TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் இரும்புக் காலம் - பகுதி 01

February 2 , 2025 30 days 596 0

தமிழ்நாட்டின் இரும்புக் காலம் - பகுதி 01

(For English version to this please click here)

தமிழகத்தின் தொன்மையான இரும்பு

  • வளங்கள் மூலம் வரலாற்றை வடிவமைத்தல்: இந்தியாவின் வரலாறு பல்வேறு கலாச்சார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இரும்புத் தாதுவின் பங்கு: இந்த வளர்ச்சியில் குறிப்பாக தமிழகத்தில் இரும்புத் தாது உள்ளிட்ட இயற்கை வளங்களின் இருப்பு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
  • இரும்புத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்: மனிதகுலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் இரும்புத் தொழில்நுட்பம் ஒன்றாகும்.
  • இரும்புக் கருவிகளின் நன்மைகள்: தாமிரம் மற்றும் வெண்கலக் கருவிகளுடன் ஒப்பிடும் போது இரும்புக் கருவிகள் மலிவானவை, அதிக நீடித்தவை மற்றும் திறமையானவை.
  • விவசாயம் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம்: இரும்புக் கருவிகளின் பயன்பாடு விவசாய உற்பத்தியை விரைவுபடுத்தியது மற்றும் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.
  • இரும்புத் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கு: இரும்புத் தாதுப் படிவுகள் ஏராளமாக இருப்பதால், தமிழக வரலாற்றில் இரும்புத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது.

கதிரியக்க கரிம காலக் கணிப்பு மற்றும் தொல்பொருள் சான்றுகள்

  • சமீபத்திய கண்டுபிடிப்புகளின் நுண்ணறிவு: தமிழ்நாட்டின் கதிரியக்க கரிம காலக் கணிப்பு இப்பகுதியில் இரும்பின் பழங்காலப் பயன்பாடு பற்றிய நுண்ணறிவுகளை வழங்கி உள்ளது.
  • ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிகள்: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் இரும்பு மற்றும் உயர் தகரம் கொண்ட வெண்கலப் பொருட்களுக்கு இடையேயான சிக்கலான தொடர்பு கிமு 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தது.
  • தமிழ்நாட்டில் செம்பு யுகம் இல்லை: வட இந்தியாவைப் போல் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க செப்பு யுகத்தைப் பெற்றிருக்கவில்லை.
  • தாமிர தாதுப் பற்றாக்குறை: இது முதன்மையாக, இப்பகுதியில் போதுமான அளவு செப்பு தாது இல்லாததால் இதன் பற்றாக்குறை ஏற்பட்டது.
  • வெண்கல மற்றும் இரும்புக் கருவிகளின் சங்கமம்: இரும்புக் கருவிகளுடன் இணைந்து உயர்-தகரத்திலான வெண்கலப் பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்பது இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஒரு தொடர்பைக் கூறுகின்றன.
  • பாரம்பரியக் கண்ணோட்டங்களுக்கான சவால்கள்: இந்தச் சங்கம் தாமிரம் உருக்குவது, இரும்பு அறிமுகத்திற்கு முன் இருந்த பாரம்பரியக் கண்ணோட்டத்தைச் சவால் செய்கிறது.

இரும்புக் காலச் சூழலில் உயர்-தகர வெண்கலக் கலைப்பொருட்கள்

  • வெண்கலம் மற்றும் இரும்பு கலைப்பொருட்கள் சேர்ந்த கலவை: ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), சாஸ்தாபுரம் (தேனி மாவட்டம்) மற்றும் திருமலாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்) போன்ற அகழ்வாராய்ச்சித் தளங்களில் இரும்புக் கருவிகளுடன் உயர் தகர வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இரும்பு மற்றும் வெண்கலத்தின் கலாச்சார சூழல்: இந்தக் கலைப்பொருட்களானது வெண்கலப் பொருட்கள் இரும்புக் கருவிகளின் அதே கலாச்சாரச் சூழலின் ஒரு பகுதியாக இருந்ததாக தெரிவிக்கின்றன.
  • தாமிரத்திற்கு முன் இரும்பு: பாரம்பரிய வரலாற்றுக் கண்ணோட்டங்களுக்கு முரணான இரும்பு, தாமிரத்திற்கு முன்பே இரும்பு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
  • இறக்குமதி செய்யப்பட்ட வெண்கலப் பொருள்கள்: அதிக தகரம் கொண்ட வெண்கலப் பொருள்கள் ஏராளமாக இருந்தாலும், இந்தப் பொருட்களுக்கான உள்ளூர் உற்பத்தி மையங்கள் தமிழ்நாட்டில் கண்டறியப் படவில்லை.
  • வெளிநாட்டு வர்த்தக வலையமைப்புகள்: இந்த வெண்கல கலைப்பொருட்கள் தமிழகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம்.
  • வர்த்தகம் மற்றும் கலாச்சார தாக்கங்கள்: இந்தக் கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் இரும்புக் காலத்தில் வர்த்தக வலையமைப்புகள் மற்றும் வெளிப்புறத் தாக்கங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு உலோகமாக இரும்பு

இரும்புத் தாதுக்களின் இருப்பு

  • இரும்புத் தாதுக்களின் வகைகள்: இரும்புத் தாதுக்களைக் கொண்ட ஹேமாடைட், மேக்னடைட், லிமோனைட், கோதைட் மற்றும் லேட்டரைட் போன்ற பொருத்தமான இரும்புத் தாதுக்கள் கிடைப்பது இரும்பு உருக்கும் தொழிலுக்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்தது.
  • ஆதாரங்களுக்கு அருகாமை: உருக்கும் மையங்களில் இருந்து இந்தத் தாதுக்களின் வசதியாக இருந்த தூரம் இரும்பு வேலையின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

இரும்பு உருக்கும் செயல்முறை

  • உயர் வெப்பநிலைத் தேவைகள்: இரும்பு உருக்குவதற்கு 1200-1400 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு அதிக வெப்ப நிலை தேவைப்படுகிறது.
  • செயல்முறையின் படிகள்: எரிபொருள் / கரி தயாரிப்பில் தொடங்கி, அதைத் தொடர்ந்து உலை அமைப்பது, காற்று வீசும் குழாய் அமைப்பினைச் சரிசெய்தல், காற்றின் திசையைச் சரிசெய்தல், செயல்படுத்தும் நேரம் மற்றும் இறுதியாக செய்யப்பட்ட இரும்பைச் சேகரிப்பது போன்றவை உள்ளிட்ட வகையில் இரும்பை உருக்கும் செயல்முறை என்பது பல நிலைகளை உள்ளடக்கியது ஆகும்.
  • உலை மற்றும் துருத்திகளின் பங்கு: உருக்குவதற்குத் தேவையான அதிக வெப்பநிலையை பராமரிப்பதில் உலை மற்றும் துருத்திகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இயற்கை இரும்பு தாது மற்றும் உலோகம்

  • இயற்கையாக உருவாகக் கூடிய தாதுக்கள்: ஃபெரிக் ஆக்சைடு (Fe2O3), மேக்னடைட் (Fe3O4) மற்றும் ஃபெரிக் ஆக்ஸி-ஹைட்ராக்சைடு (FeO(OH)) ஆகியவை பொதுவான இயற்கை இரும்புத் தாதுக்களில் அடங்கும்.
  • உலோகவியல் செயல்முறை: இந்தத் தாதுக்கள் அவற்றின் இறுதி வடிவத்தை அடைய உலோகவியல் செயல்முறைக்கு உட்படுகின்றன, இது கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது.

கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இரும்பின் வகைப்பாடு

  • கசடு இரும்பு: 3.8 - 4.7% கார்பன் உள்ளடக்கம் கொண்ட இரும்பு என்பது கசடு இரும்பு என அழைக்கப் படுகிறது.
  • வார்ப்பிரும்பு: 2 - 2.5% கார்பன் உள்ளடக்கம் கொண்ட இரும்பு என்பது வார்ப்பிரும்பு என வகைப்படுத்தப் படுகிறது.
  • தேனிரும்பு: 1.5 - 2% குறைந்த கார்பன் உள்ளடக்கம் கொண்ட இரும்பு என்பது தேனிரும்பு (குறைந்த கார்பன் எஃகு) என்று அழைக்கப்படுகிறது.
  • இரும்பில் கார்பனின் விளைவு: இரும்பில் உள்ள கார்பன் உள்ளடக்கம் அதன் விறைப்புத் தன்மை, நெகிழ்வுத் தன்மை, நீர்த்துப் போகும் தன்மை மற்றும் கடினத் தன்மை ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
  • அதிக கார்பன் உள்ளடக்கம் அதன் விறைப்புத் தன்மையை அதிகரிக்கிறது, ஆனால் நெகிழ்வுத் தன்மை, நீர்த்துப் போகும் தன்மை மற்றும் கடினத் தன்மையைக் குறைக்கிறது.
  • குறைந்த கார்பன் உள்ளடக்கத்துடன் செய்யப்பட்ட இரும்பு, அதன் இணக்கத் தன்மைக்காக பண்டைய இரும்புத் தொழிலாளிகளால் விரும்பப் பட்டது.

கார்பன் உள்ளடக்கத்தைக் குறைத்தல்

  • கார்பனைக் குறைப்பதற்கான செயல்முறை: இரும்பில் உள்ள கார்பன் சதவீதத்தைக் குறைப்பதற்கான பொதுவான நுட்பம் உருக்கிய உலோகத்தின் மீது ஆக்ஸிஜன் வாயுவைத் தூண்டுவதாகும்.
  • கார்பன் அகற்றுதல்: இது கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு என வளிமண்டலத்தில் கார்பனை வெளியிடுகிறது.

இரும்பு உலை

இந்தியாவில் இரும்பு உற்பத்தியின் முக்கியத்துவம்

  • ஆரம்ப கால இரும்பு உற்பத்தி: இரும்பு உற்பத்தியின் முக்கிய மற்றும் ஆரம்பக் காலத்தின் மையமாக இந்தியா உருவெடுத்தது.
  • புவியியல் மற்றும் தொல்பொருள் சான்றுகள்: இரும்புத் தாதுக்களின் புவியியல் கணக்கீடு, இலக்கிய ஆதாரங்கள், தொல்பொருள் தரவு மற்றும் அரசாங்க அறிக்கைகள் ஆகியவை துணைக் கண்டம் முழுவதும் தொழில்துறைக்கு முந்தைய இரும்பு-உருக்கும் செயல்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.
  • முறையான ஆய்வுகள்: தொழில்துறைக்கு முந்தைய இரும்பு-உருக்கும் செயல்பாடுகள் பற்றிய ஆரம்ப ஆய்வுகள் முதன்முதலில் ஜான் பெர்சியால் 1864 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • விரிவான ஆய்வு: வாலண்டைன் பால் (1881) என்பவர் இந்தியாவின் புவியியலின் கையேட்டில் வெளியிடப்பட்ட இரும்புத் தாதுக்கள், உருக்கும் முறைகள் மற்றும் இந்தியாவில் விநியோகம் பற்றிய மிக விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
  • விரிவான கணக்குகள்: ‘பெர்சியின் உலோகவியல்: இரும்பு மற்றும் எஃகு’, என்பது இந்தியாவில் தொழில்துறைக்கு முந்தைய இரும்பு-உருக்கும் செயல்முறைகள் பற்றிய மிகவும் முறையான விவாதங்களை வழங்குகிறது.

தொழில்துறைக்கு முந்தைய இரும்பு உருக்கும் உலைகளின் வகைகள்

  • உலைகளின் வகைகள்: தொழில்துறைக்கு முந்தைய இரும்பு உருக்கும் உலைகளின் மூன்று அடிப்படை வகைகளைப் பெர்சி விவரித்தார் என்ற நிலையில் அதில் முதல் இரண்டு வகைகள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.
  • தமிழ்நாட்டின் உலைகள்: முதல் இரண்டு வகையான உலைகள் தொல்லியல் சூழலில் புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள முள்ளூர், பெருங்களூர், வல்லத்திரக்கோட்டை போன்ற இடங்களிலும், இடையாபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்), செட்டிபாளையம் மற்றும்  இருகூர் (கோவை மாவட்டம்), கணியம்பூண்டி (திருப்பூர் மாவட்டம்), நிச்சம்பாளையம் மற்றும் கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) ஆகியன தமிழ்நாட்டின் மேக்னடைட் தாது உள்ள மண்டலங்களாகப் காணப்படுகின்றன.

முதல் வகை உலை பற்றிய விளக்கம்

  • அமைப்பு மற்றும் அளவு: முதல் வகை உலை எளிமையானது மற்றும் வட்ட வடிவமானது என்பதோடு அதன் உயரம் 2 முதல் 4 அடி வரை மாறுபடும்.
  • பரிமாணங்கள்: கீழே உள்ள அடுப்பு முழுவதும் அகலம் 10 முதல் 15 அங்குலங்கள் வரையிலும், மேலே 6 முதல் 12 அங்குலங்கள் வரையிலும் இருக்கும்.
  • பொருள்: உலை முற்றிலும் கவனமாக மென்மையாக்கப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்டு உள்ளது.
  • உலையின் கீழ் பகுதி விரைவாக தேய்ந்து, புதிய களிமண் அமைப்பின் மூலம் தொடர்ந்து சரி செய்யப் பட்டது.

கொடுமணல் இரும்பு உலை

கொடுமணலில் அகழாய்வு

  • உலை விளக்கம்: கொடுமணலில் தோண்டப்பட்ட உலை, 65 செ.மீ ஆழத்தில் 115 செ.மீ விட்டம் கொண்ட வட்ட வடிவ அடிப்பாகம், நேரடியாக இயற்கை மண்ணில் அமைந்திருந்தது.
  • உலையின் சிறப்பியல்புகள்: உலைப் பகுதியானது வெள்ளை நிறத்தைக் காட்டியது, இதற்கு அதிக வெப்பநிலை காரணமாக இருக்கலாம்.
  • கண்டுபிடிக்கப்பட்ட கலைப் பொருட்கள்: இரும்புக் கசடு, கசடு பதிக்கப்பட்ட எரிந்த களிமண், எளிதில் உடையக் கூடிய வாய்ப் பகுதி கொண்ட காற்று வீசும் குழாய் அமைப்புத் துண்டுகள் மற்றும் ஒரு கிரானைட் பலகை ஆகியவை உலைக்கு அருகில் சேகரிக்கப் பட்டு உள்ளன.
  • கசடுகளின் மென்மையான மேற்பரப்பு: உலைச் சுவர்களில் ஒட்டியிருந்த சில இரும்புக் கசடுகள் மென்மையான மேற்பரப்பைக் கொண்டிருந்தன.

உலை வெப்பநிலை மற்றும் இரும்பு உற்பத்தி

  • உலை வெப்பநிலை: கொடுமணலில் உள்ள உலை 1300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியிருக்கலாம், இது இரும்பு ஆக்சைடுகளை இரும்பாக குறைக்கத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலையை விட அதிகமாக உள்ளது, ஆனால் உலோகத்தின் உருகுநிலைக்கு கீழே உள்ளது.
  • பகுதி-திட இரும்பு: உற்பத்தி செய்யப்படும் இரும்பு, கடற்பாசி இரும்பு அல்லது பூவின் தோற்ற நிலை வடிவத்தில் பகுதி-திடமாக இருந்தது என்பதோடு, இந்தச் செயல்பாட்டின் போது கசடு வெளியேறுகிறது.

இரும்பு உருக்கும் இடம் மற்றும் கலாச்சாரச் சூழல்

  • உருகுவதற்கான திறந்த பகுதி: ஊன்று துளைகள் மற்றும் தரை மட்டங்கள் இல்லாதது மற்றும் உருக்கும் பகுதியில் பானை ஓடுகள் மட்டுமே இருப்பது ஆகியன குடியிருப்புத் தளத்தின் விளிம்பில் உள்ள திறந்த பகுதியில் இரும்பு உருக்குதல் நடந்ததாகக் எடுத்துரைக்கிறது.
  • கசடு மேடுகளுடன் உள்ள மற்ற தளங்கள்: இடையாபாளையம், நிச்சம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் ஆகிய இடங்களில் பெரிய இரும்பு கசடு மேடுகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • கலாச்சார கலைப் பொருட்கள்: அடர் சிவப்பு பழுப்பு வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத்தால் ஆன பொருட்கள் மற்றும் வரையப்பட்ட அடையாளங்கள் ஆகியவை குடியிருப்பு மேடுகளில் இருப்பதால், இந்தத் தளங்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செயல்பட்டதாகக் கூறுகிறது.

இரண்டாம் வகை உலை (குழி உலை)

  • உலை விளக்கம்: பெர்சியால் விவரிக்கப்பட்ட இரண்டாவது வகை உலை, களிமண் கரையில் செய்யப்பட்ட ஒரு குழி அமைப்பு என்பதோடு உருளை வடிவத்தில், 15 முதல் 18 அங்குல விட்டம் மற்றும் சுமார் 2.5 அடி ஆழம் கொண்டது.
  • காற்று வீசும் குழாய் அமைப்பு: உலைக்குக் கீழே இரண்டு திறப்புகள் இருந்தன, அதில் ஒன்று காற்று வீசும் குழாய் அமைப்பு மற்றும் மற்றொன்று கசடுகளை அகற்றுகிறது.
  • உலையானது கரியால் நிரப்பப்பட்டது, மேலும் துருத்திகள் முழு வெடிப்பில் இயங்கும் போது தாது மற்றும் கரியின் மாற்றுக் கூறுகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
  • எரிகசடுகளைத் தட்டுதல்: குறிப்பிட்ட உயரத்திற்கு சுருண்டு பின் உயர்ந்ததால், அது இரும்புக் கம்பியால் தட்டப்பட்டது.
  • உருக்கிய தாது ஒரு பந்தாக வடிவமைக்கப்பட்டது, பின்னர் அது இடுக்கி கொண்டு அகற்றப் பட்டது.

உலை செயல்திறன் மற்றும் மேம்பாடுகள்

  • உலை மறுபயன்பாடு: முதல் வகை உலை போலல்லாமல், இந்த உலையின் கீழ் பகுதி புதிய கூறுகளுக்காக அகற்றப்பட வேண்டியதில்லை, இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
  • கற்றலான் உலை: பெர்சி இந்த வகையை "சிறிய கற்றலான் உலை" என்று குறிப்பிடுகிறார், மேலும் பெருங்களூர், வல்லத்திரக்கோட்டை மற்றும் சுருளியப்பன் கிராமத்தில் இதே போன்ற உலைகள் காணப்பட்டன.
  • உலைகளின் இருப்பிடம்: இந்த உலைகள் பொதுவாக செம்மண்டலங்களில் காணப் படுகின்றன என்பதோடு அவை மேக்னடைட் தாது உள்ள மண்டலங்களில் காணப்படும் வட்ட மற்றும் உருளை உலைகளுடன் வேறுபடுகின்றன.

மூன்றாவது வகை உலை (செங்குத்து உலை)

  • உலை விவரம்: மூன்றாவது வகை உலை என்பது களிமண் மேட்டில் 8 முதல் 10 அடி உயரமும், உள்ளே 6 முதல் 7 அடி உயரமும் கொண்ட ஒரு குழி அமைப்பாகும்.
  • மேலே உள்ள அமைப்பின் உள் விட்டம் 18 அங்குலங்கள் என்பதோடு அந்த உலையானது அகற்றக் கூடிய முன் சுவரைக் கொண்டு இருந்தது.
  • கட்டுமான விவரங்கள்: அடித்தளம் துளையிடப்பட்ட ஓடுகளால் ஆனது, அடிப்பகுதிக்கு மேல் மாட்டுச் சாணம் மற்றும் சாணத்தின் மேலே காற்று வீசும் குழாய் அமைப்பு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • உருகும் செயல்முறை: உலையானது கரியால் நிரப்பப் பட்டது என்பதோடு தாது மற்றும் கரி ஆகியன மாறி மாறி அதில் நிரப்பப்பட்டது.
  • உருக்கும் செயல்முறை 12 முதல் 16 மணி நேரம் நீடித்தது என்ற நிலையில் அதன் இடைவெளியில் எரிகசடு தட்டப்பட்டது.
  • இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி: 150 முதல் 200 பவுண்டுகள் எடையுள்ள இரும்பு மற்றும் எரிகசடுகள் துண்டுகளாக வெட்டப் பட்டன.
  • இந்த வகை உலையில் பயன்படுத்தப் படும் தாதுவைப் பொறுத்து, இணக்கமான இரும்பு மற்றும் இயற்கை எஃகு ஆகியவற்றின் விகிதத்துடன், உயர் தர இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்யப் பட்டது.

தமிழ்நாட்டில் மூன்றாம் வகை உலைகள் இல்லை

  • மூன்றாம் வகை உலைகள் இல்லாமை: இது போன்ற உலைகள் தமிழகத்தில் இன்னும் கண்டறியப் படவில்லை, இருப்பினும் எதிர்கால ஆய்வுகள் அவற்றை வெளிக்கொணரும் சாத்தியம் உள்ளது.
  • மற்ற உலை பொருட்கள்: அரியாணிப்பட்டி மற்றும் வேங்கடநாயக்கம்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) போன்ற இடங்களில் உலை பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பதோடு இந்தப் பகுதிகளில் இதே போன்ற உலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் கூறப் படுகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்