TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 03

August 17 , 2024 148 days 761 0

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 03

(For English version to this please click here)

கைத்தறி மற்றும் விசைத்தறிகள்

  • தமிழ்நாட்டின் மிகப்பெரியதொரு குடிசைத் தொழிலாக கைத்தறித் துறை உள்ள நிலையில் இது கிராமப்புற மக்களின் கணிசமான பகுதியினருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
  • இத்தொழில் இந்த மாநிலத்தில் 4.29 லட்சம் நெசவாளர் குடும்பங்களையும், 11.64 லட்சம் நெசவாளர்களையும் ஆதரிக்கிறது.
  • "பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கல்" மற்றும் "இலவசப் புடவைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டம்" போன்ற அரசின் திட்டங்களுக்கு துணி உற்பத்தி செய்வதற்கும், கைத்தறித் துறை முக்கியப் பங்காற்றுகிறது.

தமிழ்நாட்டில் கனரக தொழில்கள்

  • கனரக பொறியியல் மற்றும் உற்பத்தியில் வலுவான இருப்பைக் கொண்ட தமிழ்நாடு இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும்.
  • பாரத மிகு மின் நிலையம் (BHEL)
  • பாரத மிகு மின் நிலையம் (BHEL) 1956 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது என்பதோடு இது இந்தியாவில் கனரக மின்சாதனத் துறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • 1974 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகு மின் நிலையம் BHEL நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது, இதனால் இந்தத் துறையில் அதன் இருப்பை அது மேலும் வலுப்படுத்தியது.

  • இந்திய உருக்கு ஆணையம் (SAIL)
  • இந்திய உருக்கு ஆணையம் (SAIL) என்பது இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கீழ், புது தில்லியை மையமாகக் கொண்ட ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
  • தமிழ்நாட்டின் கனரகத் தொழில்களில் SAIL நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது மற்றும் 2022-23 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ₹105,398 கோடியை (US$13 பில்லியன்) பதிவு செய்துள்ளது.

  • ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்கள்
  • ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்கள், தூத்துக்குடியில் ஒரு தாமிர உருக்காலை (தற்போது செயல்zபடவில்லை) மற்றும் மேட்டூரில் ஒரு அலுமினிய ஆலை உட்பட தமிழ்நாட்டில் முக்கிய நிறுவனங்களை இயக்குகிறது, என்ற நிலையில் இது மாநிலத்தின் தொழில்துறை பன்முகத் தன்மைக்குப் பெரும் பங்கினை அளிக்கிறது.
  • சென்னை பெட்ரோலியக் கழகம்
  • முன்பு மதராஸ் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்பட்ட சென்னை பெட்ரோலியக் கழகம் இந்தியன் ஆயில் கழகத்தின் ஒரு துணை நிறுவனமாகும்.

  • 1965 ஆம் ஆண்டு ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் மணலி மற்றும் பனங்குடியில் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்ட அரசுக்குச் சொந்தமான ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும் என்பதோடு இது தமிழ்நாட்டின் எரிசக்தித் துறையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

  • கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில் பூங்காவில் (EPIP) அபாயகரமான கழிவு சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் கழிவு அகற்றும் வசதி (HWTSDF) அரசு செயல்படுத்தியுள்ளது.
  • மேலும், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) தூத்துக்குடி மற்றும் பெருந்துறையில் இதே போன்ற சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்கியுள்ளது.

பிற முக்கியத் தொழில்கள்

  • முட்டை உற்பத்தி: இந்தியாவில் முட்டை உற்பத்தியின் முக்கிய இடங்களில் ஒன்றாக நாமக்கல் உள்ளது.
  • நைலான் வலையக (HDPE) இழைகள்: இந்த இழைகள் தயாரிப்பில் கரூர் மிகவும் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது என்பதோடு இது இந்தியாவின் உற்பத்தியில் 65% பங்களிக்கிறது.
  • பட்டாசு மற்றும் தீப்பெட்டிகள்: நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 60%க்கும் அதிகமானப் பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக சிவகாசி உள்ளது.

மின்னணுவியல் மற்றும் மென்பொருள்

  • ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், மோட்டோரோலா, சோனி-எரிக்சன் மற்றும் சாம்சங் போன்ற பல உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சென்னையில் உற்பத்தி மையங்களை நிறுவியதன் மூலம், தமிழ்நாடு வளர்ந்து வரும் மின்னணு உற்பத்தித் தொழிலைக் கொண்டு உள்ளது.
  • இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழில்

  • இந்தியாவின் தோல் தொழிலில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற நிலையில்  நாட்டின் தோல் பதனிடும் திறனில் 70% தமிழ்நாட்டின் பங்காகும்.
  • கூடுதலாக, இந்தியாவின் தோல் காலணிகள் மற்றும் இதரப் பொருட்கள் உற்பத்தியில் 38% தமிழ்நாட்டின் பங்காகும்.

​​​​​​​

  • தமிழ்நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி தோராயமாக USD 762 மில்லியன் டாலர் மதிப்பு உடையது என்பதோடு இது இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 42% ஆகும்.

முக்கிய மையங்கள்:

  • தோல் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல், ஈரோடு மற்றும் ராணிப்பேட்டை, ஆம்பூர், பெருந்துறை, வாணியம்பாடி போன்ற அருகிலுள்ள நகரங்களில் குவிந்துள்ளது.
  • இந்தியாவில் இறுதிநிலை தோல் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது.
  • இந்த மாவட்டம் இறுதிநிலை தோல் பொருட்கள், காலணிகள், ஆடைகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட நாட்டின் தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சென்னையின் பங்கு:

  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பல ஏற்றுமதியாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுடன், உலகளாவிய தோல் தொழில்துறையில் சென்னை ஒரு முக்கிய மையமாக செயல்படுகிறது.
  • இந்தியாவின் தோல் பொருட்கள் உற்பத்தியில் 70% தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது மற்றும் நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கிறது.

வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி:

  • தமிழ்நாட்டின் தோல் தொழில் சுமார் 0.5 மில்லியன் மக்களை அந்தப் பணியில் ஈடுபடுத்துகிறது என்பதனால் இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய துறையாக உள்ளது.
  • இந்தியாவின் தோல் மற்றும் காலணித் தொழில் 2030 ஆம் ஆண்டுக்குள் 17.3 பில்லியன் டாலரில் இருந்து 47 பில்லியன் டாலரை எட்டும் என்ற வலுவான வளர்ச்சியை எட்ட உள்ளது.
  • அடுத்த ஆறு ஆண்டுகளில் ஏற்றுமதி 13.7 பில்லியன் டாலராக அதாவது இருமடங்காக உயரும்.

பிரபலமான பெயர்களைக் கொண்ட நகரங்கள்:

  • அரியலூர்: சிமென்ட் நகரம்
  • சென்னை: ஆசியாவின் டெட்ராய்ட், இந்தியாவின் சுகாதாரத் தலைநகரம், மருத்துவச் சுற்றுலா தலைநகரம், இந்தியாவின் வங்கிகளின் தலைநகரம், இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மையம், தென் இந்தியாவின் நுழைவாயில், மேம்பாலங்களின் நகரம்
  • கோயம்புத்தூர்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர், பம்ப் (விசைகுழாய்) நகரம், தென்னிந்தியாவின் பொறியியல் நகரம், இந்தியாவின் மோட்டார் வாகன விளையாட்டுகளின் தலைநகரம்
  • கடலூர்: வெள்ளிக் கடற்கரை நகரம்
  • தர்மபுரி: தமிழகத்தின் மாம்பழத் தலைநகரம்
  • திண்டுக்கல்: பூட்டு நகரம்
  • ஈரோடு: மஞ்சள் நகரம்
  • காஞ்சிபுரம்: பட்டு நகரம், கோவில் நகரம்
  • கரூர்: தமிழகத்தின் ஜவுளித் தலைநகரம்
  • கன்னியாகுமரி: கேப் கொமோரின், இந்தியாவின் நில எல்லை முடிவு
  • கிருஷ்ணகிரி: மாம்பழம் மாவட்டம்
  • மதுரை: கோயில் நகரம், கிழக்கின் ஏதென்ஸ், மல்லிகை நகரம், திருவிழாக்களின் நகரம், தூங்கா நகரம், தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்.

  • நாமக்கல்: தமிழகத்தின் கோழிப் பண்ணையின் தலைநகரம்
  • நீலகிரி: மலைவாச இருப்பிடங்களின் ராணி (ஊட்டி)
  • புதுக்கோட்டை: கிரானைட் நகரம்
  • ராமநாதபுரம்: முத்து நகரம்
  • ராமேஸ்வரம்: யாத்திரை நகரம்
  • சேலம்: இரும்பு நகரம், மாம்பழ நகரம், புவியியலாளர்களின் சொர்க்கம், தமிழகத்தின் மினி லண்டன்
  • சிவகங்கை: பாரம்பரிய நகரம்
  • தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் அரிசிக் கிண்ணம், கலாச்சாரத் தலைநகரம்
  • திருச்சிராப்பள்ளி: மலை கோட்டை நகரம்
  • திருநெல்வேலி: ஹல்வா நகரம், தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரம்
  • திருப்பூர்: இந்தியாவின் டாலர் நகரம், பனியன் நகரம், இந்தியாவின் பின்னலாடைகளின் தலைநகரம்.
  • தூத்துக்குடி: இந்தியாவின் முத்து நகரம், தமிழ்நாட்டின் நுழைவாயில், தென்னிந்தியாவின் உப்புத் தலைநகரம்.
  • ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி
  • கொடைக்கானல்: மலைவாசல் இருப்பிடங்களின் இளவரசி
  • கும்பகோணம்: தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்
  • சிவகாசி: இந்தியாவின் பட்டாசு தலைநகரம் அல்லது "குட்டி ஜப்பான்"

ஜவுளித்துறையில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் மற்றும் முதலீடுகள்

  • ஜவுளித் துறையில் அதன் போட்டித் தன்மையைத் தக்கவைக்க, தமிழ்நாடு அரசு பல கொள்கைச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அவையாவன:
  • நூற்பு நவீனமயமாக்கலுக்கான வட்டி மானியம்: பிப்ரவரி 2024ல், நூற்புப் பிரிவை நவீனமயமாக்கும் நோக்கில் அரசாங்கம் 6% வட்டி மானியத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்த முயற்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இந்திய மதிப்பில் சுமார் 5 பில்லியன் (US$59 மில்லியன்) நிர்ணயிக்கப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது மூலதனச் செலவைக் குறைப்பது மற்றும் நூற்புத் தொழிலில் காலாவதியான இயந்திரங்களை நவீனமயமாக்குவதை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறப்புத் திறன் மானியம்: 2023 ஆம் ஆண்டில், மறுசுழற்சி செய்யப்பட்டப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளிகள் மற்றும் MMF (செயற்கையாக (மனிதனால்) உருவாக்கப்பட்ட நூலிழைகள்) நூலுக்கான சிறப்புத் திறன் மானியத்தை அரசாங்கம் நன்கு அதிகரித்தது.
  • MMF துணி வகை மற்றும் ஆடை உற்பத்திக்கான மானிய விகிதம் சுமார் 15% லிருந்து 25% ஆக உயர்த்தப் பட்டது.
  • கோவிட்-19 பெருந் தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்துள்ள தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான உலகளாவிய தேவைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிகங்களை ஆதரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள்:

  • முக்கிய கொள்கைகள்:
  • தமிழ்நாடு குறைகடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024
  • தமிழ்நாடு எத்தனால் கலப்பு கொள்கை 2023
  • தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகத் திட்டம் 2023
  • தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023
  • தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022
  • தமிழ்நாடு வாழ்க்கை அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022
  • தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022
  • தமிழ்நாடு ஃபின்டெக் கொள்கை 2021
  • தமிழ்நாடு தரவு மையக் கொள்கை 2021

எளிதில் தொழில் தொடங்குதல்:

  • முதலீட்டாளர்களுக்கான செயல்முறையை நெறிப்படுத்த தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு ஒற்றைச் சாளர தளத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் தளத்தில் வணிகம் தொடர்பான ஒப்புதல்கள், உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்வை வழங்குகிறது.
  • மேலும் இது 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பல்வேறு துறைகளில் ஈர்க்கக் கூடிய தரவரிசைகளை அடைந்துள்ளது என்பது அதன் வலுவான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது, அவையாவன:
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீடு: SDG இந்தியக் குறியீடு 2023-24 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

  • 2018 ஆம் ஆண்டில் 66 என்ற மதிப்பெண்ணிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டி, 78 என்ற கூட்டு மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள.
  • மதிப்பான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (இலக்கு 8), நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (இலக்கு 3), மற்றும் நிலத்தில் வாழ்வு (இலக்கு 15) உட்பட பல SDG வகைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
  • கூட்டுறவுத் துறை: தமிழ்நாடு பல மாநில கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் உள்ளது என்பதோடு இங்கு மொத்தம் 126 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
  • இந்தத் துறையில் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

  • தளவாடத் துறை: 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு மாநிலங்களின் எளிய தளவாடத் துறை குறியீட்டில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்பது தமிழ்நாட்டின் வலுவான தளவாட உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஒழுங்குமுறைச் சூழலை எடுத்துக்காட்டுகிறது.

​​​​​​​

  • சுகாதாரம்: 2020 ஆம் ஆண்டிற்குள் 100,000 பிறப்புகளுக்கு 100க்கும் குறைவான கர்ப்பிணித் தாய் இறப்பு விகிதம் என்ற ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்கை அடைந்து, சுகாதாரப் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
  • தமிழ்நாடு 97.18% என்ற அளவில் பெரும் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது.
  • தொலைத்தொடர்பு: சுமார் 100%க்கும் அதிகமான தொலைத்தொடர்பு அடர்த்தி கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்கச் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
  • இந்தச் சாதனைகள், பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் தமிழகத்தின் மிக வலுவான செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் அதன் நிலைக்கு நன்கு வலு சேர்க்கின்றது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்