TNPSC Thervupettagam

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

September 10 , 2023 435 days 11622 0

(For English version to this please click here)

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

  • இந்தியாவிலேயே முதன்முதலில் இது போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இது தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான சமூக நலத் திட்டமாகும்.
  • பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15-09-2022 அன்று, தமிழக அரசால் மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப் பட்டது.

  • தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது தமிழ்நாட்டில் "ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" அல்லது "தமிழகத்தின் காலை உணவுத் திட்டம்" அல்லது "தமிழ்நாடு காலை உணவுத் திட்டம்" போன்ற பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.
  • தமிழகத்தில் முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு நாளின் மிக அத்தியாவசிய உணவான காலை உணவினை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.
  • இதனை இந்தத் திட்டத்தை அறிவிக்கும் நிகழ்வின் போது தமிழக முதல்வர் தெரிவித்து ள்ளார்.
  • அதிகாலையில் பள்ளிக்குச் செல்வதால், பல குழந்தைகள் காலை உணவினைத் தவிர்க்கின்றனர்.
  • காலை உணவினைத் தவிர்ப்பது மாணவர்களை சோர்வாகவும், கோபமாகவும், அமைதியற்றதாகவும் ஆக்குகிறது.
  • இத்திட்டத்தின் கீழ், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக 33.56 பில்லியன் ரூபாய்களை அரசாங்கமானது அங்கீகரித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு அரசானது காலை உணவினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக சுமார் 1.14 மில்லியன் மாணவர்கள் பள்ளியில் காலை உணவினைப் பெறுவார்கள்.

  • இது ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நாட்களில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ள காலை உணவினை வழங்கும்.
  • இந்தத் திட்டமானது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப் படும்.
  • தற்போதைய காலத்தில் அவரது கட்சி தலைமையிலான நிர்வாகத்தின் மூலம், பள்ளி மதிய உணவுத் திட்டமானது  உயர் மட்டத்திற்கு உயர்த்தப்படும்.
  • 150-500 கிராம் கொண்ட சாம்பார் மற்றும் காய்கறிகளுடன் தயாரிக்கப்பட்ட காலை உணவானது ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • ஐந்து வேலை நாட்களுக்குத் தேவையான (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை உணவுப் பட்டியலை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த யோசனை எவ்வாறு உருவானது?

  • தமிழகத்தின் மதிய உணவு திட்டத்திற்கு குறைந்தது 100 ஆண்டுகள் வரலாறு உண்டு.

(அ) ​​சுதந்திரத்திற்கு முன்

  • 1920 ஆம் ஆண்டு உலகின் முதல் மதிய உணவுத் திட்டமானது சென்னையில் தொடங்கப் பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு நவம்பரில், மெட்ராஸ் மாநகராட்சி மன்றமானது ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
  • இது ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ஒரு அணாவுக்கு மிகாத செலவில் வழங்கப் பட்டது.
  • எழுத்தாளர் ஆர் கண்ணன், ‘அண்ணா : தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சி என் அண்ணாதுரைஎன்ற தனது புத்தகத்தில், தியாகராயச் செட்டியாரை மதிய உணவு திட்டத்தின் தந்தை என்று அழைத்துள்ளார்.
  • அன்றைய மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான தியாகராய செட்டியார், அப்பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இத்திட்டமானது பின்னர் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதால் அது மாணவர்களின் அதிக சேர்க்கைக்கு வழிவகுத்தது.

(ஆ) சுதந்திரத்திற்குப் பின்

  • இந்தக் கருத்தானது 1956 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பயன்பாட்டைக் கண்டது.
  • மாநிலம் முழுவதுமுள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவினை வழங்க அப்போதைய முதலமைச்சர் கே.காமராஜ் அவர்கள் முடிவு செய்தார்.
  • இது 1956 ஆம் ஆண்டில் கவிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதி) தொடங்கப் பட்டது.
  • 1956-57 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
  • 1957 ஆம் ஆண்டு இந்தத் திட்டமானது சென்னையில் தொடங்கப்பட்டது.
  • முதற்கட்டமாக 1,300 சத்துணவு மையங்களில் உள்ள 65,000 மாணவர்களை உள்ளடக்கியதாக தொடங்கப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு ஜூலையில், அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், அங்கன்வாடிகளிலுள்ள 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினார்.
  • நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மதிய உணவுத் திட்டத்தினை, 'ஊட்டச் சத்து மிக்க மதிய உணவுத் திட்டமாக' மேம்படுத்தினார்.
  • இது கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 5-9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து, VI முதல் X வகுப்பு வரையிலான மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • அதன்பின் 1989 ஆம் ஆண்டு முதல்வர் மு. கருணாநிதி, ஊட்டச்சத்தான ஒரு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் வேக வைத்த முட்டைகளை வழங்குவதை அவர் அறிமுகப்படுத்தினார்.
  • இது தற்போது செயல்பாட்டிலுள்ளதோடு மேம்படுத்தப் பட்டும் வருகிறது.
  • பின்னர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டமானது நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டது.
  • ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது (2011-16), 2013 ஆம் ஆண்டு உணவுப் பட்டியலில் குழந்தைகளின் விருப்பப்படி மசாலா முட்டைகளுடன் பல்வேறு உணவுகள் சேர்க்கப் பட்டன.
  • அதே போல், தமிழ்நாட்டில் இந்த காலை உணவுத் திட்ட வசதியானது தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குழந்தைகளின் சுயமரியாதையை அதிகரிப்பதோடு அவர்களின் உடல்நல ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

மதிய உணவுத் திட்டம்

  • மதிய உணவுத் திட்டம் என்பது இந்திய அரசின் பள்ளி உணவுத் திட்டமாகும்,
  • இது நாடு முழுவதும் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் மீதான உரிமைகளுக்கான மாநாட்டின் கீழ், குழந்தைகளுக்கு "போதுமான சத்தான உணவை" வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்தியா UNCRC என்ற உடன்பாட்டினை அங்கீகரித்தது.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற சட்டத்தின் கீழ் மதிய உணவுத் திட்டமானது செயல்பாட்டில் உள்ளது.
  • இந்தத் திட்டம் தொடக்க மற்றும் தொடக்க மேல்நிலை வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு வேலை நாட்களில் இலவச மதிய உணவை வழங்குகிறது.

காலை உணவுத் திட்டத்தின் நோக்கங்கள்

  • பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது.
  • இது போன்ற செய்திகளைக் கொண்டு சேர்ப்பது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி சமூகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
  • பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • இது அவர்களுக்கு நாள் ஒரு நல்ல தொடக்கத்திற்கு உதவும்.
  • மாநில அரசானது 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான கட்டத்திற்கு 33.56 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

  • குழந்தைகளைப் பள்ளிகளில் படிப்பதற்காக சேர ஊக்குவித்தல்.
  • ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளை பாதுகாத்தல்.
  • பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
  • காலை உணவில் மாணவர்களுக்கு 13 வகையான உணவுப் பொருட்கள் வழங்கப் படும்.
  • தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் பல கட்ட நிலைகளாகச் செயல்படுத்தப் படும்.
  • முதற்கட்டமாக 1969 பள்ளிகளைச் சேர்ந்த 1,54,108 மாணவர்கள் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் கீழ் சேர்க்கப் படுவார்கள்.
  • இரண்டாம் கட்டத்தில் 30,122 தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளியின் சுமார் 18,00,000 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
  • பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தமிழக அரசுப் பள்ளிகளின் வருகை சராசரியாக 30 சதவீதம் அதிகரித்துள்ளதைத் தமிழக அரசு கண்காணித்துள்ளது.

தகுதி

  • தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடையத் தேவையான தகுதிகள்:
  • மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்
  • மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரைக்குள் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்
  • மாணவர் அரசுப் பள்ளியில் பிடிப்பவராக இருத்தல் வேண்டும்

திட்டத்தின் நன்மைகள்

  • காலை உணவு குழந்தையின் மூளை மற்றும் பொது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிற வகையில் இந்தத் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன,
  • இந்தத் திட்டம் குழந்தைகளை நன்கு ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு ஊட்டச்சத்தும் அளிக்கிறது.
  • இது பள்ளியில் பசியை உணராமல் நாள் முழுவதும் கவனத்துடன் இருக்க மாணவர்களுக்கு உதவுகிறது.
  • இத்திட்டம் சுமார் 1.25 லட்சம் மாணவர்களுக்கு ஆரம்ப நிலையிலான பலன்களை வழங்குகிறது.
  • இத்திட்டம் தொடக்கப் பள்ளிகளில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க உதவும்.
  • குறிப்பாக பின்தங்கிய பின்னணிப் பகுதிகள் மற்றும் தேவையான சத்தான உணவுகள் இல்லாத பெருநகரங்களில் உள்ள குழந்தைகளுக்கு காலையில்  நல்ல உணவினைப் பெற இது உதவுகிறது.
  • மாநகராட்சிகளில் 43,600க்கும் மேற்பட்ட மாணவர்களும், நகராட்சிகளில் 17,400க்கும் மேற்பட்ட மாணவர்களும், கிராமப் பஞ்சாயத்து எல்லைகளில் 42,800க்கும் மேற்பட்ட மாணவர்களும், கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் 10,100க்கும் மேற்பட்ட மாணவர்களும் காலை உணவுத் திட்டத்தால் பயனடைவார்கள்.
  • பள்ளி வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இலவச காலை உணவு வழங்கப்படும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்