TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV)

May 22 , 2023 596 days 1698 0

(For the English version of this Article Please click Here)

  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (Tamil Nadu Arasu Cable TV Corporation Limited - TNACTV) என்பது தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனம் ஆகும்.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 என்ற சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி அன்று துவங்கப் பட்டது.
  • இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன.
  • இந்நிறுவனம் தனது சேவையைத் துவங்குவதற்கு முன்னர், ஒரு சில தனியார் கேபிள்  நிறுவனங்கள்  இந்தத் தொழிலில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அதிக அளவுக் கட்டணத்தை வசூலித்து வந்தன.
  • எனவே இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை வழங்கச் செய்வதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

நோக்கம்

  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) விதிமுறைகளின் கீழ் அதிக பட்ச வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை அடைய வைப்பது.
  • அந்த நிறுவனத்தில் பதிவு செய்த உள்ளூர் கேபிள் டிவி செய்குநர்களின் (LCO)  வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் / ஊக்குவித்தல்.
  • உள்ளாட்சி அமைப்புகள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் குடிமக்களுக்கு மையப்படுத்திய சேவைகளை வழங்குதல்.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய இணைப்பினை வழங்குதல்.

தொலை நோக்குப் பார்வை

  • உயர்தரமான டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகள், அரசு இ-சேவை மைய சேவைகள் மற்றும் இணைய தளச் சேவைகளைப் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குதல்.

குறிக்கோள்

  • குறைந்த கட்டணத்தில் உயர்தரமான கேபிள் டிவி சேவையை உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி செய்குநர்கள் (LCO) மூலமாகப் பொது மக்களுக்கு வழங்குதல்.
  • கேபிள் டிவி மற்றும் இணையச் சேவைகள் மூலம் உள்ளூர் கேபிள் டிவி செய்குநர்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்குவதற்கான சூழலை வழங்குதல்.
  • பொது மக்களுக்கு ஒரு உயர்தர இணையச் சேவையைக் குறைந்த கட்டணத்தில் உள்ளூர் கேபிள் செய்குநர்களின் மூலமாக வழங்குதல்.
  • தொடர் (Analog) டிரான்ஸ்மிஷனைப் படிப்படியாக நிறுத்தவும் மற்றும் இலக்க முறை டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை மேம்படுத்தவும் எண்ணுதல்.
  • பொதுமக்களின் நலனுக்காக முன்மாதிரியான இ-சேவை  அலுவலகங்களை நிறுவுதல்.

தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தைப் பற்றி

  • அரசு கேபிள் டிவி கழகம் 2007 ஆம் அண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி அன்று பொது மக்களுக்கு மலிவு விலையில் உயர்தர கேபிள் அலைவரிசைகளை வழங்கும் நோக்கத்துடன் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது.
  • இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் தலைமை அலுவலகங்கள் நிறுவப்பட்டன.
  • 2011 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதையத் தமிழக முதல்வர் ஜெயலலிதா  பல்வேறு காரணங்களால் செயலிழந்து போன அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டு எடுக்கவும், அதன் செயல்பாடுகளைப் புதுப்பிக்கவும் மற்றும் விரிவாக்கம் செய்யவும் வேண்டி 3 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார்.
  • மேலும் இதற்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) எனப் பெயரிடப்பட்டது.
  • அப்போது மாநிலத்தில் இருந்த உள்ள 27 மாவட்டங்களில் விருப்பமுள்ள தனியார் பல அமைப்பு செய்குநர்களின் தலைமை முனைகளை TACTV குத்தகைக்கு எடுத்துள்ளது.
  • அது 4 மாவட்டங்களில் தற்போதுள்ள நான்கு டிஜிட்டல் தலைமை முனைகளைப் புதுப்பித்து உள்ளது
  • 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியின் சட்டமன்ற உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணத் தொகை ரூபாய் 70 என தெரிவிக்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று வேலூரில் முதல் கேபிள் டிவி நிறுவனத்தின் தலைமையிடம் துவங்கப் பட்டது.
  • பின் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதல் சென்னை நகரப்பகுதிகளுக்கு இந்தச் சேவை வழங்கப்பட்டது.
  • TACTV உயர் தரமான கேபிள் டிவி சேவைகளை மலிவான விலையில் மாதத்திற்கு 180 ருபாய்க்கு  90-100 சேனல்களை வழங்குகிறது.
  • இதற்கு கேபிள் டிவி செய்குநர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு அமோகமாக இருந்தது.
  • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று  இந்நிறுவனம் தனது சேவையை தொடங்கிய போது இந்நிறுவனத்தின் சந்தாதாதரர்களின் எண்ணிக்கை 4.94 இலட்சங்கள் என இருந்தது.
  • 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.17 லட்சமாக உயர்ந்து  உள்ளது.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 137 கட்டணச் சேனல்களின் அலைவரிசைகளை வழங்குகிறது.
  • இந்த நிறுவனம் தற்பொழுது இலவசச் சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களுடன் சேர்த்து மொத்தம் 90 முதல் 100 சேனல்களைப் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழங்கும் சேவையானது பொதுமக்கள் மற்றும் கேபிள் டிவி செய்குநர்களின் நலனுக்காகவும் அரசாங்கம் ஏற்படுத்தப் பட்டுள்ள அமைப்பு ஆகும்.
  • இந்த நிறுவனம் சுமார் 1200 உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேவையை ஒலிபரப்பச் செய்வதற்கான ஒதுக்கீடு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றில் சுமார் 800 தனியார் உள்ளூர் அலைவரிசைகளில் தற்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது

டிஜிட்டல் கேபிள் டிவி சேவை

  • மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 தேதி  அன்று டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் (DAS License) வழங்கி உள்ளது.
  • மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்தியாவிலேயே டிஜிட்டல் உரிமம் பெற்ற முதல் நிறுவனமாகும்.
  • சிறந்த டிஜிட்டல் கேபிள் டிவி ஒளிபரப்பினை உறுதி செய்வதற்காக, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறை MPEG2 என்ற தொழில்நுட்பத்திலிருந்து MPEG4 என்ற தொழில்நுட்பத்திற்குத் தரம் உயர்த்தப் பட்டது.
  • இது அதிக சேனல் திறனைக் கொண்ட டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனைக்  கொண்டுள்ளது.
  • டிஜிட்டல் கேபிள் டிவி சேவைக்காக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறை MPEG4 என்ற தொழில்நுட்பத்திற்குத் தரம் உயர்த்தப்பட்டது
  • 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் விலையில்லா வரையறைக்கப் பட்ட  செட்டாப் பாக்ஸ்களை (SD) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கியது.
  • சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களில் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் (HD) சேவையை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம். டிஜிட்டல் முறையில் 218 சேனல்களை  ரூ.140/- + GST என்ற சந்தா கட்டணத்தில் வழங்குகிறது (136 கட்டணமில்லா சேனல்கள் + 82 கட்டண சேனல்கள்).
  • இது நாட்டிலேயே மிகக் குறைந்த கேபிள் டிவி சந்தா கட்டணமாகும்.
  •  இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ.70/- + GST என்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ரூ.70/- + GST என்றும் வருவாய் பங்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.
  • குறைந்த கட்டணத்தில் புதியத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய செட்டாப் பாக்ஸ்கள் மூலம்,  தரமான டிஜிட்டல் கேபிள் டிவி ஒளிபரப்பினைப் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

அரசு இ-சேவை மையங்கள்

  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், அரசின் சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக,  மாநிலம் முழுவதும் 2014 - ஆம் ஆண்டு அரசு இ-சேவை மையங்களை நிறுவியது.
  • தற்பொழுது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 511 அரசு இ-சேவை மையங்களை நகர்ப்புறங்களில் நிர்வகித்து 136 வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

  • இவற்றுடன் கூடுதலாக பின்வரும் சேவைகளையும் பிரத்தியேகமாக வழங்கி வருகிறது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப் படுபவர்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும் சேவை.
  • வாக்காளர் அடையாள மாற்று அட்டைகள் அச்சிட்டு வழங்கும் சேவை.
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக் கழகம் விற்பனை செய்யும் பாடப் புத்தகங்களை  மாற்றுவதற்கு இணைய தளத்தில் பதிவு செய்யும் சேவை.
  • இந்நிறுவனத்துடன் இணைந்து வருவாய்ப் பங்கீட்டு முறையில் செயல்பட விருப்பமுள்ள நகர்ப் புற இணைய உலாவல் மைய உரிமையாளர்களை, விருப்ப மனு அளிக்கக் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
  • துவரை, 2148 விண்ணப்பதாரர்களுக்கு அதனை வழங்குவதற்கு அரசு அனுமதி வழங்கப் பட்டு உள்ளது.

நிரந்த ஆதார் சேர்க்கை மையங்கள் (PEC)

  • தமிழ்நாட்டில் புதிய ஆதார் சேர்க்கை மேற்கொள்ளும் பணிக்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)  மற்றும் மின் ஆளுமை ஆணையரகத்தைப் பதிவாளராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • ஆதார் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்வதற்காக வேண்டி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல்' தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
  • தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 318 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை மாநிலம் முழுவதும் அமைத்துள்ளது.
  • மேலும் பொது மக்களின் தேவைக்கேற்ப, தற்போதுள்ள 318 அரசு நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு இணையம் மற்றும் இணைப்புச் சேவை நிறுவனம் மூலம் இல்லங்களுக்கு இணையதளச் சேவை (TANICS)

  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், இணையதளம் தொடர்பான சேவைகளைப் பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்காக தமிழ்நாடு இணையம் மற்றும் இணைப்புச் சேவை நிறுவனம் (TANICS) என்ற துணை நிறுவனத்தினை 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 தேதி அன்று துவக்கியது.
  • மத்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையிடமிருந்து இணையச் சேவையினை வழங்கச் செய்வதற்காக ISP உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்