TNPSC Thervupettagam

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 பாகம் – 02

August 8 , 2024 157 days 1627 0

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 பாகம் – 02

(For English version to this please click here)

இளைஞர் மற்றும் விளையாட்டு நலன்

  • தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு கழகம்: இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீர் விளையாட்டு கழகம், ராமநாதபுரம் மாவட்டம், பிறப்பன்வலசையில் நிறுவப்பட்டது.

தொழிலாளர் நலன்

  • புதிய தொழில் பயிற்சி நிறுவனங்கள்: ரூ.111 கோடியில் 10 புதிய தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

உடல்நலம் மற்றும் குடும்ப நலன்

  • இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் - 48 திட்டம்: விபத்துக்குப் பிந்தைய முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சுகாதார உள்கட்டமைப்பு:

  • தலா 50 படுக்கைகள் கொண்ட ஆறு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.142 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
  • ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • 25 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் ரூ.87 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.
  • சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரம் ரூ.64 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ரூ.20 கோடி செலவில் 25 அரசு மருத்துவமனைகளில் போதை ஒழிப்பு மையம் உருவாக்கப்பட உள்ளது.

தொழில் வளர்ச்சி

  • புதிய தொழில் பூங்கா: தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே ரூ.120 கோடியில் 300 ஏக்கரில் ஒரு தொழில் பூங்காவை சிப்காட் அமைக்க உள்ளது .
  • ஊதிய மானியத் திட்டம்: 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பணிபுரியும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 10% மானியம் வழங்கப்பட உள்ளது.

  • சிப்காட் தொழிற்பேட்டைகளில் மழலையர் காப்பகம்: பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவாக இக்காப்பகங்கள் பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் நிறுவப்பட்டது.
  • திறன் பயிற்சித் திட்டம்: வேலைவாய்ப்புச் சந்தையில் மீண்டும் நுழையும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.
  • விண்வெளித் தொழில்துறை மற்றும் உந்துசக்திப் பூங்கா: விண்வெளித் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்காக TIDCO இந்தப் புதியப் பூங்காவை நிறுவ உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

  • உலகளாவிய புத்தொழில் நிறுவன உச்சி மாநாடு: இம்மாநாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
  • பெரியார் சமூக நீதி புத்தொழில் வளர் மையம்: சமூக மேம்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் பொதுச் சேவைகள் குறித்து பேசும் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக உருவாக்கப் பட உள்ளது.

  • புதிய தொழிற்பேட்டைகள்: ஒட்டன்சத்திரம் தாலுகா (திண்டுக்கல் மாவட்டம்), மானாமதுரை தாலுகா (சிவகங்கை மாவட்டம்), திருத்துறைப்பூண்டி தாலுகா (திருவாரூர் மாவட்டம்) ஆகிய இடங்களில் ரூ.32 கோடியில் நிறுவப்படும்.
  • குறிச்சியில் தொழில் வளாகம்: கோவை மாவட்டத்தில் ரூ.37 கோடியில் பொருத்தி மற்றும் செயலாற்று வசதியுடன் கூடிய நான்கு அடுக்குமாடி வளாகம் அமைக்கப்படும்.
  • மதுரையில் தொழில்துறை கண்டுபிடிப்பு மையம்: 26,500 சதுர அடியில் 24 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப் பட உள்ளது.

  • சக்கிமங்கலத்தில் தொழில் வளாகம்: மதுரை மாவட்டத்தில் 4,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.118 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் மூன்றடுக்கு கட்டிடம் அமைக்கப்படும்.
  • தேயிலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: 16 கூட்டுறவு தேயிலை ஆலை உறுப்பினர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 என்ற வீதத்தில், ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

  • மாநில தரவு மையம்: மேகக் கணிமை உள்கட்டமைப்பு மற்றும் பேரிடர் தரவு மீட்பு வசதியானது எல்காட் மூலம் ஐந்தாண்டுகளில் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • இலவச வைஃபை சேவைகள்: அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.

  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு திட்டமானது முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்படும்.

  • அதிநவீன தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் மூலம், 20 லட்சம் சதுர அடியில், 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

நீர் வளங்கள்

  • வெள்ளத்தடுப்பு மற்றும் தணிப்பு: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ரூ.350 கோடியில் நிரந்தரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மேலும் தென் மாவட்டங்களில் ரூ.280 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • பெரிய அணைக்கட்டு கால்வாய் அமைப்பு: ரூ.400 கோடியில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கலின் இரண்டாம் கட்டத்தின் மூலம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் பயனடைகிறது.

பசுமை ஆற்றல்

  • விசையியக்க குழாய் சேமிப்பு நீர் மின் நிலையங்கள்: பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் தோராயமாக ரூ.60,000 கோடி முதலீட்டில் நிறுவப்படும்.

பருவநிலை மாற்றம்

  • தமிழ்நாடு அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி: நிதி ஒதுக்கீடு ரூ.50 கோடி.

  • தமிழ்நாடு கடற்கரை (நெய்தல் மீட்சி இயக்கம்): ரூ.1,675 கோடி மதிப்பீட்டில் 14 கடலோர மாவட்டங்களில், கடலோர வளங்களை மீட்டெடுக்கும் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • கடற்கரை மேம்பாடு: ரூ.250 கோடி மதிப்பீட்டில் நீலக் கொடிச் சான்றிதழுக்காக முக்கியக் கடற்கரைகள் உருவாக்கப்படும்.

போக்குவரத்து

  • புதிய பேருந்துகள்: KfW வங்கி நிதி உதவியுடன் 3,000 புதிய பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.

  • சிறுரகப் பேருந்து சேவைகள்: சீரமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்

  • சின்னமாக விளங்கும் கட்டிடம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.688 கோடியில் 27 மாடி பாரம்பரிய வடிவமைப்புக் கட்டிடம் உருவாக்கப்படும்.

  • ஒருங்கிணைந்தப் பல்-மாதிரி பேருந்து முனையம்: பிராட்வே பேருந்து முனையம் மற்றும் குறளகம் கட்டிடம் அருகே ரூ.823 கோடியில் அதி நவீன வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

  • அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம்: தொழில் மேற்கொள்ளும் பட்டியலிடப் பட்டச் சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினருக்கான ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.

  • முதல்வர் எழுச்சி திட்டம்: ஆதி திராவிட மற்றும் பழங்குடி தொழில் முனைவோர்கள் 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்; இதற்கென ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.

  • அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: ரூ.230 கோடியில் செயல்படுத்தப் படும்.
  • சமுதாய கூடங்கள்: ரூ.100 கோடியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகத்தினருக்கான வசதிகளுடன் கூடிய 120 அரங்குகள் அமைக்கப்படும்.
  • விடுதிகள்: சென்னை, தஞ்சாவூர், தர்மபுரி, நாமக்கல்லில் உள்ள பெண்கள் விடுதிகள், மதுரையில் உள்ள ஆண்கள் விடுதிகள் ரூ.75 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • தொல்குடி திட்டம்: பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

  • பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: 1,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • ஸ்மார்ட் வகுப்பறைகள்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ரூ.36 கோடியில் கட்டுமானம் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

சிறுபான்மையினர் நலன்

  • பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு மானியம்: மசூதிகள் மற்றும் தர்காக்களுக்கு ரூ.10 கோடி, சென்னையில் சூளை, கடலூரில் விருதாச்சலம், சிவகங்கையில் இடைக்காட்டூர் உள்ளிட்ட தேவாலயங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் நலன்

  • மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம்: சென்னையில் ரூ.25 கோடியில் நிறுவப் படும்.

கால்நடை வளர்ப்பு

  • விலங்குகளுக்கான கருத்தடை திட்டம்: விலங்குகளுக்கான பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களை திறம்பட செயல்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மீன்பிடித்தல் மற்றும் மீனவர் நலன்

  • கரையோரப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானம்: ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகள், மீன் இறங்கு தளங்கள், தூர்வாருதல், செயற்கைப் பாறைகள் உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப் படும்.

பால்பண்ணை மேம்பாடு

  • பால் பண்ணைகளை நவீனமயமாக்கல்: ரூ.60 கோடியில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும்.

கைத்தறி மற்றும் ஜவுளி

  • சிறு ஜவுளிப் பூங்கா: கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.20 கோடியில் அமைக்கப் படும்.
  • ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டு நிதி: தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜவுளித்துறை மற்றும் செயற்கையாக (மனிதனால்) உருவாக்கப்பட்ட இழைகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப மேம்படுத்தல் திட்டம்: ரூ.500 கோடி மதிப்பீட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 6% வட்டி மானியத்துடன் மேம்படுத்தப்படும்.
  • கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம்: சென்னையில் ரூ.227 கோடியில் நிறுவப்படும்.
  • கைவினைஞர்கள் மேம்பாட்டுத் திட்டம்: புதிதாக வரும் கைவினைஞர்களுக்கு 25% மானியத்துடன் கடன் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொதுப் பணிகள்

  • கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம்: சென்னை முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் 3 லட்சம் சதுர அடியில் அதிநவீன ‘கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம்’ கட்டப்படும்.

  • புதிய தமிழ்நாடு இல்லம்: தலைநகர் புதுதில்லியில் பாரம்பரியத் திராவிடக் கட்டிடக்கலை வடிவமைப்புடன், ரூ.257 கோடி செலவில் 3 லட்சம் சதுர அடியில் புதிய தமிழ்நாடு இல்லம் ‘வைகை’ கட்டப்படும்.
  • பாரம்பரியக் கட்டிடங்கள் மறுசீரமைப்பு: பாரம்பரியக் கட்டிடங்களை மறுசீரமைக்கவும், பழமையைப் பாதுகாக்கவும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.

நெடுஞ்சாலைகள்

  • கடலூர் துறைமுகம் மேம்படுத்தல்: கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த கடலூர் துறைமுகம் தற்போது ரூ.150 கோடி செலவில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்: 'தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்' அமைப்பதற்கான மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்தப்படும்.

முன்னாள் படைவீரர் நலன்

  • சொத்து வரி திருப்பிச் செலுத்துதல்: நமது முன்னாள் படைவீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்றச் சேவையைப் பாராட்டி, சொத்து வரி திருப்பிச் செலுத்தும் திட்டம் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப் படும்.
  • இதன் மூலம், 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பயனடைவார்கள்.

பொதுமக்கள் குறைகள்

  • முதல்வரின் முகவரி: முதல்வரின் முகவரியில் இது வரை பெறப்பட்ட 20.31 லட்சம் மனுக்களில் 19.69 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  • மக்களுடன் முதல்வர்: அதிக அளவில் பொது மக்களின் இடைமுகம் கொண்ட 13 முக்கியத் துறைகள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை 30 நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய முயற்சி தொடங்கப் பட்டுள்ளது.

  • உங்களை தேடி உங்கள் ஊரில்: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு தாலுகாவில் முகாம் அமைத்து மக்கள் குறைகளைக் கேட்டறிவார்கள்.

சிறப்புத் திட்ட அமலாக்கம்

  • கல ​​ஆய்வில் முதலமைச்சர் முன்முயற்சி: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சரியான நேரத்தில் மற்றும் இடையூறின்றி சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகளை நடத்தி வருகிறார்.
  • மக்களுக்குச் சேவைகள் மற்றும் சலுகைகள் உரிய நேரத்தில் மற்றும் சிரமமின்றி வழங்கப் படுவதை உறுதி செய்வதற்காக வேண்டி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனிச் சிறப்பான முயற்சியின் கீழ், சேவை நிலை குறித்து அவ்வப்போது மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

மாநில அரசின் நிதி

  • நிதி வலுப்படுத்துதல்: அரசாங்கம் நிதி வலுப்படுத்துதலின் மீதான சாய்வானப் பாதையை பின்பற்றுகிறது; மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 3.46 சதவீதமாக அது இருந்ததை 2023-24 ஆம் ஆண்டில் 3.45 சதவீதமாகவும், மேலும் 2024-25 ஆம் ஆண்டில் அதனை 3.44 சதவீதமாக குறைக்கவும் உள்ளது.
  • பேரழிவுகளின் தாக்கம் இருந்த போதிலும் மற்றும் பட்ஜெட் வளங்களில் இருந்து TANGEDCOக்கு மேற்கொள்ளப் பட்ட எதிர்பாராத நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு இது அடையப் பட்டது.
  • பல சவால்களுக்கு மத்தியிலும், விவேகமான நிதி நிர்வாகத்தின் பாதையில் இருந்து விலகாமல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இந்த அரசாங்கத்தின் உறுதிப் பாட்டை இந்த பட்ஜெட் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்