(For English version to this please click here)
புவிசார் குறியீடுகள்
- GI குறியீடு என்பது புவிசார் குறியீட்டினைக் குறிப்பதோடு, இது ஒரு ஒரு குறிப்பிட்டத் தயாரிப்பிற்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளமாகும்.
- இது புவியியல் இருப்பிடங்களுடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பினைக் கொண்டு உள்ளது.
- பாரம்பரிய முறைகளின் படி இந்தப் பொருட்களானது தயாரிக்கப் படுகிறது என்பதற்கான சான்றிதழாகப் புவிசார் குறியீடுகள் (GI) பயன்படுத்தப்படுகின்றன.
- ஒரு பொருளின் புவிசார் தோற்றத்தினைப் பொறுத்து இது ஒரு குறிப்பிட்ட நற்பெயரைக் கொண்டுள்ளது.
- ஒரு பொருளின் மீது உரிமை கொண்டுள்ள நபர்களை அப்பொருளின் அடையாளத்தைப் பயன்படுத்த புவிசார் குறியீடானது அனுமதிக்கிறது.
- இதன் தயாரிப்பிற்குப் பொருந்தக் கூடிய தரநிலைகளை இதற்கு மூன்றாம் தரப்பினர் பூர்த்தி செய்யவில்லையென்றால், அதனை அவர்கள் பயன்படுத்துவதை இது தடுக்கிறது.
- புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்டப் புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளில் வைக்கப்படும் ஒரு முத்திரை ஆகும்.
- அது அந்தப் புவியியல் தோற்றத்திலிருந்து உருவாகும் தரத்தினையோ அல்லது நற்பெயரையோ கொண்டிருக்கும்.
- அத்தகையப் பெயரானது அதற்கென ஒரு தரம் மற்றும் தனித்துவ உணர்வினை வெளிப்படுத்துகிறது
- ஒரு குறிப்பிட்ட புவியியல்சார் இடத்தின் காரணமான அதன் பூர்வீகமும் அதற்கு முதன்மையாக ஒரு காரணமாக விளங்குகிறது.
- இந்தியாவினைப் பொறுத்தவரை, அதன் புவிசார் குறியீட்டின் அடையாள முத்திரையுடன் கூடிய தயாரிப்புகளானது நம்ப முடியாத வகையில் இந்தியாவின் விலை மதிப்பற்ற அரும்பொருட் களஞ்சியமாகக் கருதப் படுகின்றன.
- பொதுவாக விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மது மற்றும் மது பானங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறைத் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
- ஒரு புவிசார் குறியீட்டைப் பத்து வருட காலத்திற்குப் பதிவு செய்து பயன்படுத்தலாம்.
- மேலும் அதற்குப் பிறகு பத்து ஆண்டுகளுக்கு என்று அதனைப் புதுப்பித்தும் கொள்ளலாம்.
- ஒரு GI அல்லது புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் சார்ந்த இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு ஆகியவற்றின் தோற்றத்துடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.
- அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்தவர்களைத் தவிர வேறு யாரும் இதன் பிரபலமான தயாரிப்புப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதை GI குறியீடானது உறுதி செய்கிறது.
- ஒரு GI குறியீடாக செயல்பட, ஒரு குறியீடானது, கொடுக்கப்பட்ட இடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அடையாளம் காண வேண்டும்.
வரலாற்றுப் பின்னணி
- 1999 ஆம் ஆண்டின் பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டமானது, 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது.
- இந்தச் சட்டமானது இந்தியாவில் தயாரிக்கப்படும் பாரம்பரியப் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகளின் பதிவு மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் பொது கட்டுப்பாட்டாளர், புவிசார் குறியீடுகளின் பதிவாளராகவும் பணியாற்றுவதோடு, அவர் அச்சட்டத்தை அமல்படுத்துவதற்குப் பொறுப்பான நபராகவும் திகழ்கிறார்.
- புவிசார் குறியீடுகளின் பதிவகம் சென்னையில் அமைந்துள்ளது.
- இந்தச் சட்டமானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் கீழ் புவிசார் குறியீட்டுப் பதிவகமானது வருகிறது.
GI குறியீட்டை அங்கீகரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் நிறுவனம்
சர்வதேச அளவிலான அமைப்புகள்
- தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரீஸ் மாநாடானது, அறிவுசார் சொத்துரிமைகளின் (IPRs) ஒரு அங்கமாகப் புவிசார் குறியீட்டினைச் சேர்த்துள்ளது.
- அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களுக்கான உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தமும் GI (TRIPS) தொடர்பான செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.
இந்தியா அளவிலான அமைப்புகள்
- 1999 ஆம் ஆண்டு பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் மூலம் இந்தியாவின் புவிசார் குறியீடுகளின் பதிவானது நிர்வகிக்கப் படுகிறது.
- இச்சட்டமானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது.
- 2004-05 ஆம் ஆண்டில் டார்ஜிலிங் தேநீர் வகை தான் இந்தியாவின் முதல் GI குறியீட்டுடன் இணைக்கப்பட்டப் பொருளாகும்.
GI குறியீட்டின் நன்மைகள்
- புவிசார் குறியீட்டின் அடையாளப் பதிவுகளானது பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
- இது தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பினை வழங்குகிறது.
- GI குறியீட்டினைப் பெற்றத் தயாரிப்புப் பொருட்களை மற்றவர்கள் அங்கீகாரமில்லாமல் பயன்படுத்துவதை இது தடை செய்கிறது.
- இது நுகர்வோர், தான் விரும்பியப் பொருட்களின் பண்புகள் மற்றும் தரம் குறையாத தயாரிப்புகளைப் பெற உதவுவதோடு, அப்பொருட்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.
- இது தேசிய மற்றும் சர்வதேசச் சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் GI குறியீட்டினைப் பெற்ற பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார வளமையினை ஊக்குவிக்கிறது.
பாதுகாப்பு
- GI பாதுகாப்புக் குறியீடானது ஒரு முறை வழங்கப்பட்டவுடன், வேறு எந்த தயாரிப்பாளரும் இதே போன்ற தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த அதன் பெயரை தவறாகப் பயன்படுத்த முடியாது.
- இது அந்த தயாரிப்புகளின் நம்பகத் தன்மையினைக் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆறுதல்களை அளிக்கிறது.
புவிசார் குறியீட்டு அடையாளத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்
- சட்டத்தால் அல்லது அதன் கீழ் பதிவு செய்த நபர்கள், தயாரிப்பாளர்கள், அமைப்பு அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் செயல்படும் எந்தவொரு சங்கமும் பதிவு செய்யப் பட்ட உரிமையாளராக இருக்கலாம்.
- விண்ணப்பித்தப் புவிசார் குறியீட்டிற்கான பதிவு செய்யப்பட்ட உரிமையாளராக அவரது பெயரானது புவிசார் குறியீட்டின் அடையாளப் பதிவேட்டில் உள்ளிடப்பட வேண்டும்.
புவிசார் குறியீட்டு அடையாளத்தைப் பதிவு செய்வதற்கான கால வரையறை
- புவிசார் குறியீட்டின் பதிவானது 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
- தேவையெனில் மேலும் 10 ஆண்டுகளுக்கு அவ்வப் போது அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
GI குறியீட்டின் சிறப்பியல்புகள்
- பொருந்தக் கூடிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத மூன்றாம் தரப்பினரால் GI ஆனது பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதோடு, புவிசார் குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கான உரிமை கொண்ட நபர்களை இது அனுமதிக்கிறது.
- உதாரணமாக, அதிகார வரம்புகளுக்குட்பட்டு டார்ஜிலிங் தேநீரின் புவிசார் குறியீடானது பாதுகாக்கப்படுகிறது.
- இதன் மூலம் டார்ஜிலிங் தேயிலை உற்பத்தியாளர்கள் தங்கள் தேயிலை தோட்டங்களில் வளர்க்கப் படாத அல்லது உற்பத்தி செய்யப்படாத தேயிலைக்கு "டார்ஜீலிங்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தடை செய்யலாம்.
- இது டார்ஜிலிங் தேயிலை தொடர்பான நடைமுறை குறியீட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கும்.
- மறுபுறம், ஒரு பாதுகாக்கப்பட்ட GI குறியீட்டின் மூலம், அந்த குறியீட்டிற்கான தரநிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே நடைமுறைகளைப் பயன்படுத்தி ஒரு பொருளை மற்றொருவர் தயாரிப்பதை அனுமதிக்காமல் தடை செய்கிறது.
- பொதுவாக, GI குறியீட்டுப் பாதுகாப்பு என்பது ஒரு குறியீட்டினைக் குறிக்கும் அடையாளத்தின் மீது உரிமையைப் பெறுவதன் மூலம் பெறப்படுகிறது.
- பெரும்பாலும் கிராமப்புறச் சமூகங்களால் தயாரிக்கப் பட்டப் பாரம்பரியப் பொருட்களாகப் புவிசார் குறியீடுகள் காணப்படுவதோடு, அவை அவற்றின் துல்லியமான தரத்தின் காரணமாக சந்தை முக்கியத்துவத்தினைப் பெற்றுள்ளன.
- இந்தத் தயாரிப்புப் பொருட்களின் சந்தைகளுக்கான அங்கீகாரமும் பாதுகாப்பும் தயாரிப்பாளர் சமூகத்தினை அர்ப்பணிக்க ஊக்குவிக்கிறது.
- இது நற்பெயரைப் பெற்ற தயாரிப்புப் பொருட்களின் துல்லியமான தரத்தினைப் பராமரிக்கிறது.
- இது தயாரிப்புப் பொருட்களின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக அவர்களின் வளங்களைத் திரட்டவும் அனுமதிக்கலாம்.
கிராமப்புற வளர்ச்சியில் GI குறியீட்டின் தாக்கங்கள்
- பகிரப்படும் தயாரிப்புப் பொருட்களின் நற்பெயரைச் சுற்றியுள்ள விநியோகச் சங்கிலியானது ஒருமுகப் படுத்தப் பட்டுள்ளது.
- GI தயாரிப்புப் பொருட்களின் மீதான விலை அதிகரித்துள்ளதோடு, விலையின் நிலைத் தன்மையும் பராமரிக்கப்படுகிறது.
- விநியோகச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் பொருட்களானது விநியோகிக்கப் படும் போது அதன் மதிப்பானது உயர்த்தப்படுகிறது.
- விளைபொருளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வளங்ககளானது பாதுகாக்கப் படலாம்.
- பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய நிபுணத்துவமானது பாதுகாக்கப் பட வேண்டும்.
- சுற்றுலாவினை மேம்படுத்த முடியும்.
- 58 பொருட்கள் மீதான குறியீட்டினைப் பெற்று தமிழ்நாடு ஆனது GI தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
- மேலும் தமிழ்நாட்டுக்கே உரித்தான மூன்று தயாரிப்புப் பொருட்களானது சமீபத்தில் புவிசார் குறியீட்டினை (GI) பெற்றுள்ளது.
- எனவே, இது GI தயாரிப்புப் பொருட்களின் பட்டியலில் இந்த மாநிலத்தின் முதல் இடத்தினை வலுப்படுத்துகிறது.
- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜடேரி திருமனுக்கு (நாமக்கட்டி) புவிசார் குறியீட்டு அங்கீகாரத்தை GI பதிவகம் வழங்கியுள்ளது.
- இது உலகெங்கிலும் உள்ள முதன்மை தெய்வங்கள் மற்றும் வைணவர்களின் நெற்றிகளில் பூசப்படுகிறது.
- மேலும் GI குறியீடானது கன்னியாகுமரி மாவட்டத்தின் சுவையான மட்டி வாழைப்பழத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்தின் செடிபுட்டா சேலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் சௌராஷ்டிரா நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் மூலம் மூன்றாவது GI குறியீட்டினைப் பெற்ற வெற்றியாளரால், செடிபுட்டா சேலைகளுக்கான விண்ணப்பம் பதிவு செய்யப் பட்டது.
- இதுவரை கிட்டத்தட்ட 420 தயாரிப்புகளைக் கொண்ட GI குறியீட்டின் மிகப்பெரிய புகழ்பெற்ற கூடத்தில் புதிதாக நுழைந்தவர்களாக இவர்கள் உள்ளனர்.
- தமிழ்நாட்டினைச் சேர்ந்த GI குறியீட்டின் எண்ணிக்கையானது இப்போது 58 என்ற எண்ணிக்கையினை எட்டியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், அதனைத் தொடந்து கர்நாடகா 48 உடன் அடுத்த இடத்திலும் உள்ளது.
- இந்த எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி கணக்கிடப் பட்டது.
- மேலும் சில தயாரிப்புப் பொருட்களுக்கு ஏப்ரல்-ஜூலை காலத்திலும் GI குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
- பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கான 40 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீட்டுக்கான அங்கீகாரத்தினை சஞ்சய் காந்தி பெற்றுள்ளார்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசானது அவரை இதற்கான அதிகாரியாக நியமித்ததிலிருந்து, அவர் 17 பொருட்களுக்காக வேண்டி புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளார்.
- மேலும் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 15 தயாரிப்புப் பொருட்களானது புவிசார் குறியீட்டிற்கான பதிவேட்டின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் சமீபத்திய GI குறியீட்டினைப் பெற்ற பொருட்கள்
உடன்குடி பனங்கருப்பட்டி
- உடன்குடி ‘பனங்கருப்பட்டி’ (பனை வெல்லம்/குர்) புவிசார் குறியீடானது (GI) வழங்கப் பட்டுள்ளது.
- ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஏரல், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்கள் போன்ற திருச்செந்தூர் மண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவப்பு மணல் திட்டுகளில் வளரும் பனை மரங்களின் மஞ்சரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பனஞ்சாற்றைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.
- இதற்கான விண்ணப்பத்தினை, திருநெல்வேலி மாவட்ட பனைமரப் பொருட்கள் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் காப்புரிமை தகவல் மையம், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை தாக்கல் செய்தன.
- இந்தப் பகுதியில் பனை வெல்லம் தயாரிக்கும் முறையானது, இதுவரை கூடுதல் நவீன உத்திகள் எதுவும் சேர்க்கப்படாமல் இன்று வரையில் பாரம்பரியமான தயாரிப்பு முறையினைக் கொண்டுள்ளது.
- பனங்கருப்பட்டியினைத் தயாரிக்கும் போது டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பாஸ்போரிக் அமிலம் ஆகியவை பல பகுதிகளில் பயன்படுத்தப் படுகின்றன, ஆனால் உடன்குடி பனங்கருப்பட்டியில் இது போன்ற ரசாயன சேர்க்கைகள் எதுவும் பயன்படுத்தப் படுவதில்லை.
- தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள உடன்குடியைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கிடைக்கும் பனை சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கருப்பட்டி சில தனித்துவம் வாய்ந்ததாகும்.
- இப்பகுதியில் காணப்படும் சிவப்பு மணல் திட்டுகளில் உள்ள மண் வளமே இதற்குக் காரணமாகும்.
- இந்த மண்ணில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
- மேலும் வறண்ட காலநிலை காரணமாக இங்கு வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது.
- இது அதிக கருப்பு வெல்லத்திற்கான (சுக்ரோஸ்) உள்ளடக்கத்திற்கு வழி வகுப்பதோடு, இதையொட்டிய சுவையினையும் அதிகரிக்கிறது.
- இப்பகுதியின் வறண்ட காலநிலையும் கருப்பட்டியை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
- இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உடன்குடி வெல்லம் ஏற்றுமதி செய்யப்படுவதாக புவிசார் குறியீட்டிற்குத் தாக்கல் செய்த விவரங்கள் குறிப்பிடுகின்றன.
- மேலும், மதுரை மற்றும் திருநெல்வேலியில் 500க்கும் மேற்பட்ட அளவில் உடன்குடி வெல்லத்தினை விற்பனைச் செய்யும் மொத்த வியாபாரிகள் இருந்தனர்.
உற்பத்தி முறை
- மண் பானைகளின் உள் மேற்பரப்பில் நொதித்தல் ஏற்படாமல் இருக்க சுண்ணாம்பு பூசப்படுகிறது.
- இதில் சாறானது (பதநீர்) தண்டில் கட்டப்பட்ட சிறிய மண் பானைகளில் துளியாகச் சேகரிக்கப்படுகிறது.
- இது மார்ச்-ஏப்ரல் முதல் ஜூன்-ஜூலை வரை மட்டுமே சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட பதநீர் பின்னர் பெரிய பாத்திரங்களில் வேக வைக்கப் படுகிறது.
- இது கோடை காலத்தில் திட நிலையிலும், மழைக்காலத்தில் அரை திட நிலையிலும் இருக்கும்.
- பலர் அதை கொள்கலன்களில் சேமித்துப் பல மாதங்கள் பயன்படுத்துகிறார்கள்.
- இது இனிப்புப் பொருளாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
- ஆமணக்கு விதைகளைப் பொடி செய்து இந்த வெல்லத்தின் மீது நுரை நீக்கும் முகவராக மெதுவாக அதனைத் தெளிக்க வேண்டும்.
- பின்னர் அந்த கறையானது நீக்கப்படும்.
- வெப்பநிலையானது 105℃ முதல் 107℃ வரை அடையும் போது, அது தடிமனாக மாறத் தொடங்குவதோடு அதன் நிறமானது பொன்னிறமாக மாறும்.
- பின் இந்தச் சாறானது தடிமனாக மாறியதும், அது ஒரு சுரண்டும் கருவியால் சேகரிக்கப் பட்டு, திடப்படுத்துவதற்காக தேங்காய் ஓடுகளில் (அரைக் கோள வடிவத்தைப் பெற) ஊற்றப்படுகிறது.
- 15 நிமிடங்களுக்குள் அது கெட்டியாகி, பின்னர் அது கெட்டியான, கரடுமுரடான சர்க்கரையாக மாறும், பின் அது ‘கருப்புக்கட்டி’ என்றும் அழைக்கப் படுகிறது.
- வழக்கமாக, பனைமரம் ஏறுபவர் ஆண் பனை மரங்களின் பூக்கும் தளிர்கள் மற்றும் பெண் பனை மரங்களின் மஞ்சரிகளை நசுக்கி, ஒரு மண் பானையை முந்தைய மாலை நேரமே தண்டில் கட்டி, ஒரே இரவில் அந்தச் சாற்றைச் சேகரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மரத்திலுமிருந்தும் 2.25 லிட்டர் பனை சாற்றை உற்பத்தி செய்ய முடியும்.
- புவிசார் குறியீட்டின் அடையாளப் பதிவேட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் படி, புதிய பதநீர் சாறானது வைட்டமின் B ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரமாகும்.
- பாரம்பரியமாக, திருச்செந்தூர் பகுதியில், கடல் ஓடுகளிலிருந்து பெறப்படும் சுண்ணாம்பு இதற்கு பயன்படுத்தப் படுகிற நிலையில் மற்ற எல்லா இடங்களிலும் பாறை சுண்ணாம்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- பின் அது பனை வெல்லமாக மாற ஒரு மணி நேரம் அது உலர விடப் படும்.
- 15 லிட்டர் பதனீரிலிருந்து சுமார் 4.5 கிலோ பனை வெல்லத்தினைத் தயாரிக்க முடியும்.
- பனங்கருப்பட்டியின் விற்பனைக்குப் பொதிகட்டுதல் என்பது மிகவும் சுவாரஸ்யமானது – இதில் பனை ஓலைகளை ஒன்றாகப் பின்னுவதன் மூலம் பைகள் தயாரிக்கப் படுகின்றன, பின்னர் அவை இரண்டு மிகச்சிறிய பனை ஓலைகளால் மூடப் பட்டிருக்கும் வகையில் பொதியானது கட்டப்படும்.
-------------------------------------