TNPSC Thervupettagam

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023

October 12 , 2023 470 days 2049 0

(For English version to this please click here)

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை

  • வேலைவாய்ப்பை வழங்குவதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
  • இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களான, பிரம்மாண்டமான கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் காடுகள், அழகான கடற்கரைகள் போன்றவை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது.
  • இவ்வளவு பெரிய வாய்ப்புகள் நிறைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
  • உலகளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சுற்றுலா ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலாக உள்ளது.

  • திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் போன்ற பலதரப்பட்ட திறன்களைக் கொண்டவர்களுக்கு  வேலைவாய்ப்பினை உருவாக்கும் சாத்தியமானது சுற்றுலாத் துறைக்கு உள்ளது.
  • ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக தமிழகத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை வகுக்கப் பட்டுள்ளது.
  • இது சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பது மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு முதலீட்டையும் ஈர்க்கும் வகையில் தேவையான வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை அதிகரிப்பதை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது, மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு வலுவான அடித்தளம் மற்றும் முற்போக்கான அணுகுமுறையை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
  • சுற்றுலாத் துறையில் பல்வேறு தளங்களில் பணிபுரியும் சுற்றுலா வல்லுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா நிபுணர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 21.31% மற்றும் 21.86% சதவீதத்துடன் தமிழ்நாடு மிகப்பெரிய சுற்றுலாத் துறையினைக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு சுற்றுலா அமைச்சகத்தின் அறிக்கையின்படி, உள்நாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 494.8 மில்லியனாக இருந்தது.
  • இது நாட்டின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இந்த மாநிலத்தை உருவாக்குகிறது.
  • இது நாட்டிலேயே அதிகளவிலான 6.86 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைகளைக் கொண்டுள்ளது.
  • இதனால் தமிழ்நாடானது நாட்டிலேயே சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான ஒரு மாநிலமாக மாறி வருகிறது.
  • தமிழ்நாடானது 4,000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடானது நம் நாட்டிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோயில் கட்டிடக்கலை மற்றும் இசை, நடனம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நுண்கலைகள் போன்ற வாழும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

  • தமிழ்நாடானது அதன் கோவில் நகரங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள், மலை வாசஸ்தலங்கள், நீர்வீழ்ச்சிகள், தேசியப் பூங்காக்கள், உள்ளூர் உணவு வகைகள், இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகள் ஆகியவற்றிற்காக நன்கு அறியப் பட்டுள்ளது.
  • 260 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தமிழகம் நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
  • இதில் சுற்றுலாவானது அதன் வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மாநிலத்தில் சுற்றுலாவானது மேம்படுத்தப்படுகிறது.
  • தமிழ்நாடானது ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தலமாக இருப்பதோடு, அதைச் சார்ந்தத் தொழில்துறையானது நாட்டிலேயே மிகப்பெரியதாக உள்ளது.
  • பல்நோக்கு இலக்குகளுடன், ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சிகரமான அனுபவமிக்க இடமாக மாநிலத்தை மேம்படுத்த தமிழக அரசு தனது புதிய சுற்றுலாக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

  • 2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் மேம்பட்ட சுற்றுலாப் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டிருப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
  • மேலும், இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் சுற்றுலா தளங்களிலும் மெய்நிகர் சுற்றுலா தகவல் மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் முதல் சுற்றுலாக் கொள்கையின் அறிமுகமுகமானது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையினை ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார நிலப்பரப்பில் சுற்றுலா முக்கியப் பங்கினை வகிப்பதோடு, அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், வரலாற்றுத் தளங்கள், இயற்கை அழகு மற்றும் துடிப்பான மரபுகள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
  • தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையானது சுற்றுலாவைத் தமிழ்நாட்டின் முக்கியப் பொருளாதாரத் துறையாக மாற்றுவதற்கான ஒரு கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கான வருவாயினை அதிகரித்தல், உள்ளூர்ச் சமூகங்களுக்கான ஆதரவு மற்றும் ஒரு நிலையான தளத்தில் சுற்றுலாவை வளர்ப்பதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

  • இந்தக் கொள்கையானது தமிழ்நாட்டில் ஒரு நிலையான சுற்றுலாச் சூழல் அமைப்பை உருவாக்க முனைவதோடு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பான மற்றும் உயர்தர அனுபவத்தை வழங்குவதற்கும், நம்பிக்கையான மற்றும் சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இது சுற்றுலாப் பயணிகள், வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சமமான வெகுமதிகளை அளிக்கிறது.

இக்கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகள்

  • வளர்ச்சி இலக்குகளில் கவனம் செலுத்துதல்
  • நிலையான மற்றும் நிலையற்ற வளங்களைப் பாதுகாத்தல்
  • சுற்றுலாப் பயணங்களை வரைபடமாக்குதல்
  • தனியார் துறை பங்கேற்பினை மேம்படுத்துதல்
  • உள்ளூர்ப் பங்குதாரர்களோடு குடிமைப் பெருமையின் உணர்வை உருவாக்குவதை பிரதிபலிக்கும் வகையில்  அடையாளத்தை உருவாக்குதல்
  • சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையினை விட அதிக மதிப்பினைப் பெறுவதை இலக்காக கொள்தல்
  • நம்பத்தகுந்த மற்றும் நினைவில் நிற்கக்கூடிய அனுபவங்களை உருவாக்குதல்.

கொள்கைக் காலம்

  • இந்தக் கொள்கையானது, இதன் கொள்கை அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அல்லது புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை செல்லுபடி ஆகும்.
  • தமிழக அரசு இந்தக் கொள்கையை அவ்வப்போது திருத்தம் செய்து கொள்ளலாம்.
  • தமிழக அரசு இந்தக் கொள்கையின் காலத்தை தேவைப்படும் போது நீட்டித்துக் கொள்ளலாம்.
  • இக்கொள்கை மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் அல்லது பணிகளுக்கு வழிகாட்டும்.

தொலைநோக்கு அறிக்கை

  • இது தமிழ்நாட்டை ஆசியாவிலேயே மிகவும் ஈர்க்கும் வகையிலான அனுபவமிக்க இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டம் மற்றும் நோக்கங்கள்

  • பல்வேறு பயனுள்ள மேலாண்மை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றோடு அதன் மேம்பாட்டு இலக்குகளில் கவனம் செலுத்துதல்.
  • மக்களுக்குத் தேவையான துடிப்பான வாழ்க்கைக் கலாச்சாரங்கள், பல்வேறு இயற்கை இடங்கள், பழங்கால மரபுகள் மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு ஆகியவற்றை மேம்படுத்தும் அசாதாரண அனுபவங்களை வழங்குதல்.

நோக்கங்கள்

  • இந்த கொள்கையானது மாநிலத்தின் சுற்றுலா நிலப்பரப்பினை மறுவரையறை செய்ய முயல்கிறது.
  • இது தமிழ்நாட்டின் சுற்றுலாவை அதன் பாரம்பரியமான கோயில்கள் மற்றும் பழங்கால கட்டிடக்கலைகளுக்கு அப்பால் உயர்த்துவதையும், தமிழ்நாட்டின் ஆராயப் படாத ஆற்றலைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பாரம்பரியம், கடலோர மற்றும் வனவிலங்குச் சுற்றுலா போன்ற சலுகைகளுடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.
  • இது ஆண்டு முழுவதும் வருகை தருவதற்கேற்ற இடமாக தமிழகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • இது சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • இது சுற்றுலாத் தலங்களில் அதிக செலவினங்களை மேற்கொள்ளத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

  • நிலையான மற்றும் உள்ளடக்கிய முறையில் சுற்றுலாத் தலங்களை திறம்பட விருத்தியாக்கி, நிர்வகிப்பதோடு மேம்படுத்துதல்.
  • சுற்றுலாப் பொருட்கள், அவை தொடர்பான சேவை, சேவை வழங்கல் ஆகியவற்றின் தரம் மற்றும் பன்முகத் தன்மையினை மேம்படுத்துதல்
  • தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பார்வையாளர்களின், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளும் தங்கள் பயணத்தின் போது எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளின் தரத்தினை மேம்படுத்துதல்.
  • பாதுகாப்பு, வசதிகள், மறக்க முடியாத அனுபவங்கள், வசதி மற்றும் தமிழ்நாடு வழியாக மேற்கொள்ளும் பாதுகாப்பான பயணம் குறித்துப் பார்வையாளர்களுக்கு நம்பிக்கையைத் தூண்டுதல்.
  • தற்போதுள்ள கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலா இடங்களைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • மலைகள், சதுப்புநிலங்கள், காடுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை உட்பட தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மதிப்பிடுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • முக்கிய சுற்றுலாப் பிரிவுகளைப் பாதுகாத்து மேம்படுத்தல்.
  • சுற்றுலாப் பயணிகள் மற்றும் தமிழர்களிடையே தமிழ் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துதல்.

இலக்குகள்

  • தமிழகத்தை மறக்க முடியாத, நம்பத்தகுந்த மற்றும் மாறுபட்ட சுற்றுலா அனுபவங்களுக்கான இடமாக நிலை நிறுத்துதல்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்குகள்

  • ஆண்டுதோறும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 12% அளவிற்கு சுற்றுலாவானது பங்களித்தல்.
  • தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கையாளுதல்களில் 5 லட்சம் பின்தொடர்பவர்களை அடைதல்.
  • சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுதல்.
  • TN Tourism App ஆனது 5 லட்சம் பதிவிறக்கங்களை அடைதல்.
  • சுற்றுலாத்துறையில் 20,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டை ஈர்த்தல்.
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்களையும் ஒட்டியுள்ள (நங்கூர) சுற்றுலாத் தளங்களிலும் மெய்நிகர் சுற்றுலாத் தகவல் மையங்கள் இருத்தல் வேண்டும்.
  • சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்களில் 3 லட்சம் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டை எளிதாக்குதல்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும் ஒட்டியுள்ள சுற்றுலாத் தளங்களும் மேம்படுத்தப் பட்ட சுற்றுலாப் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப் பட்டிருப்பதை உறுதி செய்தல்.

முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகள்

  • தமிழ்நாடு அனுபவங்களை கவரும் பூமி ஆகும்.
  • முடிவற்ற கதைகளின் மூலம் ஈர்க்கும் ஒரு பேரரசான தமிழ்நாடு, "கதைகள் ஒரு போதும் முடிவடையாத நிலம்" என்று தன்னைப் பிரகடனப்படுத்துகிறது.
  • இந்தக் கொள்கையின் மூலம், அரசு அதன் மாறும் கலாச்சார, இயற்கை மற்றும் பாரம்பரிய வளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு இது பார்வையாளர்களுக்கும் அதிவேக அனுபவங்களை வழங்கும் மறக்க முடியாத ஒரு காட்சிப் பெட்டகத்தினை உருவாக்குகிறது.
  • இந்தக் கொள்கை காலத்தில் பின்வரும் கருப்பொருள்களில் முயற்சிகளை ஒருமுகப் படுத்த சுற்றுலாத் துறையானது உத்தேசித்துள்ளது.

  • 1) சாகச சுற்றுலா
  • 2) கேளிக்கைச் சுற்றுலா
  • 3) குழு (கேரவன்) சுற்றுலா
  • 4) கிராமப்புற மற்றும் தோட்டச் சுற்றுலா
  • 5) கடலோரச் சுற்றுலா
  • 6) கலாச்சாரச் சுற்றுலா
  • 7) மருத்துவ மற்றும் ஆரோக்கியச் சுற்றுலா
  • 8) சமயச் சுற்றுலா
  • 9) சுற்றுச்சூழல் சுற்றுலா
  • 10) MICE (கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சி) சுற்றுலா
  • 11) பாரம்பரியச் சுற்றுலா
  • 12) திரைப்படச் சுற்றுலா

சுற்றுலாத்துறையில் முதலீட்டை ஊக்குவித்தல்

  • தனியார் துறை மூலதனம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முக்கியப் பங்கினையாற்ற வேண்டும் என்று சுற்றுலாத் துறையானது கருதுகிறது.
  • பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பானது சுற்றுலாவில் போட்டித் திறனைத் தூண்டுவதில் பெரும் சக்தியாக இருந்து வருகிறது.
  • இச்சூழலில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை முன்வைக்கும் முதலீட்டுத் திறனைக் கட்டவிழ்த்து விட முதலீட்டாளர்களுக்கு உகந்த நடவடிக்கைகளை சுற்றுலாத் துறையானது மேற்கொள்ளும்.
  • மேலும், சிறிய மற்றும் நடுத்தர அலகுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுற்றுலாத் துறை சார்ந்த MSME பிரிவின் சமமான அலகுகளுக்கு என்று சுற்றுலாத் துறையானது ஆதரவு மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கும்.

​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்