TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 02

July 19 , 2024 176 days 1851 0

(For English version to this please click here)

7. ஷியாமளா ராஜகோபாலன்

ஆரம்ப கால வாழ்க்கை

  • ஷ்யாமளா ராஜகோபாலன் பர்மாவின் யாங்கோன் அருகே உள்ள கமாயுட் நகரில் பிறந்தார்.
  • அவர் கமாயுட்டில் உள்ள ஆங்கிலேய அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆரம்ப காலச் செயல்பாடுகள்

  • இந்திய தேசிய காங்கிரஸின் அடிமட்ட அளவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பான சேவா தளம் என்ற இயக்கத்தில் பங்கேற்பதற்காக ஷ்யாமலா அடிக்கடி வகுப்புகளைப் புறக்கணித்தார்.
  • அருகில் உள்ள பஜாரில் சுபாஷ் சந்திர போஸின் உணர்ச்சிப் பூர்வமானப் பேச்சான, குறிப்பாக "எனக்கு ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தினைத் தருகிறேன்" என்ற அவரது முழக்கத்தால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

இந்திய தேசிய ராணுவத்தில் இணைதல்

  • தனது தந்தையின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதில் உறுதியாக இருந்தார் ஷியாமளா.
  • 16 வயதில், சுபாஷ் சந்திர போஸின் கேப்டன் லக்ஷ்மி சாகல் தலைமையிலான, ஜான்சி ராணி அனைத்துப் பெண்கள் படைப்பிரிவின் இளைய உளவாளி ஆனார்.

உளவாளியாக இவர் பங்கு

  • ஷியாமளா, மிங்கலாடனில் உள்ள ஒரு ராணுவ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிக் கொண்டே, சுபாஷ் சந்திர போஸை ஆதரித்த ஜப்பானியர்களுக்கு, பிரிட்டிஷ் அதிகாரிளுக்கு எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்தார்.
  • அவர் ஒரு முறை குண்டுவெடிப்பு பற்றிய தகவலைக் கண்டுபிடித்த வகையில் ஜப்பானிய இராணுவத்தை எச்சரித்தார்.
  • 1945 ஆம் ஆண்டில் பர்மா யுத்தத்தின் போதான கடைசி குண்டுவீச்சில், நேச நாட்டுப் படைகள் ஜப்பானியர்களைத் தோற்கடித்த போது, ​​ஷியாமளா வீரத்துடன் பலரை அகழியில் இருந்து மீட்டு, ஒரு ஏணியின் மீதேறி அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

மரபு

  • ஷியாமளா ராஜகோபாலனின் வீரமும், இந்திய சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பும், போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இளம் மற்றும் மிகவும் தைரியமான உளவாளிகளில் ஒருவராக இவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.

8. கே. அழகிரி தேவர்

ஆரம்ப கால வாழ்க்கை

  • அழகிரி தேவர் 1914 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே கழுகுமலை கிராமத்தில் பிறந்தார்.

அரசியல் ஈடுபாடு

  • 1934 ஆம் ஆண்டு முதல் 1935 ஆம் ஆண்டு வரை, கிராம காங்கிரஸ் கமிட்டியின் தொண்டராக அழகிரி தேவர் பணியாற்றினார்.
  • 1936 மற்றும் 1940 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில், அவர் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்த வகையில் இந்திய சுதந்திர இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • 1940 ஆம் ஆண்டு, திருநெல்வேலி பொதுவுடமை சதி சட்டத்தில் ஈடுபடுத்தப் பட்ட அழகிரி தேவர், கொக்கிரகுளம் சிறையில் ஓராண்டு சிறை வைக்கப் பட்டார்.

சமூகப் பங்களிப்புகள்

  • பாரதி காலனி
  • அழகிரி தேவர் சமூக நலன் மற்றும் பொதுத் தொண்டு ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், சாதாரண மக்களுக்காக "பாரதி காலனி" என்ற குடியேற்றத்தை உருவாக்க முயன்றார்.

9. ஜி. ராமானுஜ நாயக்கர்

ஆரம்ப கால வாழ்க்கை

  • ஜி. ராமானுஜ நாயக்கர் 1914 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பிறந்தார்.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

  • தனிநபர் சத்தியாகிரகம்
  • 1941 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அகிம்சை எதிர்ப்பு இயக்கமான தனி நபர் சத்தியாகிரகத்தில் ஜி. ராமானுஜ நாயக்கர் பங்கேற்றார்.
  • இதில் பங்கேற்றதற்காக பெல்லாரியில் உள்ள அலிப்புரம் சிறையில் நான்கு மாதங்கள் சிறை பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள்

  • சர்வோதய சங்கத்தில் இணைதல்
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜி.ராமானுஜ நாயக்கர் விருதுநகரில் உள்ள சர்வோதயச் சங்கத்தில் சேர்ந்தார்.
  • சர்வோதயச் சங்கமானது, சமூகச் சீர்திருத்தம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தும் வகையில் காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

10. கே. தீன தயாளன் லாலா

ஆரம்ப கால வாழ்க்கை

  • கே.தீன தயாளன் லாலா கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பிறந்தவர் ஆவார்.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

  • நாக்பூர் கொடி சத்தியாகிரகம்
  • கே. தீன தயாளன் லாலா என்பவர் ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர் ஆவார்.
  • இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கான உரிமையை வலியுறுத்துகிற வகையில் இந்தியச் சுதந்திர இயக்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வான 1923 ஆம் ஆண்டில், அவர் நாக்பூர் கொடி சத்தியாகிரகத்தில் அவர் பங்கேற்றார்.
  • அவர் அதில் பங்கேற்றதற்காக, நாக்பூர் சிறையில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார்.

கழுகுமலை முருகன் கோவில் நுழைவு இயக்கம்

  • அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதையும், சமூக தடைகளை உடைத்து சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வகையில் அவர் 1947 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி அன்று கே. தீன தயாளன் லாலா, எஸ்.என். சோமயாஜுலு ஆகியோருடன் சேர்ந்து கழுகுமலை முருகன் கோவில் நுழைவு இயக்கத்தில் பங்கேற்றார்.

இறப்பு

  • கே. தீன தயாளன் லாலா டிசம்பர் 5, 1965 அன்று காலமானார்.

11. வி. பூசைப்பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கை

  • கோவில்பட்டி அருகே கழுகுமலையில் வைத்தியநாதன் பிள்ளைக்கு மகனாக 1903 ஆம் ஆண்டு பிறந்தவர் வி.பூசைப்பிள்ளை.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

  • வி.பூசைப்பிள்ளை கள்ளுக் கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.
  • இவர் கதர் இயக்கத்தில் பங்கேற்றார்.
  • இவர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • 1947 மே 20, அன்று கழுகுமலை முருகன் கோயில் நுழைவு இயக்கத்தில் வி. பூசைப்பிள்ளை பங்கேற்றார்.
  • இவர் பூமிதான இயக்கத்தில் பங்கேற்றார்.
  • இவர் பிரசாரத்திற்காக துண்டு பிரசுரங்களையும், கையேடுகளையும் பயன்படுத்தினார்.

இறப்பு

  • வி.பூசைப்பிள்ளை 1955 மே 24  அன்று காலமானார்.

12. கே.டி. கோசல்ராம்

ஆரம்ப கால வாழ்க்கை

  • கே.டி.கோசல்ராம் தூத்துக்குடியில் ஆறுமுகநேரி அருகே 1915 ஆம் ஆண்டு பிறந்தார்.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

  • கே.டி.கோசல்ராம் 1932 ஆம் ஆண்டில் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார்.
  • இவர் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கத்தில் பங்கேற்றார்.
  • இவர் 1942 ஆம் ஆண்டு குரும்பூர் ரயில் நிலையம் எரிப்பு வழக்கில் ஈடுபட்டு, தண்டனை பெற்று பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • திருநெல்வேலி மாவட்டச் சத்தியாகிரகக் குழுவின் செயலாளராகவும் கோசல்ராம் பணி ஆற்றினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள்

  • பாராளுமன்ற உறுப்பினர்
  • சுதந்திரத்திற்குப் பிறகு, 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் திருச்செந்தூர் தொகுதியில் இருந்து கே.டி.கோசல்ராம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தித்தாள்

  • சென்னை புரசைவாக்கத்தில் இருந்து வெளியாகும் தின செய்தி என்ற பத்திரிகை இவருக்கு உரியதாகும்.

13. எம்.சி. வீரபாகு பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கை

  • எம்.சி. வீரபாகு பிள்ளை 1903 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி தூத்துக்குடியில், மு. சிதம்பரம் பிள்ளை மற்றும் கோயி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

சட்டத் தொழில் மற்றும் அரசியல் ஈடுபாடு

  • வீரபாகு பிள்ளை தனது தொழிலை விட்டுவிட்டு இந்தியச் சுதந்திரத்திற்காக என்று உழைத்த வழக்கறிஞர் ஆவார்.
  • இவர் 1934 ஆம் ஆண்டில், மாவட்ட காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவர் அருணோத்யம் அச்சகத்தை பயன்படுத்தி பிரசாரத்திற்காக துண்டு பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை அச்சிட்டார்.
  • வீரபாகு பிள்ளை அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தார் என்ற வகையில் தனது தாய்மொழியான தமிழில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
  • இவர் சுதந்திரத்திற்காக சிறை வாசம் அனுபவித்தார்.
  • மகாத்மா காந்தி 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடிக்கு விஜயம் செய்த போது, ​​காந்தி வீரபாகு வீட்டில் தங்கினார்.

மரபு

  • எம்.சி. வீரபாகு பிள்ளை 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று காலமானார்.

14. தூக்கு மேடை காசிராஜன்

ஆரம்ப கால வாழ்க்கை

  • தூக்கு மேடை காசிராஜன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்ள ஆறுமுகநேரியில் பிறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு

  • குலசை வழக்கு
  • குலசை வழக்கானது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாக உள்ளது.
  • முன்னாள் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் தீவிரமடைந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸின் தீவிரத் தலைவர்களால் படுகொலை செய்யப் பட்ட இரண்டாவது ஆங்கில அதிகாரி லோன் ஆவார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆயுதப் போராட்டம்

  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மகாத்மா காந்தியின் "செய் அல்லது செத்து மடி" அழைப்புக்குப் பிறகு, தூத்துக்குடியில் உள்ள தீவிரத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.
  • ஆயுதப் போராட்டம் 1942 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது என்ற நிலைமையில் ஆயுதங்களுக்காக காவல் நிலையங்களைத் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டு தலைவர்களால் பல இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • அம்முயற்சி தோல்வியுற்றதால், அவர்கள் உப்பளங்களில் காவலர்களைக் குறி வைத்தனர்.

அதிகாரி லோனைத் தாக்கி கொலை செய்தல்

  • திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் இது போன்ற ஒரு முயற்சியின் போது, ​​தலைவர்கள் துப்பாக்கிகளைத் திருட ஆங்கிலேய காவலர்களைக் கட்டி வைத்தனர்.
  • அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி லோன் கலகக்காரர்களைச் சுட முயன்றார், ஆனால் அவர் அதில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சிறைவாசம் மற்றும் விடுதலை

  • குற்றச்சாட்டு மற்றும் மரண தண்டனை
  • இந்த வழக்கில் தூக்கு மேடை காசிராஜன் மற்றும் தூக்குடி மேடை ராஜகோபால் உள்ளிட்ட 26 சுதந்திரப் போராட்ட தியாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜாஜியின் தலையீடு

  • முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) லண்டனில் உள்ள பிரைவி கவுன்சிலில் (தனியுரிமைக் குழு) வாதிட்ட பிறகு, தூக்கு தண்டனை வாபஸ் பெறப்பட்டது என்ற நிலையில் தூக்கு மேடை காசிராஜன் மற்றும் ராஜகோபால் விடுவிக்கப்பட்டனர்.

15. தூக்குமேடை ராஜகோபாலன் நாடார்

ஆரம்ப கால வாழ்க்கை

  • ராஜகோபால் தூத்துக்குடியில் ஆறுமுகநேரியில் பிறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு

  • உப்பளத்தில் ஆயுதப் போராட்டமும் நிகழ்ச்சியும்
  • ராஜகோபால் தலைமையிலான சுதந்திரப் போராட்டக் குழுவினர், ஒரு தளத்திற்குள் நுழைந்து, ஒரு கொட்டகைக்கு தீ வைத்து விட்டு, பின் காவலர்களைக் கட்டிப் போட்டு, ஆயுதங்களைப் பறித்துக் கொண்டுத் தப்பிக்க முயன்றனர்.
  • சத்தம் கேட்டு எழுந்த டபிள்யூ.லோன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர் கொண்டார்.
  • அவர் அப்போது வெடிமருந்துகள் எதுவும் இல்லாததால், தனது துப்பாக்கியினைக் கொண்டே மற்றவர்களைத் தாக்கினார்.
  • பின் ராஜகோபால் தலைமையிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் லோன் துரையை தங்கள் ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் கொன்றனர்.
  • இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • விசாரணை மற்றும் மரண தண்டனை
  • 1943 பிப்ரவரியில் கொலை வழக்கு விசாரணை முடிந்து, ராஜகோபாலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது.
  • 1943 ஏப்ரல் 30 அன்று மரண தண்டனையானது நிறைவேற்றத் திட்டமிடப் பட்டது.
  • மதராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், மரண தண்டனையானது அப்போது உறுதி செய்யப் பட்டது.
  • உச்ச நீதிமன்றத்தைப் போல இருந்த கூட்டாட்சி நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.

தலையீடு மற்றும் தண்டனையை மாற்றுதல்

  • காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர். வெங்கட்ராமன் மற்றும் எஸ். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் முன்பு அவர் சார்பில் வாதாடினர்.
  • தேவைப் பட்டால் லண்டன் செல்லவும் ராஜாஜி தயாராக இருந்தார்.
  • ராஜாஜி லண்டனுக்கு வருவதை விரும்பாத ஆங்கிலேய அரசு, இந்திய கவர்னர் ஜெனரலுக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அறிவுறுத்தியது.
  • 1945 ஏப்ரல் 23 அன்று, கவர்னர் ஜெனரல் தண்டனைக் குறைப்பு ஆணையை வெளியிட்டார்.

வெளியீடு மற்றும் மரபு

  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா சுதந்திரம் அடைந்த சந்தர்ப்பத்தில், ராஜகோபால் மற்றும் அவரது சக சுதந்திரப் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்.

நினைவுச் சின்னம் மற்றும் அங்கீகாரம்

  • ராஜகோபால் 'தூக்குமேடை' ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார்.
  • ராஜகோபால் மற்றும் அவரது குழுவினர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் நினைவாக 1997 ஆம் ஆண்டு குலசேகரப் பட்டினத்தில் ஒரு நினைவுத் தூண் அமைக்கப் பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்