TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுகள் - பகுதி 2

November 14 , 2023 414 days 1804 0

(For English version to this please click here)

புவிசார் குறியீடுகள்

தமிழ்நாட்டின் சமீபத்திய GI குறியீட்டினைப் பெற்ற பொருட்கள்

ஜடேரி திருமண் (நாமக் கட்டி)

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் ஜடேரி கிராமத்திலுள்ள ஜடேரி திருமண் (நாமக் கட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜடேரி திருமணுக்கான (GI) புவிசார் குறியீட்டிற்கான விண்ணப்பத்தில், இது இந்து அடையாளத்தின் வெளிப்புற அடையாளங்களில் ஒன்றாக நெற்றியில் அணியும் தனித்துவமான அடையாளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விஷ்ணுவை வழிபடுபவர்கள் 'U' (நாமம் எனப்படும்) வடிவில் திலகத்தினை அணிவார்கள்.
  • இது அணிபவரைத் தீமையிலிருந்துப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
  • ஹைரஸ் சிலிக்கேட் தாதுக்களால் செய்யப்பட்ட விரல் நீளமான வெள்ளை நிறம் கொண்ட ஜடேரி திருமண் மகத்தான கலாச்சார, மத மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான ஜடேரியில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக இந்த நாமக் கட்டியைத் தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

  • தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களாலான, கடினமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் பல்வேறு செயல்முறைகளுக்குப் பிறகு இது கைவினைஞர்களால் சேகரிக்கப்பட்டு நாமக் கட்டியாகத் தயாரிக்கப் படுகின்றன.
  • இத்தகுத் திறமைகள் பாரம்பரியமாகவும் பரம்பரையாகவும் அவர்களின் முன்னோர்களிடமிருந்து தற்போதையத் தலைமுறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • இதில் பொருத்தமான களிமண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணத்துவமானது தேவைப் படுகிறது
  • மேலும் இழுவை காளைகளால் (செக்கு மாடு) பாரம்பரிய முறையில் உருவாக்கப் பட்ட உருளைகளால் இப்பாறைகள் நசுக்கப் படுகின்றன.
  • ஒரு வடிகட்டுதல் செயல்முறை மூலம் பின்னர் களிமண்ணானது போடப்பட்டு, அது வெள்ளை நிறமாக மாறும் வரை 20 நாட்களுக்குத் தொட்டிகளில் சேமிக்கப் படுகிறது.
  • இதற்குப் பிறகு, களிமண் பசையை விரல் வடிவ நாமக் கட்டிகளாக வெட்டி நான்கு நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.

  • இந்த நாமக் கட்டி பின்னர் உலகம் முழுவதும் உள்ள விஷ்ணு கோவில்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • நாமக்கட்டிகளின் உற்பத்தி தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது, ஏனெனில் அது உலர நிறைய சூரிய ஒளியானது தேவைப்படுவதோடு, வெள்ளைத் திலகம் என்பது நெற்றியைக் குளிர்வித்து அணிபவரைப் பாதுகாப்பதோடு ஆற்றல் இழப்பைத் தடுக்கிறது என்றும் சொல்லப் படுகிறது.
  • சிலைகள், ஆண்கள் மற்றும் கோயில் யானைகளின் நெற்றி ஆகியவற்றை அலங்கரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் நீட்டப்பட்ட தோலைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்

  • கன்னியாகுமரி வாழை மற்றும் தோட்டக்கலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனக் குழுமத்தினுடைய விண்ணப்பத்தின் அடிப்படையில் கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • மட்டி வாழை (மூசா சபிடிசியாகா) என்பது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஒரு இருவகை குரோமோ சோம்களை கொண்ட சாகுபடி இரகமாகும்.
  • கன்னியாகுமரி மாவட்டமானது ஆண்டுக்கு 1,469 மிமீ மழை பொழியும் வகையில் அதிக மழை மண்டலத்தில் அமைந்துள்ளது.

  • அகத்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் வட்டங்களில் மட்டி வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
  • இது மருத்துவக் குணம் வாய்ந்தப் பாரம்பரியமாக பந்திகளில் பயன்படுத்தப்படும் வாழை வகையாகும் என்று சஞ்சய் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த நறுமணமுள்ள பழமானது அதன் இனிப்பு மற்றும் துணை அமில சுவைக்கும், உறுதியான அமைப்பு மற்றும் சாம்பல் தன்மைக்கும் பெயர் பெற்றது.
  • 15 மாதப் பயிராக அறியப்படும் இதன் வகைகளில் ஒன்று ஒரு அரிய வகை பழமாகக் கருதப் படுவதோடு, இவை நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள தென் திருவிதாங்கூர் (பிரிக்கப்படாத தமிழ்நாடு மற்றும் கேரளா) மலைகளில் மட்டுமே விளைகிறது.
  • 9 முதல் 10 கைவிரல்கள் நீளமான அதன் கொத்துகளானது 12 முதல் 19 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.
  • செம்மட்டி (சிவப்பு மட்டி), தேன் மட்டி (தேன் மட்டி) மற்றும் மலை மட்டி (மலை மட்டி) போன்ற பிற வகைகள் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தில் உள்ளன.
  • பொதுவாக ஆறு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப் படுவதில்லை.

​​​​​​​

  • கன்னியாகுமரி பகுதிகளில் குறைந்த TSS (மொத்த இடை நிறுத்தப்பட்ட திடப் பொருட்கள்) மதிப்பின் காரணமாக மட்டி வகை வாழைப் பழமானது பச்சிளம் குழந்தைகளின் உணவில் சேர்க்கப்படுகிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக மட்டி வாழைப்பழச் சோளத்தின் சாறினைப் பயன்படுத்துகின்றனர்.
  • விண்ணப்பதாரர் மட்டி வாழைப்பழத்தின் சான்றுகளைப் பல இலக்கியங்கள் மற்றும் அரசாங்கப் பதிவுகளில் குறிப்பினைக் கண்டுபிடித்துள்ளார், மேலும் ஒரு நடுத்தர அளவிலான வாழைப் பழமானது நமது தினசரி மாங்கனீசு தேவைகளில் தோராயமாக 13% அளவினை வழங்குமென்றும் கூறினார்.
  • மாங்கனீசு நம் உடலுக்குத் தேவையான கொலாஜனை உருவாக்க உதவுவதோடு, நமது தோல் மற்றும் பிற செல்களைப் பாதிக்கும் தீவிர சேதத்திலிருந்துப் பாதுகாக்கிறது.
  • வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியமானது, நமது உடலிலுள்ள இதயத்தையும் இரத்த அழுத்தத்தையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
  • குறைந்த சோடியம் மற்றும் அதிக பொட்டாசியக் கலவையானது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • வாழைப் பழத்தில் வைட்டமின் சி ஊட்டச்சத்தானது நிறைந்துள்ளது, இது நம் உடலை செல் மற்றும் திசுக்களின் சேதத்திலிருந்துப் பாதுகாக்கிறது.

​​​​​​​

செடிபுட்டா புடவைகள்

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் சௌராஷ்டிரா நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தின் மூலம் மூன்றாவது GI குறியீட்டின் வெற்றியாளரின் மூலம் செடிபுட்டா சேலைகளுக்கான விண்ணப்பம் செய்யப் பட்டது.
  • செடிபுட்டா என்ற பெயர் இரண்டு தமிழ் வார்த்தைகளின் கலவையாகும் -- ‘செடி’ (தாவரம்) மற்றும் ‘புட்டா’ (மையக்கருத்து அல்லது வடிவமைப்பு).
  • செடிபுட்டா புடவையின் ஓரம் மற்றும் பல்லுவில் (சேலையின் விளிம்பில்) நெய்யப் பட்ட புடவையின் சின்னமான "செடி மற்றும் பூ" உருவம் போடப் பட்டிருக்கும் என்பதோடு மேலும் இந்த சிறிய புட்டாக்கள் அந்தப் புடவை முழுவதும் அழகாக நிறுத்தப் பட்டிருக்கும்.

​​​​​​​

  • இந்த மலர் செடி வடிவமைப்பு அல்லது செடிபுட்டா வடிவமைப்பு இந்தப் புடவையின் உள்ளார்ந்த பண்பு ஆகும்.
  • இது முற்றிலும் கலைப் பட்டு மற்றும் பருத்தி கலவை துணியில் நெய்யப்பட்ட கைத்தறித் தயாரிப்பு ஆகும்.
  • ஒரு செடிபுட்டா சேலையில் எட்டு செடிபுட்டா வடிவமைப்புகளும், பல்லுவில் 5 வடிவமைப்புகளும் உள்ளன.
  • இந்தப் புடவையானது கலைப் பட்டு நூலைப் பயன்படுத்தியும், அதே நேரத்தில் செடிபுட்டா வடிவமைப்புகள் பிரகாசமான வண்ணப் பருத்தி நூல்களைப் பயன்படுத்தியும் நெய்யப்படுகிறது.
  • முற்றிலும் கைமுறையான செயல்முறைகளால் சுழலும் சக்கரத்தினைப் பயன்படுத்திப் பருத்தி நூலைத் தயாரித்தல் மற்றும் சேலையின் முழுமையான நெசவு செயல்முறைக்கு வளைந்தக் கற்றையைப் பயன்படுத்தித் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.

​​​​​​​

  • இதற்காக நெசவாளர்கள் விசைத்தறி அல்லது மிதிக்கும் வகை தறியினைப் பயன்படுத்தச் செய்வதில்லை.
  • செடிபுட்டா வடிவமைப்புகளானது சித்திர நெசவு இயந்திரங்களால் செய்யப் படுவதில்லை.
  • ஒவ்வொரு வடிவமைப்பையும் உருவாக்க பல பருத்தி வண்ண நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன, மேலும் ஒவ்வொரு புடவைக்குள்ளும் ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவமைப்பிற்கு வண்ண வேறுபாடுகள் உள்ளன.
  • நெசவாளர்கள் நெசவுத் துணியின் குறுக்கு இழை செயல்பாட்டின் போது நெசவு நூலை சுற்றுவதற்கு ஊடு இழைகளைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் நெசவு செய்யும் போது நெசவுத்தறி நாடாக்கள் நூல்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப் படுகின்றன.
  • செடிபுட்டா புடவைகளானது வெப்பமண்டலப் பகுதிகளின் காலநிலைக்கு ஏற்ற மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது கோடை காலத்தில் உடுத்துவதற்கு வசதியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் இருக்கும்.
  • பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தன்மையால், இந்தப் புடவைகள் எளிதில் சுருக்கம் ஏற்படாதவாறும் மற்றும் பராமரிக்க எளிதானதாகவும் உள்ளது.
  • அவை லேசான எடையும் கொண்டவை.

2004-2023 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுகளின் விவரங்கள்

S. No

Geographical Indications

Goods (As per the GI Act 1999)

1

Salem Fabric

Handicraft

2

Kancheepuram Silk

Handicraft

3

Bhavani Jamakkalam

Handicraft

4

Madurai Sungudi

Handicraft

5

Coimbatore wet Grinder

Manufactured

6

Thanjavur Paintings

Handicraft

7

Temple Jewellery of Nagercoil

Handicraft

8

Thanjavur Art Plate 

Handicraft

9

 Malabar Pepper (Share with Karnataka and Kerala)

Agricultural

10

Alleppey Green Cardamom (Share with Kerala)

Agricultural

11

East India Leather

Manufactured

12

Salem Silk known as Salem Venpattu

Handicraft

13

Kovai Kora Cotton Sarees

Handicraft

14

Arani Silk

Handicraft

15

Swamimalai Bronze Icons

Handicraft

16

Eathomozhy Tall Coconut

Agricultural

17

Thanjavur Doll

Handicraft

18

Nilgiri (Orthodox)

Agricultural

19

Virupakshi Hill Banana

Agricultural

20

Sirumalai Hill Banana 

Agricultural

21

Madurai Malli

Agricultural

22

Pattamadai Pai ("Pattamadai Mat'')

Handicraft

23

Nachiarkoil Kuthuvilakku Nachiarkoil Lamp

Handicraft

24

Chettinad Kottan 

Handicraft

25

Toda Embroidery

Handicraft

26

Thanjavur Veenai

Handicraft

27

Thanjavur Art Plate (Logo)

Handicrafts

28

Swamimalai Bronze Icons (Logo)

Handicrafts

29

Temple Jewellery of Nagercoil (Logo)

Handicrafts

30

Mahabalipuram Stone Sculpture

Handicrafts

31

Erode Manjal (Erode Turmeric)

Agricultural

32

Thirubuvanam Silk Sarees

Handicraft

33

Kodaikanal Malai Poondu

Agricultural

34

Palani Panchamirtham

Food Stuff

35

Dindigul Locks

Handicraft

36

Kandangi Saree

Handicraft

37

Srivilliputtur Palkova

Food Stuff

38

Kovilpatti Kadalai Mittai

Food Stuff

39

Thanjavur Netti Works

Handicraft

40

Arumbavur Wood Carvings

Handicraft

41

Karuppur Kalamkari Paintings

Handicraft

42

Kallakurichi Wood Carving

Handicraft

43

Kanniyakumari Clove

Agricultural

44

Narasinghapettai Nagaswaram

Handicraft

45

Ramnathapuram Mundu Chilli

Agricultural

46

Vellore Spiny Brinjal

Agricultural

47

Myladi Stone Carvings 

Handicraft

48

Manapparai Murukku

Food Stuff

49

Ooty Varkey

Food Stuff

50

Manamadurai Pottery

Handicraft

51

Thaikkal Rattan Craft

Handicraft

52

Salem Sago (Javvarisi)

Food Stuff

53

Authoor Vetrilai

Agricultural

54

Cumbum Panneer Thratchai

Agricultural

55

Negamam Cotton Saree

Handicraft

56

Sholavandan Vetrilai

Agricultural

57

Marthandam Honey

Natural

58

Jaderi Namakatti

Handicraft

59

Kanyakumari Matti Banana

Agricultural

60

Chedibutta Saree

Handicraft

 

  • மேலும் 15 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகளைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • புதிய நடவடிக்கையின் மூலம், அரசம்பட்டி தென்னை (தென்னை மரம்), ஆண்டார் குளம் கத்திரி (கத்தரிக்காய்), கருப்பு கவுனி அரிசி (கருப்பு அரிசி), கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா (பன்னீர் ரோஜா), கொட்டிமூலை கத்திரி (கத்தரிக்காய்), சாத்தூர் வெள்ளரி (வெள்ளரி), செங்கல் துவரை (தூரை. பருப்பு), விளாத்திகுளம் மிளகாய் (மிளகாய்), ஜவ்வாதுமலை சாமை (பயறு வகை), வீரமாங்குடி அச்சு வெல்லம் (பச்சை வெல்லம்), விருதுநகர் அத்தலைக்காய் (காய்கறி வகை), மூலனூர் முருங்கை (முருங்கை), மதுரை செங்கரும்பு (செங்கரும்பு), பேராவூரணி தென்னை) மற்றும் திண்டிவனம் பனிப்பயறு (பருப்பு வகை) ஆகியவை எதிர்காலத்தில் புவிசார் குறியீடுகளைப் பெற உள்ளன.

​​​​​​​

 

விருதுநகர் அத்தலைக்காய் (காய்கறி வகை)

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்