தமிழ்நாட்டின் இரும்புக் காலம் - பகுதி 03
(For English version to this please click here)
ஆதிச்சநல்லூரில் உயர் தகரம் கொண்ட வெண்கலம் மற்றும் ஆரம்ப கால உலோகவியல்
வெண்கலம் மற்றும் இரும்பு உலோகவியலின் சூழல்
- தாமிரம் மற்றும் வெண்கலம் உருக்கும் செயலானது, இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
- உலகளாவிய கால வரிசையில், வெண்கலக் காலம் பொதுவாக இரும்பு இரும்புக் காலத்திற்கு முந்தையது.
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிப்புகள்
- ஆதிச்சநல்லூர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறிப்பிடத்தக்கத் தொல்பொருட்கள் கிடைத்தன, குறிப்பாக உயர் தகரம் கொண்ட வெண்கலப் பொருட்கள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் கிடைத்தன.
இந்தப் பொருள்களில் பின்வருவன அடங்கும்:
- உயர்-தகரம் கொண்ட வெண்கலப் பொருள்கள்: செம்பு மற்றும் தகரத்தின் குறிப்பிடத்தக்க கலவையான உயர் தகரம் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட பல பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப் பட்டன.
கலைப்பொருட்கள்:
- மோதிரங்கள்
- சல்லடைகள்
- கிண்ணங்கள்
- மான் குமிழ்கள் கொண்ட மூடிகள்.
- நீண்ட நிறுத்து அமைப்புகள் மற்றும் அலங்காரப் பறவைகள் கொண்ட கிண்ணங்கள் (இந்த தனித்துவமான அமைப்பை கொண்ட கிண்ணத்தில் மூன்று நீளமான நிறுத்து அமைப்புகள் இருந்தன, இது ஒவ்வொன்றும் அலங்கரிக்கப்பட்ட பறவை உருவங்களால் சூழப்பட்டு உள்ளன).
உயர் தகரம் கொண்ட வெண்கலத்தின் முக்கியத்துவம்
- ஆதிச்சநல்லூரில் உயர்-தகரம் கொண்ட வெண்கலம் இருப்பது இப்பகுதியில் மேம்பட்ட உலோகவியல் அறிவைக் குறிக்கிறது, இது இரும்பின் பரவலான பயன்பாட்டிற்கு முந்தைய காலக் கட்டத்தைக் குறிக்கிறது.
- பல்வேறு பொருள்கள் மற்றும் அவற்றின் விரிவான வடிவமைப்புகள் தமிழ்நாட்டின் வெண்கல யுகத்தில் கைவினைஞர்களின் திறமை மற்றும் கலைத் திறனை எடுத்துக் காட்டுகின்றன.
- மேலும் உலோகவியலில் ஆரம்ப காலத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் அவை வழங்குகின்றன.
- இந்தச் சான்றுகள் தமிழ்நாட்டில் வெண்கலக் காலத்தில் இருந்து இரும்புக் காலத்திற்கு மாறிய தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரச் சூழலைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
தமிழ்நாட்டில் உயர் தகரம் கொண்ட வெண்கலம் மற்றும் ஆரம்பகால உலோகவியல் செயல்முறைகள்
முக்கிய கலைப் பொருட்கள்
- தங்கத்தினால் கலைப் பொருட்கள்: தங்க டயடெம்கள் (இருமுடிகள்) அல்லது துண்டுகள் மற்றும் தங்க மோதிரம் ஆகியவை குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளாக உள்ளன.
- இரும்புச் சாதனங்கள்: வாள்கள், கத்திகள், மண்வெட்டிகள், ஈட்டிகள், அம்புக் குறிகள், உளிகள், தொங்கும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
- விவசாயப் பொருட்கள்: நெல் மற்றும் தினைகள் வகைகளும் மீட்கப்பட்டன, இது இரும்புக் காலத்தில் விவசாய செயல்முறைகளைக் குறிக்கிறது.
- உயர் தகர கொண்ட வெண்கலப் பொருள்கள்:
- இரட்டை மீன் உருவங்கள்
- மோதிரம் நிறுத்து அமைப்புகள்
- மூன்று கால்கள் கொண்ட நிறுத்து அமைப்புகள்
- சல்லடைகள்
- மான் கைப்பிடிகள் கொண்ட கிண்ணங்கள்
- வளையல்கள்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/d4.gif)
அகழ்வாராய்ச்சிகளின் காலவரிசை
- கல்லறைப் பொருட்கள் மற்றும் AMS 14C காலக் கணிப்பின்படி, கிமு 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆற்றங்கரைகளுக்கு அருகில் அடக்கம் செய்யும் நடைமுறைகள் முன்பே தொடங்கியதாக கூறப்படுகின்றன.
வெண்கலக் கலவைகள் மற்றும் உலோகவியல் பகுப்பாய்வு
- வெண்கல உலோகக் கலவைகள் பற்றிய ஆய்வில் குறைந்த தகரம் முதல் உயர் தகரம் கொண்ட வெண்கலங்கள் வரை வெவ்வேறு கலவைகள் கண்டுபிடிக்கப் பட்டன.
- α-வெண்கலங்கள்: சுமார் 10% தகரம் கொண்டது.
- β-வெண்கலங்கள்: 20-25% தகரம் கொண்டது.
- γ-வெண்கலங்கள்: 30%க்கும் அதிகமான தகரம் கொண்டது.
மற்ற தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்
- சாஸ்தாபுரம் (திருநெல்வேலி): 36.83% தகரம் கொண்ட உயர் தகரம் கொண்ட வெண்கலக் கிண்ணங்கள் மீட்கப் பட்டன.
- பிற தளங்கள்: உயர்-தகரம் வெண்கலப் பொருட்கள் கீழ்க்காணும் இடங்களிலும் காணப் பட்டன:
- அடுக்கம்
- சூளாபுரம்
- ஆரோவில்
- கொடுமணல்
- சிவகளை
- திருமலாபுரம்.
ஆரம்பகால உலோகவியல் அறிவுக்கான அடிப்படை ஆதாரம்
- ஆதிச்சநல்லூர், சிவகளை, சாஸ்தாபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த உயர் தகரம் கொண்ட வெண்கலம், கிமு 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
- 13 ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கனூர் மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் அதி-உயர் கார்பன் புடக்குகை இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
- பரவலான எஃகுப் பயன்பாட்டிற்கு முன்னர் இப்பிராந்தியத்தில் மேம்பட்ட உலோகவியல் திறன்களின் சான்றுகள் கண்டறியப்பட்டன.
- செம்பு, வெண்கலம் மற்றும் இரும்பு உற்பத்தி மற்றும் கையாளுதலில் ஆரம்பகால அறிவு மற்றும் திறமை, மேம்பட்ட உலோகவியல் நுட்பங்களை நிரூபிக்கிறது.
தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்கத் தொல்பொருள் இடங்கள்
- கொடுமணல் (தமிழ்நாடு) மற்றும் மேல்-சிறுவளூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ஆகியவை புடக்குகை எஃகு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க இடங்களாகும்.
- கொடுமணல் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உயர் கார்பன் எஃகு உற்பத்திக்கான சான்றுகளைக் கொடுத்தன.
- இத்தளத்தில் புடக்குகை உலைகள் இடம் பெற்றன, இதனால் எஃகு, உயர் கார்பன் கொண்டு உள்ளது என நிரூபிக்கப்பட்டது.
- கடேபகேலே (கர்நாடகா) கிமு 880-440 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கான உயர் கார்பன் எஃகுக்கான ஆதாரத்தையும் காட்டியது.
- தெலுங்கனூர் (தமிழ்நாடு) அதி உயர் கார்பன் இரும்பை வெளிப்படுத்தியது, இது தென்னிந்தியாவில் எஃகு உற்பத்தியின் தொன்மையைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை வழங்குகிறது.
- இது இப்பகுதியில் உலோகம் மற்றும் எஃகு தயாரிக்கும் நுட்பங்கள் பற்றிய மேம்பட்ட அறிவு இருந்ததாக இது தெரிவிக்கிறது.
- இத்தொழில்நுட்பங்கள் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கு முன்பே இங்கு தோன்றின.
வர்த்தகம் மற்றும் கைவினைப் பொருட்களில் வூட்ஸ் வகை எஃகின் தாக்கம்
- வூட்ஸ் எஃகு அதன் தரம் காரணமாக மிகவும் மதிப்பு மிக்கது, இது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டது.
- டமாஸ்கஸ் எஃகு வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது, மேலும் இது அதன் வலிமை மற்றும் கூர்மையான கத்திகளாக உருவாக்கப்படும் திறனுக்காக அறியப்படுகிறது.
- தென்னிந்தியாவின் இரும்புத் தாதுக்களில் வெனடியம் (V) இருப்பது எஃகின் தனித்துவமானப் பண்புகளுக்கு பங்களித்தது, இது அதன் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் அதிக மதிப்பு மிக்கதாக அதனை மாற்றியது.
தெலுங்கனூர் மற்றும் அதி உயர் கார்பன் இரும்பின் கண்டுபிடிப்பு
தெலுங்கனூர் இடம் மற்றும் அகழ்வாராய்ச்சி
- தள இடம்: தெலுங்கனூர் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்காவில் கொளத்தூருக்கு வடக்கே தோராயமாக 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
- அளவு மற்றும் சூழல்: இந்த தளம் 80 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மற்றும் காவேரி ஆற்றின் வலது கரையில், மாங்காடு, கோரப்பள்ளம் மற்றும் பண்ணவாடி உள்ளிட்ட புதைகுழிகளின் தொகுப்பில் இது அமைந்துள்ளது.
- அடக்கத்தின் வகைகள்: இந்தத் தளத்தில் சிஸ்ட் (தாழி) புதைகுழிகள், முதுமக்கள் தாழி அடக்கமுறை மற்றும் குழி கொண்ட புதைகுழிகள் உள்ளன, இது ஒவ்வொன்றும் கெய்ர்ன் வட்டங்களுடன், வெவ்வேறு சடங்கு செயல்முறைகளைப் பரிந்துரைக்கின்றன.
மீட்கப்பட்ட கலைப் பொருட்கள்
- கருவிகள் மற்றும் மட்பாண்டங்கள்: அகழ்வாராய்ச்சியில் பளபளப்பான கல் கருவிகள், இரும்புக் கலன்கள் மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு கலன்கள் மற்றும் கருப்பு கலன்கள் போன்ற மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- இரும்பு வாள் கண்டுபிடிப்பு: தெலுங்கனூரில் புதைக்கப்பட்ட மக்களின் மேம்பட்ட உலோகவியலை வெளிப்படுத்தும் விதமாக, நன்கு பாதுகாக்கப்பட்ட இரும்பு வாள் ஒரு சிதைந்த கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வாளின் உலோகவியல் பகுப்பாய்வு
- வாள் கலவை: 0.9% முதல் 1.3% வரையிலான கார்பன் உள்ளடக்கத்துடன், அதி-உயர் கார்பன் எஃகு மூலம் செய்யப்பட்ட வாள் அடையாளம் காணப்பட்டது.
- எஃகு தரம்: வாளின் உயர்-கார்பன் எஃகு, நீடித்த மற்றும் பயனுள்ள ஆயுதங்களை உருவாக்குவதற்கு ஏற்ற உலோகவியல் நிபுணத்துவத்தின் மேம்பட்ட அளவைக் குறிக்கிறது.
கதிரியக்க கரிமக் காலக் கணிப்பு மற்றும் காலவரிசைத் தாக்கங்கள்
- AMS கதிரியக்க கரிமக் காலக் கணிப்புகள்: வாளிலிருந்து இரண்டு கதிரியக்க கரிமக் காலக் கணிப்புகள் பெறப்பட்டன:
- 2900 - 2627 கி.மு.
- 1435 - 1233 கி.மு.
- காலக் கணிப்பு சவால்கள்: இரண்டு காலங்களுக்கு இடையே உள்ள பரந்த காலவரிசை இடைவெளி, வாளின் வெவ்வேறு பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டுப் பின்னர் இணைக்கப் பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
- குறைவான கால வரம்பின் முக்கியத்துவம்: நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், கிமு 1233 ஆம் ஆண்டின் ஆரம்ப காலக் கட்டம் இதில் குறிப்பிடத்தக்கது.
- இது தென்னிந்தியாவில், கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால எஃகு காலக் கட்டத்தைக் குறிக்கும், அதனால் இது 13 ஆம் நூற்றாண்டில் வாளின் உருவாக்கத்தை வைக்கிறது.
எஃகு வாளின் தொழில்நுட்ப முக்கியத்துவம்
- கட்டுப்படுத்தப்பட்ட நுண் கட்டமைப்பு: வாள் ஒரு ஃபெரைட் அணியில், இரும்பு கார்பைடு துகள்களைக் கொண்ட ஒரு நுண் கட்டமைப்பை வெளிப்படுத்தியது, இது மேலும் மேம்பட்ட எஃகு உற்பத்தி முறைகளை வெளிப்படுத்துகிறது.
- எஃகின் பண்புகள்: இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட நுண் கட்டமைப்பு எஃகின் ஆயுள், வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மைக்குப் பங்களித்தது, இது ஆயுதங்களில் பயன்படுத்தச் சிறந்ததாக உள்ளது.
- உலோகவியல் நிபுணத்துவம்: உயர்தர எஃகு, ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்வதில் உலோகவியல் அறிவு மற்றும் திறன் ஆகியவற்றை எடுத்துரைகின்றது.
கலாச்சார மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு
- பிராந்திய எஃகு உற்பத்தி:
- கொடுமணல் மற்றும் மேல்-சிறுவளூர் போன்ற பிற தளங்களிலிருந்து தெலுங்கனூர் வாள் சான்றுகளைச் சேர்க்கிறது.
- இந்தத் தளங்களில் அதிக கார்பன் எஃகு உற்பத்தியும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
- பரவலான தொழில்நுட்பம்:
- இந்தக் கண்டுபிடிப்பு தென்னிந்தியாவில் புடக்குகை இரும்புத் தொழில்நுட்பம் (அல்லது வூட்ஸ் எஃகு) நன்கு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
- இந்த காலக் கட்டத்தில் மேம்பட்ட எஃகு உற்பத்தி நுட்பங்கள் பரவலாக நடைமுறையில் இருந்தன.
முந்தைய அகழ்வாராய்ச்சிகள் மற்றும் இரும்பு அறிமுகத்தின் காலக் கணிப்பு
- இடங்கள் மற்றும் காலக் கணிப்புகள்: சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கீழ்நமண்டி மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் கிமு 2500 முதல் கிமு 3000 வரையிலான காலக் கட்டங்களை வெளிப்படுத்தின.
- இது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
- கலாச்சாரச் சூழல்: இந்தியாவின் வடக்குப் பகுதிகள் செம்புக் காலத்தை அனுபவித்த போது, தெற்கில், குறிப்பாக தமிழ்நாடு, தெற்கில் குறைந்த அளவு செம்புத் தாது கிடைத்ததால் இரும்பு காலத்திற்குள் நுழைந்திருக்கலாம்.
தென்னிந்தியாவில் இரும்புக் காலம் மற்றும் வட இந்தியாவில் செம்புக் காலம்
- புவியியல் மற்றும் தொழில்நுட்ப வேறுபாடு: வடக்கில் செம்புக் காலமும், தெற்கில் இரும்புக் காலமும் சமகாலத்தவை என்று தீர்மானிக்கப் படுகிறது.
சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் மற்றும் AMS 14C மற்றும் OSL காலக் கணிப்பு
- சமீபத்திய தேதிகள்: புதிய அகழ்வாராய்ச்சிகள் AMS14C மற்றும் OSL காலக் கணிப்புளை 2427 BCE முதல் 3345 BCE வரை வழங்கியுள்ளன, இவை முந்தையக் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கிறது மற்றும் இரும்பை அறிமுகப்படுத்துவதற்கான காலவரிசையை மேலும் வலுப்படுத்துகிறது.
- அறிவியல் காலக்கணிப்பு: இந்த காலக் கணிப்புகள், இரும்புத் தொழில்நுட்பம் கிமு 4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தொடங்கியதாகக் கூறப்படுகின்றன.
உலோகவியல் பகுப்பாய்வு மற்றும் எதிர்கால அகழ்வாராய்ச்சிகள்
- இரும்பு கலைப் பொருட்கள்: இந்தத் தளங்களில் இருந்து மீட்கப்பட்ட இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வு, தென்னிந்தியாவில் ஆரம்பகால இரும்பு சார்ந்தப் பணிகளின் தன்மை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
- நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி: இரும்புத் தாதுவைத் கொண்டுள்ள மண்டலங்களில் தொடர்ந்து நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள், மேலும் சான்றுகளை வழங்கும் மற்றும் இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பத்தின் காலவரிசை மற்றும் பரவல் பற்றிய தற்போதைய புரிதலை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எதிர்கால வாய்ப்புகள்
- இரும்பு அறிமுகம் பற்றிய தெளிவு: இரும்புத் தாதுவைக் கொண்டுள்ள மண்டலங்களில் தொடரும் அகழ்வாராய்ச்சிகள் மேலும் ஆதாரங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்த அகழ்வாராய்ச்சிகள் இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பத்தின் காலவரிசை மற்றும் பரவல் பற்றிய தற்போதைய புரிதலை உறுதிப்படுத்த உதவுகிறது.
- ஆதாரங்களுக்காக காத்திருத்தல்: நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி, பண்டைய தென்னிந்தியாவில் தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றிய தெளிவான தரவுகளை வழங்கும் மற்றும் தற்போதைய வரலாற்று காலக் கெடுவை செம்மைப்படுத்த புதிய கண்டுபிடிப்புகளை அளிக்கலாம்.
-------------------------------------