TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 02

August 14 , 2024 11 hrs 0 min 43 0

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 02

(For English version to this please click here)

தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம்

  • 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுப் பணியகம் மாநிலத்திற்குப் பெரிய தொழில் திட்டங்களை ஈர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றத்துடன் (WEF) இணைந்து, தமிழ்நாடு இந்தியாவின் முதல் மேம்பட்ட உற்பத்தி மையத்தை (AMHUB) நிறுவியது.
  • இந்த முயற்சியானது உலகளாவிய உற்பத்தி அமைப்பில் மாநிலத்தின் நிலையை பெருமளவில் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கூடுதலாக, வழிகாட்டல், தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கீழ், முதலீட்டு ஊக்குவிப்புக்கான தலைமை முகமையின், மதிப்புமிக்க ஐக்கிய நாடுகளின் ஊக்குவிப்பு விருது 2023 என்ற விருதைப் பெற்றது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற 8வது உலக முதலீட்டு மன்றத்தில், ஆற்றல் மாற்றத்திற்கான முதலீடுகளில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

  • இது தொழில்துறை திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதியை எளிதாக்குகிறது மற்றும் ஏற்றுமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளின் (ASIDE) மானியத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான, மாநிலங்களுக்கான உதவியை செயல்படுத்துகிறது.

  • செயல்பாடுகள்: தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுப் பணியகம் ASIDE மானியத்திற்கான முன்மொழிவுகளை ஆராய்ந்து, அவற்றின் தகுதியை உறுதி செய்து, அவற்றை மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவிடம் (SLEPC) வழங்குகிறது.
  • தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை 2023 என்பதற்கு இணங்க, இந்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெறுவதற்காக இப்பணியகம் 44 திட்டங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த மானியங்கள் மாநிலத்தின் தொழில்துறை உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட தொழில்மயமாக்கல் மாதிரி

  • தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவின் பொருளாதார அமைப்பில் முன்னணியில் இருந்து வருகிறது என்பதோடு அதன் தனித்துவமான மற்றும் பரவலாக்கப்பட்ட தொழில்மயமாக்கல் மூலம் அது மற்ற மாநிலங்களிடமிருந்து வேறுபடுகிறது.
  • மேலும் பெரிய கூட்டு நிறுவனங்கள் தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்ற மற்ற பல மாநிலங்களைப் போலல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடுத்தர அளவிலான வணிகங்கள் மற்றும் "அடிமட்ட நிலையிலிருந்து வரும் தொழில்முனைவோர்" மூலம் வெகு கணிசமாக உந்தப்படுகிறது.

பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பன்முகத்தன்மை

  • தமிழ்நாட்டின் பொருளாதாரச் சிக்கலானது இந்தியாவுடன் ஒப்பிட முடியாதது என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு விவரத்தின் மீதான பன்முகத் தன்மை அதற்குச் சான்றாகும்.

  • இந்த மாநிலத்தின் விவசாயத் துறையானது அதன் மொத்த மதிப்பு கூடுதலுக்கு (GVA) 12.6% பங்களிப்பதோடு, 28.9% பணியாளர்களை விவசாய வேலைக்கு அமர்த்தியுள்ளது.

  • விவசாயத்தின் மீதான இந்த குறைந்த சார்பு நிலையானது தொழில் துறை, சேவைகள் மற்றும் கட்டுமானத்தின் உயர் பங்களிப்புகளால் சமப்படுத்தப் படுகிறது என்பதோடு அவை கூட்டாக இணைந்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில், கணிசமான பகுதியாக அமைகிறது.
  • மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், குஜராத் தொழில்மயமானது, அதன் தொழிற்சாலைத் துறை மாநிலத்தின் மொத்த மதிப்பு கூடுதலில் 43.4% உருவாக்குகிறது என்பதோடு அதன் பணியாளர்களில் 24.6% அளவினையும் கொண்டுள்ளது.
  • இருப்பினும், குஜராத்தின் பொருளாதாரம் குறைவான பன்முகத் தன்மை கொண்டது என்ற ஒரு நிலையில் விவசாயத்தில் அதன் மொத்த மதிப்பு கூடுதலில் 15.9% மற்றும் அதன் பணியாளர்களில் 41.8% ஆகும்.
  • இந்த வேறுபாடு என்பது தமிழ்நாட்டின் மிகவும் சமநிலையான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பை எடுத்துக் காட்டுகிறது.
  • தமிழ்நாட்டின் விவசாயத் துறையின் ஒரு தனிச்சிறப்பு அம்சம், கால்நடை பண்ணையின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
  • இது நம் மாநிலத்தின் பண்ணைத் துறையின் மொத்த மதிப்பு கூடுதலில் 45.3% பங்களிக்கிறது என்பது - இந்தியாவில் எந்த மாநிலத்துடன் ஒப்பிடும் போது இது தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது என்பதோடு இது தேசியச் சராசரியான 30.2% என்ற அளவை விடவும் அதிகமாக உள்ளது.

  • இந்த சிறப்பம்சம், ஹட்சன் அக்ரோ புராடக்ட், சுகுணா ஃபுட்ஸ் மற்றும் எஸ்கேஎம் குரூப் போன்ற பெரிய நிறுவனங்களின் தோற்றத்திற்கு வழி வகுத்தது.

தமிழ்நாட்டில் தொகுதி அடிப்படையிலான தொழில்மயமாக்கல்

  • தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கல் தொழில்துறைக் குழுக்களின் வளர்ச்சியால் தனித்துவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • இவை குறிப்பிட்ட தொழில்களில் தனித்தன்மை பெற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகும் என்பதோடு அவை பெரும்பாலும் சிறிய நகர்ப்புற அல்லது புற நகர்ப்புற மையங்களில் அமைந்துள்ளன.
  • இந்த மாதிரியானது, இந்த மாநிலம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை கணிசமாகப் பரப்பி, விவசாயத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் விகிதத்தைக் குறைத்துள்ளது.
  • மிக முக்கியமான சில தொழிற்துறை தொகுதிகளில் பின்வருவன அடங்கும்:
  • திருப்பூர்: "பருத்தி பின்னலாடை மையம்' என அழைக்கப்படும் திருப்பூர், 2022-23 ஆம் ஆண்டில் ₹34,350 கோடி ஏற்றுமதியும், உள்நாட்டில் ₹27,000 கோடியும் விற்பனை செய்துள்ளது.
  • கோயம்புத்தூர்: உலோக வார்ப்பு, ஜவுளி இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் அரவை இயந்திரங்கள் உள்ளிட்ட, நூற்பு ஆலைகள் மற்றும் பொறியியல் சாதனங்களுக்குப் புகழ்பெற்றது.
  • சிவகாசி: தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்குப் பெயர் பெற்றது.
  • சேலம், ஈரோடு, கரூர் மற்றும் சோமனூர்: விசைத்தறி மற்றும் வீட்டு (கைத்தறி / நெசவு) ஜவுளிகளுக்கு பெயர் பெற்றது.
  • வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை: தோல் உற்பத்தி மையங்களாக உள்ளன.
  • இந்த தொழிற்துறை தொகுதிகள் பெரும்பாலும் ஒரே நகரத்திற்குள் பல தொழில்களை ஆதரிக்கின்றன என்ற நிலையுள் அவை ஒரு மாறும் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
  • கரூர்: விசைத்தறி, பேருந்துப் பாகங்களை செய்பவர்கள், கொசுவலை மற்றும் மீன்பிடி உற்பத்தியாளர்களுக்குப் பெயர் பெற்றது.
  • திண்டுக்கல்: இங்கு நூற்பு ஆலைகள் மற்றும் தோல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.
  • நாமக்கல்: அடுக்கு கோழிப் பண்ணைகள், பெரிய சரக்குந்துகள், மொத்தச் சரக்குத் தளவாட இயந்திரங்கள், மரவள்ளிக் கிழங்கு சார்ந்த சாகோ (ஜவ்வரிசி) தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு பெற்றது.
  • சேலம்: விசைத்தறி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்சில் இருந்து சாகோ (ஜவ்வரிசி) உற்பத்தியாளர்களுக்கான மையமாக விளங்குகிறது.
  • ஈரோடு: ஜவுளி மற்றும் மஞ்சள் உற்பத்தி மையம்.
  • இந்தப் பெரிய தொழிற்துறை தொகுதிகளுக்கு பக்கபலமாக, சிறிய நகரங்களில் மேலும் சிறப்பு வாய்ந்த தொழிற்துறை தொகுதிகள் தோன்றியுள்ளன.
  • சத்திரப்பட்டி (ராஜபாளையம் தாலுக்கா, விருதுநகர் மாவட்டம்): பேண்டேஜ்கள் (காயங்கள் கட்டும் துணி), காஸ் பேட்கள் (அறுவை சிகிச்சை கட்டுத்துணி), அறுவை சிகிச்சைப் பருத்தி பொருட்கள் மற்றும் நெய்த ஆடைகள் உற்பத்திக்காக "பேண்டேஜ் சிட்டி" என்று அழைக்கப் படுகிறது.
  • திருச்செங்கோடு: இந்தியாவின் "ஆழ்துளைக் கிணறு துளையிடும் கருவியின் (போர்வெல் ரிக்) தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது, அங்கிருந்து ஒப்பந்ததாரர்கள் தங்கள் சரக்குந்தில் பொருத்தப் பட்ட துளையிடும் கருவிகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்கின்றனர்.
  • நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்): குறைந்த விலையில் ஆண்களுக்கான நேர்த்தியான சட்டைகளுக்குப் பெயர் பெற்றது.
  • இந்த தொழிற்துறை தொகுதிகள் அத்தனிச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, மேலும் வேலை வாய்ப்புக்காக பெரு நகரங்களுக்கு பெரிய அளவில் மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்கின்றன.
  • உதாரணமாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலில் மட்டும் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் உட்பட சுமார் 800,000 பேர் பணிபுரிகின்றனர்.
  • கே.பி.ஆர். மில் லிமிடெட் நிறுவனம் 21,819 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்குகிறது, அவர்களில் 84% க்கும் அதிகமானோர் பெண்கள்.
  • இந்த ஊழியர்கள் முதன்மையாக திருப்பூர் மற்றும் அருகிலுள்ள கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிறுவனத்தின் ஆடை, பின்னலகம், நூற்பு ஆலை மற்றும் செயலாக்கத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜவுளி

  • கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, தேனி மற்றும் வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகியவை பருத்தி ஆலைகளுக்குப் பெயர் பெற்றவை என்ற நிலையில் ராஜபாளையம் பருத்தி சந்தைக்குப் பெயர் பெற்றதாகும்.
  • கோபிசெட்டிபாளையம் வெண் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது என்பதோடு நாட்டின் முதல் தானியங்கி பட்டு நூற்பு அலகும் இங்கு தான் உள்ளது.
  • காஞ்சிபுரம் மற்றும் ஆரணி ஆகியவை தூய்மையான ஜரிகை பட்டுப் புடவைகள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில்களுக்காக உலக அளவில் புகழ்பெற்றவை.
  • மற்ற குறிப்பிடத்தக்க மையங்களில் அருப்புக்கோட்டை, சேலம் மற்றும் சத்தியமங்கலம் ஆகியவை கலை வேலைப்பாடு நிறைந்த - பட்டுப் புடவைகளுக்குப் புகழ்பெற்றவை மற்றும் ஆண்டிபட்டி, திருச்செங்கோடு, பரமக்குடி மற்றும் குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) போன்ற இடங்களில் கைத்தறி மையங்களும் உள்ளன.
  • நெகமம் (பொள்ளாச்சி), சின்னாளப்பட்டி (திண்டுக்கல்), உறையூர் (திருச்சி), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) ஆகியவை மென்மையான பருத்திப் புடவை நெசவுக்குப் பெயர் பெற்றவை, என்ற நிலையில் மதுரை அதன் சுங்கிடி பருத்திப் புடவைகளுக்குப் பெயர் பெற்றதாகும்.
  • ஜவுளித் தொழில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமாகும், இது மாநில மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்கிறது.
  • இந்தியாவின் ஜவுளித் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு கொண்டுள்ளது என்பதோடு மேலும் நாட்டின் நூற்புத் திறனில் 45% மற்றும் கைத்தறித் திறனில் 10% என்ற அளவாகவும் அது உள்ளது.
  • ஆவடி: இப்பகுதியில் கனரக வாகனத் தொழிற்சாலை இருப்பதால் ஆவடியை "இந்தியாவின் கவச வாகனங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்கு" என்று குறிப்பிடுகின்றனர்.

  • இந்த தொழிற்சாலை கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் என்பதின் ஒரு பகுதியாகும் மற்றும் இந்திய இராணுவத்திற்கான பீரங்கிப் படை வண்டிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்களை தயாரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கோயம்புத்தூர்: "பருத்தி நகரம்" என்று அழைக்கப்படுகின்ற கோவை நகரம் ஜவுளி ஆலைகள், பொறியியல் தொழில்கள் மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி அலகுகளின் முக்கிய மையமாக உள்ளது.
  • இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் இந்நகரம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது, மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஜவுளி அலகுகளுக்கு நூல் வழங்கும் எண்ணற்ற நூற்பு ஆலைகள் இங்கு உள்ளன.
  • திருப்பூர்: பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் திருப்பூர், பெரிய அளவிலான பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்றது.

  • பின்னப்பட்ட ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்த நகரம் உலகளாவிய முன்னணியில் உள்ளது என்பதோடு இந்தத் துறையானது இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகிறது.
  • சேலம்: கைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலம், மற்ற ஜவுளிகளுடன், கலை வேலைப்பாடு நிறைந்த பட்டு புடவைகள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

  • ஈரோடு: மஞ்சள் உற்பத்திக்கு பெயர் பெற்ற ஈரோடு, ஜவுளித் தொழிலில், குறிப்பாக நெய்த ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாளராக உள்ளது.
  • கோயம்புத்தூர் நகரைச் சுற்றி ஜவுளி ஆலைகள் மற்றும் பொறியியல் தொழில்கள் உள்ளன, என்ற நிலையில் இது ஜவுளி, வாகன உதிரி பாகங்கள் மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி அலகுகளின் தாயகமாகும்.
  • திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற நகரங்கள் நாட்டின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதியாளர்களாக உள்ளன, அவை ஜவுளி உற்பத்தித் தொழில்களுக்கு பெயர் பெற்றவை.
  • கோயம்புத்தூர், திருப்பூர், கரூர் மற்றும் ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதி "இந்தியாவின் ஜவுளிப் பள்ளத்தாக்கு" என்று குறிப்பிடப்படுகிறது.
  • அந்நியச் செலாவணியானது திருப்பூரில் இருந்து மட்டும் ஏற்றுமதியாவதில் இருந்து 50,000 மில்லியன் INR ($ 1,000 மில்லியன்) என்ற அளவை அடையும், அதே போன்று கரூர் ஆண்டுதோறும் சுமார் 35,500 மில்லியன் INR ($ 750 மில்லியன்) ஈட்டுகிறது.
  • இந்தியாவின் மொத்தப் பின்னலாடை ஏற்றுமதியில் 56% திருப்பூரில் இருந்து வருகிறது, மேலும் இந்தியாவின் வீட்டு உற்பத்தி ஜவுளிகளில் 60% அளவை கரூர் உற்பத்தி செய்கிறது.

தானியங்கு வாகனத் தொழிற்துறை

  • தமிழ்நாடு ஒரு நன்கு நிறுவப்பட்ட தானியங்கு வாகனத் தொழிற்துறையைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது உலகளாவிய மற்றும் இந்திய தானியங்கு வாகன நிறுவனங்களிடமிருந்து பெரும் முதலீடுகளை ஈர்க்கிறது.
  • உலகளாவிய நிறுவனங்கள்: பிஎம்டபிள்யு, போர்டு, வோல்க்ஸ்வாகன், ரெனால்ட்-நிஸ்ஸான், கேட்டபில்லர், ஹுண்டாய், மிட்சுபிஷி மோட்டார்ஸ் மற்றும் மிச்செலின் போன்ற முக்கிய உலகளாவிய தானியங்கு வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை நிறுவி உள்ளன.
  • இந்த நிறுவனங்கள் அதன் செயல்பாட்டிற்கான இருப்பிடம், திறமையான பணியாளர்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து உள்ளன.
  • இந்தியாவின் முதன்மையான தானியங்கு வாகன நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா, அசோக் லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற இந்திய நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் சில குறிப்பிடத்தக்கச் செயல் பாடுகளைக் கொண்டுள்ளன.
  • எம்ஆர்ஃப், அப்பல்லோ டயர்கள் மற்றும் TAFE டிராக்டர்கள் போன்ற நிறுவனங்களுடன், தானியங்கு வாகன உதிரி பாகங்கள் மற்றும் பிற பாகங்கள் தயாரிப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கிய மையமாக உள்ளது.

TAFE டிராக்டர்கள்

  • TAFE (டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கழகம்), சென்னையில் 1960 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது, இது உலகளவில் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதோடு இது இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது.
  • TAFE ஆண்டு வருமானம் 12,500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது மற்றும் இந்திய டிராக்டர் சந்தையில் 25% பங்கையும் இது கொண்டுள்ளது.
  • இந்நிறுவனம் ஆண்டுதோறும் 200,000 டிராக்டர்களை இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விற்பனை செய்கிறது.
  • TAFE ஆனது AGCO கார்ப்பரேஷன் மற்றும் மாசே பெர்கூசன் நிறுவனத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டாண்மையைப் பராமரித்து வருகிறது.
  • கூடுதலாக, TAFE ஆனது AGCO பெருநிறுவனத்தில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்குதாரராக உள்ளது, என்பதோடு இது $12.7 பில்லியன் அமெரிக்க அடிப்படையிலான டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.

சிறப்பு உற்பத்தி மையங்கள்:

  • கரூர்: பேருந்து வாகன பாகங்களின் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்றது.
  • நாமக்கல்: கனரக வாகனம் மற்றும் சரக்குந்து வாகனப் பாகங்களின் கட்டமைப்பிற்குப் புகழ் பெற்றது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்