TNPSC Thervupettagam

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 பாகம் - 01

August 6 , 2024 159 days 2670 0

(For English version to this please click here)

முன்னுரை

  • தமிழக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, 2024-25ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை பிப்ரவரி 19, 2024 அன்று தாக்கல் செய்தார்.
  • வரவிருக்கும் ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரக் கணிப்புகள், செலவுகள், வருவாய் மற்றும் நிதி உத்திகள் ஆகியவற்றை இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது.

பொருளாதாரக் கணிப்புகள் மற்றும் துறைசார் பங்களிப்புகள்

  • மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP): 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் GSDP தற்போதைய நிலவரப்படி ₹31,55,096 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டை விட 16% அதிக வளர்ச்சியைக் குறிக்கிறது.

துறை வளர்ச்சி:

  • சேவைகள் துறை: 2023-24 ஆம் ஆண்டில், சேவைத் துறை 9.4% வளர்ச்சி அடையும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உற்பத்தித் துறை: உற்பத்தித் துறை 7.1% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப் பட்டது.
  • விவசாயத் துறை: விவசாயத் துறை 4.3% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் பட்டது.

பொருளாதாரத்திற்கான துறைசார் பங்களிப்புகள்:

  • சேவைகள் துறை: 53%
  • உற்பத்தித் துறை: 34%
  • விவசாயத் துறை: 13%
  • தனிநபர் GSDP: 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, தற்போதைய நிலவரப்படி ₹3,50,695 என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 14% அதிகமாகும்.

செலவு மற்றும் நிதி மூலோபாயம்

  • மொத்தச் செலவு: 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்தச் செலவினம் (கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்த்து) ₹4,12,504 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 12% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
  • மூலதனச் செலவு: 2024-25 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு ₹47,681 கோடியாக இருக்கும், இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 12% அதிகமாகும்.
  • இது சொத்துக்களை உருவாக்குவதற்கான செலவைக் குறிக்கிறது.

  • வருவாய்ச் செலவு: 2024-25 ஆம் ஆண்டிற்கான வருவாய்ச் செலவு ₹3,48,289 கோடியாகக் கணக்கிடப் பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 10% அதிகமாகும்.
  • இதில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள் ஆகியவை அடங்கும்.
  • கடன்கள் மற்றும் முன்பணங்கள்: 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ₹16,534 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 79% அதிகமாகும்.
  • செயல் திட்டத்தின் செலவு: தமிழ்நாடு ₹1,89,897 கோடியை செயல் திட்டத்தின் பல்வேறு செலவினங்களுக்காக (சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி) செலவிடும் என மதிப்பிடப் பட்டு உள்ளது, இது அதன் மதிப்பிடப்பட்ட வருவாய் வரவுகளில் 64% ஆகும்.

வருவாய் மற்றும் ரசீதுகள்

  • மொத்த ரசீதுகள்: 2024-25 ஆம் ஆண்டிற்கான ரசீதுகள் (கடன்கள் தவிர்த்து) ₹3,03,814 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 10% அதிகம் ஆகும்.
  • வருவாய் ரசீதுகள்: 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் ₹2,99,010 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதில், ₹2,25,901 கோடி (76%) மாநிலத்தின் சொந்த வளங்களில் இருந்து திரட்டப்படும், மேலும் ₹73,109 கோடி (24%) மத்திய அரசிடமிருந்துப் பெறப்படும்.

  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 2024-25 ஆம் ஆண்டில் ₹1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப் பட்ட மதிப்பீட்டை விட 15% அதிகமாகும்.

அதிகாரப் பகிர்வு மற்றும் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானியங்கள்:

  • மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ₹49,755 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 10% அதிகமாகும்.
  • மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானியங்கள் ₹23,354 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து 13% குறைவாகும்.

பற்றாக்குறை மற்றும் கடன் மேலாண்மை

  • வருவாய்ப் பற்றாக்குறை: 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளைப் போலவே 2024-25 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை GSDPயில் 1.6% (₹49,279 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறை: 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை GSDPயில் 3.4% (₹1,08,690 கோடி) என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது, 2023-24 (GSDPயில் 3.5%) திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் சற்றே குறைவாக உள்ளது.
  • 2026-27 ஆம் ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை GSDP-யில் 2.9% ஆகக் குறைக்கப்பட உள்ளது.

  • நிலுவையில் உள்ள கடன்கள்: 2024-25 ஆம் ஆண்டின் இறுதியில், நிலுவையில் உள்ள கடன்கள் GSDPயில் 26.4% என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது (GSDPயில் 26.7%).

2024-25 பட்ஜெட் மதிப்பீடுகளுக்கான சிறப்பம்சங்கள்

தமிழ் வளர்ச்சி

  • தமிழ் இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு: தமிழ் இலக்கியத்தின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவை ரூ.2 கோடி செலவில் 25 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளது .
  • தமிழ் மொழி மேம்பாடு: தமிழ் மொழியின் ரம்மியமான குறிப்புகளை உலகம் முழுவதும் பரப்ப இலக்கியப் படைப்புகளை மொழி பெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப முன்னேற்றங்கள்: இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், இயல்பான மொழிச் செயலாக்கம் மற்றும் பெரிய அளவில் மொழி மாதிரிகளை உருவாக்கப் புத்தொழில் நிறுவனங்களைச் செயல்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
  • டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்: தமிழ் மொழியின் செழுமையையும், வரலாற்றையும் வருங்காலச் சந்ததியினருக்கு பாதுகாக்கும் வகையில் அரிய புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப் படவுள்ளது.

பழங்குடியினரின் மொழியியல் வளங்களின் ஆவணப் படுத்தல்

  • பாதுகாப்பு முயற்சிகள்: சௌராஷ்டிரா மற்றும் படுகா மொழிகள் மற்றும் தோடர், கோத்தர், சோளகர், கனி, நரிக்குறவர் போன்ற பல்வேறு பழங்குடியினரின் மொழி வளங்களை இனவியல் பார்வையில் ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சி

  • வீட்டு வசதித் திட்டம்: 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம், கிராமப்புறங்களில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகளுடன், 2030க்குள் 'குடிசை இல்லாத தமிழகத்தை' உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதற்கட்டமாக ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளது.

  • சாலை மேம்பாடு: 'முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு' திட்டத்தின் கீழ், 2,000 கி.மீ., தூரத்திற்கு, 1,000 கோடி ரூபாய் செலவில் சாலை மேம்பாடு மேற்கொள்ளப் படவுள்ளது.

  • மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.365 கோடியில் 2,000 புதிய மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
  • விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி: மாநகராட்சிகளுக்கு அருகில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் விரிவாக்கப் பகுதிகளில், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • நீர்நிலைகள் மறுசீரமைப்பு: சமூகப் பங்கேற்பு மூலம் 5,000 நீர்நிலைகளை மீட்டெடுக்கும் திட்டம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

வறுமை ஒழிப்பு

  • முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒருங்கிணைந்த அரசு உதவி வழங்குவதன் மூலம், சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கும் மாபெரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல்

  • நகர்ப்புற சாலை மேம்படுத்தல்: பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மூலம் ரூ.2,500 கோடி செலவில் 4,457 கிமீ நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது.
  • நவீன பொது உள்கட்டமைப்பு: இயற்கை நிலப்பரப்புகள், கண்காட்சி அரங்குகள் மற்றும் திறந்தவெளி திரையரங்குகளுடன் கூடிய நகர்ப்புற பொது சதுக்கம் ரூ.104 கோடி செலவில் தீவுத்திடல் மைதானத்தில் நிறுவப்பட உள்ளது.
  • பெசன்ட் நகர், எண்ணூர், கோவளம் கடற்கரைகள் ரூ.100 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அலங்கரிக்கப் படவுள்ளது.
  • அதி நவீனத் திரைப்பட நகரம்: சென்னை அருகே பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதி நவீனத் திரைப்பட நகரம் அமைக்கப் படவுள்ளது.
  • அடையாறு நதி மறுசீரமைப்பு: அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணியானது, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும், இது பொது-தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.

  • நகர்ப்புறப் பசுமையாக்கும் திட்டம்: பசுமை தமிழ்நாடு இயக்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய திட்டம் செயல்படுத்தப்பட படவுள்ளது.
  • 24x7 குடிநீர் விநியோகம்: மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் தடையின்றி 24x7 குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப் படவுள்ளது.

குடிநீர் விநியோகம்

  • ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7,890 கோடியில் மேற்கொள்ளப் படவுள்ளது.
  • கொள்ளிடம் நதிநீர் வழங்கல் திட்டம்: பெரம்பலூர் நகராட்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் மற்றும் பாடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, கொள்ளிடம் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.366 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப் படவுள்ளது.
  • நாமக்கல் குடிநீர் வழங்கல் திட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் இரண்டு லட்சம் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் காவிரி நதியை ஆதாரமாகக் கொண்டு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.358 கோடியில் செயல்படுத்தப் படவுள்ளது.
  • வைகை நதிநீர் வழங்கல் திட்டம்: திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வைகையை ஆதாரமாக கொண்டு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.565 கோடியில் மேற்கொள்ளப் படவுள்ளது.

பெண்கள் நலன்

  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 1.15 கோடி பெண் குடும்பத் தலைவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடி வைப்புத் தொகையாக செலுத்தப் படுகிறது.
  • அதற்காக ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

  • விடியல் பயணத் திட்டம்: நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதியான இடங்களிலும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் வசதி நீடிக்கப் பட்டுள்ளது.

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை உள்ளடக்கி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவாக்கப் பட்டுள்ளது.
  • ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டி: 0 முதல் 6 மாதங்கள் வரையிலான கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.
  • புதிய அங்கன்வாடிகள்: ரூ.70 கோடியில் 500 புதிய அங்கன்வாடிகள் கட்டப் படவுள்ளது.
  • தோழி விடுதிகள்: சென்னை, கோவை மற்றும் மதுரையில் ரூ.26 கோடி செலவில் புதிய தங்கும் விடுதிகள் மூலம் பெண்கள் பயன்பெறுகின்றனர்.

  • திருநங்கைகளுக்கான கல்வி உதவி: உயர்கல்வியைத் தொடரும் திருநங்கைகளுக்குக் கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் உட்பட அனைத்து கல்விச் செலவுகளும் அரசினால் ஈடு செய்யப் படும்.
  • 'பூஞ்சோலை' மாதிரி இல்லம்: கோவையில் பெண்களுக்கான பல்வேறு வசதிகளுடன் இந்த மாதிரி இல்லம் அமைக்கப் படவுள்ளது.

பள்ளிக் கல்வி

  • புதிய வகுப்பறைகள்: ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டுமானம் தொடங்கப் பட உள்ளது.
  • திறன் வகுப்பறைகள்: ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன் வகுப்பறைகள் அமைக்கப் பட உள்ளது.

உயர் கல்வி

  • கட்டட உள்கட்டமைப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.200 கோடி செலவில் மேம்படுத்தப் படவுள்ளது.
  • ஒருங்கிணைந்த கற்றல் அமைப்புகள்: ரூ.173 கோடி செலவில், 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினிகள் மற்றும் அறிவியல் உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
  • மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் கோவையில் இந்த மையம் அமைக்கப் படவுள்ளது.

நான் முதல்வன்

  • புதிய திறன் ஆய்வகங்கள்: ரூ.200 கோடியில், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், புதிய திறன் ஆய்வகங்கள் நிறுவப் பட்டது.
  • போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி: இப்பயிற்சி மூலம் சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் 1,000 பேர் ஆறு மாதங்களுக்கு தரமான பயிற்சி பெறுவார்கள். இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஏழை மற்றும் விளிம்புநிலைப் பின்னணியைச் சேர்ந்த சிறுவர்களின் உயர்கல்விக்கான கனவுகளை நனவாக்க, ரூ.360 கோடி செலவில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.

  • கல்விக் கடன்கள்: ரூ.2,500 கோடி அளவுக்குக் கல்விக் கடன்களை உறுதி செய்வதற்கான முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்