றியது.
- அவர் விவசாயத் துறையில் மிக உயர்ந்த மரியாதைக்குரியவராக அங்கீகரிக்கப் பட்டார்.
- "பொருளாதாரச் சூழலியலின் தந்தை" என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது அவரை அழைத்தது.
- அவர் பக்வாஷ் மாநாடுகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்தார்.
- 1990 ஆம் ஆண்டில் அவர், “வேளாண்மை மேற்கொள்ளும் போது அது தொடர்புடைய சுற்றுச்சூழல் பாதிப்புகளானது இல்லாமல் நிரந்தரமாக உற்பத்தித் திறன் பெற வேண்டும்" என்ற அவரது பார்வையை விவரிப்பதற்காக "எப்போதும் பசுமைப்புரட்சி" என்ற வார்த்தையை உருவாக்கினார்.
- அவர் 2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டிற்கு இடையில் ஒரு பதவிக் காலத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
- அவர் இந்தியாவில் பெண் விவசாயிகளை அங்கீகரிப்பதற்காக தனது பதவிக் காலத்தில் ஒரு மசோதாவினை முன்வைத்தார்.
பாராட்டுகள், விருதுகள் மற்றும் அங்கீகாரம்
- விவசாயத்தில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்புகளுக்காக ஏராளமான பாராட்டுகளையும் சர்வதேச மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
- 1961 ஆம் ஆண்டு உயிரியல் அறிவியலுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினைப் பெற்றார்.
- இந்தியாவின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளான பத்மஸ்ரீ (1967), பத்ம பூஷண் (1972) மற்றும் பத்ம விபூஷண் (1989) ஆகிய விருதுகளும் அவருக்கு வழங்கப் பட்டு உள்ளன.
- இதில் இந்தியாவின் கோதுமை மற்றும் அரிசி உற்பத்திக்கு அவர் செய்தப் பங்களிப்புகளுக்காக 1987 ஆம் ஆண்டு முதல் உலக உணவுப் பரிசினைப் பெற்றவர் என்ற பெருமையும் அடங்கும்.
- ராமன் மகசேசே விருது (1971) மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது (1986) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றார்.
- 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் வழங்கப்படும் மகாத்மா காந்தி தங்கப் பதக்கத்தினையும் அவர் பெற்றுள்ளார்.
சுவாமிநாதன் தலைமையிலான முக்கிய குழுக்கள்
- எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவானது தேசிய விவசாயிகள் ஆணையம் என்றும் அழைக்கப் படுகிறது.
- இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொண்ட சவால்களை சரி செய்வதற்கு தேவையான நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் பரந்த அளவிலான நடவடிக்கைகளையும் இந்தப் பரிந்துரையானது உள்ளடக்கியுள்ளது.
முக்கியப் பரிந்துரைகள்
அரசு முதலீட்டை அதிகரித்தல்
- நீர்ப்பாசனம், வடிகால், நில மேம்பாடு, நீர்ப் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் சாலை இணைப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புகளின் பொது முதலீட்டினைக் கணிசமாக அதிகரிக்க வேண்டும்.
MSP அமலாக்கம்
- விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குவதற்கும், உலகமயமாக்கலை எதிர்கொண்டு வரும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை (MSP) அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை அந்த ஆணையம் வலியுறுத்தியது.
C2+50%
- விரிவான மொத்த செலவில் (C2) 50% தொகையினை வரம்பாக நிர்ணயித்து வழங்கும் அளவில் MSPயை அமைக்க அந்த ஆணையம் பரிந்துரைத்தது.
- குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட செலவுகள், சொந்தமான நிலத்தின் வாடகை மற்றும் சொந்தமான மூலதனத்தின் மீது கணக்கிடப்பட்ட வட்டி ஆகியவையும் இதில் அடங்கும்.
ஒரே நாடு - ஒரே சந்தை
- வணிகர்களிடையே வணிக நிலையக் கூட்டணியினை அமைத்தல் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு ஒருங்கிணைந்த தேசிய விவசாயச் சந்தையை நிறுவ இந்த ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
- இது ‘ஒரே நாடு, ஒரே சந்தை’ என்று அழைக்கப்படுகிறது.
சந்தைகளுக்கான மேம்பாடு
- இது உள்ளூர் உற்பத்திக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளை மேம்படுத்துவதற்கும், சாலை வரி மற்றும் உள்ளூர் வரிகளை ஒழிப்பதன் மூலம் சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்குவதற்கும் பரிந்துரைத்தது.
நிலச் சீர்திருத்தங்கள்
- உபரி மற்றும் தரிசு நிலங்களை உழவர்களுக்கு விநியோகிப்பதற்கு இந்த ஆணையமானது பரிந்துரைக்கிறது.
- முதன்மையாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலம் மற்றும் காடுகளை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக திசை திருப்பிப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது பழங்குடியினர் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கான மேய்ச்சல் உரிமைகளையும், பருவகால அணுகலையும் உறுதி செய்கிறது.
தேசிய நிலப் பயன்பாடுகளுக்கான ஆலோசனை சேவை
- இடம் மற்றும் பருவநிலைச் சார்ந்த அடிப்படையிலான சூழலியல், வானிலை மற்றும் சந்தைப் படுத்தல் காரணிகளுடன் நிலப் பயன்பாட்டு முடிவுகளை இணைக்கக் கூடிய ஒரு சேவையை நிறுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
நில விற்பனைகளை ஒழுங்குபடுத்துதல்
- நிலத்தின் அளவு, முன்மொழியப் பட்ட பயன்பாட்டின் தன்மை மற்றும் வாங்குபவர் வகை போன்ற காரணிகளின் அடிப்படையில் விவசாய நிலத்தின் விற்பனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறையை உருவாக்குதல்.
நீர் மேலாண்மை
- நீர் தொடர்பான நிலையான மற்றும் சமமான அணுகலை ஊக்குவித்தல்
- மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் நீர்நிலை மீள்நிரப்பு மூலம் நீர் விநியோகத்தினை அதிகரித்தல்
- நீர்ப்பாசனத் துறையில் கணிசமாக முதலீடு செய்தல்.
கடனுக்கான அணுகல்
- ஏழைகளுக்கான முறையான கடன் அமைப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல்
- பயிர்க் கடனுக்கான வட்டியை குறைத்தல் வேண்டும்.
- பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் போது கடன் மீட்பு தடைகளை அமல்படுத்தச் செய்தல்.
விவசாயிகளுக்கான அபாயகால நிதி
- இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்பதற்காக வேளாண் அபாய நிதியத்தை நிறுவுதல்.
பெண் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டைகள்
- கூட்டு உரிமைகளைப் பெற்றுள்ள பெண் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்குதல்.
பயிர்க் காப்பீடு
- அனைத்துப் பயிர்களுக்கும், குறைந்த காப்பீட்டுக் கட்டணத்துடன் நாடு முழுவதும் பயிர்க் காப்பீட்டை விரிவுபடுத்துதல்.
- கிராமப்புறத்திற்கான காப்பீட்டு மேம்பாட்டு நிதியை உருவாக்குதல்.
வாழ்வாதார மேம்பாடு
- நிதிச் சேவைகள், உள்கட்டமைப்பு, மனித மேம்பாடு மற்றும் வணிக மேம்பாட்டுச் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
சுகாதாரம்
- மலிவு விலையில் சுகாதாரக் காப்பீடுகளை வழங்குதல்
- தற்கொலைகள் அதிகம் நடக்கும் இடங்களில் கவனம் செலுத்துவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புத்துயிர் அளித்து அதனைப் புதுப்பிக்கச் செய்தல்.
-------------------------------------