TNPSC Thervupettagam

தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்பு - I

April 5 , 2019 2060 days 22068 0
தமிழ்நாட்டின் பாதுகாப்பு முன்னெடுப்புகள்
  • மாநிலத்தில் உள்ள வனவிலங்கு வளத்தின் மதிப்பையும் பாதுகாப்பிற்கான அவசியத்தையும் உணர்ந்து, தமிழக அரசானது நம்முடைய மதிப்பு மிக்க விலங்குகளைப் பாதுகாக்க தமிழ்நாடு காட்டு யானைகள் பாதுகாப்பு சட்டம்-1873 மற்றும் வனப் பறவைகள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் – 1912 ஆகியவற்றை 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இயற்றியுள்ளது.
  • 1936-ல் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயமானது இந்தியாவின் முதல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • 1973 ஆம் ஆண்டு நாட்டில் புலிகள் திட்டம் தொடங்குவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே 1962 ஆம் ஆண்டில் முண்டந்துறையானது புலிகளுக்கான சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • தமிழ்நாடானது பாதுகாக்கப்பட்ட பகுதி மேலாண்மை மற்றும் வன வளங்களையும் வன விலங்குகளையும் மேம்படுத்தல் ஆகியவற்றில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

 

தமிழ்நாட்டின் பல்லுயிர்த்தன்மை
  • தமிழகத்தில் 95 சதுர கி.மீ அளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதி மேலாண்மையின் கீழ் உள்ளது. இது மாநிலத்தில் உள்ள மொத்த வனப் பகுதியில் சுமார் 30.92% ஆகும்.
  • மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 5 தேசிய பூங்காங்கள், 15 வனவிலங்கு சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள் மற்றும் 2 பாதுகாப்பு சரணாலயங்கள் ஆகியவை உள்ளடங்கும்.
  • ஆனைமலை, களக்காடு-முண்டந்துறை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 பகுதிகள் புலிகள் சரணாலயம் ஆகும்.
  • இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளானது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • மேலும் தமிழ்நாடானது சர்வதேச அளவில் தனது அதிகமான மற்றும் தனித்துவமான பல்லுயிர்த் தன்மைக்காக சர்வதேச முக்கியத்துவமாக கருதப்படும் நீலகிரி, மன்னார் வளைகுடா மற்றும் அகஸ்தியர் மலை ஆகிய மூன்று உயிர்க்கோள காப்பகங்களையும் கொண்டுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையானது 25 உலகளாவிய முக்கிய தளங்களில் ஒன்றாகும். மேலும் தனிச் சிறப்பை பெற்றுள்ள மூன்று மிகப் பெரிய மையங்களில் ஒன்றாகும்.
  • பலதிரள் மரபணுக்களைக் கொண்டுள்ள புலிகள் காப்பகங்களான முக்கூர்தி, ஸ்ரீவில்லிபுத்தூர், கன்னியாகுமரி மற்றும் மேகமலை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அதனதன் பகுதியில் அதற்கே உரித்தான பல செழுமையான தாவர மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளன.
  • களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இயற்கை நிலையில் தொடரும் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமானது கீழ்க்காணும் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு புதிய முயற்சியாகும்.
    • கன்னியாகுமரி
    • திருநெல்வேலி
    • விருதுநகர்
    • மதுரை மற்றும்
    • தேனி

  • மாநில அரசானது பின்வரும் நடைமுறைகள் மூலம் வன உயிர்களை மேம்படுத்த முயற்சி செய்கிறது.
    • தேவையான இடங்களில் விரிவுபடுத்துதல் & வலுப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரங்களின் இணைப்புகளை உறுதிப்படுத்துதல் மூலம் வன வாழ்விடங்களை மேம்படுத்துதல்.
    • மாநிலங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்புடன் இயற்கை நிலையிலேயே வனவிலங்கு வளங்களின் மேலாண்மை.
    • வனவிலங்குகள் மேலாண்மையில் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகையில் பழங்குடியினர் மற்றும் வனவாசிகளின் உணர்வுகளை நன்கு மதிப்பிடுதல்.
    • புலம்பெயர் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
    • பறவையினங்களுக்காக சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல்.
    • உயிரிக் கனிம வளங்களுக்காக பல்லுயிர்த் தன்மையின் விவரப் பட்டியலை உருவாக்குதல்.
    • பாதுகாப்பு ஆதாரங்களுக்காக குறைவாக அறியப்பட்ட பல்வகைத் தன்மையைப் புரிந்துக் கொள்ளல்.

இனி தமிழ்நாட்டின் வனவிலங்கு சரணாலயங்களின் விவரங்களைக் காணலாம்

  1. முதுமலை வனவிலங்கு சரணாயலம்
  • முதுமலை தேசியப் பூங்கா மற்றும் வினவிலங்கு சரணாலயமானது புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது நீலகிரி மாவட்டத்தின் நீலகிரி மலையின் (நீல மலைகள்) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இது கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

  • இந்த சரணாலயமானது மசினக்குடி, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி மற்றும் நெல்லக் கோட்டா என ஐந்து தொடர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது இந்திய யானை, வங்காளப் புலி, இந்தியக் காட்டெருது மற்றும் இந்திய சிறுத்தை ஆகிய அருகி வரும் மற்றும் அபாயத்திற்குட்பட்ட இனங்களுக்கு தாயகமாக உள்ளது.

  • மேலும் இங்கு அருகி வரும் வகை மற்றும் பாதிப்பிற்குள்ளான வகை ஆகிய உயிரினங்களாகிய இந்திய வெண்முதுகுக் கழுகுகள் மற்றும் நீண்ட அலகுடைய கழுகுகள் உள்ளிட்ட 226 பறவையினங்கள் உள்ளன.
  1. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  • கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது.
  • இது ஈரோட்டில் அமைந்துள்ள சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்திற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டாவது பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

  • தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது அருகில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள களக்காடு சரணாலயம் (1976) மற்றும் முண்டந்துறை சரணாலயம் (1962) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
  • மேலும் இது கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் கீழமலை மற்றும் வீரப்புலி ஆகிய பாதுகாக்கப்பட்ட காடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது ஆகும்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக் காடுகளின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இனமான சிங்கவால் குரங்கு (மக்காகா சிலெனஸ்) போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரனங்களை அதிக எண்ணிக்கையிலும் கொண்டுள்ளது.
  • இது தமிழ்நாட்டு ஆறுகளின் சரணாலயம் என பிரபலமாக அறியப்படும் அளவிற்கு சுமார் 14 ஆறுகளின் பிறப்பிடமாக உள்ளது.

 

  1. பாயிண்ட் காலிமர் (கோடியக்கரை) வனவிலங்கு சரணாலயம்
  • இது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அமைந்துள்ளது.
  • இந்தச் சரணாலயமானது தென்னிந்தியாவில் அதிகபட்சமாகவும் இந்திய அளவிலான மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அளவிலும் (ஏறக்குறைய 1000) கலைமான்களைக் கொண்டுள்ளது.

  • இது குறிப்பாக பெரும் பூநாரை போன்ற நீர்ப்பறவைகளின் கூடுகைக்குப் பிரபலமானதாகும்.
  • இந்த தளமானது உவர்ப்பு சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், ஈரத் தரைப் பகுதிகள், புல்வெளிகள் மற்றும் வெப்பமண்டல உலர் பசுமை மாறா காடுகளின் கலவையாகும்.
  • மேலும் இது நாட்டில் தனித்தன்மை வாய்ந்த உலர் பசுமை மாறாக் காடுகளின் பெரிய நீட்சி ஒன்றையும் கொண்டுள்ளது.
  • இதன் கடற்கரைப் பகுதி அருகிவரும் இனமான ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வழக்கமான முட்டையிடும் தளமாகவும் விளங்குகிறது.

  • மேலும் இது ராம்சார் சாசனத்தின் கீழ் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ராம்சார் தளமாகவும் உள்ளது.
- - - - - - - - - - - - - - -
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்