TNPSC Thervupettagam

தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்பு - II

April 11 , 2019 2101 days 4391 0
  1. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலம்
  • இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் பாலக்காடு கணவாய்ப் பகுதிக்கு தென்புறத்தில் அமைந்துள்ளது.
  • இது வனவிலங்கு சரணாலயமாக 1976 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் என்று பெயரிடப்பட்டது. அதன் பின்பு 1987 ஆம் ஆண்டு இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்று இதற்கு மறு பெயரிடப்பட்டது.
  • இங்கு பல்வேறு வகையான மருத்துவக் குணமுடைய தாவர வளங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள கரியன் சோலைப் பகுதி இந்தியாவின் மருத்துவத் தாவரங்களின் பாதுகாப்புப் பகுதிகளில் ஒன்றாக பாதுகாக்கப் படுகின்றது.
  • இந்த புலிகள் காப்பகமானது 70 அல்லது அதற்கும் மேற்பட்ட மீன் இனங்கள், 70 அல்லது அதற்கும் மேற்பட்ட ஈரிட வாழ்வி இனங்கள், 120 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள், 300 அல்லது அதற்கும் மேற்பட்ட பறவையினங்கள், 80 அல்லது அதற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்கள் உட்பட பல்வேறு அருகி வரும் இனங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

  • ஒரே தென்னிந்திய காட்டு ஆடு இனமும் தமிழ்நாட்டின் மாநில விலங்குமான நீலகிரி வரையாடு இந்த புலிகள் காப்பகத்தின் மலையுச்சிகளின் மீதும் புல்வெளிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றது.

  • ஆனைமலையானது மலசார், மலை மலசார், காடர்கள், ஏரவல்லார்கள், புலயர்கள் மற்றும் மடுவர்கள் ஆகிய 6 உள்நாட்டுப் பழங்குடியின மக்களின் புகலிடமாக இருப்பதால் இது மானுடவியல் பாதுகாப்பகம் என குறிப்பிடும் அளவிற்கு புகழ்மிக்கது.
  • அதிகமான பழங்குடி இன மக்களைக் கொண்டுள்ள ஒரே பாதுகாக்கப்பட்டப் பகுதியாக திகழ்வதால் தமிழ்நாட்டில் இது மிகவும் தனித் தன்மை வாய்ந்ததாகும்.
  1. ல்லநாடு கலைமான்கள் சரணாலயம்
  • வல்லநாடு கலைமான்கள் சரணாலயமானது கலைமான்கள் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இந்த சரணாலயமானது தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் உள்ள வல்லநாடு கிராமத்தில் அமைந்திருக்கின்றது.
  • இந்த சரணலாயமானது தெற்கு தக்காணப் பீடபூமியின் உலர் இலையுதிர் காடுகளாகும்.
  • இது காட்டுப் பூனை, கீரிப் பிள்ளை மற்றும் புள்ளிமான் போன்ற பல்வேறு வகையான பாலூட்டிகளின் தாயகமாக உள்ளது.
  1. பழுப்பு நிற மலை அணில் வனவிலங்கு சரணாலயம்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பழுப்பு நிற மலை அணில் வனவிலங்கு சரணாலயமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது.
  • இந்தச் சரணாலயமானது வெப்ப மண்டல பசுமைக் காடுகள், அரைப் பசுமை மாறாக் காடுகள், உலர் இலையுதிர் காடுகள், ஈர கலப்பு இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிகள் என பல்வேறு வகைக் காடுகளின் கலவையாக உள்ளது.

  • இது பெரியார் புலிகள் பாதுகாப்பகத்தின் யானைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான ஒரு முக்கியமான நிலப்பரப்பு ஆகும்.
  • இப்பிரிவானது பழுப்புநிற மலை அணில், யானை, புலி, சிறுத்தை, நீலகிரி வரையாடு, இந்தியக் காட்டெருது, சிங்கவால் குரங்கு (அல்லது சோலைமந்தி) மற்றும் கழுதைப் புலி போன்ற அருகி வரும் உயிரினங்களைக் கொண்டுள்ளது.

  • இது இந்தியாவில் உள்ள பழுப்பு மலை அணில்கள் வாழத் தகுந்த ஆறு உறைவிடங்களில் ஒன்றாகும்.
  • பழுப்பு நிற மலை அணில் ஆனது இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியின் முதன்மை உயிரினமாகும்.
  • வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களால் இதனை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஆனது அண்மை அச்சுறு நிலையில் உள்ள உயிரினமாக அட்டவணைப் படுத்தியுள்ளது.
  1. கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்
  • இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இது புலிகள் பாதுகாப்பகமாகவும் திகழ்கிறது.
  • தாமிரபரணி மற்றும் பஃருளி நதி உள்பட ஏழு நதிகள் இந்தக் காட்டில் உற்பத்தியாகின்றன.
  • வேறெங்கும் இல்லாத அளவிற்கு பல்வேறு புதிய இன தாவரங்கள், ஈரிட வாழ்விகள் மற்றும் பூச்சியினங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இத்தன்மையானது இச்சரணாலயத்தினை ஒரு அரிதான ஓரிட வாழ்வுப் பகுதியாக மாற்றுகின்றது.
  • இந்தப் பகுதியானது புலிகளுடன் சேர்த்து இந்தியக் காட்டெருது, யானை, இந்திய மலைப் பாம்பு, சிங்கவால் குரங்கு (அல்லது சோலைமந்தி), சருகு மான் போன்ற அச்சுறு நிலையில் உள்ள உயிரினங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது.

  • மேலும் இது அகஸ்தியர் மலை உயிர்க்கோள பாதுகாப்பகத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது.
  1. சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயம்
  • இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது.
  • சத்திய மங்கலம் வனப் பகுதிப் பிரிவானது வறண்ட முட்புதர்களிலிருந்து உச்சிப் பகுதிகளில் அரை பசுமை மாறாக் காடுகளின் திட்டுகள் என பல்வகை தாவரங்களைக் கொண்டுள்ளது.
  • வனத்தின் தெற்குப் பகுதியானது சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 4-வது புலிகள் பாதுகாப்பகமாக உருவாக்கப்பட்டது.

  • சத்திய மங்கலம் புலிகள் பாதுகாப்பகமானது மாநிலத்தின் மிகப் பெரிய வன விலங்கு சரணாலயமாகும்.
  • இது இரு வேறுபட்ட பல்லுயிர்த் தன்மையுடைய மற்றும் புவியியல் பிராந்தியங்களான மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றின் நிலப் பரப்புகள் சந்திக்கும் பகுதியாகும்.
  • இந்த பாதுகாக்கப்பட்டப் பகுதியானது கீழ்க்காணும் நான்கு மற்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
    • பில்லி கிரிரங்கா சுவாமி ஆலய வன விலங்கு சரணாலயம்
    • சிகுர் பீடபூமி
    • முதுமலை தேசியப் பூங்கா
    • பந்திப்பூர் தேசியப் பூங்கா
  • இது நீலகிரி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு முக்கியமான நிலப்பரப்பாகும்.
  • இந்தப் பிரிவானது யானை, இந்திய காட்டெருது, கலைமான், புலி, சிறுத்தை, வெள்ளை முதுகு கழுகு மற்றும் கழுதைப்புலி என பல்வேறு அருகி வரும் இனங்களைக் கொண்டுள்ளது.

  • மேலும் இந்தச் சரணாலயமானது காட்டு இஞ்சி, மஞ்சள், தக்காளியினம் மற்றும் மாங்காய் போன்ற பயிரிடப்படும் தாவரங்களின் வன இனங்களையும் கொண்டுள்ளது.
  • இந்த வனப் பகுதியானது பூர்வகுடி இனத்தவரான இருளர் இனத்தவரை (உராலி எனவும் அறியப்படுவர்) அதிக அளவிலும் சோலிகா இனத்தவரையும் கொண்டுள்ளது.

  1. மேகமலை வனவிலங்கு சரணாலயம்
  • மேகமலை வனவிலங்கு சரணாலயமானது ஸ்ரீவில்லிப்புத்தூர் பழுப்பு நிற மலை அணில் வன விலங்கு சரணாலயத்துடனும் கேரளாவின் பெரியார் புலிகள் பாதுகாப்பகத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது.
  • மேகமலை வனவிலங்கு சரணாலயமானது மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் வனப் பகுதிகளைப் பிரித்து உருவாக்கப் பட்டுள்ளது.
  • இதன் தாவரச் செறிவானது மலையடிவாரங்களில் புதர்க் காடுகளாகவும் அதற்கு மேல் பரவலாக தேயிலை மற்றும் காபித் தோட்டங்கள், நறுமணப் பொருட்களான மிளகு, ஏலக்காய், இலவங்க தோட்டங்களாகவும் இறுதியாக உச்சியில் அடர்ந்த பசுமை மாறாக் காடுகளாகவும் அமைந்துள்ளது.

  • இந்த சரணாலயமானது அதன் பல்லுயிர்த் தன்மைக்காக மிகவும் பிரபலமானதாகும். இது அதிக எண்ணிக்கையிலான அச்சுறு நிலையில் உள்ள அருகி வரும் இனங்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களைப் பெருமளவில் கொண்டுள்ளது.
  • இந்த மேகமலை வனப் பகுதியானது பல்வேறு வகையான பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு உறைவிடமாக உள்ளது. நிரந்தர மற்றும் புலம்பெயர் யானைகள் இங்கு பொதுவாக காணப்படுகின்றன.
  • சாம்பல் நிற வாலாட்டிக் குருவிகள், ஆசிய அரசவால் ஈபிடிப்பான், பச்சை வானம்பாடி, தகைவிலான் குருவி ஆகியவை இங்கு வழக்கமாக வருகை தரும் புலம்பெயர் பறவை வகைகளாகும்.

  • நீலநிற ராபின் பறவையானது வெள்ளி மலைப் பகுதிக்கு அரிதாக வருகை தரும் ஒரு புலம்பெயர் பறவையாகும்.
  • இச்சரணாலயம் பழையர் எனும் பழங்குடி இனத்தவரின் வாழ்விடமாகும்.
  • மேலும் இது பெரியாறு மற்றும் சுருளியாறு போன்ற நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சாரத் திட்டங்களுக்கும் உதவுகின்றது.
  • இந்த சரணாலயமானது யானைகள் பாதுகாப்பகம், புலிகள் பாதுகாப்பகம், மானுடவியல் பாதுகாப்பகம், உயர் பாலூட்டிகள் சரணாலயம் மற்றும் வன மரபணு சரணாலயம் ஆகியவையாக குறிப்பிடத் தகுதிப் பெற்றதாகும்.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்