TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 01

July 18 , 2024 177 days 4945 0

(For English version to this please click here)

1. சிவகாமி அம்மையார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் இடம்பெயர்வு:

  • சிவகாமி அம்மையார், மாரிமுத்து முதலியார் மற்றும் சின்னத்தாய் தம்பதியருக்கு 1933 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • இவர் குடும்பம் மலேசியாவிற்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கு இவரது தந்தை ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்தார்.
  • இவர் கோலாலம்பூரில் உள்ள ஜெய் ஹிந்த் இந்து பாடசாலையில் படித்தார்.

எழுச்சியுருதல் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைதல்:

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேச்சால் ஈர்க்கப்பட்ட சிவகாமி, தனது 1 வது வயதில் இளம் இந்தியத் தேசிய ராணுவத்தில் (INA) சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பாலக் சேனா குழுவில், சேர்ந்தார்.
  • அவர் 1942 மற்றும் 1945 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், சமூக நல விடுதியின் பராமரிப்பாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.

செயல்பாடுகள்:

  • இந்தியத் தேசிய ராணுவத்தில் இருந்த காலத்தில், சிவகாமி தனது சகோதரர் பரந்தாமனுடன் சேர்ந்து "வீர வனிதா" என்ற தெரு நாடகத்தை நடத்தினார் என்பதோடு மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை உருவாக்கவும், இந்தியத் தேசிய ராணுவத்திற்கு நிதி திரட்டவும் தெரு தெருவாகச் சென்று நடித்தார்.
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பர்மாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தும், சிவகாமி மறுத்து விட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்த்திய வீரச் செயல்கள்:

  • இரண்டாம் உலகப் போரின் போது, ​​சர்க்கார் முகாமில் குண்டுகளால் காயமடைந்தவர்களை சிவகாமியும் அவரது சகோதரர் பரந்தாமனும் மீட்டனர்.

அங்கீகாரம் மற்றும் விருதுகள்:

  • 1973 ஆம் ஆண்டில் தமிழக அரசு சிவகாமி அம்மையாருக்கு "தியாகச் செம்மல்" விருது வழங்கி கவுரவித்தது.
  • 1993 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் ஜெ.ஜெயலலிதாவால் இவர் கௌரவிக்கப்பட்டார்.

2. மாவீரன் அழகுமுத்து கோன்

ஆரம்ப கால வாழ்க்கை:

  • மாவீரன் அழகுமுத்து கோன் 1728 ஆம் ஆண்டு, ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார்.

பாளையக்காரரான இவரின் பங்கு:

  • பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளர்ச்சி செய்த வகையில் ஒரு இந்திய பாளையக் காரரான அழகு முத்துக் கோன் நாட்டின் முதல் சுதந்திரப் போராளி ஆவார்.
  • 1752 மற்றும் 1759 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், இவர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார்.
  • எட்டயபுரத்தில் ஒரு இராணுவத் தளபதியாக உருவெடுத்து, கட்டாலங்குளத்தை அவர் ஆட்சி செய்தார்.

போர்கள் மற்றும் எதிர்ப்பு:

  • 1755 ஆம் ஆண்டில், அழகுமுத்து திருவிதாங்கூர் படையுடன் இணைந்து, கர்னல் எரான் கேரனின் படைக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • இருப்பினும், 1759 ஆம் ஆண்டில், இவர் ஆங்கிலேயர் மற்றும் முருதனகயத்தின் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டார்.

மரண தண்டனை மற்றும் மரபு:

  • அழகுமுத்து கோன் 1759 ஜூலை 19 அன்று தூக்கிலிடப் பட்டார் (நடுகாட்டூர், ஆற்காடு).
  • அவரது நினைவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி பூஜை விழா நடத்தி வருகிறது.

3. சி.சுப்பிரமணியன்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி:

  • சி.சுப்ரமணியன், 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் எட்டயபுரம் கிராமத்தில், சின்னசாமி சுப்பிரமணிய ஐயர் மற்றும் லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆன்மீகம் மற்றும் தேசியவாதத்தின் வெளிப்பாடு:

  • வாரணாசியில் இவர் தங்கியிருந்த காலத்தில், இவர் இந்து ஆன்மீகம் மற்றும் தேசியவாதத்தை வெளிப்படுத்தினார்.
  • இது அவரது பார்வையை விரிவுபடுத்தியது என்பதோடு அவர் சமஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரஸில் ஈடுபாடு:

  • 1905 டிசம்பரில் பெனாரஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • தாதாபாய் நௌரோஜியின் தலைமையின் கீழ் சுயராஜ்ஜியம் மற்றும் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தலை வலியுறுத்தி கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டார்.

நாடு கடத்தல் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள்:

  • கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பை எதிர்கொண்ட சுப்பிரமணியன் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிச்சேரிக்கு தப்பிச் சென்றார்.
  • இவருக்கு நாடு கடத்தப்பட்ட காலத்தில், புரட்சிகரப் பிரிவின் பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாடு

  • இவர் பெண்களின் விடுதலைக்காகப் போராடியதோடு, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார், மற்றும் பிராமணர்களில் சீர்திருத்தங்களுக்காகவும் வாதிட்டார்.

இறப்பு

  • சி.சுப்பிரமணியன் 1921 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று இறந்தார்.

4. குமாரசாமி காமராஜ்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

  • குமாரசாமி காமராஜ், சிவகாமி அம்மாள் மற்றும் குமாரசாமி நாடார் தம்பதியருக்கு ஜூலை 15, 1903 அன்று தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்தார்.
  • இவரது இயற்பெயரான காமாட்சி என்ற பெயரானது இறுதியில் காமராஜராக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • குமாரசாமி நாடார் தொழில் ரீதியாக வணிகர் ஆவார்.
  • சிறுவயதில், காமராஜ் தனது மாமாவின் உணவுக் கடையில் பணி புரிந்தார் என்ற நிலையில் அங்கு அவர் தினசரி செய்தித் தாள்களைப் படிப்பதன் மூலம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தாக்கம்:

  • ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரது வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்தது.
  • காமராஜர் தேசிய சுதந்திரத்திற்காகப் போராடவும், அந்நிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் முடிவு செய்தார்.

ஆரம்பகால அரசியல் ஈடுபாடு:

  • 1920 ஆம் ஆண்டில், காமராஜர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸில் முழு நேர அரசியல் ஊழியராகவும் சேர்ந்தார்.
  • காங்கிரஸ் பிரச்சாரத்தைச் சுமந்து கொண்டு கிராமங்களுக்குச் சென்று, செப்டம்பர் 1921 ஆண்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.

முக்கிய இயக்கங்களில் பங்கேற்பு:

  • 1922 ஆண்டில், ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேல்ஸ் இளவரசரின் வருகையை காங்கிரஸ் புறக்கணித்தது.
  • இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காமராஜர் சென்னை வந்தார்.
  • 1923 மற்றும் 1925 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், இவர் நாக்பூர் கொடி சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றார்.
  • 1930 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை (அலிப்பூர்) சென்றார்.
  • 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக காமராஜர் மீண்டும் கைது (வேலூர்) செய்யப்பட்டார்.
  • அவரது வாழ்நாளில், சுதந்திரத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் மொத்தம் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

மெட்ராஸ் மாநில முதல்வர்

  • காமராஜ் 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் மாநிலத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் அவர் கவனம் செலுத்தியதன் காரணமாக அவரது பதவிக்காலம் பெரும்பாலும் தமிழகத்தின் பொற்காலமாக கருதப் படுகிறது.

கல்வி சீர்திருத்தங்கள்

  • இதில் பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கும், பள்ளி வருகையை ஊக்குவிப்பதற்கும் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற வகையில் காமராஜர் குறிப்பிடத்தக்க கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினா,.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர் ஏராளமானப் பள்ளிகளை, குறிப்பாக கிராமப்புறங்களில் நிறுவினார்.

விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி

  • இவர் தமிழ்நாட்டின் விவசாய நிலப்பரப்பை மாற்றியமைத்து அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் விவசாய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தார்.
  • இவரது தொழில்துறைக் கொள்கைகள் பல தொழில்களை நிறுவுவதற்கு வழிவகுத்ததோடு, அவை வேலைவாய்ப்பை வழங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியது.

சிறப்பு பெயர்கள் மற்றும் விருதுகள்:

  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கும், அரசியலில் அவர் ஆற்றிய பெரும்பணிகளுக்காகவும் காமராஜர் பல பட்டங்களால் கௌரவிக்கப்பட்டார்.
  • கிங்மேக்கர்: இந்திய அரசியலில் அவரது முக்கியப் பங்கு வகித்தார், குறிப்பாக 1960 ஆம் ஆண்டுகளில், இந்தியப் பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • கல்வி தந்தை: தமிழ்நாட்டின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான இவரது முயற்சிகளுக்காக அவர் கல்வித் தந்தை என்று சிறப்பிக்கப்பட்டார்.
  • பெருந்தலைவர்: இவரது குறிப்பிடத்தக்கத் தலைமைத்துவத்திற்காகவும், சமூகத்திற்கானப் பங்களிப்புக்காகவும் பெருந்தலைவர் என்றழைக்கப்பட்டார்.
  • பாரத ரத்னா: நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தானப் பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதானது இவரது மரணத்திற்குப் பின் இவருக்கு வழங்கப் பட்டது.

காமராஜ் திட்டம்

  • 1963 ஆம் ஆண்டில், காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸைப் புத்துயிர் பெற "காமராஜ் திட்டத்தை" முன்மொழிந்தார்.
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து கட்சியை வலுப்படுத்த உழைக்க வேண்டும் என்று இவர் பரிந்துரைத்தார்.
  • காமராஜரே அதற்கு முன்னுதாரணமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • இந்தத் திட்டம், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ஜக்ஜீவன் ராம் உட்பட பல மூத்தத் தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்து, கட்சி அமைப்பில் கவனம் செலுத்த வழி வகுத்தது.

பிற்கால வாழ்க்கை மற்றும் இறப்பு

  • முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, காமராஜர் தேசிய அரசியலில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்தார்.
  • இவர் 1964 முதல் 1967 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றினார்.
  • ஜவஹர்லால் நேருவின் மரணத்திற்குப் பிறகு, பிரதமர்கள் பதவியேற்க இவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
  • குமாரசாமி காமராஜ் அக்டோபர் 2, 1975 அன்று காலமானார்.
  • அவரது பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதோடு அவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகவும் நினைவு கூரப்படுகிறார்.

5. சுப்ரமணிய சிவா

ஆரம்ப கால வாழ்க்கை

  • சுப்ரமணிய சிவா, சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டத்தில், திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள வத்தலக்குண்டு என்ற இடத்தில் பிரஹாசரண ஐயர் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் ராஜம் ஐயரின் மகன் ஆவார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு:

  • 1908 ஆம் ஆண்டில், சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • அதே ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட போது, ​​சென்னை சிறையில் அடைக்கப் பட்ட முதல் அரசியல் கைதி ஆனார்.

சிறைவாசம் மற்றும் உடல்நலக் குறைவு:

  • சிறையில் இருந்த போது, ​​தொழுநோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த சிவா சேலம் சிறைக்கு மாற்றப் பட்டார்.
  • இவர் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட, பிரிட்டிஷ் அரசாங்கம் தொழுநோயின் தொற்றும் தன்மை காரணமாக இவரின் ரயில் பயணத்தைத் தடுத்தது.
  • இந்த கஷ்டங்கள் இருந்த போதிலும், இவர் சுதந்திரத்திற்கான தனது தேடலைத் தொடர்ந்தார் மற்றும் 1922 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சிறையில் கணிசமான நேரத்தைச் செலவிட்டார்.

இலக்கியப் பங்களிப்புகள்:

  • சுப்ரமணிய சிவா தனது அரசியல் செயல்பாடுகள் தவிர, ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.
  • அவர் "மத்வ விஜயம்" மற்றும் "ராமானுஜ விஜயம்" நாவல்களை எழுதியுள்ளார் என்பதோடு "ஞானபானு" என்ற பத்திரிகையையும் வெளியிட்டார்.

இறப்பு

  • சுப்பிரமணிய சிவா தொழுநோய் காரணமாக, 1925 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தர்மபுரியில் பாப்பாரப்பட்டி என்ற இடத்தில் இறந்தார்.

6. திருப்பூர் குமரன்

ஆரம்ப கால வாழ்க்கை

  • கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
  • இவரது பெற்றோர் நாச்சிமுத்து முதலியார் மற்றும் கருப்பாயி ஆவர்.

செயல்பாடு மற்றும் தலைமை

  • குமரன் தேசபந்து வாலிபர் சங்கத்தை நிறுவி ஆங்கிலேயக் காலனித்துவ அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

தியாகி

  • 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி, திருப்பூரில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, ​​குமரன் காவல்துறையினரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.
  • அவர் இறக்கும் போது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட இந்திய தேசியவாதிகளின் கொடியை கையில் ஏந்தியிருந்தார்.
  • இந்த மீறல் செயலானது, அவருக்குத் தமிழில் கொடி காத்த குமரன் என்ற பெயரை, அதாவது "கொடியைக் காத்த குமரன்" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்