-
கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயம்
- கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயமானது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் வனப் பகுதிகளை உள்ளடக்கியது.
- இந்தச் சரணாலயமானது அதிக எண்ணிக்கையிலான பாலூட்டிகளின் (44) வாழ்வாதாரமாக உள்ளது.
- நீலகிரி மந்தி, கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின், பழுப்பு உள்ளங்கையுடைய மரநாய், நீலகிரி வரையாடு போன்ற அச்சுறு நிலையில் உள்ள இனங்களுக்கும் இது வசிப்பிடமாக உள்ளது.
- நீலகிரி நெட்டைக்காலி, சாம்பல் நிற கொண்டைக் குருவி, நீலப் பைங்கிளி, நீலகிரி காட்டுப்புறா, கருப்பு மற்றும் பொன்னிற ஈப்பிடிப்பான் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட வட்டாரப் பறவைகள் இந்தச் சரணாலயத்தில் உள்ளன.
- இந்த பாதுகாப்பகமானது 8 வகையான மிகவும் பரந்த மீன் வகை இனங்களைக் கொண்டுள்ளது.
- இங்கு வண்ணத்துப் பூச்சி இனங்கள் மற்றும் புள்ளி கடல் புறா ஆகியவற்றுடன் ஊர்வன இனங்களின் கூட்டங்களும் அதிகமாக உள்ளன.
- மேலும் இது வட்டாப்ர பல்லி இனங்கள் போன்ற பல்வேறு வகையான மற்றும் அரிதான உயிர் இனங்களையும் கொண்டுள்ளது.
- கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயமானது சோலை வனக் காடுகளின் உயிர்ச் சூழலியலை மறுசீரமைப்பு செய்ய சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றது.
-
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
- இது திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கைகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ளது.
- இது புள்ளிமான்களின் மிக முக்கியமான வாழ்விடமாக விளங்குகின்றது.
- மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வெளிப்பகுதியில் தென்முனையில் அமைந்துள்ள புள்ளிமான்களின் வாழ்விடம் இதுவேயாகும்.
- மேலும் இது மயில்கள், கீரிப் பிள்ளை, பல்வேறு ஊர்வன மற்றும் பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றது.
-
வட காவேரி வனவிலங்குச் சரணாலயம்
- இது தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப் பகுதியாகும்.
-
நெல்லை வனவிலங்குச் சரணாலயம்
- திருநெல்வேலி வனப் பிரிவில் உள்ள மொத்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் நெல்லை வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட இந்த சரணாலயமானது தமிழ்நாட்டின் 15-வது வனவிலங்குச் சரணாலயமாகும்.
தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயங்கள்
- தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பிற்கானப் பெருமுயற்சியை மாநிலம் முழுவதும் பரவியுள்ள நன்கு பராமரிக்கப்படும் 15 பறவைகள் சரணாலயங்கள் மற்றும் இரண்டு பாதுகாப்பு இருப்புப் பகுதிகள் ஆகியவற்றின் மூலம் நன்கு அறிய முடியும்.
- ஒவ்வொரு பறவைகள் சரணாலயங்களும் அவற்றின் பல்வேறு வகையான நீரின் தரம், மீன்களின் தொகை, தாவர மற்றும் பறவையின பன்முகத் தன்மை ஆகியவற்றில் வேறுபட்டு இருப்பிட மற்றும் குளிர்கால புலம்பெயர் பறவைகளை ஈர்க்கின்றன.
- துடிப்பான செயல்பாட்டில் உள்ள 12 இனப்பெருக்கத் தளங்களுடன் காஞ்சிபுரம், இராமநாதபும் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் அதிகபட்ச எண்ணிக்கையிலான இனப்பெருக்கத் தளங்களுடன் முன்னிலையில் உள்ளன.
- இதனையடுத்து 9 இனப்பெருக்கத் தளங்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.
- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 3 ஐபிஸ் வகை பறவை இனங்களும் ஒன்றாக கூடு கட்டுகின்றன.
- கோடியக்கரை, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றின் சதுப்பு நிலங்கள் தென்னிந்திய புலம்பெயர்தலின் போது நீர்ப் பறவைகளுக்கான மிகப்பெரிய ஓய்விடமாக மட்டுமல்லாது புலம்பெயர் பறவைகளுக்கான ஒரு பகுதிக்கு குளிர்கால தளமாகவும் உள்ளது.
- தமிழ்நாட்டில் மண்டபம், காளிவேலி ஏரி, கொடைக்கானல் மற்றும் பழனி மலை ஆகிய பகுதிகளில் வளையமிடுதலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றி இனி காணலாம்.
-
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமானது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
- இது நாட்டில் நீர்ப்பறவைகளுக்கென்று உள்ள மிகப் பழமையான ஒரு சரணாலயம் ஆகும்.
- 1936 ஆம் ஆண்டு மாநில அரசால் அதிகாரப் பூர்வமாக இந்த ஏரியானது சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 1962 ஆம் ஆண்டில் மதராஸ் வனச் சட்டத்தின் கீழ் இந்த பாதுகாக்கப்பட்டப் பகுதிக்கு சட்டப்பூர்வ தகுதிநிலை வழங்கப்பட்டது.
- 26 அரிய வகை பறவைகள் உட்பட 40,000க்கும் அதிகமான பறவைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர் காலங்களில் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
- புலம்பெயர் பறவைகளாவன:
- கனடாவிலிருந்து நீலச் சிறகு வாத்து மற்றும் நன்னீர்க் கிளுவை
- இலங்கையிலிருந்து பாம்புத்தாரா பறவைகள் மற்றும் அன்றில் பறவைகள்
- ஆஸ்திரேலியாவிலிருந்து சாம்பல் கூழைக் கடாய் பறவைகள்
- வங்காள தேசத்திலிருந்து சாம்பல் கொக்கு மற்றும் நத்தைக் குத்தி நாரைகள்
- சைபீரியாவிலிருந்து மஞ்சள் மூக்கு நாரைப் பறவைகள்
- பர்மாவிலிருந்து துடுப்பு வாய்ப் பறவைகள் மற்றும் புள்ளிமூக்கு வாத்து
-
கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
- இது காஞ்சிபுரத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
- கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் இணைந்து தமிழ்நாட்டின் பறவைகளுக்கான முக்கியப் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
- பல நீர்ப்பறவைகள் வேடந்தாங்கலை அடைகாக்கும் தளமாகவும் கரிக்கிலியை உணவு தேடும் தளமாகவும் பயன்படுத்துகின்றன.
- உலர் பசுமை மாறா புதர்கள் மற்றும் முட்செடித் தன்மையைக் கொண்ட காடுகளை இது கொண்டுள்ளது. மேலும் இந்தச் சரணாலயத்தில் உள்ள இரண்டு மழை நீர் பிடிப்புத் தொட்டிகள் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- இது நீர்நிலையோரங்களில் வாழும் பறவைகள் மற்றும் வாத்துக்களுக்கான பகுதியாக அறியப்படுகின்றது.
- இந்தச் சரணாலயமானது நீர்க் காகங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் சிறிய நாரைகள், சாம்பல் நாரை, பாம்பு தாராக்கள், துடுப்பு வாய்ப் பறவைகள், வெள்ளை ஐபிஸ் பறவைகள், கரு நாரைகள், சிறு முக்குளிப்பான்கள், சாம்பல் கூழைக் கடாய்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
-
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
- இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
- இது பெரிய கொள்ளுக்குடி படி, சின்ன கொள்ளுக்குடி படி, வேட்டங்குடி பட்டி போன்ற நீர்ப்பாசன பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
- இந்தச் சரணாலயமானது 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவைகளுக்கு சுமார் அரை நூற்றாண்டுகளாக பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க தளமாக கருதப்படுகிறது.
- இந்த சிறிய வடிகால் பகுதியானது 217 வகைகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட குளிர்கால புலம்பெயர் பறவைகளை ஈர்க்கிறது. இவை பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து வருகின்றன.
- இது சாம்பல் நாரை, பாம்பு தாராக்கள், துடுப்பு வாய்ப் பறவைகள், வெள்ளை ஐபிஸ் பறவைகள், நத்தைக் குத்தி நாரை மற்றும் கருநாரை ஆகிய பறவைகளின் இனப்பெருக்க வாழிடமாக உள்ளது.
- மேலும் இது மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, சிறிய நீர்க் காகம், குருகுகள், நடுத்தர கொக்குகள், உண்ணிக் கொக்கு, கிளுவை, புள்ளிமூக்கு வாத்து, ஊசிவால் வாத்து மற்றும் பிளமிங்கோ போன்ற உள்நாட்டு அருகி வரும் பறவையினங்களையும் ஈர்க்கின்றது.
- - - - - - - - - - - - - - -