TNPSC Thervupettagam

தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்பு- III

April 15 , 2019 2097 days 2838 0
  1. கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயம்
  • கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயமானது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் வனப் பகுதிகளை உள்ளடக்கியது.
  • இந்தச் சரணாலயமானது அதிக எண்ணிக்கையிலான பாலூட்டிகளின் (44) வாழ்வாதாரமாக உள்ளது.
  • நீலகிரி மந்தி, கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின், பழுப்பு உள்ளங்கையுடைய மரநாய், நீலகிரி வரையாடு போன்ற அச்சுறு நிலையில் உள்ள இனங்களுக்கும் இது வசிப்பிடமாக உள்ளது.

  • நீலகிரி நெட்டைக்காலி, சாம்பல் நிற கொண்டைக் குருவி, நீலப் பைங்கிளி, நீலகிரி காட்டுப்புறா, கருப்பு மற்றும் பொன்னிற ஈப்பிடிப்பான் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட வட்டாரப் பறவைகள் இந்தச் சரணாலயத்தில் உள்ளன.

  • இந்த பாதுகாப்பகமானது 8 வகையான மிகவும் பரந்த மீன் வகை இனங்களைக் கொண்டுள்ளது.
  • இங்கு வண்ணத்துப் பூச்சி இனங்கள் மற்றும் புள்ளி கடல் புறா ஆகியவற்றுடன் ஊர்வன இனங்களின் கூட்டங்களும் அதிகமாக உள்ளன.
  • மேலும் இது வட்டாப்ர பல்லி இனங்கள் போன்ற பல்வேறு வகையான மற்றும் அரிதான உயிர் இனங்களையும் கொண்டுள்ளது.
  • கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயமானது சோலை வனக் காடுகளின் உயிர்ச் சூழலியலை மறுசீரமைப்பு செய்ய சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றது.
  1. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
  • இது திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கைகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ளது.
  • இது புள்ளிமான்களின் மிக முக்கியமான வாழ்விடமாக விளங்குகின்றது.

  • மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வெளிப்பகுதியில் தென்முனையில் அமைந்துள்ள புள்ளிமான்களின் வாழ்விடம் இதுவேயாகும்.
  • மேலும் இது மயில்கள், கீரிப் பிள்ளை, பல்வேறு ஊர்வன மற்றும் பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றது.
  1. வட காவேரி வனவிலங்குச் சரணாலயம்
  • இது தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப் பகுதியாகும்.
  1. நெல்லை வனவிலங்குச் சரணாலயம்
  • திருநெல்வேலி வனப் பிரிவில் உள்ள மொத்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் நெல்லை வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட இந்த சரணாலயமானது தமிழ்நாட்டின் 15-வது வனவிலங்குச் சரணாலயமாகும்.

 

தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயங்கள்
  • தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பிற்கானப் பெருமுயற்சியை மாநிலம் முழுவதும் பரவியுள்ள நன்கு பராமரிக்கப்படும் 15 பறவைகள் சரணாலயங்கள் மற்றும் இரண்டு பாதுகாப்பு இருப்புப் பகுதிகள் ஆகியவற்றின் மூலம் நன்கு அறிய முடியும்.
  • ஒவ்வொரு பறவைகள் சரணாலயங்களும் அவற்றின் பல்வேறு வகையான நீரின் தரம், மீன்களின் தொகை, தாவர மற்றும் பறவையின பன்முகத் தன்மை ஆகியவற்றில் வேறுபட்டு இருப்பிட மற்றும் குளிர்கால புலம்பெயர் பறவைகளை ஈர்க்கின்றன.
  • துடிப்பான செயல்பாட்டில் உள்ள 12 இனப்பெருக்கத் தளங்களுடன் காஞ்சிபுரம், இராமநாதபும் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் அதிகபட்ச எண்ணிக்கையிலான இனப்பெருக்கத் தளங்களுடன் முன்னிலையில் உள்ளன.
  • இதனையடுத்து 9 இனப்பெருக்கத் தளங்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 3 ஐபிஸ் வகை பறவை இனங்களும் ஒன்றாக கூடு கட்டுகின்றன.
  • கோடியக்கரை, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றின் சதுப்பு நிலங்கள் தென்னிந்திய புலம்பெயர்தலின் போது நீர்ப் பறவைகளுக்கான மிகப்பெரிய ஓய்விடமாக மட்டுமல்லாது புலம்பெயர் பறவைகளுக்கான ஒரு பகுதிக்கு குளிர்கால தளமாகவும் உள்ளது.
  • தமிழ்நாட்டில் மண்டபம், காளிவேலி ஏரி, கொடைக்கானல் மற்றும் பழனி மலை ஆகிய பகுதிகளில் வளையமிடுதலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றி இனி காணலாம்.

  1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமானது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
  • இது நாட்டில் நீர்ப்பறவைகளுக்கென்று உள்ள மிகப் பழமையான ஒரு சரணாலயம் ஆகும்.

  • 1936 ஆம் ஆண்டு மாநில அரசால் அதிகாரப் பூர்வமாக இந்த ஏரியானது சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 1962 ஆம் ஆண்டில் மதராஸ் வனச் சட்டத்தின் கீழ் இந்த பாதுகாக்கப்பட்டப் பகுதிக்கு சட்டப்பூர்வ தகுதிநிலை வழங்கப்பட்டது.
  • 26 அரிய வகை பறவைகள் உட்பட 40,000க்கும் அதிகமான பறவைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர் காலங்களில் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.

  • புலம்பெயர் பறவைகளாவன:
    • கனடாவிலிருந்து நீலச் சிறகு வாத்து மற்றும் நன்னீர்க் கிளுவை
    • இலங்கையிலிருந்து பாம்புத்தாரா பறவைகள் மற்றும் அன்றில் பறவைகள்
    • ஆஸ்திரேலியாவிலிருந்து சாம்பல் கூழைக் கடாய் பறவைகள்
    • வங்காள தேசத்திலிருந்து சாம்பல் கொக்கு மற்றும் நத்தைக் குத்தி நாரைகள்
    • சைபீரியாவிலிருந்து மஞ்சள் மூக்கு நாரைப் பறவைகள்
    • பர்மாவிலிருந்து துடுப்பு வாய்ப் பறவைகள் மற்றும் புள்ளிமூக்கு வாத்து
  1. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
  • இது காஞ்சிபுரத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் இணைந்து தமிழ்நாட்டின் பறவைகளுக்கான முக்கியப் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
  • பல நீர்ப்பறவைகள் வேடந்தாங்கலை அடைகாக்கும் தளமாகவும் கரிக்கிலியை உணவு தேடும் தளமாகவும் பயன்படுத்துகின்றன.
  • உலர் பசுமை மாறா புதர்கள் மற்றும் முட்செடித் தன்மையைக் கொண்ட காடுகளை இது கொண்டுள்ளது. மேலும் இந்தச் சரணாலயத்தில் உள்ள இரண்டு மழை நீர் பிடிப்புத் தொட்டிகள் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • இது நீர்நிலையோரங்களில் வாழும் பறவைகள் மற்றும் வாத்துக்களுக்கான பகுதியாக அறியப்படுகின்றது.

  • இந்தச் சரணாலயமானது நீர்க் காகங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் சிறிய நாரைகள், சாம்பல் நாரை, பாம்பு தாராக்கள், துடுப்பு வாய்ப் பறவைகள், வெள்ளை ஐபிஸ் பறவைகள், கரு நாரைகள், சிறு முக்குளிப்பான்கள், சாம்பல் கூழைக் கடாய்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
  1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
  • இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இது பெரிய கொள்ளுக்குடி படி, சின்ன கொள்ளுக்குடி படி, வேட்டங்குடி பட்டி போன்ற நீர்ப்பாசன பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
  • இந்தச் சரணாலயமானது 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவைகளுக்கு சுமார் அரை நூற்றாண்டுகளாக பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க தளமாக கருதப்படுகிறது.
  • இந்த சிறிய வடிகால் பகுதியானது 217 வகைகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட குளிர்கால புலம்பெயர் பறவைகளை ஈர்க்கிறது. இவை பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து வருகின்றன.

  • இது சாம்பல் நாரை, பாம்பு தாராக்கள், துடுப்பு வாய்ப் பறவைகள், வெள்ளை ஐபிஸ் பறவைகள், நத்தைக் குத்தி நாரை மற்றும் கருநாரை ஆகிய பறவைகளின் இனப்பெருக்க வாழிடமாக உள்ளது.
  • மேலும் இது மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, சிறிய நீர்க் காகம், குருகுகள், நடுத்தர கொக்குகள், உண்ணிக் கொக்கு, கிளுவை, புள்ளிமூக்கு வாத்து, ஊசிவால் வாத்து மற்றும் பிளமிங்கோ போன்ற உள்நாட்டு அருகி வரும் பறவையினங்களையும் ஈர்க்கின்றது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்